Page 336 of 401 FirstFirst ... 236286326334335336337338346386 ... LastLast
Results 3,351 to 3,360 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3351
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் ரவி சார்
    பாட்டும் பரதமும் ரவிக்குமார்(பெயர் கரெக்டா) பற்றியும் ப்ளீஸ்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3352
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    An appeal to all:

    Let us not in any form write anything that may hurt anybody - not necessarily fellow hubbers; but, also other Artistes. After all, every body has emotions and of course human being is an extended / emotional animal.

    Even though certain things are written sarcastically / humorously, some people may not take it lightly and eventually get hurt.

    The thread has after a lull for about 2-3 days has picked up again.

    Request all of you to be congenial and focus on only "glorifying NT" and nothing else.

    Regards,

    R. Parthasarathy

  4. Thanks eehaiupehazij, kalnayak, uvausan thanked for this post
  5. #3353
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : Thiru. Balaji Balasubramaniam

    A COLOSSAL LOSS - A Short Tribute to 'Sivaji' Ganesan

    In picking Parasakthi as the movie of the month for July 2001, I mentioned that it marked the beginning of an era in Tamil cinema by introducing 'Sivaji' Ganesan to the silver screen. Sadly, the same month now marks the end of the era as the legendary actor passed away on Saturday, July 21. The bulk of his movie career and most of his memorable performances happened before I was old enough to understand and enjoy movies. But some of his later performances gave ample notice of his immense talent and I have also enjoyed several of his older movies on video. Here is a short tribute to the great actor.
    Seeing Parasakthi made me realise that Sivaji's debut was unlike that of the other actors I have known. While actors like his peer MGR and later, Rajnikanth and Kamalhassan, appeared in small roles initially before climbing the rungs of success, Sivaji was perched at the top right from the beginning. His performance in his very first film belied his inexperience in front of the camera as he effortlessly portrayed the youth disgusted at the way society treats him and his sister. While his long monologue in the climactic courtroom scene is legendary, he made his mark with almost every scene he appeared in, be it crying, delivering strong dialogs or dancing a few steps.

    Both MGR and Sivaji laid out their cinematic paths clearly with MGR being the mass hero and Sivaji being the class hero. While MGR swept up the adulation of the masses with his 'man of the people' roles and squeaky clean image, Sivaji impressed the connoisseurs with his versatility, wide variety of roles and acting talent. Image was no concern as he played good guy and bad guy, old man and young man, handsome playboy and scarred loner, with equal ease. His rich baritone voice and talent at reeling off pages of dialogs with perfect tone and timing made so many of his roles memorable and his lip-syncing for the songs frequently made people forget that he actually had a playback singer.

    Some of his most famous roles early in his career were as historical and mythological personalities. On screen, he was transformed into whoever he was depicting and people began identifying those historical figures based on his portrayal. When we talk about personalities such as 'Chatrapati' Sivaji, Veera Pandiya Katta Bomman or Karnan, the image we conjure up is invariably based on Sivaji's appearance as the character. That is the impact his performances have had on public consciousness. His majestic bearing, stylised walk and booming voice were some of the features that stood him in good stead in mythologicals with his role as Lord Siva in Thiruvilaiyaadal being a prime example.

    Among social roles too, there is almost no role that Sivaji has not played in Tamil cinema. Fans looked forward to his movies, confident that he would present them with a new persona, replete with a new getup and unique mannerisms, in each new movie and rarely were they disappointed. The affectionate brother in Paasamalar, the strict police inspector in Thanga Padakkam, the haughty lawyer in Gowravam, the naadaswaram astist in Thillaanaa Mohanaambal and the loyal servant in Padikkaatha Medhai are just a few of the characters that cannot be forgotten that easily by Tamil cinema viewers. He dabbled in double roles as early as Uthama Puthiran, effortlessly distinguishing between the two roles. Multiple roles were handled just as easily, with the three roles in Dheiva Magan and the unprecedented(and unmatched) nine roles in Navarathri.

    One of the earliest movies in which I saw Sivaji on the big screen was Vellai Roja, the crime thriller where he portrayed both the calm church father as well as the loud but efficient police inspector. Since Sivaji had his roots in stage dramas, some of his later performances were seen as overacting but he proved that under the right director, he still delivered the goods. Two such memorable performances were in Mudhal Mariyaadhai and Thevar Magan. He displayed sadness and comedy in equal portions in Bharatiraja's Mudhal Mariyaadhai, where he played a man wedded to a shrew and found enjoyment in the company of a younger woman. As Kamalhassan's strict but affectionate father in Thevar Magan, he was majestic and his quick end left us wishing he had a larger role. It was unfortunate that none of the other directors utilised his potential fully. His last significant role turned out to be as Rajnikanth's father in Padaiyappa while his final role was as a good-hearted grandfather trying to unite his grandson with his lover in Poopparikka Varugirom. But neither of these were roles deserving of bringing down the curtain on such an illustrious career.

    It was one of the cruel ironies that Sivaji, who found so much fame outside Indian shores, never won the national award for acting from the Indian Government. The only consolation for this is that the awards themselves have become highly politicised, as evident from the fact that MGR won the award for Rickshakkaaran. But there was no shortage of accolades from other sources for Sivaji. He won the Afro-Asian film festival award in 1960 for his performance in Veerapandiya Kattabomman and was awarded the title of Chevalier, the Order of Arts and Literature by the Ministry of Culture, Government of France. At home, he received the Padmashri and the Dadasaheb Phalke award. The only recognition he received at the national lever for his acting was the special jury award for Thevar Magan.

    After close to 50 years in the Tamil cinema, the thespian has finally passed away. He will definitely live on in our hearts through his movies but his death is a colossal loss to the Tamil film industry and its millions of fans and he will definitely be missed.

    May his soul rest in peace

    © 2001 Balaji Balasubramaniam

  6. Thanks uvausan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  7. #3354
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சிரிப்பு பாதி அழுகை பாதி

    அத்தியாயம் எட்டின் இறுதி….
    *
    அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
    பழுதான போதில் வரும்
    *
    நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
    *
    ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
    *
    மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
    மேவி விழிகளினிடை
    துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
    சின்னத் துளியாக
    *

    அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)

    சிரிப்பு பாதி அழுகை பாதி 9

    மிகப் பெரிய இடைவேளைக்கப்புறம் தொடர்கிறது..!

    *
    ந.தியின் மிகப் பிடித்த பாடலொன்றில் இருக்கும் வரி..
    *
    கண்களின் தண்டனை காட்சிவழி
    காட்சியின் தண்டனை காதல் வழி
    காதலின் தண்டனை கடவுள் வழி
    கடவுளைத் தண்டிக்க என்ன வழி எனக் கேட்டிருப்பார் கண்ணதாசனின் பாடல் வாயிலாக.. ஸோ இன்பம் தருவதும் காதல்..துன்பம் தருவதும் காதல் (எவ்ளோ பெரிய கண்டுபிடிப்புடா – மன்ச்சு ஷ்ஷ்)
    *
    உலகத்தில் இதைப்பற்றி பேசாதவர்கள் வெகு சொற்பமே
    *
    மின்னலது ஊடுருவி மென்நெஞ்சில் பாய்ந்ததுபோல்
    கன்னமிடும் காதலும் காண்..
    *
    யெஸ்.. காதல்..விதைவிட்டுச் சாகுபடி செய்யவேண்டிய அவசியமே இல்லை.. படக்கென ஒரு பார்வை, ஒரு குறுஞ்சிரிப்பு, ஒரு உரையாடல், ஒரு – வாகான நுதலில் சுருண்டு பெருமையுடன் புன்சிரிக்கும் சிறு சுருள் முடி அதன் கீழ் குறுகுறு கண்கள் எனப் பார்க்கையில், ஒரு துளி கண்ணீர், ஒரு ஒயில் நடை, ஒரு வீரச் செயல் ஆணிற்கு, ஒரு கவிதை.. இன்னும்..என்னவிதத்தில் வரும் என்றும் சொல்ல முடியாது..
    *
    ந.தியின் இந்தப் படத்தில் அவர் முகம்மதிய இளைஞர்..சூழலால்.. மென்மை மனம்..அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நெஞ்சம்..
    *
    அவர் சைக்கிளின் மீதும் மனதின் மீதும் மோதும் ஹீரோயின் ஒரு கிறிஸ்தவப் பெண்.. அந்த இளைஞரின் அமைதிப் பார்வை, அலட்டலில்லாத போக்கு, நாகரீகமான பேச்சு, மற்றவருக்கு உதவும் தன்மை என எல்லாவித நல்ல குணங்களும் பிடித்துப் போய்விட..மே ஐ கமின் என்று கேட்டுக் கொள்ளாமலேயே அவளுக்கு அந்த இளைஞன் மேல் காதல் வந்து விடுகிறது..
    *
    அந்த இளைஞன் யெஸ் ரஹீம் தான்..அவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
    *
    மனதிலோ..

    இரவேறுது நிலவேறுது இளமையினி விழித்தே
    புறந்தள்ளிடும் சலனந்தனை பொறுக்காமலே அவளை
    அறந்தானென அழகாய்ப்பல விதமாய்ச்சொலி அணைத்தே
    கரம்பிடித்திடும் உணர்வைவெகு கனிவாய்த்தொடுத் திடுமே

    என்றெல்லாம் எண்ணம் பலவாறாய்த் தோன்றினாலும்..முடியவில்லையே..
    *
    காரணம்..ஜாதி.. நான் முஸ்லிம்..அவள் கிருஸ்தவப் பெண்.. சமூகம் ஏற்குமா..தவிக்கிறார் ரஹீன்..
    *
    அவளும் அவரை நாடி வருகிறாள்..வெகு அழகாய் வெகு இயல்பாய்ப் வெகு இனிமையாய்ப் பாடலும் வருகிறது
    *
    பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது..
    பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது..
    *
    காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
    கண்கள் பேசும் பாஷையிலே பேதமில்லையே
    *
    கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
    பாதிக் கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
    வட்ட நிலா வான்வெளியில் காவியம் பாடும்
    கொண்ட பள்ளியறை ப் பெண்மனதில் போர்க்களமாகும்
    *
    அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..
    *
    ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்..
    *
    கண்ணோரம் ஈரமின்று காயலாச்சே
    ..கன்னியவள் எண்ணமதும் தெரிய லாச்சே
    வண்ணமகள் சொல்லிவிட்டாள் நெஞ்சத் தீயை
    ..வாய்த்திடுமா அவள்கரத்தைப் பற்றும் நேரம்
    பெண்ணவளே சொன்னபின்னும் தவிக்கின் றேனே
    ..பேதமையா பின்விளைவா என்றே உள்ளம்
    எண்ணியெண்ணிப் புலம்புவதை எங்கே சொல்ல
    ..ஏந்திழைக்கு எப்படித்தான் சொல்வேன் மெல்ல
    *

    ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..

    ..*
    காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
    *

    ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..

    *

    எனில் இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் (?) ஐ முடிக்கிறேன்..
    *

    அடுத்து புதியதாக எழுதி வருவேன் என்று பயமுறுத்தி விடைபெறும்
    *

    உங்கள்
    சி.க

  8. Likes eehaiupehazij, kalnayak, uvausan liked this post
  9. #3355
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சிரிப்பு பாதி அழுகை பாதி

    அத்தியாயம் எட்டின் இறுதி….
    *
    அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
    பழுதான போதில் வரும்
    *
    நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
    *
    ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
    *
    மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
    மேவி விழிகளினிடை
    துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
    சின்னத் துளியாக
    *

    அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)

    காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
    *

    ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..

    *

    எனில் இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் (?) ஐ முடிக்கிறேன்..
    *

    அடுத்து புதியதாக எழுதி வருவேன் என்று பயமுறுத்தி விடைபெறும்
    *

    உங்கள்
    சி.க
    ck அவர்களே,

    இந்தக் காட்சி படத்தை நான் முதன் முதல் எழுபதுகளின் இறுதியில் பார்த்த போதே பெரிதாக ஈர்த்த ஒன்று.

    நடிகர் திலகம் ஒருவர்தான் பாத்திரத்தின் தன்மையை நூறு சதவிதம் நிலை நிறுத்தி படைத்தவனுக்கு (பாத்திரத்தை) பூரண திருப்தி தந்தவர். ரஹீம் கதா பாத்திரத்தின் கண்ணியம் எனும் அந்தப் புள்ளியை பரிபூரணமாக - குறிப்பாக இந்தக் காட்சியில் - வடித்த விதம்!

    இதை எழுதும் போதே புல்லரிக்கிறதே, பார்த்தால்!

    ஏகப்பட்ட அலுவல்களுக்கிடையே இளைப்பாரலுக்கு இங்கு வந்து கொண்டிருக்கிறேன். பதிய முடியவில்லை. இருப்பினும், இந்த ஒரு காட்சியும், அதை நீங்கள் வர்ணித்த விதமும், என்னை, வேலை மெனக்கெட்டு தமிழில் எழுதப் பணித்து விட்டது!

    நன்றி.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  10. #3356
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பின் பார்த்த சாரதி சார்..
    எனக்கு உள்ளூர உதறல் எடுக்கிறது(இன்னும் நன்றாக எழுத வேண்டுமென) .. வேலைப் பளுவிற்கினிடை வந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..
    அன்புடன்
    சி.க..

  11. #3357
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அன்பின் பார்த்த சாரதி சார்..
    எனக்கு உள்ளூர உதறல் எடுக்கிறது(இன்னும் நன்றாக எழுத வேண்டுமென) .. வேலைப் பளுவிற்கினிடை வந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..
    அன்புடன்
    சி.க..
    உங்களுக்கு உதறல் அல்ல.குளிர் ஜுரமே வர ஒரு செய்தி.உங்கள் ரசிகர் லிஸ்டில் என்னை மறக்காமல் சேர்க்கவும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #3358
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    என்றும் அழியா கதா பாத்திரங்கள் நன்றாய் உள்ளது ரவி. செந்தில் சொன்னது போல் space கொடுங்கள் .ஜீரணிக்க நேரம் தேவை.save பண்ணி வைத்து நாளொன்றுக்கு ஒன்றாக....
    எஸ்.வீ.சேகர் பாணியில் ஒன்று.

    கோபால்- ஒரு நாளைக்கு சுமாராக எத்தனை பதிவுகள் போடுவீர்கள்?

    நண்பர்- சார் நாங்க எல்லா பதிவுமே, சுமாராத்தான் போடுவோம். மார்க் போட retire ஆன கல்கத்தா வாத்யார் இருக்காரே?ஹையா
    உங்களுக்கு உதறல் அல்ல.குளிர் ஜுரமே வர ஒரு செய்தி.உங்கள் ரசிகர் லிஸ்டில் என்னை மறக்காமல் சேர்க்கவும்.

    உங்களுடைய எப்படியான நடவடிக்கைதானே இங்கு பிரச்சினையை உருவாக்குகிறது
    தெரிந்துகொண்டும் மறுபடியும் ஏன் தொடர்கின்றீர்கள்?

    நண்பரே இப்படியான பதிவை இடுவதற்கு பதிலாக
    நடிகர்திலகம் பற்றிய ஏதாவது தகவல்
    தங்களிடம் இருந்தால் அதனை பதிவிடலாமே
    தயவு செய்து என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு
    செவி சாயுங்கள் மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்

  13. #3359
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Ravi,

    Your analysis of Rahim,Antony Babu a fantastic one. Keep up the tempo to put this thread at
    the highest level.

    Regards

  14. #3360
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    தயவு செய்து என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு
    செவி சாயுங்கள் மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்
    சரக்கு தீர்ந்திடிச்சு சிவா.ஒண்ணும் பாக்கியில்லே .நடிகர்திலகம் பத்தி ஒரு செய்தியும் இல்லேப்பா.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •