செல்வராகவனுக்கு வந்த சோதனை!

ஒருவழியாக 'இரண்டாம் உலகம்' வெளியாகிவிட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படத்துக்கு ரெஸ்பான்ஸ் இல்லை.
பட்ஜெட்டை விட பல மடங்கு செலவு வைத்துவிட்டதாக டைரக்டர் செல்வராகவனைக் குற்றம் சொன்ன தயாரிப்பு தரப்பு கடைசியில் எப்படி சமாதானமானது என்பது பெரிய அதிர்ச்சி!

மீண்டும் ஒரு படத்தை தனது கம்பெனிக்கு இயக்கித்தர வேண்டும் என்று செல்வராகவனிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.
இவர் இயக்கித் தரப்போகும் அந்தப் புதிய படத்திற்கு சம்பளம் கிடையாதாம். இப்படியொரு அக்ரிமென்ட்டில் செல்வாவும் சைன் பண்ணியிருக்கிறாராம்.

அடுத்த படத்திற்கு சம்பளம் இல்லை என்றால் அதற்கெல்லாம் செல்வராகவன் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால், செல்வாவை இப்படி லாக் பண்ணியதாக நினைத்துக் கொண்டிருக்கும் நிறுவனம், அப்படியே இவரது தம்பியான தனுஷையும் சேர்த்தே இழுத்திருக்கிறதாம்.

இனிமேல் உருவாக இருக்கும் அந்தப் படத்தை செல்வா இயக்க, அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறதாம்.

எந்தப் படத்தில் ஒப்பந்தமானாலும், அட்வான்ஸ் என்று சொல்லப்படும் முன்பணமும் கொடுப்பார்கள். இந்தப் படத்தைப் பொருத்தவரை யாரும் அட்வான்ஸ் கொடுக்க முன்வரவில்லையாம். படத்தைப் போடுங்க. கலெக்ஷன் வந்தா பிரிச்சிப்போம் என்று கூறிவிட்டார்களாம். - Vikatan