-
23rd June 2014, 03:29 PM
#11
Junior Member
Seasoned Hubber
கோபால் :
உங்கள் தரமான பதிவுகளை கண்டு வியக்கும் பலரில் நானும் ஒருவன் - உங்களுக்கு படித்த படங்களை அலசும்போது உங்கள் involvement 100% இருப்பதை உணர முடிகின்றது - உங்கள் பதிவுகளை அனுபவித்து படிக்க வேண்டும் - ஒரே மூச்சில் படிக்க கூடாது - உண்மையான சுவையை அனுபவிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒவ்வொரு பதிவுக்கும் 15 நாட்கள் கண்டிப்பாக ஒதுக்கியே ஆக வேண்டும் - திரி வேகமாக போகவேண்டும் என்பது நமது குறிக்கோள் அல்ல - தரமான பதிவுகள் இடம் பெற வேண்டும் என்பதுதான் நமது இலட்ச்சியமாக இருக்க வேண்டும் - இப்படி பட்ட எல்லோருக்கும் பொதுவான திரியில் time space இல்லாமல் சில பதிவுகள் வரத்தான் செய்யும் - அப்படி பதிவுகள் போடுபவர்களும் NT யை பூஜை செய்பவர்களே - அதற்காக நாம் பொறுமையை இழந்து விட கூடாது - எல்லோரும் உங்களை மாதிரியோ , முரளி மாதிரியோ , கார்த்திக் மாதிரியோ தான் இங்கு பதிவுகள் போட வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தால் இந்த திரியில் நபர்கள் தேவை இல்லை - ஒரு xerox machine போதும்
உங்கள் பதிவுகள் சில வற்றை படிக்கும் போது இமய மலையின் உச்சியில் இருப்பது போன்ற பெருமை - எப்படி பட்ட ஒரு மகான் வாழ்ந்த காலத்தில் இருந்தோம் என்ற நினைப்பு வருகின்றது - கர்வமாக உள்ளது - கூடவே இவரை எவ்வளவு பேர்கள் சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை என்ற வருத்தமும் வருகின்றது
மற்ற சில பதிவுகள் மூலம் திரியை கழுவி விடும் வேலையை கொடுத்து விடுகிண்டீர்கள் - ஏன் இந்த two extremes ?? இந்த திரி வெறும் அகலில் ஏற்றும் திரி அல்ல - அண்ணாமலை தீபம் - பல மயில்களுக்கும் தள்ளி இருப்பவர்களுக்கும் தரிசனம் கொடுக்கும் தீபம் - நீங்கள் யாரையும் திருப்பி கூப்பிட வேண்டிய தேவையே இல்லை - உங்கள் பதிவுகளில் consistency மட்டும் இருந்தால் , bio -break கூட யாரும் எடுத்து கொள்ள மாட்டார்கள் - இந்த திரியை விட்டு சென்றவர்கள் இன்னும் யாரவது வரவில்லை என்றால் உங்கள் அருமையான பதிவுகளை இன்னும் படித்து முடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்
சுமாராக , சுமாரான பதிவுகள் மட்டுமே போடுபவர்கள் இந்த திரியில் இல்லை என்றால் எல்லா சுவைகளும் நிறைந்த திரியாக இது இருக்க முடியாது - அப்படி பட்ட பதிவுகள் வரவில்லை என்றால் உங்கள் பதிவுகள் அண்ணாமலை தீபமாக இன்று சுடர் விட்டு கொண்டிருக்கவும் முடியாது . TMS , ப.சுசீலா ஒரு கால கட்டத்தில் bath room singers தான் - TMS இன் சுய சரிதத்தில் அவர் railway station இல் நின்று கொண்டு பாடுவாராம் , படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்காக - பாத்ரூம் singers , stage singers ஆக அதிக நாட்கள் ஆகவில்லை - it was question of time
உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இவ்வளவு தான் - மூர்க்கமான பதிவுகள் என்று எதையுமே நினைக்காதீர்கள் - அதுவும் ஒரு வகையான பக்தி தான் - give constructive criticism - உங்கள் வார்த்தைகளில் ஒரு கௌதம புத்தரை பார்க்க விரும்புகிறோம் - எங்கள் ஆசை நிறைவேறுமா ?
உங்கள் "கெளரவம் " பாதித்ததாக சொன்னீர்கள் - நீங்கள் சொன்ன வந்தவைகளை எழுதுங்கள் - படிக்க என்றுமே காத்திருப்போம்
-
23rd June 2014 03:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks