Page 46 of 400 FirstFirst ... 3644454647485696146 ... LastLast
Results 451 to 460 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #451
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Today Dinamalar - Varamlar thinnai paguthi

    கருணாநிதியை, ஒருநாள், மாலை நேரத்தில் சந்தித்தேன். ஆற்காடு வீராசாமியும் உடனிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச சத்துணவுத் திட்டத்தை அறிவித்திருந்தார். கருணாநிதி, இதுபற்றி, எங்களிடம் கருத்து கேட்டார். நான் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன்... 'இது, பெற்றோர்களை குழந்தைகளுக்காக, உழைக்கும் கடமையிலிருந்தும், எண்ணத்திலிருந்தும், பொறுப்புணர்வினை மறக்கச் செய்து, சோம்பேறித்தனத்திற்கு தள்ளக்கூடும். இருப்பினும், கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்கள், தங்கள் குழந்தைகள் ஒரு வேளையாவது சாப்பிடும் போது, எம்.ஜி.ஆரை வாழ்த்துவதை தவிர்க்க முடியாது...' என்றேன்.
    மேலும், கருணாநிதியிடம், நம்மிடம் இருக்கிற, அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை, சத்துணவு திட்டத்திற்காக தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, காசோலை பெற்று, முதல்வர் எம்.ஜி.ஆரிடம், அந்தக் காசோலையை கொடுக்கலாம். ஒரு வேளை, அதை அவர் வாங்க மறுத்தால், ஒரு முறை புயல் நிவாரண நிதிக்காக, தி.மு.க., திரட்டிய நிதியை தலைமைச் செயலராக இருந்த கார்த்திகேயனிடம் கொடுத்த போது, அவர் அதை நிராகரித்ததை, பெரிய அரசியலாக்கியதை போல், இதையும் மக்கள் முன்னால் வைத்து, பிரச்னை ஆக்கலாம்...' என்று நானும், அங்கிருந்த மற்றவர்களும் கூறினோம்.
    'நல்ல கருத்து' என்று கூறிய கருணாநிதி, எங் களுக்கு விடை கொடுத்தார். சற்று நேரத்தில், வேறு சிலர் வந்திருந்தனர். அவர்கள் கருணாநிதியிடம் ஏதோ கூறி, அவர் மனதை மாற்றி விட்டனர். பின், கருணாநிதி, அத்திட்டத்தை பற்றி எங்களிடம் கேட்கவேயில்லை.
    மாறாக, கழக சார்புடைய ஏடுகளிலெல்லாம், சத்துணவு திட்டத்தை குறை கூறுவது போல், 'சத்துணவில் பல்லி இருக்கிறது; பத்து மாணவர்கள் மயக்கம், சத்துணவை சாப்பிட்ட நூறு மாணவர்கள் வாந்தி...' என்று நையாண்டி செய்து, எழுத ஆரம்பித்தனர். இது போன்ற செயல், தி.மு.க.,வின் வெற்றிக்கு, பின்னடைவு ஏற்படுமென்று, அன்றே உணர்ந்தேன்.
    அப்போது, நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை, தி.மு.க., இழந்தது. 'டிவி' முன் அமர்ந்து, தேர்தல் முடிவுகளை கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் அருகில், வாய் திறவாமல் அமர்ந்திருந்தேன். 'என்ன கலாநிதி... இப்படி ஆகிவிட்டது...' என்று, என்னிடம் சொன்ன போது, நான் பேசாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தேன். பின், அவரே, 'நீ சொன்னது சரியா போச்சு. இத்தனைக்கும் காரணம், சாப்பாடுதானா...' என்றார்.
    — 'அரசியல் அனுபவங்கள்' நூலில், டாக்டர்.அ.கலாநிதி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #452
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. Likes Russelllkf liked this post
  5. #453
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes Russelllkf liked this post
  7. #454
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #455
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #456
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    Which magazine sir, Ananda Vikatan or Pesum Padam.
    இயற்கையான நடிப்பு ...மிகையான நடிப்பு...என்பது நடிப்பு மட்டும் அல்ல ...சண்டைகாட்சிகளுக்கும் பொருந்தும் !

    புராணத்தை இதிகாசத்தையும் உதாரணமாக கொள்ளும்போது ...ஒருவர் வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்தால் அனைவரும் வாயைமூடிக்கொண்டு அழுகையை அடக்கிவாசிப்பதில்லை....ஐயோ...அம்மாஆ....என்றோ....ஐய ோ...ராசா....என்றோ தான் கதறுவார்கள். இதை கூட உதாரணமாக நாம் நடிப்புக்கு எடுத்துகொள்ளலாம் !

    பல இயற்கை நடிகர்கள் காலபோக்கில் வருவார்கள்...போவார்கள்...

    நடிப்பில், இயற்கையோ அல்லது அறியாதவர்கள் உரைப்பது போல "மிகையோ" , ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நிலைப்பது எந்த நடிப்பு என்பதில் தான் வெற்றி...!

    அப்படி பார்க்கையில்...நடிப்பு என்றால் ஒருவர்தான் !

    மக்கள் மனதில் நடிப்பு கலை என்றால் அது "சிவாஜி" ஒருவர்தான் !

    திரை உலகை பொறுத்தவரை, உலகில் உள்ள மக்களை பொறுத்தவரை நடிப்பு கலை என்றால் நிலைத்து இருப்பது, இருக்கபோவது "சிவாஜி கணேசன்" என்ற ஒரு பெயர் தான் !

    திராவிட கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமானால் இப்படி இயற்கை, மிகை என்று தங்களை தாங்களே சமாதான படுத்திக்கொள்ளலாம்...

    ஆனால், நடிக்க வந்த 7 வருடத்தில் உலகளவில் விருது வாங்கியது, 10 வருடத்தில் அமெரிக்க அதிபர் ஜான் கென்னெடியால் இந்திய அமெரிக்க கலாசார பரிமாற்றத்தின் தூதுவராக அழைக்கப்பட்டது ...பிறகு பல வருடங்கள் ஆராய்ந்து பிரெஞ்சு அரசாங்கம் செவாலியர் விருது வழங்கியது இவை அனைத்தும் மற்றவர்களால் வெறும் காழ்புணர்ச்சியால் தூற்றப்பட்ட இதே "மிகை" நடிப்பை பார்த்துதான் ! விருதும் பட்டமும் குடுக்க இவர்கள் எல்லாம் மூளை இல்லாத முட்டாள்கள் பாருங்கள் !

    பல நாடுகளை சேர்ந்த உலக படவிழா குழுவினர் , அனைத்தும் ஆராய்ந்து அதன் பிறகு அமெரிக்க அதிபர் அழைத்தது, பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு அரசின் உயர்ந்த விருதான செவாலியர் விருது கொடுத்தாது...இவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாமால் சும்மா விருதும் பட்டமும் கொடுத்தார்கள்..ஆனால் நம்ம ஊரு திராவிடன் என்று கூறிக்கொண்டு பத்திரிகை ஞானிகள், கேவலம் வயிதெரிசலால், பொறாமையால், காழ்புணர்ச்சியால் இல்லாத ஒன்றை இருப்பது போல இல்லாத "மிகை நடிப்பு" என்ற ஒன்றை இருப்பது போல மாயை வளர்த்தார்கள்...!

    ஒரு சில அரசியல்வாதிகளுக்கோ "என்னடா இது...சினிமாவையும் நடிகர்களையும் வெறுத்த பெரியாரையே அவர் வாயால் "சிவாஜி" என்று இவன் பட்டம் கொடுக்க வைத்துவிட்டானே...இவன் பெயர் அவர் வாழ்த்தியது போல சிவாஜி கணேசன் என்று எல்லோரும் அழைகின்றனரே என்ற ஒரு வயிதெரிச்சல் வேறு....

    இதுதான் உலகளவில் தமிழன் தலை குனிந்து இன்றும் அடிமை வாழ்கை வாழ்கிறான் !

    காரணம் ஒரு தமிழன் உயர்ந்தாலோ, உலகமே ஒருவனை போற்றினாலோ, இன்னொரு தமிழனுக்கு வயிதெரிச்சல் தானாக வந்துவிடுமே....!
    Last edited by RavikiranSurya; 9th March 2014 at 09:23 PM.

  10. #457
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #458
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    BANGALORE 1972 - NALLA NERAM

    NATARAJ - THEATER


  12. #459
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    BANGALORE

    NEW OPERA

    NALLA NERAM


  13. #460
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    நல்ல நேரம்
    மக்கள் திலகத்தின் மகத்தான படங்களில் ஒன்று. நவரசங்களிலும் நம்மவர் கலக்கிய படம். யானையுடன் கால்பந்து விளையாடும் காட்சி அருமை. அதன் பின்னர் கே.ஆர்.விஜயாவை பெண் கேட்கச் சென்று அசோகனுடன் கூடிய அந்தக் காட்சி நகைச்சுவை இழையோடும் அருமையான காட்சி. மீண்டும் மீண்டும் தண்ணீர் குடித்து விட்டு இனி குடிக்க முடியாது என்ற நிலையில் அவரது மாடுலேசனும் முகபாவங்களும் அமர்க்களம்.
    ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நாகேஷுடன் அவர் ஆடும் ஆட்டமும், பின்னர் இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றவுடன் காட்டும் வாட்டமும் உடனடியாக மனத்தைத் தேற்றிக் கொண்டு கும்பகோணம் அடுக்குப் பாத்திரம் போல பத்து குழந்தைகள் வேண்டுமா நல்முத்து போல ஒன்று போதாதா என்று கே.ஆர்.விஜயாவுக்கு ஆறுதல் கூறும் கட்டமும் உள்ளத்தை உருக்கக் கூடியது. என்றும் மனதை விட்டகலா காட்சிகள்.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் வாழ்க்கைத் தத்துவங்களை பேசும் காட்சிகள் அருமையான வாழ்க்கைப் பாடங்கள். இந்தப் படத்திற்கு ஆர்.கே.சண்முகம் அவர்களது வசனங்கள் மிக அற்புதம். மருத்துவமனையில் கே.ஆர்.விஜயா யானையால் தாக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டு தன் குழந்தைக்கும் அது போல் ஆபத்து வருமோ எனப் பயந்து கதறும் கட்டங்களில் மக்கள் திலகம் பேசக்கூடிய வசனங்கள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை மட்டுமல்ல. ஒரு அருமையான வழக்கறிஞரின் வாதத்திற்கு ஒப்பானவை. மனைவியின் கட்டாயத்திற்காக தன்னை வாழ வைத்த யானையின் காலை சங்கிலியால் பிணைக்கும் போது கதறுவது மக்கள் திலகம் மட்டுமல்ல. படம் பார்க்கும் மக்களும் தான். சங்கிலியை அறுத்து கொண்டு குழந்தையைக் காப்பாற்றப் போய் வீண் பழி சுமத்தப்பட்ட யானையிடம் மனக்குமுறலுடன் நீ ஏன் அங்கே போனாய் என்று கேட்டு அடிக்கும் காட்சியில் தான் அதன் மீது கொண்ட நம்பிகைக்கையையும், அதே சமயத்தில் கே.ஆர்.விஜயாவின் சந்தேகத்திற்கு இடமளித்து விட்டதற்காக ஏற்படும் கோபத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் மக்கள் திலகம் நடிக்க வில்லை. வாழ்ந்திருப்பார். நுணுக்கமான நடிப்புத் திறமை அவரது தனிச்சிறப்பு. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மக்கள் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •