Page 370 of 399 FirstFirst ... 270320360368369370371372380 ... LastLast
Results 3,691 to 3,700 of 3990

Thread: Makkal thilagam mgr part 7

  1. #3691
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3692
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் முகராசி - திரைப்பட பாடல் விளம்பர கவர் புகைப்படங்களும், விளக்கமும் அருமை... வினோத் அவர்களின் நீரும் நெருப்பும் - திரைபடத்தின் அன்றைய வெற்றி நிலையையும், அப்புறம் இன்று 2014 - நடப்பு காலத்திலும் அப்படத்தின் வசூல், திரையீடு, வெற்றி வீச்சு என எல்லா பக்கமும் சுற்றி பார்த்து விவரங்கள் தெரிவித்திருப்பது இனிமை... இந்த படம் என்றில்லை!!! மக்கள் திலகம் எந்த திரைப்படங்களும் முதன்-முதல் திரையீடு தொடங்கி இப்பொழுது வரையிலும் பீடு நடை போடும் பாக்கியம் இந்த மஹானுபாவர் ஒருவருக்கே உண்டு !!!!!! என்பதும் நமக்கெல்லாம் எப்பொழுதும் பெருமைதானே...

  4. #3693
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    PanathOttam

    மக்கள் திலகம் சரோஜாதேவி விஸ்வநாதன் ராமமூர்த்தி கண்ணதாசன்
    டி எம் எஸ் பி சுஷீலா கூட்டணியில் அருமையான பாடல்கள் ..
    அதுவும் பாடல்கள் இடையில் ஹா ! என்ற தொனியை வித்தியாசமாக சேர்த்திருப்பார்கள் ..
    என்னதான் நடக்கும் பாடலில் அசட்டையாக
    ஜவ்வாது மேடையில் முழக்கமாக ...
    தொடர்ந்து பேசுவது கிளியா பாடலில் ஒய் ஒய் என்று.. மென்மையாக










    Regards

  5. Likes ainefal liked this post
  6. #3694
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " முகராசி " -1966 - ஆம் வருடம் இதே நாளில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த ஆண்டில் ஒன்பது நவரத்தினங்களாக 9 திரைப்படங்கள் வெளியாகி அனைத்துமே மிக நல்ல முறையில் வசூல் கண்டு வெற்றியை தாண்டியது வேறு எவருக்கும் கிடைக்காத பேறு ! அப்பொழுது சென்னை அண்ணா சாலையில் உள்ள 16 திரை அரங்குகளிலும் மக்கள் திலகம் அவர்களின் காவியங்கள் வெற்றி நடை பெற்றதை பொதுமக்கள் ஆரவாரமாக வரவேற்றனர் - என கூற கேட்ரிருக்கிறேன் ...

  7. #3695
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    tfmlover அவர்களின் மக்கள்திலகம் திரைப்படங்கள் பற்றிய சுவையான புகைப்படங்கள், செய்திகள் மற்றும் அலங்காரங்கள் சூப்பர்...

  8. #3696
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    As correctly pointed out by SUPER COSMIC POWER, “ PERARIGNAR ANNA - he was brotherly and close, a friend always faithful, always ready to succour, for those who feel him as the inner guide of each movement, at every moment and if you believe that he can wipe away everything, he wiped away all the faults, your errors, tirelessly, and at every moment everyone felt his infinite grace”.

  9. #3697
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    1986-ம் வருடம் புதுச்சேரியில் புரட்சிநடிகரின் திரைக்காவியங்களின் மறுவெளியீடு:

    அண்ணா - இன்று போல் என்றும் வாழ்க - 2.1.86 முதல் 8.1.86 வரை
    (4 காட்சிகள்)
    அம்பிகா - நாடோடி - 3.1.86 முதல் 7.1.86 வரை (3 காட்சிகள்)
    ரேணுகா - கொடுத்து வைத்தவள் - 10.1.86 முதல் 13.1.86 வரை (3 காட்சிகள்)
    நவீனா - பணத்தோட்டம் - 13.1.86 முதல் 19.1.86 வரை (3 காட்சிகள்)
    பாரதி - எங்க வீட்டுப்பிள்ளை - 26.1.86 முதல் 3.2.86 வரை (4 காட்சிகள்)
    மீனாட்சி - சங்கே முழங்கு - 26.1.86 முதல் 30.1.86 வரை (4 காட்சிகள்)
    நவீனா - இதய வீணை - 31.1.86 முதல் 6.2.86 வரை (3 காட்சிகள்)
    அஜந்தா - ஆசை முகம் - 31.1.86 முதல் 6.2.86 வரை (3 காட்சிகள்)
    பாரதி - நினைத்ததை முடிப்பவன் - 4.2.86 முதல் 7.2.86 வரை (4 காட்சிகள்)
    வீனஸ் - உலகம் சுற்றும் வாலிபன் - 6.2.86 முதல் 13.2.86 வரை (3 காட்சிகள்)
    அம்பிகா - பாக்தாத் திருடன் - 7.2.86 முதல் 12.2.86 வரை (3 காட்சிகள்)
    நவீனா - குமரிக்கோட்டம் - 1.3.86 முதல் 6.3.86 வரை (3 காட்சிகள்)
    கந்தன் - வேட்டைக்காரன் - 24.2.86 முதல் 29.2.86 வரை (3 காட்சிகள்)
    மீனாட்சி - உலகம் சுற்றும் வாலிபன் - 22.2.86 முதல் 28.2.86 வரை (4 காட்சிகள்)
    வீனஸ் - சிரித்து வாழவேண்டும் - 28.2.86 முதல் 3.3.86 வரை (3 காட்சிகள்)
    நியூடோன் - அன்னமிட்டகை - 7.3.86 முதல் 13.3.86 வரை (4 காட்சிகள்)
    நவீனா - ராஜா தேசிங்கு - 8.3.86 முதல் 12.3.86 வரை (3 காட்சிகள்)
    கந்தன் - ராமன் தேடிய சீதை - 11.3.86 முதல் 18.3.86 வரை (3 காட்சிகள்)
    அம்பிகா - தெய்வத்தாய் - 16.3.86 முதல் 20.3.86 வரை (3 காட்சிகள்)
    நவீனா - நான் ஆணையிட்டால் - 18.3.86 முதல் 23.3.86 வரை (3 காட்சிகள்)
    நவீனா - அன்பே வா - 24.3.86 முதல் 27.3.86 வரை (3 காட்சிகள்)
    நியூடோன் - மலைக்கள்ளன் - 5.4.86 முதல் 12.4.86 வரை (4 காட்சிகள்)
    நவீனா - அரசிளங்குமரி - 10.4.86 முதல் 18.4.86 வரை (3 காட்சிகள்)
    ஜீவா - தாழம்பூ - 14.4.86 முதல் 20.4.86 வரை (4 காட்சிகள்)
    வீனஸ் - ஒளிவிளக்கு - 30.4.86 முதல் 6.5.86 வரை (3 காட்சிகள்)
    அம்பிகா - ரிக்ஷாக்காரன் - 21.4.86 முதல் 29.4.86 வரை (3 காட்சிகள்)

    அம்பிகா - ஆயிரத்தில் ஒருவன் - 3.5.86 முதல் 8.5.86 வரை
    நவீனா - சந்திரோதயம் - 7.5.86 முதல் 14.5.86 வரை
    நவீனா - எங்கள் தங்கம் - 22.5.86 முதல் 29.5.86
    வீனஸ் - நாடோடி மன்னன் - 24.5.86 முதல் 29.5.86 வரை
    நவீனா - பெற்றால்தான் பிள்ளையா - 4.6.86 முதல் 10.6.86 வரை
    ராமன் - காவல்காரன் - 8.6.86 முதல் 11.6.86 வரை
    அம்பிகா - காதல் வாகனம் - 4.6.86 முதல் 9.6.86 வரை
    அம்பிகா - நான் ஆணையிட்டால் - 16.6.86 முதல் 20.6.86 வரை
    அம்பிகா - கலங்கரை விளக்கம் - 21.6.86 முதல் 26.6.86 வரை
    அஜந்தா - சபாஷ் மாப்பிளே - 27.6.86 முதல் 3.7.86 வரை
    நவீனா - காஞ்சித்தலைவன் - 7.7.86 முதல் 10.7.86 வரை
    வீனஸ் - ஆசைமுகம் (காலை 10.மணி) 6.7.86
    நியூடோன் - இதயக்கனி - 15.7.86 முதல் 21.7.86 வரை
    நவீனா - ஆசைமுகம் - 25.7.86 முதல் 29.7.86 வரை
    கந்தன் - மருத நாட்டு இளவரசி - 25.7.86 முதல் 31.7.86 வரை
    ரேணுகா - எங்க வீட்டுப் பிள்ளை - 25.7.86 முதல் 30.7.86 வரை
    அம்பிகா - காவல்காரன் - 9.8.86 முதல் 14.8.86 வரை
    வீனஸ் - நம்நாடு - 14.8.86 முதல் 20.8.86 வரை
    நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 15.8.86 முதல் 21.8.86 வரை
    கந்தன் - புதிய பூமி - 29.8.86 முதல் 4.9.86 வரை
    அம்பிகா - சந்திரோதயம் - 30.8.86 முதல் 3.9.86 வரை
    நவீனா - தலைவன் - 12.9.86 முதல் 19.9.86 வரை
    அஜந்தா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 12.9.86 முதல் 19.9.86 வரை
    கந்தன் - தேர்த்திருவிழா - 25.9.86 முதல் 30.9.86 வரை
    வீனஸ் - படகோட்டி - 26.9.86 முதல் 30.9.86 வரை
    நவீனா - தாயைக் காத்த தனயன் - 29.9.86 முதல் 3.10.86 வரை
    அம்பிகா - ஆசைமுகம் - 1.10.86 முதல் 4.10.86 வரை
    நவீனா - சபாஷ் மாப்பிளே - 4.10.86 முதல் 10.10.86 வரை
    அம்பிகா - தாழம்பூ - 15.10.86 முதல் 19.10.86 வரை
    நவீனா - தெய்வத்தாய் - 17.10.86 முதல் 22.10.86 வரை
    அம்பிகா - அரசிளங்குமரி - 20.10.86 முதல் 24.10.86 வரை
    கந்தன் - குடும்பத்தலைவன் - 14.10.86 முதல் 31.10.86 வரை
    ரேணுகா - ராஜா தேசிங்கு - 27.10.86 முதல் 31.10.86 வரை
    நவீனா - மாட்டுக்கார வேலன் - 1.11.86 முதல் 11.11.86 வரை (11 நாட்கள்)
    அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 9.11.86 முதல் 13.11.86 வரை
    வீனஸ் - சபாஷ் மாப்பிளே - 15.11.86 முதல் 20.11.86 வரை
    நவீனா - கன்னித்தாய் - 28.11.86 முதல் 4.12.86 வரை
    வீனஸ் காஞ்சித்தலைவன் - 22.12.86 முதல் 24.12.86

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 19th February 2014 at 06:00 PM.

  10. Likes ainefal liked this post
  11. #3698
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

    'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.

    'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.

    'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.

    'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.

    'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.- courtesy malaimalar

  12. Likes ainefal liked this post
  13. #3699
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1969_ம் ஆண்டில் "அடிமைப் பெண்", "நம் நாடு" ஆகிய 2 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இரண்டுமே வெற்றிப்படங்கள் என்றாலும், "அடிமைப்பெண்" மெகாஹிட் படம். எம்.ஜி.ஆரின் சொந்தப்படம். நாடோடி மன்னனுக்குப்பிறகு, அவர் பிரமாண்டமாக தயாரித்த படம். ஆனால், இதை எம்.ஜி.ஆர். டைரக்ட் செய்யவில்லை. கே.சங்கர் டைரக்ட் செய்தார்.

    அடிமைப்பெண்ணின் கதையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா எழுதியது. வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், அவிநாசி மணி ஆகியோர் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    ஆரம்பத்தில், இப்படத்தின் கதாநாயகியாக கே.ஆர்.விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. பின்னர், அவருக்கு பதிலாக ஜெயலலிதா நடித்தார். அசோகன், ஆர்.எஸ்.மனோகர், "சோ", ஓ.ஏ.கே.தேவர், பண்டரிபாய், ஜோதிலட்சுமி, பேபி ராணி ஆகியோரும் நடித்தனர். "அடிமைப்பெண்" கதை, நிறைய சம்பவங்களும், திருப்பங்களும் கொண்டது.

    செங்கோடன் (அசோகன்) கொடியவன். வேங்கை மலைத் தலைவி மங்கம்மா (பண்டரிபாய்) மீது மோகம் கொள்கிறான். அவள் வெறொருவரை மணந்து, தாயான பிறகும் அவளை அடைய முயற்சி செய்கிறான்.

    "உன் குழந்தையைக் கொலை செய்வேன்" என்று மிரட்டுகிறான். ஆனால் அவளோ புலியென மாறி, அவன் காலைத் துண்டாக்குகிறாள். ஒரு காலை இழந்த செங்கோடன், மங்கம்மாவை பழி தீர்த்துக் கொள்ள அவளுடைய 2 வயது மகன் வேங்கையனை கடத்திச் சென்று, ஒரு சிறு இருட்டறையில் அடைத்து வைக்கிறான். இதனால், வேங்கையன் கூனிக்குறுகி வளருகிறான்.

    மங்கம்மா, செங்கோடன் கண்ணில் படாமல் மறைந்து வாழ்கிறாள். அவளைக் கண்டுபிடித்து அவள் கண் எதிரே வேங்கையனின் கால்களைத் துண்டிக்கப்போவதாக சபதம் செய்கிறான், செங்கோடன். பெண்களை அடிமையாக்கி, கால்களில் விலங்கு மாட்டுகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது.

    இருட்டறையில் கூனனாகவே வளர்ந்து வரும் வேங்கையன், வாலிபனான பிறகும் பேசக்கூட முடியாத அளவுக்கு குழந்தை போல் இருக்கிறான்.

    ஒரு அழகி (ஜெயலலிதா) மூலம், அவனுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது. கூன் நிமிர்ந்து, செங்கோடனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறான். கொடியவர்களை ஒடுக்குகிறான். அடிமைப்பெண்களை விடுவிக்கிறான்.

    1_5_1969_ல் வெளியான இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆரம்பக் காட்சிகளில், முதுகை வளைத்து கூனனாக நடித்த காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர் கூன் சரியாகி வீரதீரச் செயல்கள் செய்யும்போது, வழக்கமான எம்.ஜி.ஆரைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இப்படத்தில் ஜெயலலிதா மிகச்சிறப்பாக நடித்ததோடு, "அம்மா என்றால் அன்பு" என்ற வாலியின் பாடலை சொந்தக் குரலில் பாடினார். வாலி எழுதிய "ஏமாறாதே... ஏமாற்றாதே" என்ற பாடலும், ஆலங்குடி சோமு இயற்றிய "தாயில்லாமல் நானில்லை" என்ற பாடலும், புலமைப்பித்தனின் "ஆயிரம் நிலவே வா" பாடலும் `ஹிட்'டாகின.

    "ஆயிரம் நிலவே வா" பாடல் மூலம்தான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரை உலகுக்குப் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகள் புதுமையான முறையில் விறுவிறுப்பாக அமைந்தன. சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். சண்டை போடும் காட்சி, மெய் சிலிர்க்கச் செய்தது.

    "அடிமைப்பெண்" மதுரை சிந்தாமணி தியேட்டரில் 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னையில் மிட்லண்ட் உள்பட 4 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

    திருச்சி, கோவை, சேலம் உள்பட 9 நகரங்களில் 100 நாள் ஓடியது. நெல்லையில் சென்ட்ரல் தியேட்டரில் 120 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது. 1969_ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது இப்படத்துக்குக் கிடைத்தது.

    நாகிரெட்டி _ சக்ரபாணி ஆகியோர் "விஜயா இன்டர்நேஷனல்" சார்பாக தயாரித்த படம் "நம் நாடு". இதை டைரக்ட் செய்தவர் ஜம்பு. வசனம்: சொர்ணம். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் _ ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப்படம் 7_11_1969_ல் வெளிவந்தது.

    எம்.ஜி.ஆர். வெகு இயற்கையாக நடித்த படம். பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. மதுரையில் 147 நாட்கள், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. - courtesy - malaimalar

  14. #3700
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் மறைந்து விடுகிறார். இந்த நிலையில் தேர்தலே இல்லாமல் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுகிறது. செயற்குழுவும், பொதுக்குழுவும், கட்சியின் அனைத்து அமைப்புகளும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை முதல்வராக்க முடிவெடுத்தது.

    இந்த நிலையில் தன்னுடைய பேச்சால், எழுத்தால் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் கலைஞர், தனக்குத் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறாகிவிட்டது.

    கீழ்க்கோர்ட்டில் அளித்த தீர்ப்பு, மேல் கோர்ட்டில் மாற்றி அமைக்கப்படும் என்கிற சூட்சும்ம் தெரிந்த அரசியல் சாணக்கியர் கலைஞர், உடனே மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்திக்கிறார். அவரிடம் தனக்கு இருக்கிற தகுதிகளையும், அதன் விளைவாக எழுந்த எண்ணத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

    அதற்கு இராஜாஜி அவர்கள், ‘உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார்’ என்று அனுப்பி வைக்கிறார்.

    இராஜாஜியின் இராஜதந்திரப்படிக் கலைஞர் வள்ளலைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும்-தமிழ், தமிழ. என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். அது மட்டுமில்லாமல் நான் நிலச்சுவான்தார்களின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கிறேன். எனவே, அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முதல்வர் நாற்காலியில் ஒரே ஒரு நாள் நான் அமர்ந்தால், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கே பெருமையல்லவா?” என்று கலைஞர் வள்ளலிடம் சொல்கிறார்.

    இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், எவர் கேட்டு இல்லையென்று சொல்லியிருக்கிறேன். இன்று நீ கேட்டா மறுக்கப் போகிறேன். ஆனால் நீ கேட்டது பொன்னோ பொருளோ அல்ல; அள்ளிக் கொடுத்து விட! நீ கேட்டது கர்ணனின் கவச குண்டலம் அல்லவா!” - இப்படி வள்ளல் ஒருநிமிடம் யோசித்தார்.

    அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.

    அதற்குப்பிறகு, அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    மக்கள் திலகம் சாப்பிட அழைத்தாலோ அல்லது தான் சாப்பிட வருகிறேன் என்றுசொன்னாலோ - அதில் ஒரு சரித்திர நிகழ்வு புதைந்து கிடக்கும். இதைப்புரிந்து வைத்திருப்பவர் இலட்சிய நடிகர்.

    வள்ளல் தன் வீட்டிற்குச் சாப்பிட வருவதைத் தன் தாயிடம் தெரிவித்து, வள்ளலுக்குப்பிடித்ததைச் செய்யச் சொல்கிறார் இலட்சிய நடிகர். சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு - இன் முகத்துடன் இலட்சிய நடிகரின்தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்கிறார். இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் - வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு
    நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

    அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார். அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

    ‘இந்த விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை! எனக்காக இதைச் செய்கிறாயா? இல்லையா?’ என்று கடிந்தும் கேட்காமல், இலட்சிய நடிகர் எதைச் சொன்னால் இளவகுவார் என்கிற இங்கிதம் தெரிந்த வள்ளல், “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார வஜ்ராயுத்த்தைப் பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

    “சரி நீங்க சாப்பிடுங்க..” கவிதையாய் ஒப்புதல் அளித்தார் இலட்சிய நடிகர்.
    அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார். - courtesy facebook

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •