-
5th February 2014, 04:18 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
poem
Very Very Interesting song. இப்படி ஒரு பாடல் இருந்ததே / இருப்பதே தெரியாது. U-Tube ல் வேறு எதையோ தேட இது கிடைத்தது. " ரகசியமானது காதல் "என்பதைவிடவும் " மிக மிக சுவாரசியமானது காதல்" என்பதில் தான் முழு சுவாரசியமுமே உள்ளது.

இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கல் மனதா அல்லது கனிந்த மனதா என்றும் கூட புரியாமல் வருவதுதானே ..சாதாரணமான வார்த்தைகள் with very profound effect

) நாகர்கோவில் , திற்பரப்பு போன்ற இடங்களின் பசுமை மிகுந்த அழகு. அந்த பெண்ணுமே மிக அழகு. நல்ல ஒளிப்பதிவு. சிற்பியின் இசை. எழுதியவர் யார் என்று தெரியவில்லை !!.
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல!!
முதல் முறை கேட்டதுமே ம்னதில் இடம் பிடித்த வரிகளைக் கொண்ட பாடல். இன்னமும் முணுமுணுக்க வைக்கும். ஒரு சில பாடல்களின் ஈர்ப்பு அதன் காணொளியைக் கண்டதும் மாயமாகி விடும். ஆனால் இதுவோ இன்னும் அதிகமாக மனதுக்குள் ஒட்டிக் கொண்டது. செதுக்கியது சிற்பி. மூலப் பொருளைத் தந்தவர் யாரென்று தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சிதான்...
-
5th February 2014 04:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks