-
2nd February 2014, 04:59 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
அன்பரின் ஜீனோவிற்கான பதிலா? ஆமாம் என்றால் அன்பரின் பதில் கமலைப் போலவே குழப்பமாகவே இருக்கு. நான் இந்த விஷயத்தில் ஜீனோ பக்கம். சமரசமே வாழ்க்கையாகிவிடாது. தனது படைப்பாக்கங்களில் கமல் பொதித்து வைத்திருக்கும் விழுமியங்களின் மீதான நம்பிக்கைகளின் எதிர்பார்ப்பே ஜீனோ போன்றவர்களின் கோபம். அது மிகவும் சரியானது. இந்திய நாட்டின் சமரசமே இலங்கையின் நடந்த மாபெரும் மனிதப் / இனப் படுகொலை விஷயத்தில் காட்டிய பாரபட்சம். அதை கலைத்துறையின் வழியாக எதிர்ப்பைக் காட்டக் கூடிய, இந்திய அளவில் பிரபலமான ஒரே தமிழுணர்வு நடிகர் கமலே. ஈழ இனப்படுகொலை பற்றிய செய்தியையே எதோ ஒரு நாளில் எதோ ஒரு கொசு கடித்து விட்டு சென்றதைப் போல எடுத்துக் கொள்ளும் நம் நாட்டின் பிற மாநில மக்கள்/ அமைப்புக்கள் இருக்கையில் இந்திய தேசியம் என்பதற்கு பொருள் என்ன ?
நன்றி.
அன்பனுக்கு இந்த சாராம்சம் விளங்காதது ஆச்சரியம்!
கமலின் "ரசிகர்கள்" இந்த அளவும் கூடப் புரிதல் இல்லாதிருப்பது, அவர்கள் ரசிப்பதாக சொல்லப்படும் கலையின் நுட்பத்தையே கேலிக்குரியதாக்கி விடுகிறது
எனினும், போதிய அளவு புரிதல் அவருக்குண்டு என்று வாளாவிருப்பது ஒரு தெரிவு. அதை இப்போது செய்து விடுகிறேன்.
-------------------------------------
நாளை வேறொரு பொருள் பற்றி, "அறச் சீற்ற" கண்களோடும், யாருக்கும் அஞ்சாதவன் போல உச்சரிப்போடும், ஞானோபதேசம் செய்ய கமல் முற்படும் போது - அதை விடவும் நக்கலுக்குரியதான ஒரு விசயம் இந்தப் பேரண்டத்தில் இல்லாதது போல எழும்பக்கூடிய எதிர்வினைகளைக் கண்டு கடுப்பாகிவிடாமல் இருந்தால் சரி!
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
2nd February 2014 04:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks