-
16th April 2014, 03:09 AM
#31
Senior Member
Diamond Hubber

Originally Posted by
motte_dhaasan
Super glad to see Nethu raathiri (Around 2:25 into the concert) being performed... You can see the tabla guys having a blast!!
தாளவாத்தியம் - ரொம்ப ரசிச்சி வாசித்தார்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை. ரொம்ப நாளா தொடர்ந்து ராஜா முகாமிலேயே இருப்பவர்கள் ராஜாவின் ஒவ்வொரு இசைக் குறிப்பையும் ரசிப்பதிலாகட்டும், அந்த இசையோட்டத்தொடு தங்களையும் இணைத்துக் கொள்வதாகட்டும், பாடகர்கள் சிறப்பாக பாடும்போது அதை உடனே முகபாவனைகளால் பாராட்டுவதாகட்டும்.. ராஜாவின் மதுரை இசைக்கச்சேரி பலப்பல சுவாரஸ்யமான தருணங்களை உள்ளடக்கியதாக அமையப் பெற்றுள்ளது.
சின்னமணிக்குயிலே - இஞ்சி இடுப்பழகி இரண்டையும் கலந்து தந்த மனோ - பிரியதர்ஷினி இருவரும் கலந்து கொடுத்த விருந்து சுவையோ சுவை.
ஓம் சிவோஹம் பாடலை விஜய் பாடியபோது மதுரையே தீப்பிடித்து எரிந்தது போல, சிலப்பதிகாரத்தை (கண்ணகி) நினைவு படுத்தியது. தண்ணித் தொட்டி தேட வந்த பாடலை அனாயசமாக பாடி பிரமிக்க வைத்துவிட்டார். யேசுதாஸ் அதைப் பார்க்க நேரத்தால், சந்தோஷப் பட்டிருப்பார்.
அனிதா, பிரியஷினி இணைந்து கலக்கிய போடா போடா புண்ணாக்கு - இசைக்கச்சேரிகளில் இதுவரை நான் பார்த்திராத மேடை நடிப்பு. இருவருமே போட்டிக் கொண்டு பாடலின் ஆரம்ப வசனங்ககளை உச்சரித்த விதம் சிறப்பு.
ஆனந்த ராகம் - வயலின் மழையால் நனைந்தேன். இசைப்பிரவாகம்.
சுரேந்தர் வருகை ஆச்சரியப்படுத்தியது. நடுக்கத்துடன் பாடினாலும், எதிர்பார்ப்பையும் மீறி கீதம் சங்கீதத்தை சிறப்பாக பாடி முடித்தார்.
மொத்தத்தில் கிடார், புல்லாங்குழல், நாதஸ்வரம், ஷெனாய், வயலின், தபேலா, உறுமி, மேளம் என கலந்து கட்டி தலைவாழை விருந்து கொடுத்திருக்கிறார்கள் அனைவரும். இவ்வளவும் சிறப்புகள் இருந்தும், போயும் போயும் ஏன்தான் ராஜ் டிவிக்கு வீடியோ மற்றும் ஒலிபரப்பு உரிமையைக் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு படுமோசமாக இருந்தது. மிகப்பெரிய பின்னடைவு. சில இடங்களில் சித்ரா, மனோ பாடியது சுத்தமாக காதில் விழவில்லை. பவதாரிணி - செல்போனில் பாடல்வரிகள் எழுதிவைத்து பாடுகிறார். கொடுமை. நிகழ்ச்சியின் முடிவில் பாடல்களை ஒரே ஒரு சரணத்துடன் பாடி முடித்திருக்கிறார்கள். ஒருங்கிணைப்பின் தரம் அந்த அளவுக்கு இருக்கிறது. கார்த்திக் ராஜா இதுபோன்ற தவறுகளை திருத்திக் கொண்டு, எதிர்வரும் கச்சேரிகளை கனக் கச்சிதமாக செய்து முடிக்கவேண்டும்.
Last edited by venkkiram; 16th April 2014 at 07:45 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th April 2014 03:09 AM
# ADS
Circuit advertisement
Bookmarks