-
12th November 2013, 03:41 PM
#11
Junior Member
Devoted Hubber
கமலின் உத்தமவில்லனில் இயக்குனர் எம்.ராஜேஷ்
‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு பிறகு கமல்ஹாசன், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், சந்தானம் முதல்முறையாக இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது.
கமல் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான காமெடி படங்களுக்கு கிரேஸி மோகன்தான் வசனம் எழுதுவார். ஆனால், இப்படத்தில் அவருக்குப் பதிலாக தொடர்ந்து காமெடி படங்களை கொடுத்து ஹிட் கொடுத்த இயக்குனர் எம்.ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் அமைந்த வசனங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டன. அந்த வரிசையில் கமலுடன் சந்தானம் இணையும் இப்படத்தில் தற்போது எம்.ராஜேஷூம் இணைந்துள்ளது இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.
கமல் நடிப்பில் காமெடி படமாக வெளிவந்து வசூலிலும் ரசிகர் மனதிலும் பெரிய இடத்தை பிடித்த ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,’ ‘பம்மல் கே.சம்பந்தம்’ ஆகிய படங்களைப்போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பெறும் என கூறப்படுகிறது.
-
12th November 2013 03:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks