Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சிரிப்பு பாதி அழுகை பாதி…

    *
    அத்தியாயம் ஏழு
    *

    “சரி.. ஹீரோயினுக்கு டயலாக்ஸ் இருக்கு..இதான் காட்சி..இப்படிப் பேசுவாங்கன்னு சொல்றீங்க.எல்லாம் ஓகே.. அப்ப நான் இந்தக் காட்சியில என்ன பண்ணனும்”


    *

    கேட்டவர் நடிகர் திலகம்..

    *

    “நீங்க ஒண்ணுமே பண்ணக்கூடாது அடக்கி வாசிக்கணும்..அப்பத் தான் அந்தம்மாவோட பாத்திரம், அப்புறம் இந்தக் காட்சி எடுபடும்..” சொன்னவர் டைரக்டர்..

    *
    ந.தி. மறுத்து எதுவும் பேசவில்லை.. நீங்கள் சொன்னால் சரி..அப்படியே செய்கிறேன்..

    *

    அப்படியே நடித்ததில் அந்தக் காட்சியும் பேசப்பட்டது.. வித்யாசமாய் ந.தியும் நடித்திருந்தார் எனவும் சொல்லப் பட்டது..(ஒய்.ஜி மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரையிலிருந்து)

    *

    அந்த டைரக்டர்.. எல்.வி பிரசாத்.. ராஜபார்வையில் தாத்தாவாக நடித்தவர்.. முன் சில படங்களில் நடித்திருந்தாலும் ரா.பா வில் தான் எனக்கு இவரைத்தெரியும்..

    *
    படம்.. இருவர் உள்ளம்..

    *

    சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் என்னிடம் தொலைபேசிய போது- இருவர் உள்ளம் பற்றி எழுதலாம் என ஆசை என்ற போது –அவர் உணர்ச்சி வசப்பட்டார்..ஓ.. அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்குமே..என.அப்படிப் பலரைக் கவர்ந்த படம் அது

    *

    படத்தின் மற்ற டீடெய்ல்ஸ் பற்றி வேண்டுமென்றால் பக்கத்து வீட்டிற்குச் சென்று ராகவேந்திரா சாரின் கட்டுரை படிக்கலாம் ( நற நற..) ( நான் எழுதறதுக்கு முந்தி எழுதிட்டார்..)
    *

    ஹாஸ்யம், நடிப்பு, இனிமை நிறைந்த பாடல்கள், பரபரப்பான வசனம்(.கலைஞர் மு.க) , தொய்வில்லாத திரைக்கதை என்று இருக்கும் படத்தில் ந.தியின் சகோதரராக எம்.ஆர்.ராதா… கடைசியில் அவரது பழைய தோழியைக் கொல்பவராக டி.ஆர். ராமச்சந்திரன்..
    *

    அழகு சிரிக்கின்றது, நதி எங்கே போகிறது, பறவைகள் பலவிதம் என என்றும் பசுமையான கானங்களின் மத்தியில் ஒரு அழுகை பாடல் – அதுவும் ஸோ ஸ்வீட் தான்..
    *

    ஆசைப்பட்டுக் காதலித்து சந்தர்ப்ப சூழ் நிலையால் திருமணமும் புரிந்த அழகிய நங்கை வெறு வெறு என வெறுக்க என்ன செய்வது என்ற இயலாமைத்தவிப்பைத் தன்னுள் அடக்கி, அவளுக்குப் பிரியமானவனாக மாறுவதற்காகப்பாடு பட்டுக்கொண்டிருந்தால்…
    *

    என்ன ஆகிறது..ஒவ்வொரு முறையும் ஒரு தடங்கல்.. ந.தியால் என்ன செய்வது என்று புரியவில்லை..அப்படியும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் விரும்பிய மங்கை (சர்ரோஜாதேவி) தன்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என்பது தெரியாமல் மனம் நொந்து பாடும் பாடல் தான் அது..

    *

    கண்களில் உறைந்த கண்ணீர், உணர்வுகளில் துடிக்கும் சோகம், நன்றாகப் பாடிய பின்னணி டி.எம்.எஸ்ஸிற்கு ஏற்ப வாயசைப்பு என அசத்தியிருப்பார் ந.தி.. பாடல் ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய் நான் அழுதுஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ..

    *

    அந்தப் பாடலில் உடல் நிலை சரியில்லாமல் அவரன்பை உணர்ந்துவிட்டதைச் சொல்லத் துடிக்கும் கன்னடத்துப் பைங்கிளியாக சரோஜாதேவியும் நன்கு செய்திருப்பார்..

    *

    எல்லாப் பாடல்களுமே அருமை.எம்.ஆர்.ராதா வித்யாசமான நகைச்சுவை.. ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம்மூழ்கி வந்தேன் காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் என அவர் பாட டி.பி. முத்து லட்சுமி – போதாது அய்யா போதாது உயிர்போனாலும் ஆசை போகாது எனப் பாட – பக்கென சிரிப்பு வரும்..

    *
    படம் பார்த்தது ரீ.ரன்னின் போது தான்.. பரமேஸ்வரி தியேட்டர்..

    *

    லஷ்மி என்ற பெயரில் டாக்டர் திரிபுர சுந்தரி என்பவர் எழுதிய பெண் மனம் நாவல் தான்.. படித்ததில்லை.. ஆனால் அவர் எழுதிய வேறு சில நாவல்கள் படித்திருக்கிறேன். மிதிலா விலாஸ், அத்தை, நல்லதோர் வீணை…கதவு திறந்தால்…. பெண்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்ல எழுத்தாளர் அவர்..அதில் இந்த அத்தை என்ற நாவல் –எழுதுவதற்கு முன்னால் 22 வருடங்கள் தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்தார்..பின்பு தான் அவ்வளவு இடைவெளி எழுத்தில் விட்டதற்கப்புறம் எழுத வந்து வெற்றி கரமாய்த் தொடர்ந்தவர் அவர்..
    *

    இருவர் உள்ளம் – ந.தியைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் – தோற்றம், கண்கள், நடை, நடிப்பு (எந்தவித) – என எல்லாவிதத்திலும் துள்ளிடும் இளமை ஒவ்வொரு ஃப்ரேமிலும்..

    *

    இன்னும் எழுதலாம்..ஆனால் கோபால் ராகவேந்திரர் முரளி போன்றோரை விட நான் என்ன எழுதிவிட முடியும் எனில் விட்டு விடுகிறேன்..

    *

    அடுத்த சிரிப்புக்கான இந்தப் படம் பார்த்தால் படத்தினுள் சோகம் பொதிந்து இருக்கும்.. இருப்பினும் ந.தியின் சிரிப்பு ஒரு இடத்தில் ரொம்பப் பிடிக்கும்..


    *

    ஹீரோயின் சப்ஜெக்ட் தான்.. ந.தியின் அற்புத நடிப்பு உண்டு படத்தில்.. துணைக்கு வேறு நடிக நடிகையரும் உண்டு.. ந.தி, ஹீரோயின், மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் நன்கு நடித்திருப்பார்கள்.. குறை எதுவும் வைக்கக் கூடாதென்று டைரக்டர் படத்தில் ஜடப்பொருளான ஒரு டார்ச்சையும் நன்கு வேலை வாங்கியிருப்பார்..அதுவும் நன்கு நடித்திருக்கும்..!

    *

    இனி அடுத்த போஸ்டில் சந்திக்கிறேனே என்று சொல்வதற்குமுன்..

    *

    முரளி ராகவேந்திரர் ரவி, ராகுல் கோபால் எல்லாருக்கும் என் மேல் ஒரு வருத்தம் உண்டு..அதுவும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கவே கேட்காதவன் நான் என்று.. எனில் அவர்களின் வருத்தத்தைப் போக்க நானும் கேட்டு
    விடுகிறேன்..

    *

    (கல்நாயக்- யார் சார் நீங்க?! ( எஸ்ஸ்ஸ்கேப்..)

    *
    தொடரும்..
    Last edited by chinnakkannan; 10th May 2014 at 04:07 PM.

  2. Likes KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •