-
5th December 2013, 07:51 PM
#1361
Senior Member
Seasoned Hubber
Continuing with the theme of respecting others; irrespective of what language they speak,
religion they believe in, and country they live in; here is one of my favourite Tamil Film songs.
For this song that praises and glorifies the Tamil language, lyrics are by கவிஞர் கண்ணதாசன்,
set to music by Malayalam music director Devarajan, for the Tamil remake of the Malayalam
classic துலாபாரம். The movie (in Malayalam and Tamil) was directed by A. (Aloysius) Vincent.
By the way, Vincent was the cinimatographer (cameraman) for almost all of (C.V.) Sridhar's
classic Tamil movies, as well as several famous Hindi and other language movies . The original
Malayalam version of துலாபாரம் won the National Award for the Best Feature Film;
and Sharada (who is from Andhra Pradesh) won the National Award for Best Actress!
Here it is:
-
5th December 2013 07:51 PM
# ADS
Circuit advertisement
-
6th December 2013, 04:14 PM
#1362
Senior Member
Senior Hubber
--இளமை இதோ இதோ..
*
ஓ நோ… நான் இந்தப் பாடலைச் சொல்லப்போவதில்லை.. பொதுவாக இளமை.
.*
ஒரு முறை தான் வரும் கதைசொல்லக்கூடும் உல்லாசம் எல்லாவும் காட்டும் எனப் பாட்டாக வந்த இளமை அப்பாவிற்கும் வரும்.. பிள்ளைக்கும் வரும் பேரனுக்கும் வரும்…
*
என்னாபா எய்தறான் இந்த ஆளு என நினைக்க வேண்டாம்..
*
அப்பா தனது இளமைக்காலத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்..
*
சலசலவென நீரோடையின் சத்தத்தைப் போல அழகாய் வேகமாய்ப் போகும் இசை.. இடங்களோ அழகுகொஞ்சியிருக்கும் இலங்கை நகரம்.. ஆடிப் பாடும் இருவரோ யங் யங் ஹீரோ ஹீரோயின்.. வெகு வெகு இளமையானவர்கள்..இருவருக்கும் காதல்.. எனில் துள்ளலும் துடிப்பு உண்டு.. எனவே துள்ளல் இசை.. துள்ளல் இசைக்கு துடிப்பாய் எழுதவேண்டும்.. எழுதிவிட்டார்
*.
. புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே
காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து ஐ லவ் யு சொல்லிப்பார் ஓடாதே
*
பாடல் தெரிந்திருக்குமே ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசைச் சொன்னவர் வைரமுத்து..பாடியவர்கள் எஸ்பிபி அனுபமா..ஆடியவர்கள் வினீத், நிருபமா(க்யூட் பொண்ணு என்ன ஆனார்..தெரியவில்லை)
*
பையன் அப்பாவை விடப் பழமை வாதி..ஓ எப்படி..
*
இளமைத்துடிப்பு இருக்கிறது..அதே சமயத்தில் அழகுதமிழ் வார்த்தைகளப் பயன் படுத்த வேண்டும் என்ற அக்கறை ஓடுகிறது.. அப்பா எழுதிய கவிதை வரி போல ரத்தம் புத்தம் புதுசு.
*.
அது சரி ஈஈ என்ன பாட்டா.?
*.
அந்தப் பெண். கொஞ்சம் நெடு நாள் ஊறியகுலோப் ஜாமூனைப் போல அழகானவள் இனிமையானவள்.. அந்த ஹீரோ இளைஞன்.. அவன் சிரிப்பில் க்ளோஸப் மின்னல்.. பளீர் ரின் வெண்மை..
*
..காதலிக்கவும் மாட்டேன் என்கிறான்.. ஆனால் அந்தப் பெண்ணின் மீது சின்னதாய் ஈர்ப்பு வருகிறது..எனில் பாடலும் வருகிறது
*..
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
*
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்
*
ஹை.. பாட்டு நன்னாயிருக்கே எனக் கேட்டதோடு மறந்து விடுவோம்.. ஆனால் ஒரு வார்த்தை நிரடும்
*
சுண்டல் தெரியும்..அது என்ன கொண்டல்?
*.
. கொண்டல் பழந்தமிழ் வார்த்தையாம்.. அதன் அர்த்தம் மேகம்.
*.
எனில் யோசிக்காது மழையைப் பொழியும் மேகமாய் அவள் மீது பெய்யப் போகிறானாம் அன்பை..சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் எனப் பாடல் வரும்போது ஹீரோ எடுத்துச்செல்லும் டீ கிளாஸ்கள் சற்றே சரிந்து டீ விழுவது டைரக்டோரியல் டச்
*
அவளுக்கோ கண்களின் வழியாகத் தெரியும் ஏக்கத்தை வார்த்தைகளில் காட்டுகிறாள்..அன்பின் ஆலை ஆனாய்
*
ம்ம் மதன் கார்க்கி..அருமை....வைர முத்து பெற்ற வயிற்றில் ப்ரலைன்ஸ் ஐஸ்க்ரீம் கட்டிக் கொள்ளலாம்..இல்லை..சாப்பிட்டுக் கொள்ளலாம்!
*
பாடல் பாடிய உன்னி மேனன், சித்ரா செளமியா அண்ட் இசை சரத்.நடித்திருப்பவர்கள் சித்தார்த் முழியும் முழியுமான நித்யா மேனன்..படம் 180 டிகிரி..
*.
இது அப்பா அளவுக்கு வேகப்பாடல் இல்லையானாலும் இனிமையாக இருக்கும்..ஏன்.. ராகம் அப்படி.. கரகரப் ப்ரியா.. அப்பா எழுதிய பாடலின் ராகம்.. ம்ம்ம் நீங்கள் சொல்லத்தானே போகிறீர்கள்
.*
-
6th December 2013, 04:19 PM
#1363
Senior Member
Senior Hubber
ராகதேவரே நீங்க்ள் கரகரப் ப்ரியாவிற்காக இந்தப் பாடலை வீடியோவிட்டிருந்தீர்கள் இல்லையா..அதன்பின்னர் எழுதியது தான் மேற்கண்டது..ஜீலை மாதம் வந்தால் - என்ன ராகம்?
-
6th December 2013, 09:38 PM
#1364
Senior Member
Veteran Hubber
chinnakkaNnan: Here is the composition by ThiruppaaNaaLvaar:
koNdal vaNNanai kovalanai veNNai....
(this clip by Bombay Jayashri does not load. Try youtube)
From Chennai Express:
Last edited by rajraj; 6th December 2013 at 09:54 PM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
6th December 2013, 09:52 PM
#1365
Senior Member
Diamond Hubber
ஆழ்வார் மட்டுமா... நால்வர் பதிகத்திலும் கொண்டல் உண்டு
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்ளியுள்,
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!
பொன்னியின் செல்வனில் பூங்குழலி சொல்லுவாளே... "தை மாசி மாதங்களில் கொண்டல் காற்று அடிக்கும். இரவோடு இரவாக இலங்கைக்குப் போய் வந்து விடலாம்" என்று....
ஏதோ முருகன் பற்றிய பிள்ளைத்தமிழில் கூட "கொண்டல் தரு நித்திலந்தனக்கும் கூறுந்தரமுண்டு" அப்படின்னு வரும்.
அம்பிகாபதி படத்தில் "அந்தமேவும் அரவிந்த மா மலரில்" பாட்டில் டி.எம்.எஸ் "கொண்டல் நாணும் குழல் செண்டை நாடும் குழல் வண்டு நாணும் விழியாள் " அப்படின்னு பாடுவார்.
சிக்கா.. உங்க கொண்டல் கொண்டைக்கடலை சுண்டலை நினைவுபடுத்தி விட்டது..
-
7th December 2013, 01:18 AM
#1366
Senior Member
Senior Hubber
Wow..Thanks rajraj sir and madhunna..சென்னை எக்ஸ்ப்ரஸ் சமீபத்தில் தான் பார்த்தேன் இந்தப் பாட்டையும்.. ஊன்றிக்கவனிக்கவில்லை..காரணம் தீபிகா
நன்றி..
நன்றி மதுண்ணா நால்வர் பதிகம் நான் அறியாத ஒன்று.பொ.செ மறுபடி எடுத்துப் பார்க்க வேண்டும்..கொ.க சுண்டல் எனிடைம் டிஃபனாக்கும்
-
7th December 2013, 10:23 PM
#1367
Senior Member
Veteran Hubber
nice discussion. new words!
-
7th December 2013, 11:09 PM
#1368
Senior Member
Seasoned Hubber
Thank you Chinnakkannan for reminding me of the discussion we had long ago about
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்...
This is the song that made me start to like Madhan Karky!
Last edited by raagadevan; 8th December 2013 at 04:26 AM.
-
8th December 2013, 02:50 AM
#1369
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
8th December 2013, 10:57 AM
#1370
Senior Member
Senior Hubber
raj raj sir
ram leelaa paartheerkaLaa..illai endraal paarungkaL..
Bookmarks