-
9th May 2014, 12:01 PM
#11
Junior Member
Diamond Hubber
எனக்கு சோறு போட்டது எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரி - பி.சி.ஸ்ரீராம்!
சென்னை, தரமணியில் இயங்கி வருகிறது எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரி. இங்கு சுமார் 200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்த ஆர்.கே.செல்வமணி, ஜெயம் ராஜா உள்ளிட்ட பலர் இப்போது சினிமாவில் பிரபலமாகி உள்ளனர். இந்நிலையில் இத்திரைப்பட கல்லூரியின் ஆண்டுவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கலந்து கொண்டார்.
விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, மாணவர்களுக்கு சான்று வழங்கி கவுரவித்தார் பி.சி.ஸ்ரீராம். பின்னர் அவர் பேசுகையில், இந்த கல்லூரியின் ஆண்டு விழாவில் நான் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் நானும் இந்த கல்லூரி மாணவன் தான். இங்குதான் படித்தேன். எனக்கு சோறு போட்டு வாழ்க்கையை கொடுத்தது இந்த கல்லூரி தான். இந்தளவுக்கு நான் உயர்ந்ததற்கு இந்த கல்லூரியும் முக்கிய காரணம் என்று பேசினார்.
courtesy dinamalar
-
9th May 2014 12:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks