Page 9 of 277 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #81
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Gopal.

    Extraordinary analysis about naan avanillai. I wonder about you. I read more and more times. aanaa paarunga salikkave illai. enakku romba romba pidiththa oru padam. ithu jemini thread. aanaa neenga enakkaaga yaarukkaaga azhuthaan, avarkal rendu padaththaiyum ezhuthunga. ithu en anbuk kattalai. enga ezhuthuveenga?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Naan Avan Illai (1974)






    நடிகர் திலகமே தெய்வம்

  4. #83
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    vasu,
    un kattalalaiyai erkiren.

    Mr.Sivan,Adiram- Thanks for the feedback.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #84
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கடந்த சில நாட்களாக இணைய இணைப்பு சரிவர இயங்காத காரணத்தால் மய்யத்தின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை. வேறொரு இணைய இணைப்பினைத் தற்காலிகமாகப் பெற்று எழுதுகிறேன். காரணம், நான் அவனில்லை.
    சென்னை பிளாசா திரையரங்கில் தொடர்ந்து 10 முறைகளுக்கு மேல் பார்த்த படம். கதையமைப்பு, மெல்லிசை மன்னரின் இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என பல்வேறு அம்சங்கள் ஒவ்வொரு முறையும் காரணமாயிருந்தன. குறிப்பாக பி.சுசீலா, எஸ்.பி.பி. குரலில் ஒலித்த நான் சின்னஞ்சிறு பிள்ளை, பாடலை நான் மிகவும் விரும்பி ரசித்திருக்கிறேன். படத்தின் சிறப்பு முழுவதையும் கோபால் எழுதி விட்டதால் புதியதாக நான் எழுத ஒன்றுமில்லை.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #85
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    திரு கோபாலும் மற்ற அன்பர்களும் இங்கே நான் அவனில்லை திரைப்படத்தை இந்த அளவு சிலாகிக்கும் போது, படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது. பார்த்துவிட்டு, எனது பார்வைகளையும் கூடிய விரையில் பதிக்கிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #86
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பாலசந்தர் படங்களில் என் 10விருப்பங்கள்.

    1)பாமா விஜயம்.
    2)மன்மத லீலை.
    3)நான் அவனில்லை.
    4)அவள் ஒரு தொடர்கதை.
    5)அரங்கேற்றம்.
    6)இரு கோடுகள்.
    7)அவர்கள்.
    8)தண்ணீர் தண்ணீர்.
    9)அபூர்வ ராகங்கள்.
    10)நூற்றுக்கு நூறு.
    நிழல் நிஜமாகிறது, ஒரு வீடு இரு வாசல்.. இவைகளையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #87
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,
    உங்களை தெரிந்த வரை ,நீங்களும் நான் அவனில்லை ரசிகராக இருப்பீர்கள் என்பது நான் எதிர்பார்த்ததே.நன்றி.

    வெங்கிராம்,
    அவசியம் பாருங்கள். ஜெமினி நடித்த 1974 இல் வெளியான கருப்பு-வெள்ளை.(ஜீவன் வந்து போன கலர் கருமத்தை பார்த்து தொலைக்க வேண்டாம் என்று வேண்டுகிறேன்.)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #88
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முதல் பத்துக்கு அடுத்த ஐந்து
    இடங்கள்(கே.பாலசந்தர்).

    11)நிழல் நிஜமாகிறது.
    12)புன்னகை மன்னன்.
    13)மரோ சரித்திரா.
    14)அச்சமில்லை அச்சமில்லை
    15)சொல்லத்தான் நினைக்கிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #89
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாலச்சந்தரின் நகைச்சுவைத் திரைப்படங்கள் என்று பிரித்து அதில் எனக்குப் பிடித்தவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்.

    அனுபவி ராஜா அனுபவி

    பொய்க்கால் குதிரை (ரொம்பப் பிடிக்கும்)

    பாமா விஜயம்

    நவக்கிரகம்

    பூவா தலையா

    தில்லு முல்லு

    எதிர் நீச்சல்

    மன்மத லீலை


    பிடிக்காத பிளேடுகள்

    சிந்து பைரவி (பாதியிலேயே ஓடி வந்துட்டேன்)

    வெள்ளி விழா

    கண்ணா நலமா

    சொல்லத்தான் நினைக்கிறேன் (அறுவை)

    பட்டினப் பிரவேசம்

    அக்னி சாட்சி

    எங்க ஊர் கண்ணகி

    வெள்ளி விழா (தாங்க முடியாத மொக்கை... பாடல்கள் விதிவிலக்கு )

    கல்யாண அகதிகள்

    அழகன்

    ஜாதி மல்லி

    கல்கி

    பார்த்தாலே பரவசம்

    பொய்

    வானமே எல்லை

    வறுமையின் நிறம் சிகப்பு



    ரொம்பப் பிடித்த படங்கள்

    நான் அவனில்லை

    அவர்கள்

    நூற்றுக்கு நூறு

    காவியத் தலைவி

    நாணல்


    இவர் படங்களில் இரு பாடகிகள் கோபாலின் சுசீலாம்மாவும், எல்லாருடைய ஈஸ்வரியும் பாடும் பாடல்கள் அருமையோ அருமை. அர்த்தங்கள் அந்தப் படத்தின் கதையையே நமக்கு உணர்த்தி விடும்



    'வெள்ளிவிழா'வில் 'கை நிறைய சோழி... கொண்டு வந்தேன் மாமி... காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி' பாடல்

    கணவனை கைக்குள் போட்டுக் கொள்வாளோ என்று கணவன் தோழியிடம் மனைவி தன் மனநிலைமையை உணர்த்தும் அழகு அற்புதம்

    'தாண்டி வர மாட்டாளம்மா... தோழியவள் எல்லை'... என்று தோழி கியாரண்டி கொடுப்பதோ இன்னும் அழகு.


    அது போல 'புன்னகை மன்னன்... பூவிழிக் கண்ணன்... பாடல் 'இரு கோடுகளி'ல்



    இரட்டை நாயகிகள் (ஜெயந்தி, சௌகார்) முன் சொன்ன அதே பாடகிகளின் குரலில்.

    அர்த்தமோ ஆயிரங்கள் சொல்லும்.

    கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டாம் மனைவியின் உரிமை வாதம்

    'மாலையிட்டால் அது ஓர் முறைதான் என நினைப்பது பெண்மையன்றோ'! (கோ, டாமினேஷன் அதிகம் போல)


    கணவனுடன் வாழ சூழ்நிலை இடங்கொடா நிலையில் அவனுடன் வாழ பதமாக இரண்டாமவளிடம் உரிமை கோரும் முதல் மனைவியின் பதில் எதிர்வாதம்

    'ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ!'

    (முருகன் வள்ளி, தெய்வானை இருவரையுமே மணந்து குடித்தனம் நடத்த வில்லையா?)


    இதற்கு இரண்டாம் மனைவியின் பஞ்ச் பதில்

    'அது ஏட்டில் உள்ள கதை' (புராண இதிகாச கதைகள் பொய்க் கதைகள் தானே! அந்தக் கதையெல்லாம் இங்கு விடாதே அம்மாயி)

    இதற்கு முதல் மனைவியின் பரிதாப பதில்

    'இது இன்றும் தொடரும் கதை'. (ஏன் நீயும், நானும் இப்போது இல்லையா?)

    அவள்:

    'அது பொம்மைக் கல்யாணம்' (சாமியாவது மண்ணாவது..... ச்சும்மா கதை விட்ருக்காங்க... பொம்மை விளையாட்டுதானே!)

    (கணவனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற உறுதியில் பக்தியானவள் கூட ஒரு கணம் சாமி கல்யாணத்தை பொம்மைக் கல்யாணம்தானே
    என்று அலட்சியப் படுத்தும் அற்புதமான சராசரி மனைவியின் மனோபாவம் இரண்டாமவளுக்கு)

    இவள்:

    'இது உண்மைக் கல்யாணம்'

    (பாவி! உனக்கு முன்னாலேயே உன் புருஷன் எனக்குப் புருஷனாயிட்டாருடி, புரிஞ்சுக்கோடி! படுத்தாதே!)



    அதே போல 'தாமரை நெஞ்ச'த்தில்



    கணவனைக் காதலித்தவளும், கைப்பிடித்தவளும் (ஊனமுற்றவள்)சேர்ந்து பாடும் அற்புத பாடல்

    'அடிப் போடி பைத்தியக்காரி'

    காதலித்தவளை கணவனுடன் சேர்த்து வைக்க நினைக்கும் நல்ல மனம் கொண்ட மனைவி

    இனி அது நடக்காது என்று விரக்தியின் வெளிப்பாட்டை வெளியிடும் காதலி

    அற்புதங்கள் நிகழ்த்தும் பாடல்

    'கண்கள் அருகே இமை இருந்தும்
    கண்கள் இமையைப் பார்த்ததில்லை.
    இந்த உவமை கொஞ்சம் புதுமை
    இன்னும் உனக்கேன் புரியவில்லை?
    வேறென்ன சொல்வேன் தெரியவில்லை'

    வரிகளா அல்லது வைரத் துண்டுகளா?!

    அருமையான உவமையை கதை சூழலுக்கு ஏற்ப பாடலில் வரிகளாகத் தந்துவிட்டு அந்த உவமையையும் சற்றே புதுமையான உவமை என்று தனக்குத்தானே தானே 'ஷொட்டு'ம் வைத்துக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்கிறானே இந்தக் கவிஞன்.

    ஆஹா!

    கவிஞன் கவிஞன்தான்.

    பாலச்சந்தர் பாலச்சந்தர்தான்.

    வாலி வாலிதான்.

    திரையுலகிலும்

    பொற்காலம் போய் கற்காலம் நடக்கிறது.

    இனி எப்போது வரும் அந்த பொற்காலம்?
    Last edited by vasudevan31355; 25th November 2013 at 02:56 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #90
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பேஷ்,பேஷ்,சுசீலா ,எல்.ஆர் .ஈ . கூட்டணியில் அத்தனை பாடல்களும் அருமை.ஜெமினி படங்கள்தான் அதிகம். உனது மலர் கொடியிலே,சித்திர பூவிழி வாசலிலே,கை நிறைய,அடி போடி,புன்னகை மன்னன்,இப்படி.
    நடிகர்திலகத்தின் படங்களில் கடவுள் தந்த இரு மலர்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 9 of 277 FirstFirst ... 78910111959109 ... LastLast

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •