-
12th November 2013, 06:03 PM
#11
Junior Member
Senior Hubber
அஜித்,விஜய் ரசிகர்களின் அட்டகாசம் தாங்க முடியலப்பா.
இப்பவே 40 வயசாச்சு. இன்னும் சாதிக்கவில்லை. 60 வயசுல என்னத்த சாதிக்கப் போறாங்கன்னு தெரியல்ல.
எம்.ஜி.ஆர் 77-ல் திரை உலகை விட்டு ஒதுங்கினார். 84-ல் சிவாஜி 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். கமலும்,ரஜினியும் முன்னணி ஹீரோவாக உயர்ந்து விட்டனர். அதுவும் கமல் தனது 30 வயதிலேயே இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார்.
இப்போ இவர்களுக்கு 40 வயசாச்சு. திறமை இருந்து இருந்தால் 5 வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் கமல், ரஜினி இருவரையும் முந்தி முதல் நிலைக்கு வந்து இருக்க வேன்டும்.
ரஜினியைப் போல் அதிர்ஷ்டத்தால் இவர்கள் வண்டி இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு நாளைக்கு ஓடும் என்று தெரியவில்லை. (ரஜினி 90களில் அரசியலை வைத்து வண்டியை ஓட்டினாலும் 95-லயே சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதற்கு அப்புறம் 2 அல்லது 3 வருடத்திற்கு ஒரு முறை தான் படம் கொடுக்கிறார்)
-
12th November 2013 06:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks