-
27th March 2014, 12:59 PM
#1941
Senior Member
Devoted Hubber
திரு முரளி சார்,
சந்திரசேகர் சார் மற்றும் கோபால் சாரின் கருத்துக்கள் சரியே, எல்லாவற்றிக்கும் தனி தனி திரி வேண்டாமே
மெயின் திரியில் பதிவிட்டாலே அது அனைவருக்கும் சென்று சேர்ந்து விடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
27th March 2014 12:59 PM
# ADS
Circuit advertisement
-
27th March 2014, 04:50 PM
#1942
Junior Member
Seasoned Hubber
-
27th March 2014, 07:47 PM
#1943
Junior Member
Veteran Hubber
எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் செய்யப்பட்ட 100 நாட்கள் கண்ட அதே கோவை ராயல் திரை அரங்கில் நாளை முதல் நடிக பேரரசர் கலக்கும் சொர்க்கம் !
1970 - இரெட்டை தீபாவளி நமக்கு ! -
ஆம் நமது நடிக பேரரசர் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யும் தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது -
1) எங்கிருந்தோ வந்தாள் - நடிகர் திலகம், பாலாஜி, தேவிகா மற்றும் ஜெயலலிதா
2) சொர்க்கம் - நடிகர் திலகம், முத்துராமன், பாலாஜி மற்றும் KR விஜயா
முதல் படம் கிளாஸ் வகையை சார்ந்தது
இரெண்டாவது ஜனரஞ்சகம் வகையை சார்ந்த கிளாஸ் மற்றும் மாஸ் சரியான விகிதத்தில் கலந்த ராமண்ணா இயக்கத்தில்.
தமிழ் திரை உலகம் இதற்கும் முன்பும் பல முறை நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஒரே நாள் வெளியீடு கண்டிருந்தாலும், இந்த சமயம் ஒரு மாறுதல். இரெண்டுமே கலர் படங்கள் !
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு தைரியமான செயல். வேறு எந்த நடிகரும் இதை செய்ய துணியாத ஒரு செயல்.
பொதுமக்களும் ரசிகர்களுடன் மிகுந்த வரவேற்ப்பு இரண்டு திரைப்படங்களுக்கும் கொடுத்து இரெண்டுமே சூப்பர் ஹிட் !
எங்கிருந்தோ வந்தாள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய அரங்குகள்.
1) சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
2) மதுரை - தேவி
3) திருச்சி - பாலஸ்
4) கோவை - ராயல்
5) சேலம் - சாந்தி
சொர்க்கம் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடிய திரை அரங்குகள்
1) சென்னை - தேவி பாரடைஸ் (அரங்கில் பக்கத்திலயே சாந்தி திரையில் எங்கிருந்தோ வந்தாள் திரையிட்ட நிலலையிலும், தேவி பாரடை புதிய வசூல் சாதனை படைத்தது )
2) மதுரை - சென்ட்ரல்
3) சேலம் - ஜெயா
4) திருச்சி - பிரபாத்
5) நெல்லை - பாபுலர்
கோவையில் சொர்க்கம் ஒரு வருடம் முன்பு திரையிடப்பட்டு வழக்கம்போல நல்ல ஒரு வரவேற்ப்பு பெற்றது.
நடிகர் திலகம் படங்கள் திரையிட முடியாதபடி நடந்த பல சதிகளை முறியடித்து இப்போது ராயல் திரையரங்கில் நடிகர் திலகம் படங்கள் மீண்டும் வளம் பெற்று வலம் வரத்தொடங்கிய காரணத்தால் சொர்க்கம் திரைப்படம் வரும் வெள்ளி முதல் மீண்டும் திரையிடப்பட உள்ளது.
சூடுபிடித்துள்ள தேர்தல் பிரச்சாரங்கள், ஸ்டேட் போர்டு மாணவ மாணவிகளின் தேர்வு , Labour கூட்டங்கள் என்று பல விஷயங்களுக்கு மத்தியில் சொர்க்கம் கோவையில் நாளை முதல் அதாவது 28 மார்ச் முதல் வலம் வருகின்றது !
Last edited by RavikiranSurya; 27th March 2014 at 07:56 PM.
-
27th March 2014, 08:30 PM
#1944
Junior Member
Veteran Hubber
இந்த வாரம் 2012 வருடம் -
திவ்ய நிறுவனம் முதன் முதலில் நவீனமயமாகளில் வெளியிட்ட நடிகர் திலகம் அவர்கள் கர்ணனாக வாழ்ந்த காவியத்தின் 3ஆம் வார விளம்பரம் - 70 சென்டர்களிலும் 3வது HOUSE FULL வாரம் தொடர்ந்த காவியம் விளம்பரம் - அனைவர் பார்வைக்கும் !
-
27th March 2014, 08:46 PM
#1945
Junior Member
Veteran Hubber
the highlights of sorkkam are the drama sequence on Julius Caeser and dream song pon magal vandhal! kalaththal azhiyadha kanakkanath thigattadha Sivaji style with his superb costume and the fantastic dance by vijayalalitha! A slim NT stealing the show in the song 'sollathey yaarum kettal'.... I used to rollfold the drawing sheets in his style only after this scence till now!
Last edited by sivajisenthil; 27th March 2014 at 08:50 PM.
-
27th March 2014, 10:28 PM
#1946
Junior Member
Diamond Hubber
சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.
"ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.
அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.
சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன்
தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.
பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.
பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.
"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.
சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.
சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.
சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.
படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.
1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.
தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் "முடிசூடா மன்னன்'' அவர்தான்.
வயதானதால், பாடுவதை குறைக்கலானார், கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடைïறு. ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர், ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாத ஆந்திர ரசிகர்கள், ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர்.
தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு, பாலு பாட நேரிட்டது.
இந்த சமயத்தில், ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. "இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள். மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம். ஆனால், காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்'' என்று பாலுவிடம் கூறினார், கிருஷ்ணா.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார், பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.
-
27th March 2014, 10:46 PM
#1947
Junior Member
Seasoned Hubber
இந்த பாடல் இடம் பெற்ற படம் - பாலாஜி யின் தயாரிப்பில் வெளிவந்து மகத்தான வெற்றி யை அடைந்த படம் - என்மகன் - இரண்டு சிவாஜி - மிகவும் ஜாலியாக அமைந்த பாடல் - மிகவும் விறு விருப்பாக செல்லும் பாடல் - இந்த பாடல் இதற்கு முன் இங்கு பதிவானதா என்று எனக்கு தெரியவில்லை - உங்கள் மகிழ்விற்காக இதை பதிவிடுகிறேன்.இந்த பாடலின் இறுதியில் CVR காரின் பக்கத்தில் நிற்பதையும் பார்க்கலாம் - ஒருவர் தான் இருவரும் என்று நம்புவது மிகவும் கடினம்
-
27th March 2014, 11:04 PM
#1948
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள யுகேஷ் பாபு அவர்களுக்கு - உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி - உங்கள் திரியில் அதிகமாக busy யாக இருக்கும் பலரில் நீங்களும் ஒருவர் - அதற்க்கு மீறியும் நேரத்தை உண்டு பண்ணி இங்கு NT சம்பந்தப்பட்ட பதிவுகளை போடுவதில் இருக்கும் ஆர்வம் பாராட்ட பட வேண்டிய ஒன்று - தொடருங்கள் - நட்பு ஆரோக்கியமாக வளரட்டும் ..

Originally Posted by
Yukesh Babu
"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.
.
சிவாஜியின் ஆற்றலை கண்டு உலகமே வியக்கும் போது பாலு வியப்பதில் ஒரு ஆச்சிரியமும் இல்லை - உலகம் வியப்பது சிவாஜியின் ஆற்றலை மட்டும் அல்ல -- இப்படிப்பட்ட ஒரு மாமேதையை தமிழகம் புரிந்து கொள்ளாமல் போய் விட்டதே, உரிய மரியாதையை கொடுக்காமல் தவறி விட்டதே என்று தான் உலகம் வருத்தத்துடன் வியக்கின்றது !!!!
அன்புடன் ரவி
-
27th March 2014, 11:18 PM
#1949
Senior Member
Seasoned Hubber
டியர் யுகேஷ் பாபு
சுமதி என் சுந்தரி பற்றிய தங்கள் பதிவினை மிகவும் பாராட்டுகிறேன். ரவி சொன்னது போல் எம்.ஜி.ஆர். திரியில் தங்களுடைய தொடர்ந்த பங்களிப்பிற்கிடையில் இங்கும் நடிகர் திலகத்தைப் பற்றிய தகவல்களையும் கருத்துக்களையும் பகிரந்து கொள்ளும் தங்களுக்கு பாராட்டு தெரிவிப்பது என் கடமை மட்டுமல்ல, மகிழ்ச்சியும் கூட.
ஒரு திருத்தம் - பொட்டு வைத்த முகமோ பாடலைப் பாடியவர் எஸ்.பி.பாலா, ஹம்மிங் குரல் தந்தவர் பி. வசந்தா அவர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th March 2014, 12:47 AM
#1950
அன்பு நண்பர் சந்திரசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,
தனிப்பட்ட திரிகளைப் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. நான் சொல்ல வந்தது அல்லது ஒரு மாதத்திற்கு முன்பு நடிகர் திலகத்துக்கென்று தனியாக ஒரு forum தொடங்கப்பட்ட சமயத்தில் மாடரேட்டர்கள் மற்றும் நானும் ஏன் அப்படி தொடங்கப்பட்டது என்பதை பற்றியும் விளக்கியிருந்தோம். ஒரு வேளை அது எங்களால் சரியாக விளக்கப்படவில்லையா என்று தெரியவில்லை. சற்று விளக்கமாக சொல்கிறேன்.
முன்பு நமது நடிகர் திலகத்தின் திரி Tamil Films தலைப்பில் அமைந்திருக்கும் Forum-ல் ஒரு திரியாக இருந்தது [one among many]. அங்கே இருக்கும் போது அனைத்து விஷயங்களையும் ஒரே திரியில்தான் விவாதிக்க வேண்டும். அந்த திரி நிறைவு பெறும் போது அது lock செய்யப்பட்டு Tamil Films Classics Forum-ல் சேகரிக்கப்படும். ஒரு திரி இருக்கும் போது மற்றொரு திரி தொடங்க அனுமதி இல்லை.
ஆனால் நடிகர் திலகத்தின் திரிக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பார்த்த பிறகு நமது Hub Admin நடிகர் திலகத்துக்கென்றே தனியாக ஒரு Forum உருவாக்கி தந்திருக்கிறார்கள். இந்த Forum-ல் நாம் இதுவரை நடிகர் திலகத்தைப் பற்றி எழுதிய அனைத்தும் ஒரு குடையின் கீழே கொண்டு வரப்பட்டிருக்கிறது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள் அல்லது ஆவணங்கள் அல்லது அவர்தம் படங்களைப் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள் ஆய்வுகள் என்று எந்த தலைப்பை எடுத்துக் கொண்டாலும் அதற்கான materials இங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையை இது நடைமுறை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
நான் தனி திரியாக தொடங்கியிருக்கும் பாடல்கள் பலவிதம் ஏற்கனவே தனி திரியாக இருந்ததுதான். நான் முன்னரே குறிப்பிட்டது போல ஒரு சிலர் நடிகர் திலகத்தின் மீதும் என் மீதும் கொண்டிருக்கும் "மாறா அன்பினால்" அந்த திரிக்கு ஊறு நேர்ந்தது. அந்த திரியை மீண்டும் கொண்டு வரும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதனால் அதை தனி திரியாக வைத்திருக்கிறேன். நான் எழுதியது என்பதனால் அதற்கு ஸ்பெஷல் treatment கொடுக்கவில்லை. அந்த திரியில் அலசப்பட்டிருக்கும் பாடல்களின் பின்னணியில் இருந்த பிரச்சனைகள் சவால்கள் அதை சம்மந்தப்பட்டவர்கள் சமாளித்த விதம், அவர்களின் அயராத உழைப்பு இவற்றை பலரிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதுவும் தவிர மெயின் திரியில் இருந்தால் புதிதாக படிப்பவர்கள் பழைய பதிவுகளை [அதாவது பாடல்களை பற்றிய பதிவுகள்] miss பண்ணி விட வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் கூட சில நாட்கள் திரியை மிஸ் பண்ணி விட்டால் இதையும் தவற விடும் வாய்ப்பு இருக்கிறது என்பதனால்தான் அதை ஒரு தனி திரியாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. இன்னொரு உதாரணம் நண்பர் வாசு அவர்கள் எழுதிக் கொண்டிருந்த ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் தொடர். அதை இப்போது ஒவ்வொரு படமாக தேடுவது என்றால் எளிதான வேலையா என்று யோசித்துப் பாருங்கள். நான் என்னுடைய மீள் பதிவுகளை முடித்த பிறகு நண்பர் பாடல் ஆராய்ச்சி திலகம் பார்த்தசாரதி போன்றவர்கள் அவர்களின் படைப்புகளை அங்கே பதிவிடுவார்கள்.
சந்திரசேகர் சார், நீங்கள் எழுதியிருக்கும் மற்றொரு வாசகமும் எனக்கு புரியவில்லை. நீங்கள் நடிகர் திலகத்தின் திரியை மட்டுமே படிப்பவர். வேறு எந்த திரியையும் படிப்பதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மை என்பது எனக்கும் தெரியும். அதே நேரத்தில் நான் மூன்று வெவ்வேறான விஷயங்களை பற்றி நடிகர் திலகத்தின் மெயின் திரியில் எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் படிப்பீர்கள்தானே. அந்த மூன்று விஷயங்களையும் வெவ்வேறு திரிகளில் படிப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? முன்னராவது Tamil Films Section-ல் ஒன்றை படிக்க வேண்டும். மற்றொரு திரியை படிக்க Tamil Films Classics Section-க்கு போக வேண்டும். இப்போது அனைத்தும் ஒரே குடையின் கீழே, ஒரே Forum-ல் கிடைக்கும் போது கஷ்டம் எங்கே இருக்கிறது? ஒரே திரியில் அனைத்தையும் பதிவு செய்யலாம் என்றால் தனியாக ஒரு forum தேவையில்லையே! பழைய இடத்திலயே இருக்கலாமே!
நான் சொல்லும் காரணம் சரியாக இருக்கிறதா? இல்லை நீங்கள் சொல்ல வருகின்ற எதையேனும் நான் miss செய்கின்றேனா? எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் பெரும்பாலானோர் நமது ஹப்பில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதுதான். ஒரு book mark போல் நமது திரியை வைத்துக் கொண்டு அதற்கு மட்டும் வந்து விட்டு போய் விடுகிறார்களா என்று தோன்றுகிறது. அனைவருக்காகவும் நமது ஹப்பின் மெயின் மெனுவின் சுட்டி [URL] கீழே.
http://www.mayyam.com/talk/forum.php
அதை சொடுக்கி உள்ளே போனால் நமது நடிகர் திலகத்தின் Forum மெனுவில் தெரியும் அந்த நடிகர் திலகத்தின் Forum-க்கு சுட்டி [URL] இதோ
http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies
மேலும் ராகவேந்தரின் signature-ஐ [அவரது ஒவ்வொரு பதிவிற்கும் கீழே கொடுத்திருக்கும் பெயர்களை] click செய்தாலும் நேரே அந்த பகுதிக்கு போய் விடலாம். இதை விட இன்னும் எளிதாக நமது நடிகர் திலகத்தின் அனைத்து திரிகளையும் identify செய்யவும் வழி செய்கிறேன்.
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு விளக்கம். நான் மாடரேட்டர். ஆகவே நான் மற்றவர்கள் யோசனையை செவி மடுக்க மாட்டேன் என்றோ அல்லது நான் சொல்வதே சரி என்றோ வாதம் செய்யவில்லை. எதனால் இப்படி செய்திருக்கிறோம் என்பதை விளக்குவதற்குத்தான் இந்த நீண்ட பதிவு. .
அனைவரும் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருப்பின் வெளிப்படையாக சொல்லலாம். அனைவரின் கருத்தும் வரட்டும். அதுவரை பொறுமை காக்கலாமே!
அன்புடன்
பாடல்கள் பலவிதம் திரியில் வரும் விஷயம் மெயின் திரியில் இடம் பெறாததால் பெரும்பாலானோருக்கு சென்றடையவில்லை என்று நண்பர் கோபால் சொன்னதால் அந்த பாடல் ஆய்வை மட்டும் மெயின் திரியில் பதிவிடுகிறேன்.
ரவி,
தற்கால் அரசியல் பற்றிய பதிவுகளோ அல்லது புகைப்படங்களோ [அதில் நமது நடிகர் திலகம் சம்மந்தப்படவில்லை என்பதானால்] நமது மெயின் திரியில் தவிர்க்கலாமே! புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
Bookmarks