-
1st November 2013, 01:29 PM
#11
Senior Member
Seasoned Hubber
அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் நடிகர்திலகம் அவர்களோடு தீபாவளி நினைவு ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
தீபாவளி அன்று வீட்டுக் கடமையை விரைவாக முடித்துவிட்டு, அன்னை இல்லம் சென்றால், நடிகர்திலகம் அவர்கள் FRESH ஆக அமர்ந்திருப்பார். இதுமாதிரியான விசேஷ நாட்களில் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் ஜோராகக் காட்சியளிப்பார் நடிகர்திலகம். பேரன், பேத்திகள் வெடிகளை கொளுத்துவதை கொஞ்ச நேரம் ரசிப்பார். அவருடன் செர்ந்து நானும். வெடி புகை என்பது நடிகர்திலகத்துக்கு அலர்ஜி என்பதால் சிறிதுநேரத்திலேயே வீட்டிற்குள் சென்றுவிடுவார். அதன்பின் ரசிகர்கள் வர ஆரம்பிப்பார்கள். புதிய 10 நோட்டினை அன்பளிப்பாக அளிப்பார். ஒருமுறை ஆர்வக் கோளாறில் ஒரு ரசிகர் அந்த ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்க, ரூபாய் நோட்டு என்பது நாம் வணங்கும் கடவுள் மாதிரி - அதில் கையெழுத்திடுவதோ, கிறுக்குவதோ, கடவுளையே அவமதிப்பது மாதிரி என்று கூறி, அவரைக் கடிந்துகொண்டார் நடிகர்திலகம். அவருடையை தேசபக்தியைப் பாருங்கள்.
அதுமாதிரி ஒரு விசேஷ தருணத்தில் நடிகர்திலகத்திற்கு நான் மரியாதை செய்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் இந்த தீபாவளி நினைவாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.

(புகைப்படத்தில் தலைவருடைய பார்வையையும், சுற்றியிருப்பவர்களுடைய பார்வையும் கவனிக்க)
நன்றி
Last edited by KCSHEKAR; 1st November 2013 at 01:55 PM.
-
1st November 2013 01:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks