-
16th April 2014, 09:12 AM
#11
Junior Member
Diamond Hubber
எங்க வீட்டு பிள்ளை' படத்தினை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டு இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது 'கத்தி' படத்தில் நடித்து வருகிறார். சமந்தா, நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனத்தோடு இணைந்து லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஜய்யின் நெருங்கிய நண்பர் இயக்குநர் செல்வபாரதி. 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'எங்க வீட்டு பிள்ளை' படத்தினை, எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில் விஜய்யை நடிக்க வைத்து இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி.
இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது 'கத்தி', சிம்புதேவன் படம் என வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டிருக்கும் விஜய், இப்படத்திற்கு எப்போது தேதிகள் ஒதுக்க இருக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.
courtesy the hindu tamil
-
16th April 2014 09:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks