-
20th April 2014, 11:08 PM
#11
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகத்தின் வீடியோக்கள் பற்றிய எனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் சைலேஷ்பாசு மற்றும் ரூப்குமார் ஆகியோருக்கு நன்றி. மக்கள் திலகத்தின் ரசிகர்கள் (பக்தர்கள்) அனைவரது ஆவலும் இது தான். நல்ல பிரிண்ட்டை கண்டுபிடித்து வெளிக்கொணர அனைவரும் ஒன்று படுவோம். எனக்குத் தெரிந்தவரை மக்கள் திலகத்தின் எந்தப் படமும் இதுவரை Blue ray வடிவில் கிடைக்கவில்லை. திவ்யா பிலிம்ஸ் ஆயிரத்தில் ஒருவனை DTS முறையில் கொண்டு வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணமும் கூட, மேலும் நாடோடிமன்னன் DTS முறையில் டிவிடியாக வெளிவந்தால் நலமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் படத்தை மிக அழகாக மெருகேற்றி வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் அவரது அருமையான உழைப்புக்கு அது ஈடாகாது. ஆனால் மக்கள் திலகத்தின் படங்களின் பிரிண்ட்கள் மீதான தேடல் இன்னமும் மிக அதிக அளவில் தேவை. குறிப்பாக தனக்குக் கிடைத்த பிரிண்ட்டை வைத்துக் கொண்டு எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார் திரு. சொக்கலிங்கம் அவர்கள். ஆனால் நேற்று பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் வாங்கிய கொலம்பியா பிலிம்ஸ் வெளியிட்ட 3 சிடிகளிலான ஆயிரத்தில் ஒருவன் படத்தை தற்செயலாகப் பார்த்த போது பிரமித்துப் போனேன். ஆடியோ அவ்வளவு அசத்தலாக உள்ளது. வீடியோ சுமார் ரகம் தான். சில இடங்களில் கலர் மிக அதிகமாக உள்ளது. சில இடங்களில் கீறல்கள் அதிகமாக உள்ளது. சில இடங்களில் கேவா கலர் படம் போல உள்ளது. ஆனால் ஆடியோ DTSக்கு இணையாக உள்ளது. சிறப்பு ஒலியமைப்புகள் மட்டும் இல்லையே தவிர ஒவ்வொரு வாத்தியமும் தெள்ளத் தெளிவாக ஒலிக்கிறது. இதே பின்னாளில் வெளிவந்த மாடர்ன் சினிமா, மோசர்பியர் , பிரின்ஸ் போன்ற கம்பெனி சிடி மற்றும் டிவிடிகளில் இந்த தெளிவு இல்லை.
-
20th April 2014 11:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks