-
3rd January 2014, 06:59 AM
#11
Senior Member
Diamond Hubber
வருஷம் 16 - பூ பூக்கும் மாசம்
பல்லவிக்கு என ஒரு தாள நடை..பல்லவி முடிந்தவுடன் அதற்கு துளி கூட தொடர்பில்லாத ஒரு இசை ஓவியத்தை ராஜா வயலின் கற்றைகளால் வரைகிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு நடை. இடையிசை பரவிச் சென்று சரணத்தில் ஏறிவிடுவது மிகவும் இயல்பாக இருக்கிறது. சரணம் முடிந்து பல்லவி தொடங்குகையில் பல்லவிக்கே உரிய நடை மீண்டும் சேர்ந்து விடுகிறது. ராஜாவின் ஆக்கங்களில் இதுபோன்ற முயற்சிகள் அடிப்படையான ஒன்றாக அமைந்துவிடுவதைக் காணலாம். குறிப்பாக லயக் கட்டமைப்பில் வெவ்வெறு நடைகளில் பல்லவி, சரணம் இயங்குவது. ராஜாவைப் பிறகு வந்த யாருமே இந்த அளவுக்கு லயத்தில் மெருகு கூட்டியதில்லை. ராஜாவின் ஆக்கங்களில் பாதிக்கு பாதி / பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் இப்படிப் பட்ட வகையில் வந்தவை. ராஜாவிற்கு பிறகு வந்த இசையமைப்பாளர்கள் எல்லாருமே பெரும்பாலான பாடல்களுக்கு பெரும்பாலும் ஒரே ஒரு நடையினை (ரிதம்) வைத்துக்கொண்டு பாடல் முழுதையும் நிரப்பிவிடுவார்கள். அப்படியே மிஞ்சி மிஞ்சிப் போனாலும் அடிப்படையான ரிதத்தின் மீது சில தாள வாத்தியங்க்களை மேலும் சேர்த்திருப்பார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் லயத்தின் மீதான திறமை / ஈடுபாடு வெளிப்படுவதில்லை. ராஜா இதிலிருந்து விலகி லயத்தில் பலதரப்பட்ட முயற்சிகளை மிகவும் அனாயசமாக போறபோக்கில் செய்துவிடுகிறார். தவில், தபேலா, காங்கோ, ட்ரம், உறுமி, பறை, பம்பை, மத்தளம், முரசு, செண்டை இன்னபிற இப்படி ஒவ்வொரு தாளக் கருவியும் ராஜாவின் ஆக்கங்களால் பெருமை பட்டுக் கொள்ளும்.
அதே படத்திலிருந்து "ஏய் அய்யாசாமி" பாடலையும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். பல்வேறு நடைகளை அமைத்து ரொம்ப அழகா ஒரு கர்நாடக-தெம்மாங்குப் பாடலை கட்டமைக்கிறார் ராஜா.
இசைப்பாடலில் ரிதம் என்ற பதத்தின் வித்தையே ராஜாவுக்கு பிறகு மறைந்து விடும் போலிருக்கிறது. பல்வேறு இசை ஜாம்பவான்கள் வரிசையின் கடைசியில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி க்கு அடுத்து ராஜாவோடு இந்த லயச் சங்கிலி முடிந்து விடுகிறது.
Last edited by venkkiram; 3rd January 2014 at 11:03 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd January 2014 06:59 AM
# ADS
Circuit advertisement
-
4th January 2014, 09:34 PM
#12
Senior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
இசைப்பாடலில் ரிதம் என்ற பதத்தின் வித்தையே ராஜாவுக்கு பிறகு மறைந்து விடும் போலிருக்கிறது. பல்வேறு இசை ஜாம்பவான்கள் வரிசையின் கடைசியில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி க்கு அடுத்து ராஜாவோடு இந்த லயச் சங்கிலி முடிந்து விடுகிறது.
Very well said.
-
28th January 2014, 09:15 AM
#13
Senior Member
Diamond Hubber
சில வருடங்களுக்கு முன்பு சொல்வனம் இதழில் வெளிவந்த விக்கியின் இசைக்கட்டுரையை மீள் வாசித்தேன். ரொம்ப அழகா ராஜாவின் சிறப்பு என படம் வரைந்து பாகம் குறிக்கிறார் விக்கி. என்ன சத்தம் இந்த நேரம் பாடலை விக்கியின் வடிவம் இன்னும் சிறப்பாக்குகிறது.
http://solvanam.com/?p=7377
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
28th January 2014, 09:41 AM
#14
Junior Member
Junior Hubber

Originally Posted by
poem
மிகவும் அருமையான பதிவு....பாரதி என்ற நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில் எறிந்த பாவத்திற்கு நாணி தலை குனிந்து தனது இளைய மகன் ராஜாவையாவது நல்ல இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு கட்டினாள் போல அந்த பாரதி.
"சுத்த தன்யாசியில்" அமைத்த இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த கலைவாணி தன் வீணையுடன் ராஜாவின் மனதில் புகுந்து விட்டாளோ என்று எண்ண வைக்கும் வகையில் நேர்த்தியான இசை....உரிமையில் அழைக்கிறேன்........உயிரிலே கலந்து மகிழ .........வா பொன் மயிலே !!!!
wonder who wrote the lyrics for this one? lots of IR songs like this have such simple and elegant lyrics.. very yethaartham, straight from the heart type of lyrics. such a beautiful and touching tune.
-
28th January 2014, 10:08 AM
#15
Junior Member
Devoted Hubber
இந்த பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இவரின் பாடல்கள் , கங்கை அமரன் பாடல்கள் போலவே மிகவும் simple and straight forward ஆக இருக்கும். அனாவசிய அலங்காரங்கள் , பூவுக்கு வேர்க்கும், தாகம் வந்து ஆளை குடிக்கும் போன்ற Non-sense எதுவும் இருக்காது.
Last edited by poem; 28th January 2014 at 10:24 AM.
-
28th January 2014, 10:12 AM
#16
Senior Member
Diamond Hubber

Originally Posted by
poem
அனாவசிய அலங்காரங்கள் , பூவுக்கு வேர்க்கும், தாகம் வந்து ஆளை குடிக்கும் போன்ற Non-sense எதுவும் இருக்காது.
யாரை நேரடியாக சொல்கிறீர்கள் எனத் தெரிகிறது. No Comments
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
28th January 2014, 10:26 AM
#17
Junior Member
Devoted Hubber
Venkkiram, Thanks for your understanding !!!!!
))
-
28th January 2014, 10:28 AM
#18
Junior Member
Junior Hubber

Originally Posted by
poem
இந்த பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இவரின் பாடல்கள் , கங்கை அமரன் பாடல்கள் போலவே மிகவும் simple and straight forward ஆக இருக்கும். அனாவசிய அலங்காரங்கள் , பூவுக்கு வேர்க்கும், தாகம் வந்து ஆளை குடிக்கும் போன்ற Non-sense எதுவும் இருக்காது.
haha! நீங்கள் வைரமுத்துவை தாக்குகிரீர்கள் என்று தெரிகிறது! 
IR had a different set of lyricists to work with. I have always wondered how he would have handled the flamboyant lyrics of kannadasan in his prime (பார்வை யுவராணி கண்ணோவியம், நாணம் தவறாத பெண்ணோவியம் etc)
-
28th January 2014, 07:24 PM
#19
Junior Member
Devoted Hubber
ராஜாவும் கண்ணதாசனும் இணைந்து மிகச் சில பாடல்களே உருவாக்கி இருந்தாலும் அனைத்தும் மிகவும் அருமையானவை. " தேவன் தந்த வீணை" என்ற ஒரு பாடலே போதும். "தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ" . ஆனால் MSV & கண்ணதாசன் pair is THE best. அதிலும் MSV, கண்ணதாசன், TMS, சிவாஜி ..... no need to say They always hit the roof.
)) ராஜாவின் இசையில் " பார்வை யுவராணி" நிச்சயமாக இவவளவு கம்பீரம்மாக ஒலித்ருக்காது, வேறு குரலில், வேறு ராகத்தில் குறைவில்லாமல் இருந்து இருக்கும். நமக்கும் பிடித்து இருக்கும் என்றே நினக்கிறேன். மிகவும் நல்ல அடிகடி விரும்பி கேட்கும் பாடல். " இன்று நானும் கவியாக யார் காரணம்? " " A thing of beauty is joy for ever" . அது பூவோ, பொண்ணோ!!! மேலும் இவர்கள் இருவரின் combo வில் வந்த தங்கரதம் வந்தது வீதியிலே, பாரதி கண்ணம்மா, எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு, மனம் கனிவான அந்த, பொட்டு வைத்த முகமோ ......The list is keep going and going and going..........
)
Last edited by poem; 2nd February 2014 at 02:13 AM.
-
15th March 2014, 07:43 PM
#20
Junior Member
Devoted Hubber
படித்ததும் மிகுந்த சந்தோசமும் கண்களில் கண்ணீரும்......... வாழ்க நீ எம்மான் !!!
The 25 Greatest Film Composers In Cinema History
Read more at http://www.tasteofcinema.com/2014/th...4BWU3LDdYk9.99
Last edited by poem; 15th March 2014 at 07:47 PM.
Bookmarks