-
3rd February 2014, 12:47 PM
#1081
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
SIVA SIR,
Most of them are totally false news especially AO run in madras not at all impressive the moment thiruvilaydal came it has gone I was one of the members witnessed the entire scene, only susquent runs -reruns excellent.
Dear Sir,
Even if we say that with proof, they will argue stating that those films generated millions and trillions of revenue in re-runs where no proofs are there...soradhu dhaanae...naan kooda sollalaam chiranjeevi thiraipadam ivalavu kodi vasool seidhadhendru......! are they coming up with distributor statement? no isnt it ? Every week they come up with Sunday Evening "Arangu niraindhadhu" without showing the crowd or the "full board" in theater....ellarum idhamaadhiri avanga abhimaana nadigar padam vandha seiradhudhaan..nothing serious about it..!
we know about the way they argue just for the sake of argue.
it is better we dont compare !
As far as Nadigar Thilagam is concerned in cine field, there is no competitor for him..! only others have treated him as competitor...
Those who fight with a lion, do you think they dont know that they are not equal ? inspite of that they fight because, it is just a get a name that they fought bravely with a lion.
Just because Maalai malar said that the last film MMS /OV/OV ran 100 days in those places, it does not mean that it actually ran..!
Let us just ignore it ...!
Last edited by RavikiranSurya; 3rd February 2014 at 12:53 PM.
-
3rd February 2014 12:47 PM
# ADS
Circuit advertisement
-
3rd February 2014, 12:49 PM
#1082
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?
Not exactly....but atleast 50 % where either தவறு (or) exaggerated (or) printing mistake??? !
-
3rd February 2014, 01:35 PM
#1083
Senior Member
Devoted Hubber
raghavendra sir's post
தொழிலதிபர் ரவிகுமார் கோவையில் வெற்றி பவனி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 175வது வெற்றிக் காவியம் அவன் தான் மனிதன் கோவை ராயல் திரையரங்கில் கடந்த 31.01.2014 வெள்ளி முதல் திரையிடப் பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பிரமிக்கத் தக்கதாய் உள்ளதாக கோவையிலிருந்து நண்பர் செந்தில் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக் கிழமை 02.02.2014 மாலைக் காட்சி வரை ரூ 40,000 என்பதைத் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது நிச்சயம் சிறப்பானதாகும். ரூ. 120 ரூ 100 என்ற அளவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படும் திரையரங்குகளில் கூட இந்த அளவிற்கு வசூலாவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கும் நிலையில் இது பாராட்டத் தக்கதாகும். அதுவும் இன்று மாலைக் காட்சியின் வசூல் மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வசூலைக் கொடுத்து 95 சதவீதம் அரங்கு நிறைவு கண்டுள்ளதாயும் நண்பர் கூறுகிறார்.
பழைய படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் இப்படிப் பட்ட வரவேற்பினை இன்றைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அனைவரும் கண்டு ஆராய்ந்து அதற்கேற்றார்போல் தங்கள் திரைப்படங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் முனைய வேண்டும் என்பதே என் விருப்பம்.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
3rd February 2014, 06:04 PM
#1084
Senior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
மேற்கண்ட கருத்தை மாலைமலர் எம் ஜீ ஆர் அவர்கள் பற்றி எழுதிவரும்
தொடரின் பகுதி 13ல் கருத்துக்கள் பகுதியில்
பதிவிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது பார்த்தால் தூக்கிவிட்டார்கள்
தவறை திரித்திவிட்டு என்கருத்தை தூக்கினார்கள் என்றாலும் பரவாயில்லை
அதுவும் செய்யவில்லை
பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?
இதைத்தான் நான் அப்பொழுதே சொன்னேன் - அங்கே எழுதப்படுவதெல்லாம் கவிதைகள் - பெரும்பாலும் அழகானவையென்று. இப்படி நாம் அடிக்கடி அவர்கள் கவிதைகளை அழகானவைகள் என்று சொல்லி குஷிப்படுத்த நினைக்கிறார்களோ என்னவோ! அவர்களில் சிலர் இங்கேயும் வந்து அழகான கவிதை எழுதுகிறார்களே. கவனித்தீர்களா?
Last edited by kalnayak; 3rd February 2014 at 06:06 PM.
-
3rd February 2014, 07:55 PM
#1085
Junior Member
Diamond Hubber
1946 ஆம் ஆண்டு , திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த வி.சி. கணேசன் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். கணேசனின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.
எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.
இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.
“நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.
மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.
சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.
அண்ணா சிவாஜியை கட்டித் தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.
திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.
“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.
சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.
பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.
“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப் பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜி கணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்று சிவாஜி கணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.- courtesy net
-
3rd February 2014, 09:07 PM
#1086
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu

முதல் கால்வாசி தவறான திருத்தி எழுதப்பட்ட செய்தி...எழுதியது யார் என்று தெரியவில்லை. நடந்த உண்மை இதுதான்.
அறிஞர் அவர்கள் சிவாஜி கண்ட இந்துரஜ்யம் நாடகம் அரங்கேற சில நாட்களே இருந்த நிலையில், அந்த நாடகத்தில் நடிப்பதை இருந்த திரு mgr அவர்கள் காரணம் ஏதும் சொல்லாமல் விலகிகொண்டார்.
நாடகம் அரங்கேற ஓர் இரு தினங்களே பாக்கி இருக்கையில், நடிகர் திலகத்தை அப்போது (வெறும் vc கணேசன் தான் ) அறிமுகபடுத்தி வைக்கப்பட்டார். நாடகங்களில் நன்றாக நடித்து நல்ல பெயர் பெற்றிருந்த நடிகர் திலகத்தை கண்ட அண்ணா நாடகத்தின் புத்தகத்தை கொடுத்து அதை தான் வருவதற்குள் நன்றாக பார்த்து வைக்க சொன்னார்.
அதன் பிறகு நடந்தது இந்த உலகம் அறிந்ததே...! கூத்தாடி...கூத்தாடி என்று நாடக திரை கலைஞர்களை இழிவாக பேசப்பட்ட காலம். பெரியாரும் அப்படி தான் அழைக்கும் பழக்கம் கொண்டிருந்தார் கூத்தாடி..கூத்தாடி என்று இகழ்ந்த வாயினால் " நீ இன்று முதல் வெறும் கணேசன் அல்ல ...சிவாஜி கணேசன் " என்று கூறினார் பெரியார்.
நாடகம் சினிமா இவற்றை அறவே வெறுத்ததாக சொல்லப்படும் பெரியாரையே மயக்கிய நடிப்பு நடிகர் திலகத்தினுடயது. அதற்க்கு பிறகு பெரியார் யாரையும் கூத்தாடி என்று கூறவில்லை. நிருத்திகொண்டார்...அப்பேற்பட்ட பெரியாரை மயக்கி சிவாஜி பட்டம் பெற்ற நடிப்பை, நடிப்பை பற்றி என்னவென்று தெரியாத சில வயிற்றேரிச்சல்வாதிகள், காழ்புனற்சிகொண்டவர்கள், "மிகைநடிப்பு" என்று கூறுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது இன்று !
அவர்கள் அப்படி கூறினாலும் நடிப்பை அலவிடதெரிய வைத்தது நடிகர் திலகத்தின் நடிப்புதான் என்பதை இவர்கள் உணரவில்லை..பாவம் !
கலைஞர்களுக்கு கூத்தாடி என்று இகழ்ந்த பெரும்பான்மையான சமுதாயத்தில் நாடக திரைப்பட கலைஞர்களுக்கு மரியாதையை வாங்கிகொடுத்தவர் நடிகர் திலகம் !
தவறான செய்தி இருந்தாலும் முக்கால் வாசி செய்தி உண்மையான செய்தி பகிர்ந்த நண்பருக்கு நன்றி..!
Last edited by RavikiranSurya; 3rd February 2014 at 09:11 PM.
-
3rd February 2014, 09:49 PM
#1087
Junior Member
Veteran Hubber
கொங்கு மண்டலம் நமது உத்தம புத்திரரின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம்.
மக்கள் வெள்ளம் உத்தமனை தரிசிக்க ! அவர் தான் மனிதர் என்பதை உறுதி செய்ய !
திரையரங்கு உள்ளே photo எடுத்து பதிவிட்டால் தான் ஆள் இருந்தார்களா இல்லையா அரங்கு நிறைந்ததா இல்லையா என்பது தெரியும் ! ஆகையால் இதோ புகைப்படம் மக்கள் வெள்ளத்தை பறைசாற்றும் !
avm.jpg
avm1.jpg
avm2.jpg
-
3rd February 2014, 10:32 PM
#1088
Junior Member
Senior Hubber
[QUOTE=RavikiranSurya;1111217]கொங்கு மண்டலம் நமது உத்தம புத்திரரின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம்.
கொங்கு மண்டலத்தில் சரித்திர நாயகணின் அவன் தான் மனிதன் சிறப்புகளை பதிவு செய்த திரு.ரவி கிரண் அவர்களுக்கு நன்றி
-
3rd February 2014, 10:44 PM
#1089
Junior Member
Senior Hubber

கொங்கு மண்டலத்தில் உண்மை கொடை வள்ளல் நடிப்பு அரசரின் அவன் தான் மனிதன் சிறப்பு பதிவுகளுக்கு திரு. ரவி கிரண் அவர்களுக்கு நன்றி
சிங்கத்தமிழன் வரவால் கோவை மாநகரம் புனிதம் அடையட்டும்.
-
4th February 2014, 08:11 AM
#1090
Junior Member
Senior Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
கொங்கு மண்டலத்தில் உண்மை கொடை வள்ளல் நடிப்பு அரசரின் அவன் தான் மனிதன் சிறப்பு பதிவுகளுக்கு திரு. ரவி கிரண் அவர்களுக்கு நன்றி
சிங்கத்தமிழன் வரவால் கோவை மாநகரம் புனிதம் அடையட்டும்.
Many many thanks to sp chowdry and ravi kiran for coverage of Avan than manithan, kovai rerelease.
those days i have seen many NT movies in kovai always cycle tokens issued in advance in liuf of tickets there also our movies has created a very big record, always my CBE friends admires.
Bookmarks