Results 1 to 10 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி.....வெற்றி......வெற்றி...... பிரம்மாண்ட வெற்றி.......
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள் விழா வெற்றி.
    சென்னை , தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் ஞாயிறு மாலை
    (16/03/2014) புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா, இறைவன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள்
    தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இந்த இனிய விழாவானது, அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தின் ஒத்துழைப்புடனும்,பேருதவியுடனும் ,மற்றும் இதர எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் பக்தர்கள் ஆதரவுடனும் பெரும் வெற்றி கண்டது.

    பிற்பகல் 1 மணிக்கே அரங்கத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்/பக்தர்கள் /ஆதரவாளர்கள்,/அனுதாபிகள்/அபிமானிகள் ஆகியோர் குவிய ஆரம்பித்து விட்டனர்.அவர்களுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

    நேரம் செல்ல செல்ல ,மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது.
    தேர்தல் நெருங்கும் நேரத்தில், அதுவும் நமது மக்கள் திலகத்தின் ,"ஆயிரத்தில் ஒருவன் " சென்னை நகரின் பெரும்பாலான அரங்குகளில்
    அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறும் தருணத்தில்,நிகழ்ச்சியை
    கண்டுகளிக்க திரண்டு வந்த கூட்டம் காண்போரை வியக்க வைத்தது.
    காமராஜர் அரங்க வளாகம் முழுதும் புரட்சி நடிகர்/மக்கள் திலகம்/நமது தெய்வம் /திரை எழில் வேந்தன் /
    பொன்மனச்செம்மல்/நடிக மன்னன்/நமது வாத்தியார் /நிருத்திய
    சக்கரவர்த்தி /கலைவேந்தன்/எட்டாவது கொடை வள்ளல்/ பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பேனர்கள்/பதாகைகள் நிரம்பி வழிந்தன .
    அரங்க நுழைவு வாயிலில் பிரம்மாண்ட பேனர்கள் அழகுற அமைக்கப்பட்டு மலை போல் மலர்மாலைகள் சூடப்பட்டிருந்தன .
    அரங்கின் உள்ளே புத்தக கண்காட்சியில் புரட்சி தலைவர் பற்றிய
    புத்தகங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
    அரங்கின் வெளியே, புரட்சி தலைவர் உருவம் பொருந்திய சாவி
    கொத்துகள், புகைப்படங்கள் ,பேனாக்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டன.
    அரங்கத்தில் திரு.பம்மலார் அவர்கள் புரட்சி தலைவரின் பிரத்யேக
    வண்ண அட்டைப்படம் அடங்கிய விசேஷ மலர் (புரட்சி தலைவரின்
    புகைப்படங்கள் -)விற்பனை அமோகமாக நடந்தது..
    மாலை 4.30 மணியளவில் , அரங்க நுழைவு வாயிலில்,புரட்சி தலைவர்
    எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " பேனரின் கீழ் சிறப்பு பூஜைகள்/அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. 108 தேங்காய்கள் நெடுஞ்சாலையில் சிறப்பு வழிபாட்டுக்கு பின் உடைக்கப்பட்டன. பூசணிக்காயும் உடைக்கப்பட்டது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது புரட்சி தலைவர் புகழ் பாடி எழுப்பப்பட்ட முழக்கங்கள் விண்ணை தொடும் வகையில் இருந்தது. இதன் காரணமாக
    சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, அருகில் உள்ள
    தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து ஆய்வாளர் ,காவலர்களுடன் வந்து சிறிது நேரம் வேடிக்கை பார்த்து பின்னர் ,
    உடைந்த தேங்காய்கள், பூசணி போன்றவற்றை அப்புறபடுத்த
    செய்தனர்.அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு பூஜைகள்
    விரைவாக முடித்தபின் மக்கள் கூட்டம் அரங்கினுள் நுழைந்தது.

    அரங்கம் சிறிது நேரத்தில் நிரம்பி வழிந்ததை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதுவரையில் புரட்சி தலைவரின் பக்தர் ஒருவர்
    தொடுத்த விழாக்களில் ,இந்த மாதிரி கூட்டத்தை பார்க்கவில்லை என ஏனைய பக்தர்கள், பெரியவர்கள், முக்கிய விருந்தினர்கள்,வரவெற்பாளர்கள் ,பொதுமக்கள் உள்பட அனைவரும் விழா குழுவினரை பாராட்டி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டபோது ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

    விழாவின் சிறப்பு அம்சம், நமது பக்தர்கள்,குடும்பத்துடனும்,உறவினர்களுடனும் மற்றும் ஏராளமான
    பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்ததுதான்.

    சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்/அன்பர்கள் பெருமளவிலும்,பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பினரும் பங்கேற்று சிறப்பித்து ,விழாவை வெற்றி அடையசெய்தனர்.

    மாலை 5.00 மணியளவில் லக்ஷ்மன் சுருதி அவர்களின் இன்னிசை மழை அரங்க மேடையில் குத்துவிளக்கேற்றி. புரட்சி தலைவர்
    உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ,பூஜை செய்தபின் தொடங்கியது.
    நிகழ்ச்சியில் நடிகர் திரு. சார்லி , நடிகர் திரு.ஹாஜா ஷெரிப் ஆகியோர்
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி உயர்வாக ,சிறப்பாக
    பேசி ,பக்தர்கள் மனதை குளிர்வித்தனர். நடிகர் சார்லி பேசும்போது,இந்த விழா உண்மையிலேயே பக்தர்களால், எந்த ஆதாயமும் இன்றி நடத்தப்படும் விழா. வியாபார நோக்கமில்லை. ஜாதி, மத, பேதமில்லை.
    எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து,ஆயிரத்தில் ஒருவன் "எம்.ஜி.ஆர்." அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடக்கும் விழா.என்றும், புரட்சி தலைவரை பெருமைபடுத்தியும் பேசினார்.
    கலைவேந்தன் பக்தர்கள் திரு.சிவபெருமாள்,திரு.பாஸ்கரன், திரு.சாந்தகுமார் ஆகியோர் தங்கள் குழுவினருடன் கலந்து கொண்டு
    விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். கலைவேந்தன் பக்தர்கள் சார்பில்
    திருவாளர்கள் எஸ். ராஜ்குமார், பேராசிரியர் செல்வகுமார் ,ஹயாத் ,லோகநாதன்ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



    திரு.இளங்கோவன் ,திரு.பி.ஜி.சேகர், திரு.நசீர் அகமது ஆகியோரும்
    கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    விழாவில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம், திரு. மேஜர் தாசன்,
    திரு.சோம வேலாண்டி(துப்பறியும் நிறுவனம் நடத்துபவர் ),திரு.காஞ்சி செல்வம் ,திரு.ரவிக்குமார் (எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி தலைவர், நெல்லை ),திரு.கே.சி.பாலசுந்தரம் (தொழிலதிபர் ), கல்லூரி முதல்வர் ,மீனாட்சி பொறியியல் கல்லூரி ,திரு.கலைவாணன் (எம்.ஜி.ஆர்.கோயில் நிர்வாகி ),ஸ்ரீ முருகன் தியேட்டர் அதிபர் மறைந்த திரு.பரமசிவ முதலியார் அவர்களின் மகன் திரு பாலசுப்ரமணியன் ,திரு.ஒம்பொடி பிரசாத்,திரு கோகுலம் பிரவீன் (தொழில் அதிபர்)கவிஞர் திரு மின்னல் பிரியன்,திரு.மணப்பாக்கம் ரமேஷ்,இதயக்கனி ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் ஆகியோர்.

    வெளியூரில் இருந்து கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ,திரு.துரைசாமி (கோவை ),திரு.திண்டுக்கல் மலரவன், திரு .ஜெய்சங்கர்
    (கொளத்தூர் சேலம்),திரு. தமிழ்நேசன் , திரு.எம்.எஸ்.ஆர். மணி (மதுரை ),திரு. ராஜதாசன் மற்றும் நண்பர்கள்(தேனீ ),
    திரு.கலீல் பாட்சா (திருவண்ணாமலை ),திரு.சரவணன் (மதுரை ) திரு.அழகர்சாமி, திரு ரவிச்சந்திரன்,
    திரு.வீரராகவன் (கரூர் ),பெங்களூர் நண்பர்கள் இருவர் ஆகியோர்.

    திரு.கலியபெருமாள் (புதுவை) தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து விழா வெற்றி காண வாழ்த்தினார்.

    பெங்களூர் பக்தர்கள் திரு.வினோத், திரு.சி.எஸ். குமார் ,திரு ரவி (போஸ்ட் ஆபீஸ் ),திரு.ஆரணி ரவி ஆகியோர் ,பெங்களூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் " பட வெற்றி விழாக்களில் பங்கேற்கும் வேளையில் ,சென்னையில் விழாவில் பங்கேற்க முடியாமல் போனது என்றும் , விழா பரிபூரண வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் என்றும் தொலைபேசி/அலைபேசி மூலம் தெரிவித்து கொண்டனர்.

    விழாவில் எண்ணற்ற முதியோர்களுக்கும் ,பெண்களுக்கும் ,
    அனாதை சின்னஞ்சிறார்களுக்கும் நிதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் திரு.விழுப்புரம் செல்வராஜ் அவர்களின் நகைச்சுவை
    கலந்த தொனியில் சிறப்புரை ஆற்றினார்.

    இவ்விழாவில் இன்னொரு முக்கிய சிறப்பு அம்சம் ,விழா குழுவினர்
    அனைவரும் சீருடையுடன் மேடையில் வலம் வந்தது ,அனைவரின்
    உள்ளத்தையும் கவர்ந்தது.

    நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களுக்கும், பக்தர்களுக்கும் மக்கள் திலகம் "எம்.ஜி.ஆர். விருது "வழங்கப்பட்டது.

    நிகழ்சிகளை திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் வெகு நேர்த்தியாக
    தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திரு.திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம்,மற்றும் திரு.லக்ஷ்மன் சுருதி ஆகியோர் முன்னிலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " படப்பாடல்கள் கொண்ட சி.டி.
    முக்கிய நபர்களுக்கும்,பக்தர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    விழா நிகழ்சிகளை விண் தொலைக்காட்சி தொடக்கம் முதல் முடிவு
    வரை படம் பிடித்தது.

    இன்னிசை நிகழ்ச்சி இரவு 10.15 மணியளவில் முடிவு பெற்றது.

    பின்பு அனைவருக்கும் இரவு உணவு விழா குழுவினரால் வழங்கப்பட்டது.

    இந்த இனிய விழாவை, திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள் எறும்பை போல
    சுறுசுறுப்பாகவும், இயந்திரம் போல வேகமாகவும் சுழன்று , அதே நேரத்தில் அனைவரையும் அரவணைத்து , பக்தர்கள் திருவிழாவை
    நடத்தி பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் மிகையாகாது.
    வெளி மாவட்டங்களில் இருந்து பலர் தொலைபேசி/அலைபேசி மூலம்
    விழா பெரும் வெற்றி காண வாழ்த்தினர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
    "ஆயிரத்தில் ஒருவன் " பட வெற்றிவிழா ஞாயிறு அன்று அவரவர் ஊர்களில் நடத்தும் வேளையில் ,இந்த விழாவில் பங்கேற்க முடியாமல்
    போனதற்கு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, அவர்களும் விழா வெற்றி பெற தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஆர். லோகநாதன்.
    Last edited by puratchi nadigar mgr; 19th March 2014 at 08:52 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •