ஆரம்ப காலத்திலிருந்தே எஸ் ஜானகியின் குரல் இனிமையை
அருமையாக பயன்படுத்திக் கொண்ட கே வி எம்
80 களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே
தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து இருந்த போதும்
அவற்றில் எஸ் ஜானகிக்கு அவர் வழங்கிய பாடல்கள் தனித்துவமானவை
அந்த வரிசையில் இந்தப்பாடல்
மலர்கின்ற பருவத்திலே திரைப்படத்தில்




சிறு வயதில் பார்க்க நேரிட்ட ஒரு கல்யாண காசேட்டில் பாட்டை
ரசித்துக் கேட்ட ஞாபகத்தை வைத்துக் கொண்டு
நானும் அங்கே இங்கே என்று தேடிக்களைத்து
பலரிடம் வினவி பதில் வராமல் அண்மையில் என்னிடமே பொக்கிஷமாக அகப்பட்ட பாடல்
(..திரைப்படமோ பாடல்களோ எவ்வளவு பிரபலம் என்று தெரியவில்லை ..அதுவும் காரணமாக இருக்கலாம் ..)

என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமை எனும் கவிதை கோவில் தேரிலே
பொன் பதித்த தேகமதில் பொங்கி வரும் மோகம் ..
கண்ணிரண்டும் பாடுவது ரஞ்சனி ராகம்
சிவரஞ்சனி ராகம்
கார்த்திகையில் திரண்டு வரும்
ஆனந்த மேகம்..

ஆடி மாதக் காற்று
அவன் ஆற்றிலுள்ள ஊற்று
கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று
நான் கோமகனின் காலடியில் விளைந்திடும் நாற்று

கண்ணழகு கவிதை
அவன் காலடியோ தாளம்
வெண்ணிலவில் சாறெடுத்து ஏற்றிவைத்த தீபம


கேட்கும் போதே புரியும் கண்ணதாசன் வரிகள் என்று ..




கல்யாணம் + கச்சேரிகளில் ஆர்வம் எனக்கில்லை என்றாலும்
உணர்ச்சி பூர்வமான வரிகளை எஸ் ஜானகி லாவகமாக வெளிப்படுத்தும் திறமை

​S Janaki -1967 Bommai -


நாதஸ்வரம் கல்யாண கலை ...களைகட்டும் இசையமைப்பு..தவில் வாசிப்பு ..

KVM -1967 Bommai -


இதுவரை கேட்காதவர்களுக்காக....

http://www.4shared.com/mp3/t4jlqylk/...ile_-_En_T.htm

கேட்டு ரஸித்து
யாரேனும் என்ன ராகம் என்று சொன்னால் ..?

Regards