Page 305 of 401 FirstFirst ... 205255295303304305306307315355 ... LastLast
Results 3,041 to 3,050 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3041
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நினைத்து பார்த்தேன் ராகுல் - MGR நடித்திருந்தால் படத்தில் கீழ்கண்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கும்

    1. கர்ணன் தானம் செய்யும்போது அரண்மனையை சுற்றி 100-200 வயதான கிழவிகள் , தாத்தாக்கள் காத்துகொண்டு இருப்பார்கள் - கர்ணன் கட்டிக்கொள்ள .

    2. OAK தேவர் கர்ணனிடம் வீம்புக்கு கத்தி சண்டை ஒரு பாடலுடன் போட்டிருப்பார் - சுபாங்கியின் தந்தை post யை resign செய்திருப்பார்

    3. அசோகனிடம் கர்ணன் நண்பனாக இருந்திருக்க மாட்டான் - அசோகனின் மனைவி ஒரு காலத்தில் கர்ணனை ஒருபக்க காதல் செய்து , கனவில் டூயட் பாடிவிட்டு பிறகு தங்கை யாக மாறி இருப்பாள்

    4. கர்ணன் போரின் நடுவில் ஒரு காதல் பாட்டை பாடியிருப்பான் - கடைசியில் கண்ணனும் , அர்ஜுனணனும் கர்ணனின் வில்லுக்கு இரையாகி இருப்பார்கள்

    5. கர்ணன் தாயை புகழ்ந்து போர்க்களத்தில் ஒரு பாட்டை பாடியிருப்பான்

    6. பரசுராமர் , கர்ணனுக்கு கண்டிப்பாக பிரம்மாஸ்திரம் சொல்லி கொடுத்திருப்பார் - தாயின் கருணையால் , போரில் அதை கர்ணன் மறந்திருக்க மாட்டான் - அர்ஜுனனின் தேர் தான் பள்ளத்தில் இறங்கி இருக்கும்

    25நாட்கள் மட்டுமே ஓடியிருந்தால் இன்று அந்த பக்கம் , முதல் தடவை வெளிவந்ததில் 500 திரை அரங்குகளில் 250 நாட்கள் ஓடிய வெற்றி காவியம் என்று சொல்லியிருப்பார்கள் - இல்லை உண்மையை சொல்வதாக வைத்துக்கொண்டால் , மவுண்ட் ரோடு இல் உள்ள எல்லா கட்டடங்களும் தீ விபத்துக்கு உள்ளாகி கூட்டம் வர தவறி விட்டது - ஆனாலும் ரீ -ரிலீஸ்இல் பந்துலுக்கு நிறைய லாபத்தை மீட்டு கொடுத்தது என்று பிதற்றி இருப்பார்கள் - கர்ணன் நல்லவேளை அவமானப்படாமல் தப்பித்தான் !

  2. Likes Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3042
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3043
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    In the recent film 'kuckoo' in a song sequence 'kalayanamam kalyanam...' one actor disguises MGR with a typical dance movement (!?) in his 'famous' yellow yellow uniform costume. Another actor who disguises comedian Chandrababu threatens the MGR dupe actor and in response that MGR dressed actor shows fear on his face and retreats steps back!!! See how times are changing!
    Last edited by sivajisenthil; 28th May 2014 at 10:12 PM.

  6. #3044
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    KARNAN & AYIRATHTHIL ORUVAN COLLECTION PUBLISHED NEWS - KARNAN BOX OFFICE COLLECTION - 400% MORE THAN ANY DIGITALISED FILM !



  7. #3045
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Mahendra Raj Sir,

    Warm welcome to the world of the one and only NT and thanks for your comments. It was a long wait for you, I believe before you decided to take a plunge in this ocean [I am referring to this thread, which is now in it's 12th part].

    Regarding your observations, yes there were two Afrikaners who would be seen playing the instrument while Sowcar sings Partha Gnabagam Illaiyao. Though I too have heard about Henry Daniel bringing them as guests, I don't have any confirmation regarding their roles in the song composition. When this was braoched to MSV, he did not even remember it and said the artists present in the scene were arranged by the Production Manager and he had no role to play there.

    Railway scenes, yes there were some logic issues and I even thought there were no rail services in Singapore during those times and your info about Malaysian rail running up to Singapore is news to me. As Adiram rightly pointed out SR stands for Southern Railway because it was shot in Tamilnadu.

    You are most welcome to take an active part in this thread and share the wealth of your knowledge.

    Regards

  8. #3046
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ரவி,

    மிக்க நன்றி. சில கேள்விகளுக்கு பதில் சற்று தாமதமாகவே வரும். பொறுங்கள்.

    நன்றி சாரதி.

    கோபால்,

    மதுரை வழியாக திருவள்ளுவர் பஸ்ஸில் போனாலே தமிழ் எழுத வரும் என்பது உண்மைதான் என்றாலும், நீங்கள் 1972-மே 6 அன்று மாலைக்காட்சி மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா பார்த்தபோதுதான் உங்களுக்கு தமிழ்பால் புகட்டப்பட்டது என்பது வரலாறு கூறும் உண்மை அல்லவா?

    அன்புடன்

  9. #3047
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு. கடந்த பதிவின் இறுதி பகுதி.நடிகர் திலகத்தின் தயாரிப்பில் இருந்த படங்களைப் பற்றிய நினைவலைகள்.

    சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    அந்த நாள் ஞாபகம்

    மீண்டும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு வருவோம். மூன்றாவது வாரம் நான்காவது வாரம் grip சற்றும் குறையவில்லை. பொதுவாக சினிமா விநியோக துறையில் சில குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகமாக புழங்கும். அவறில் ஒன்று opposition, இது என்னவென்றால், ஒரு படத்தின் ஓட்டத்திற்கு போட்டியாக இருக்கக் கூடும் என விநியோகஸ்தர்கள் கருதும் வேறு படங்களை opposition என்று கூறுவார்கள். ஆனால் இதில் இன்னார் படத்திற்கு இன்னார் படம் மட்டுமே opposition என்று எடுத்துக் கொள்ள முடியாது. எந்த படங்கள் வேண்டுமானாலும் opposition ஆக வர முடியும்."நம்ம படம் போடும்போது இந்தப் படம் [படத்தின் பெயரை சொல்லி] opposition-னா விழுந்துருச்சு. அதிலே நம்ம படம் கொஞ்சம் அடி வாங்கிருச்சு" போன்ற சால்ஜாப்புகளையும், அடுத்தவர் படத்தை பற்றி குறிப்பிட்டும் போது "opposition-யே இல்லை. அதனாலே நல்லாப் போயிருக்கு" போன்ற வயித்தெரிச்சல் வசனங்களையும் ரெகுலராக கேட்கலாம். பட்டிக்காடா பட்டணமாவைப் பொறுத்தவரை அந்த opposition கூட எடுபடவில்லை. ஓரளவிற்கு அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்த படம் என்று சொன்னால் KSG-யின் குறத்தி மகன் படத்தை சொல்ல வேண்டும். ஜெமினியும் கே ஆர் விஜயாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் B அண்ட் C ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது. மதுரையில் கல்பனா திரையரங்கில் இந்தப் படம் வெளியாகியிருந்தது. மற்றபடி நோ opposition என்றே சொல்ல வேண்டும். ஜூன் 1 அன்று பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. பொதுவாக அந்த நேரம் படங்களுக்கு ஒரு drop இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அதையும் மீறி பட்டிக்காடா பட்டணமா தன வெற்றியோட்டதை தொடர்ந்தது. ஜூன் 4 ஞாயிறன்று இரவுக் காட்சி வரை நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ் புஃல். அடுத்த நாள் திங்கள் முதல் drop ஆகும் என்று சிலர் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க அதுவும் பொய்த்து போய் திங்கள் செவ்வாய் எல்லாம் புஃல். [House Full]

    இதற்கு நடுவில் நியூசினிமாவில் ஞான ஒளி 13-வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அப்போது disturbing news ஒன்று வருகிறது. படத்தை 100 நாட்கள் ஓட விடாமல் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்திதான் அது. கேஆர்விஜயாவின் பினாமி தயாரிப்புகளில் ஒன்றான அவரும் முத்துராமனும் இணைந்து நடித்த கண்ணம்மா என்ற திரைப்படம் [மாதவன் இயக்கம்?] ஜூன் 23 வெளியாவதாக இருந்தது தெரியும். அது மதுரையில் நியூசினிமாவில் chart செய்யபட்டிருந்ததும் தெரியும். அப்படி ரிலீஸ் ஆகும் பட்சத்தில் ஞான ஒளி 104 நாட்களை நிறைவு செய்திருக்கும் என்பதனால் முதலில் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜூன் 9 அன்றே ஞான ஒளி படத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். விநியோகஸ்தர் அலுவலகத்திற்கும் திரையரங்க அலுவலகத்திற்கும் ரசிகர்கள் சென்றனர். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் வியட்நாம் வீடு படத்திற்கு இதே போன்ற நிலைமை ஏற்பட்டதை அனைவரும் நினைவு கூர்ந்தனர். மீண்டும் அப்படி நடந்து விடக் கூடாது என முயற்சித்தார்கள். இத்தனைக்கும் படத்திற்கு overall hold over குறையவில்லை. அப்படியிருந்தும் திரையரங்க உரிமையாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தனர். விநியோகஸ்தரால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. ஜூன் 8 அன்று 90 நாட்களை நிறைவு செய்த ஞான ஒளி ஜூன் 9 அன்று மாற்றப்பட்டு தெலுங்கு டப்பிங் படமான ரிவால்வர் ரீட்டா வெளியானது. ரசிகர்களுக்கெல்லாம் பெருங்கோபம் மற்றும் வருத்தம். வியட்நாம் வீடு, பாபு, ஞான ஒளி என தொடர்ந்து மூன்று படங்கள் மதுரையில் 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படங்கள் 90 நாட்களில் எடுக்கப்பட்டது இன்று வரை மனதில் மாறாத வடுவாக இருந்துக் கொண்டேயிருக்கிறது. இதற்க்கெல்லாம் ஆறுதலாக பட்டிக்காடா பட்டணமா அந்த ஜூன் 9 அன்று 35 நாட்களை நிறைவு செய்து அன்று வரை நடைபெற்ற 115 காட்சிகளும் ஹவுஸ் புஃல் ஆனது. 115 CHF [Continuous House Full shows]. அதே நாளன்று நான் ஏன் பிறந்தேன் மதுரை தங்கத்தில் வெளியாகிறது. அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?

    (தொடரும்)

    அன்புடன்

  10. #3048
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த மாதம் வெளியான இரு உன்னத நகைச்சுவை படங்கள் மணமகன் தேவை (16 மே ) ,பலே பாண்டியா (26 மே)

    மணமகன் தேவை ,பானுமதி சொந்த தயாரிப்பில், அவரது கணவர் இயக்கிய படம்.காலத்தை முந்திய அற்புதமான ஆங்கில பாணி நகைச்சுவை சித்திரம். ஜீன்ஸ் படத்தின் முன்னோடி. பானுமதி ,இரு ஆண்களிடம் அக்கா தங்கை வேடமிட்டு சமாளிக்கும் துணிச்சலான கதைக்கு சொட்டு கொடுக்க வேண்டும்.(50 களின் பெண்கள் நிலை தெரிந்தவர்களுக்கு காரணம் புரியும்).பம்பர கண்ணாலே காதல் சங்கதி பாடல் ஜி.ராமநாதன் இசையில் ,சந்திர பாபு தந்த காலம் மீறிய அதிசயம்.நடிகர்திலகம் படு sophisticated urban look (மீசையில்லாமல்)உடன் பிரமாத படுத்தி மேலை நாட்டு பாணி ,சூழ்நிலை சார்ந்த காமெடி யில் பின்னியிருப்பார். ஒரு காட்சியில் பானுமதி ,நடிகர்திலகத்துடன் செல்ல சம்மதித்து ,டி.ஆர்.ராமசந்திரனை திராட்டில் விடும் போது ,நடிகர்திலகம் டபாய் ப்பது க்ளாஸ் .பார்த்தே ஆக வேண்டிய polish ஆன ஐம்பதுகளின் காலத்தை முந்திய நகைச்சுவை அற்புதம்.

    பலே பாண்டியா-நண்பர் ,கப்பலோட்டிய தமிழன் முதல் வெளியீட்டில் சிறிதே பிசகியதால், இலவசமாக 13 நாட்களில் மூன்று வேடங்களில் அசத்திய பிரமாத நகைச்சுவை சித்திரம்.இந்த படம் மிகை நகைச்சுவை வகை.(கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கோடீஸ்வரன்,ராஜா ராணி,மணமகன் தேவை,சபாஷ் மீனா இயல்பான timing நகைசுவை)
    இதில் பாண்டியா பாத்திரம் ,நடிகர்திலகம் தவிர யாரும் நினைத்தே பார்த்திர முடியாத ஒரு உன்னத புதிய பாணி நகைசுவை நடிப்பு.நாகேஷ்,பாலையா,எம்.ஆர்.ராதா எல்லோருடைய + point களை இணைத்த புள்ளி அந்த அதிசய பாத்திரம்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கண்ணதாசன் இணைவில் பாடல்கள் உன்னதம் தொடும்.நீயே உனக்கு பாடலில் சிவாஜி-எம்.ஆர்.ராதா அதகளம் அடாடா!!!! திரைகதையை கொஞ்சம் சீரமைத்திருந்தால் எங்கேயோ நின்றிருக்க வேண்டிய நகைச்சுவை classic .

    மேற்கூறிய இரண்டு படங்களையும் பல முறை பார்த்து ரசித்துள்ளேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3049
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்த மாதம் வெளியான இரு உன்னத நகைச்சுவை படங்கள் மணமகன் தேவை (16 மே ) ,பலே பாண்டியா (26 மே)



    பலே பாண்டியா-நண்பர் ,கப்பலோட்டிய தமிழன் முதல் வெளியீட்டில் சிறிதே பிசகியதால், இலவசமாக 13 நாட்களில் மூன்று வேடங்களில் அசத்திய பிரமாத நகைச்சுவை சித்திரம்.

    மேற்கூறிய இரண்டு படங்களையும் பல முறை பார்த்து ரசித்துள்ளேன்.
    லட்சகணக்கில் ருபாய் கை நீட்டி, பல் இளித்து வாங்கி, பின்பு தயாரிப்பாளர்கள் பலரை நொந்து நூலாக செய்யும் நடிகர்கள் மத்தியில், சிறிது பிசகியதா இந்த பிடி ஒரு பைசா கூட தரவேண்டாம் என்று நடிகர் திலகம் நடித்து கொடுத்தார் என்றால் அவரின் நல்ல எண்ணத்தை எப்படி போட்ட்ருவது !

    சும்மாவா...நடிகர் திலகம் காலத்தில் மொழி, பேதம் பார்க்காமல் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் என்று தயாரிப்பாளர்கள் மற்ற நடிகர்கள் இருந்தும் நமது நடிகர் திலகத்தை வைத்து மட்டுமே திரைப்படம் தயாரிக்க விரும்பினர் !

    திரை உலகின் உண்மையான ஆபத்பாந்தவன், அனாத ரட்சகன் நமது நடிகர் திலகம் என்பது எவ்வளவு பொருத்தம். ! அபிராமி இராமநாதன் கூறியதை போல இருக்கும் வரை திரை உலகை வாழவைத்த மகான் !

  12. #3050
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத் சார் - நீங்கள் இருள் சூழ்ந்த இடத்தில் ஒரு torchlight ஆக இருந்து உங்கள் திரியை அழகாக எடுத்து செல்கிறீர்கள் என்பதற்கு உங்களுடைய கீழ்கண்ட பதிவு ஒரு சின்ன உதாரணமே - நீங்கள் அந்த திரியில் இல்லாமல் இருந்தால் எப்படி அந்த திரி செல்லும் என்று நினைக்கவே கஷ்ட்டமாக இருக்கின்றது - வாழ்க உங்கள் தொண்டு !!

    Quote : "மாலை மலர் பேப்பரில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு கோடி வசூல் என்று தகவல் - செய்தியில் பிற மாவட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாளை நோக்கி ஓடுகிறது என்று தவறான தகவலை வெளியிட்டுள்ளார்கள் .திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு தெரியாமல் இந்த தவறான தகவல் வெளியிட்ட செய்தியாளருக்கு என்ன உள் நோக்கமோஎன்று தெரியவில்லை .


    சென்னை - தேவி பாரடைசில் ஒரு காட்சி வசூல் மட்டும் ஆதாரத்துடன் சொக்கலிங்கம் விளம்பரம் தந்தார் .
    யூகங்கள் அடிப்படையில் வசூலை கூறுவது ஆதாரமாகாது ."

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •