-
29th April 2014, 11:27 AM
#11
Junior Member
Veteran Hubber
பழைய காவியங்கள் நவீனமயம் ஆகி இன்றைய தலைமுறையினருக்கும் சேரும் வண்ணம் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கி நடிகர் திலகத்தின் கர்ணன் மூலம் மதோன்னத வெற்றி பெற்ற திவ்ய நிறுவனம் திரு சொக்கலிங்கம் அவர்களின் அடுத்த முயற்சியான மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியம் இந்த வாரம் 50வது நாளை எட்டிபிடிக்கிறது.
திரை உலகத்தை பொருத்தவரை என்றுமே இருகண்களாக, இரு தூண்களாக என்றும் விளங்குபவர்கள் நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் என்றால் அது சத்திய வாக்கு !
இன்றும் இவர்கள் திரைப்படங்கள் தமிழகத்தின் பல அரங்குகளில் புதிய படங்களை விட அதிகம் பார்வையாளர்களை, மகசூலை பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
சாதனை....சஹாப்தம் என்ற இரு சொல்லிற்கும் இரு வல்லவர்கள், நல்லவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் ! அவர்கள் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் மக்கள் திலகம் திரு MG ராமசந்திரன் அவர்கள்.
வளர்க அவர்களது புகழ் !
2012இல் வெளிவந்து 152 நாட்கள் ஓடிய கர்ணன் திரைப்படத்தின் 50வது நாள் மற்றும் 2014இல் மார்ச் மாதம் வெளிவந்து வெற்றிகரமாக இந்த வாரம் 50வது நாளை தொடும் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் ஒரே அச்சாக அனைவரின் பார்வைக்கும் சமர்பிக்கிறேன் !
-
29th April 2014 11:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks