-
14th June 2014, 10:13 AM
#191
Senior Member
Seasoned Hubber
பாடலாசிரியர் கம்பதாசன் அவர்களின் நினைவலைகளைத் தூண்டிவிட்டு விட்டார் வாசு சார். தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் கம்பதாசன். புதுவை அருகில் வில்லியனூர் அவருடைய சொந்த ஊர். இயற்பெயர் ராஜப்பா. 1939ல் வெளிவந்த வாமன அவதாரம் அவருடைய முதற்படம். கம்பதாசனுக்கு மிகப் பெரிய புகழ் ஈட்டிய பாடல், அருள் தாரும் தேவ மாதாவே என்கிற ஞான சௌந்தரி திரைப்படப் பாடல். இதே போல் மங்கையர்க்கரசி திரைப்படத்தில் இடம் பெற்ற பார்த்தால் பசி தீரும் பாடலும் இவரைப் புகழேணியில் ஏற்றி உச்சாணிக் கொம்பில் வைத்ததாகும். கண்கள் திரைப்படத்தில் இடம் பெற்று சந்திரபாபு பாடிய ஆளு கனம் ஆனா மூளை காலி பாடலும் இவருடைய யதார்த்த நடைக்கு பெயர் பெற்றது. எம்.ஜி.ஆர். நடித்த சாலி வாஹனன் திரைப்படத்திற்கு வசனம் பாடல்கள் கம்பதாசன். இவரைப் பற்றியும் இவருடைய பாடல்களைப் பற்றியும் மற்றும் அதிகம் அறியப் படாத கவிஞர்களைப் பற்றியும்
தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள்
என்கிற தலைப்பில் ஒரு தொடர் எழுதலாம் என எண்ணுகிறேன். தங்களுடைய கருத்துக்களைப் பொறுத்து இதனை செயல் படுத்த உத்தேசம்.
அது வரை
அருள் தாரும் தேவ மாதாவே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th June 2014 10:13 AM
# ADS
Circuit advertisement
-
14th June 2014, 10:26 AM
#192
Junior Member
Newbie Hubber
சுப பந்துவராளி.
மனதிற்குள் ஒரு வெறுமை அல்லது தோல்வி மனப்பான்மை.அதை உணர்ந்து மென்று கொண்டே, சிறிது நம்பிக்கை பெற வேண்டும். பிரிவை உணர்ந்து துக்க பட்டு ,சிறிதே ஆசுவாசமும் அடைய வேண்டும்.
ஒரு மெல்லிய இழையில் ஓடும் மெலடி உன் உள்ளத்தின் நாண்களை வீணை மாதிரி மீட்ட வேண்டுமா?
சிறு வயதில் tape recorder எல்லாம் பார்த்தேயிராத போது ,ஒரு பாடலை கேட்கும் போதெல்லாம் ,இரவு பதினோரு மணிக்கு மேல் ஊரடங்கிய பின் ,இந்த பாடலை கேட்டால் என்று மனம் ஏங்கும் .பின்னாளின் பீ .டெக் படிக்கும் போது ,மூன்றால் வருட ஹாஸ்டல் வாழ்க்கையில் அந்த கனவு நிறைவேறியது.
அந்த பாடல்- உன்னை நான் சந்தித்தேன்.
அப்படியே கண்களில் நீர் துளிர்க்க,அந்த நீரை வெளியே விடவே மனமின்றி கண்களை மூடி ,ட்ரான்ஸ் அனுபவம் பெற்றேன்.இதை மீறியா தியானம் எல்லாம்??
இந்த ராகம் ,உன் உணர்வின் தன்மையை உணர்த்தி,ஆசுவாசமும் தந்து விடும். உண்மை நடப்பையும் மறைத்து மனதுக்கு திரையிடாமல்,அதே நேரம் மனதை அலை பாய செய்யாமல் ,மென்மையாய் திட படுத்தும்.பொய் நம்பிக்கை தராமலே.
கேளுங்கள் இந்த ராகத்தின் கீழ்கண்ட அதிசய பாடல்களை....
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே-அவன்தான் மனிதன்.
கேளடி கண்மணி பாடகன் சந்ததி-புது புது அர்த்தங்கள்.
ராமன் எத்தனை ராமனடி- லட்சுமி கல்யாணம்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே- அலைகள் ஓய்வதில்லை.
விழியோரத்து கனவோ இங்கு -ராஜ பார்வை.
வைகறையில் வைகை கரையில் -பயணங்கள் முடிவதில்லை.
இது ஒரு மேளகர்த்தா, சம்பூர்ண ராகம்.சப்த ஸ்வரங்களுடன்(ஆரோகணம் அவரோகணம்)
குறிப்பாக ஆட்டுவித்தால், உன்னை நான் இரண்டும் இரவில் தனிமையில் கேளுங்கள்.கண்ணீருடன் ,கண் மூடுவீர்கள்.
Last edited by Gopal.s; 14th June 2014 at 10:28 AM.
-
14th June 2014, 10:28 AM
#193
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
அருமையான, அரிய, வெளிவராத தகவல்களைத் தெரிந்து கொள்ள எங்களுக்குக் கசக்குமா!
அதுவும் ஆரம்ப கால தமிழ்த்திரையுலக பாடலாசிரியர்களைப் பற்றி எழுத மிகச் சரியானவர் நீங்கள்தான். அவ்வளவு விஷயங்களையும் தாங்கள் விரல்நுனியில் வைத்திருந்தும் தங்கள் தன்னடக்கம் என்றும் எனக்கு ஆச்சரியமான விஷயம். வாழ்த்துக்கள்.
('ஞான சௌந்தரி'யில் நிஜமாகவே குந்திதேவி அம்மா கொள்ளையோ கொள்ளை அழகு சார்)
-
14th June 2014, 10:36 AM
#194
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
கோ,
நன்றி!
ஓஹோ! ஓஹோஹோ!
நாங்கள் ஒரு ட்ராக்கில் போனால் நீங்கள் தங்களுக்கே உரித்தான வேறு பாதையில் பீடுநடை போடுகிறீர்கள். எனக்கு ராகங்களைப் பற்றி சுத்தமாகத் தெரியாது. ஆனால் இசையை பாடல்களை ரசிப்பதில் குறைவில்லை.
எத்தனையோ விஷயங்களில் வாசுதேவன் அவர்களோடு ஒத்துப்போகும் நான், இந்த விஷயத்திலும் ஒத்துப்போகிறேன். எனக்கும் ராகங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் பாடல்களை ரசிப்பதில் சமத்து.
-
14th June 2014, 10:48 AM
#195
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
இந்தத் திரியை மேலும் மெருகூட்ட இன்னொரு சிறு முயற்சி. இசைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் பத்திரிகை பேட்டிகள், புகைப்படங்கள், பாடலுக்கு நடித்த நடிக, நடிகையரின் ஆவணத் தொகுப்புகள், அவர்களின் பேட்டிகள், பழைய பத்திரிக்கையின் இசைப் பக்கங்களை இத்திரியில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
கார்த்திக் மிகுந்த சந்தோஷமடைவீர்கள் என்று தெரியும்.
நிச்சயமாக 100%.
காத்திருக்கிறோம். தூள் பரத்துங்கள்.
-
14th June 2014, 11:04 AM
#196
Senior Member
Veteran Hubber
டியர் வாசு,
'வான ரதம்' படப்பாடல் பற்றிய பதிவு ஒரு காணக்கிடைக்காத பொக்கிஷம். தேடிக்கொணர்ந்து அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. அத்துடன் லதாவின் இளவயது நிழற்படங்களும் அருமை. (நேற்று திரியில் கோலோச்சிய 'லட்டு' லதாவை சொல்லவில்லை. இசைக்குயில் லதாவை சொன்னேன்).
இப்பாடலில் எக்ஸ்பிரஷன் என்னவிலைஎன்று கேட்கும் திலீப் அவர்களைத்தான் வடநாட்டின் நடிகர்திலகமாக ஒப்பிட்டார்கள். (நாமெல்லாம் நடிகர்திலகத்தைப்பற்றிப்பேச அனுமதி உண்டா?)
-
14th June 2014, 11:14 AM
#197
Junior Member
Platinum Hubber
courtesy - net
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!
எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்:
காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
அது மட்டுமா திருட வந்த அவனைத் தானே திருடி விட்டதாகவும் கூறுகின்றாள். நாயகிக்கோ திருடுவதில் நாயகனைப்போல் பரிட்சயமில்லை. இதுதான் அவளது முதல் திருட்டு. முதல் திருட்டு என்பதால் அவளுக்குப் போதிய அனுபவமில்லை. அதனால் அவனை அவளால் முழுவதுமாகத் திருட முடியாமல் போய் விட்டதாம்.
அவன்தான் திருடன் என்றிருந்தேன்.
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
அத்துடன் அவன் மேல் காதல் கொண்ட நாயகி தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருடனைக் கைது செய்து தன் உள்ளத்துச் சிறையினில் வைக்கப்போவதாகவும் அதிலிருந்து அவனை என்றுமே விடுதலை செய்யப்போவதில்லையென்றும், இவ்விதம் அவனைக் கைது செய்து ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையினுள் வைப்பதற்குத் தான் ஒருபோதும் விளக்கம் கூறப்போவதில்லையென்றும் கூறுகின்றாள்:
இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
ஒரு திருடனைக் காதலிக்கும் நாயகியென்பதால், திருடனுடன் சம்பந்தப்பட்ட திருட்டு, சிறை, கைதி, விடுதலை போன்ற சொற்களை வைத்தே பாடலை இயற்றிய கவிஞரின் சொல்நயம் என்னைக் கவர்ந்தது. அத்துடன் மெல்லிசை மன்னர்களின் இசையும், எஸ்,ஜானகியின் குரலும் மேற்படி பாடல் என்னைக் கவர்வதற்கு மேலதிகக் காரணங்கள். அத்துடன் கன்னடத்துப் பைங்கிளியின் காதல் ததும்பும் குறும்புடன் கூடிய நடிப்பையும் தவிர்ப்பதற்கில்லை. எத்தனை தடவைகள் கேட்டாலும் ஜானகியின் உள்ளத்தைக் கவரும் அந்தக் குரல் என் உள்ளத்தைத் திருடத் தயங்குவதில்லை. அவ்விதம் என் உள்ளத்தைத் திருடிவிடும் இந்தக் குரலுக்கும் என்றுமே என் உள்ளத்திலிருந்தும் விடுதலை கிடையாது. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். உங்கள் உள்ளங்களையும் திருடிவிடுமிந்தப் பாடல். அதன்பின் உங்கள் உள்ளங்களிலிருந்தும் என்றுமே இந்தப் பாடலுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.
Last edited by esvee; 14th June 2014 at 11:22 AM.
-
14th June 2014, 11:14 AM
#198
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணாஜி,
இடைக்காலப்பாடல்களை மழையாகப் பொழிந்திருக்கிறீர்கள். தங்கள் நினைவாற்றல் அசரவைக்கிறது. எழுபதுகளின் மத்தியில் எம்.பி.சீனிவாசனின் இசையில் வந்த அந்தரங்கம் போலவே பட்டாம்பூச்சி, புதுவெள்ளம் போன்ற படங்களின் பாடல்களையும் அலசுங்கள். புதுவெள்ளம் படத்தில் வரும் 'துளி துளி துளி இது மழைத்துளி', மற்றும் 'நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி' பாடல்கள் மிகவும் பிடிக்கும். கன்னட மஞ்சுளாவுக்கு ஏற்றவாறு பாடியிருப்பார் சுசீலா.
-
14th June 2014, 11:18 AM
#199
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
கோ,
ஓஹோ! ஓஹோஹோ!
நமக்கு வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்....ஆனால் வாய்தான்.....

வாங்கைய்யா (ஓய்வு பெற்ற) வாத்யாரய்யா, என்னை தொடர்ந்து ஒருவர் அவமான படுத்தி கொண்டுள்ளார்.நானும் பொறுத்து, பயந்து ,பம்மி ,நடுங்கி கொண்டுள்ளேன்.வந்து தட்டி கேளுங்கள் இந்த அநீதியை.
-
14th June 2014, 11:21 AM
#200

Originally Posted by
mr_karthik
டியர் கிருஷ்ணாஜி,
இடைக்காலப்பாடல்களை மழையாகப் பொழிந்திருக்கிறீர்கள். தங்கள் நினைவாற்றல் அசரவைக்கிறது. எழுபதுகளின் மத்தியில் எம்.பி.சீனிவாசனின் இசையில் வந்த அந்தரங்கம் போலவே பட்டாம்பூச்சி, புதுவெள்ளம் போன்ற படங்களின் பாடல்களையும் அலசுங்கள். புதுவெள்ளம் படத்தில் வரும் 'துளி துளி துளி இது மழைத்துளி', மற்றும் 'நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி' பாடல்கள் மிகவும் பிடிக்கும். கன்னட மஞ்சுளாவுக்கு ஏற்றவாறு பாடியிருப்பார் சுசீலா.
இப்போது தான் கம்ப்யூட்டர் ஆன் செய்தேன்
தாய் வீடுக்கு (NT thread) சென்று விட்டு இங்கு வந்தால் சங்கீத வகுப்பே நடந்து கொண்டு இருக்கிறது
கார்த்திக் சார் தங்கள் பாராட்டு அனைத்தும் வாசுவிற்கு (பரந்தாமனுக்கு)
எல்லோர்ருக்கும் காலை வணக்கம்
சிந்து பைரவி பற்றிய தொகுப்பு மிக அருமை
(ஆரோகணம் "ச ரி2 க2 ம1 க2 ப த1 ந2 ச "
அவரோகணம் "ந2 த1 ப ம1 க2 ரி1 ச ந2 ச "
ஜன்ய ராகம் of மேளகர்த ராகம் நாடகப்ரிய
சரியா கோபால் சார் )
தலை வாசு வின் நௌஷத் இசையில் வெளிவந்த பாடல் 1970 கால கட்டத்தில் கேட்டது நினைவை தூண்டி விட்டார்
அப்போது கரவன் பிந்துவின் "பியது அப்து ஆஜா" பாடலை அடிக்கடி முமுணுது கொண்டு இருப்பேன். என் தந்தையார் அவர்கள் இந்த பாடலை பற்றி குறிப்பிட்டு "அதெல்லாம் கிடக்கட்டும். நௌஷத் பாடலை கேள் " என்று எனக்கு நௌஷத் பற்றி ஒரு ஸ்மால் இன்ட்ரோ கொடுத்தார் தந்தை மகனுக்கு ஆற்ரீய கடமை
Bookmarks