-
20th April 2014, 09:42 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
tfmlover
பருவம் ஒட்டி பழகும் போது ...
S ஜானகியோடு
K J யேசுதாஸ் சேர்ந்து பாடிய முதல் தமிழ்த் திரைப்படப் பாடல்
இதுவாகத்தான் இருக்க வேண்டும்
1965 இல் தயாரிக்கப்பட்ட
சூர்யா பிலிம்ஸ் பணம் தரும் பரிசு திரைப்படத்திற்காக
பருவம் ஒட்டி பழகும் போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலே காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே
பூவின் தேனை உண்ண காதல் வண்டு வந்ததே
மலர் சிரித்திடுதே
மடல் கொடுத்திடுதே
வாழ்வில் இன்பம் இன்றே காண்போம்...
ராகம் தாளம் சேரும் கீதம் பாரிதன் மேலே
நீயும் நானும் இன்ப கீதம் நீரினின் மேலே
உலவிடும் நிலவே
உள்ளத்தின் ஒளியே
ஆடும் கலையே
பாடும் சிலையே ...
ஆரம்பகால இளமையும் இனிமையும் ததும்பும் கேட்டவுடனேயே பிடித்துப் போகிற மெல்லிய கானம் ..
மெட்டமைப்பு வித்தியாசமாக அந்தக் காலகட்டத்தில் வந்த பாடல்களோடு ஒப்பிடுகையில்
சிலோன் செல்லையா இசையில்
தஞ்சைவாணன் இயற்றியது ..
அன்று அனேகமாக
விஜயகுமாரிக்கே
s ஜானகி குரலைப் பயன்படுத்தினார்கள்
அந்த வகையில் இதுவும் அவருக்கே என்று எண்ணம்
இதுவரை கேட்காதவர்களுக்காக
http://musicmazaa.com/tamil/audioson...um+Parisu.html
Regards
அருமையான பாடல். இதில் நடித்தவர்கள், மற்றும் இசை அமைப்பாளர் பற்றி தகவல் தெரியுமா?
இணையத்தில் தகவல் சரியாக கிடைக்கவில்லை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014 09:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks