Page 352 of 401 FirstFirst ... 252302342350351352353354362 ... LastLast
Results 3,511 to 3,520 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3511
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ravi sir
    கர்ணனை கண் முன் கொண்டு நிறுத்து விட்டீர்கள்

    பந்துலுவின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்று

    1964 ரிலீஸ் அப்ப 3 வயசு அதனாலே நினவு இல்லை

    இந்த படத்தை பார்த்தது 1978 rerelease இல் தான் சார்

    காத்து கிடந்தேன் 1969இல் இருந்து 9 ஆண்டுகள்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3512
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுரை வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து எட்டிப் பார்த்தால் தேவி தியேட்டர் தெரியும்.. அதுவும் வியாழக்கிழமை காலை பார்ப்பதென்றால் கொஞ்சம் சந்தோஷம்..(பள்ளி விடுமுறையின் போது)

    ஏனெனில் வெள்ளி வெள்ளி படம் மாறும்..போஸ்டர் அவ்வளவு தெளிவாய்த் தெரியாது..கொஞ்சம் தூரம் தான்..இருப்பினும் கலர் பார்த்து படம் மாறுகிறது எனத் தெரிந்தவுடன் டபக் கென்று வாசல் வழியாகச் சென்று தியேட்டர் அருகில் சென்று பார்த்து வருவேன்..

    அப்படி ஒரு நாள் பார்த்த போது ந.தி யின் படம் தான் வெள்ளிக் கிழமை.. இனிமையான பாடல்கள் கொண்டது என ஒவ்வொரு பாடலில் இருந்தும் ஒரு வரி போட்டு இருந்தார்கள்..

    வெள்ளிக் கிழமை ஈவ்னிங் ஷோவே போய்விட்டேன்(பத்தாம் கிளாஸ் என்பதால் தனியாகப் போக ப் பெர்மிஷன்.. சினிமாக்கு 90 காசு முறுக்குக்கு 10 காசு).. படம் ந.தியின் ப.வரிசைப் படம் தான்.. படித்தால் மட்டும் போதுமா..

    ஓ.. சிலோன் ரேடியா உபயத்தில் பாட்லகள் எல்லாம் ஏற்கெனவே எனக்குத் தெரிந்திருக்க திரையில் எப்படி இருக்கும் என ஆர்வம் ஆர்வம் ஆர்வம்

    ஓஹோ ஹோஹோ மனிதர்களே
    ஓடுவதெங்கே சொல்லுங்கள்
    உண்மையை வாங்கிப் பொய்மையை விட்டு
    உருப்பட வாருங்கள்

    என ந.தி குதிரையில் உற்சாகமாக வருவதாகட்டும்..அண்ணன் பாலாஜியிடம் காட்டும் பாசமாகட்டும்..ஓஹோ..

    அதுவும் பாலாஜிக்குப் படித்த பெண்ணைப் பார்ப்பதற்காக அண்ணனிடமே ட்ரெய்னிங்க் எடுத்துக் கொள்ளும் அழகு..அதையே ராஜசுலோசனா (?) விடம் பேசும் பாங்கு.. நன்றாக இருக்கும்.. எஸ்வி ரங்காராவ் பெண்ணின் அப்பா மிடுக்கு தான்..

    அதுபோல் குடத்திலிட்ட சற்றே பூசின குண்டு விளக்காக பாந்தமாய் சாவித்திரி..தம்பிக்குப் பொண் பார்க்கப் போய் பாலாஜி ஆசைப்படுவது கண்டு கொஞ்சம் உள்ளம் கொதிக்கத் தான் செய்தது.. பிறகு பாலாஜி கடிதம் எழுதி சாவித்திரி வீட்டாரையும், எஸ்விரங்காராவ் வீட்டாரையும் கலைத்து..தான் விரும்பியபடி சாவித்திரியை மனம்புரிய ந.தி படித்த பெண்ணை க் கல்யாணம் செய்து கொள்வது சற்றே பகீர் என வயிற்றைக் கலக்க..

    அண்ணியிடம் வெகுமரியாதை.. உங்க பேரைச் சொல்ல மாட்டேன் ம் ஹீம்..உங்க பேர் பழம்.. சாவித்திரி சிரித்து ஓ..சீத்தாப் பழமா..ஆமாம்..என நெளியும் தன்மை..

    கல்யாணம் செய்த பெண் படிப்பில்லை என ஒதுக்குவது கண்டு போராடி பின் சீறிப் பாடும் பாட்டு

    நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
    காதலெனும் ஆசையில்லா பொம்மையும் இல்லை

    இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்
    துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்

    காட்டு மானை வேட்டையாடக் கலங்கவில்லையே
    இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே

    என ஏங்கும் பாட்லில் அற்புத முகபாவங்கள்.. ஒன்றித் தான் பார்த்தேன்..

    இதற்குமுன்னால் வரும் பாடலில் கறுப்புக் கண்ணாடி முழியும் முழியுமாய் பாலாஜி..

    நல்லவன் எனக்கு நானே நல்லவ்ன
    சொல்லிலும் செயலிலும் நல்லவன்

    என ஆரம்பிக்க

    உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை
    ஊருக்குத் தீமை செய்தவனில்லை வல்லவன் ஆயினும் நல்லவன்

    என குதூகலமாய்க் குழந்தையாய் ந.தியின் நடிப்பு இன்னுமொரு பிரமிப்பு..

    அண்ணன் செய்த வேலை எனத் தெரிந்த பின் பதறும் பதற்றம்..அன்னையிடம் கேட்க வேண்டாம் என மன்றாடும் தன்மை என நல்லாவே இருக்கும்

    கண்ணாம்பா.. மூத்தவன் இப்படிப் பண்ணி விட்டானே என உருகும் காரக்டர்..இளைய பிள்ளை வாடுவதையும் பார்த்து நோகும் நடிப்பு..

    அழகாக ஸ்ருதி குலையாமல் சென்று கொண்டிருக்கும் கதையில் க்ளைமாக்ஸ் மட்டும் எனக்கு உடன்பாடில்லை..சோகமாக முடிக்க வேண்டிய அவசியமே இல்லை.. அண்ணனின் கோழைத்தனத்தைத் தான் போக்குவதற்கு ந.தி முயற்சிக்கிறார்..அது வெற்றி அடைவது போல் முடித்திருக்கலாம்..

    அனாவசியமாய்ச் சண்டையில் துப்பாக்கி வெடிக்க பழி ந.தி மேல் விழ..கடைசியில் யார் விரல் பட்டதுஎனத் தெரியவில்லைஎன சாவித்திரி சொல்வது..என்று முடிந்தது எனக்கு ஏனோ அந்தக்காலத்திலேயே பிடிக்கவில்லை..

    ஆனால் மொத்தத்தில் வெகு அழகான படம்..

    என்ன அந்தக் காலத்தில் பார்த்த இந்தப் படம் இதுவரை மறுபடி பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..பாடல்கள் பார்த்திருக்கிறேன் ஆயிரத்தெட்டு முறை..ம்ம்

    விட்ட பாடல்கள்

    வாழ்க்கை என்னும் கோமாளித்தனத்தில் உலகம் பிறந்தது
    உலகம் செய்த கோமாளித்தனத்தில்..என்னமோ வரும்..

    அண்ணன் காட்டிய வழியம்மா..

    தண்ணிலவு தேயிறைக்க காளைமனம் ..பிடிக்க
    கன்னி மகள் நடைபயின்று சென்றாள்
    இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள் (இந்தப் படம் தானே)

    பாட்டுக்கள், ந.தி நடிப்பு என ஒரு நல்ல படம்..

  4. Likes KCSHEKAR, kalnayak liked this post
  5. #3513
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சம் கிடைத்த இடைவேளையில் இப்பொழுது எழுதியது இது..சுவாரஸ்யக் குறைவின் அதற்கு நான் தான் காரணம்..

  6. #3514
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் :

    உங்கள் தரமான பதிவுகளை கண்டு வியக்கும் பலரில் நானும் ஒருவன் - உங்களுக்கு படித்த படங்களை அலசும்போது உங்கள் involvement 100% இருப்பதை உணர முடிகின்றது - உங்கள் பதிவுகளை அனுபவித்து படிக்க வேண்டும் - ஒரே மூச்சில் படிக்க கூடாது - உண்மையான சுவையை அனுபவிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒவ்வொரு பதிவுக்கும் 15 நாட்கள் கண்டிப்பாக ஒதுக்கியே ஆக வேண்டும் - திரி வேகமாக போகவேண்டும் என்பது நமது குறிக்கோள் அல்ல - தரமான பதிவுகள் இடம் பெற வேண்டும் என்பதுதான் நமது இலட்ச்சியமாக இருக்க வேண்டும் - இப்படி பட்ட எல்லோருக்கும் பொதுவான திரியில் time space இல்லாமல் சில பதிவுகள் வரத்தான் செய்யும் - அப்படி பதிவுகள் போடுபவர்களும் NT யை பூஜை செய்பவர்களே - அதற்காக நாம் பொறுமையை இழந்து விட கூடாது - எல்லோரும் உங்களை மாதிரியோ , முரளி மாதிரியோ , கார்த்திக் மாதிரியோ தான் இங்கு பதிவுகள் போட வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தால் இந்த திரியில் நபர்கள் தேவை இல்லை - ஒரு xerox machine போதும்

    உங்கள் பதிவுகள் சில வற்றை படிக்கும் போது இமய மலையின் உச்சியில் இருப்பது போன்ற பெருமை - எப்படி பட்ட ஒரு மகான் வாழ்ந்த காலத்தில் இருந்தோம் என்ற நினைப்பு வருகின்றது - கர்வமாக உள்ளது - கூடவே இவரை எவ்வளவு பேர்கள் சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை என்ற வருத்தமும் வருகின்றது

    மற்ற சில பதிவுகள் மூலம் திரியை கழுவி விடும் வேலையை கொடுத்து விடுகிண்டீர்கள் - ஏன் இந்த two extremes ?? இந்த திரி வெறும் அகலில் ஏற்றும் திரி அல்ல - அண்ணாமலை தீபம் - பல மயில்களுக்கும் தள்ளி இருப்பவர்களுக்கும் தரிசனம் கொடுக்கும் தீபம் - நீங்கள் யாரையும் திருப்பி கூப்பிட வேண்டிய தேவையே இல்லை - உங்கள் பதிவுகளில் consistency மட்டும் இருந்தால் , bio -break கூட யாரும் எடுத்து கொள்ள மாட்டார்கள் - இந்த திரியை விட்டு சென்றவர்கள் இன்னும் யாரவது வரவில்லை என்றால் உங்கள் அருமையான பதிவுகளை இன்னும் படித்து முடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்

    சுமாராக , சுமாரான பதிவுகள் மட்டுமே போடுபவர்கள் இந்த திரியில் இல்லை என்றால் எல்லா சுவைகளும் நிறைந்த திரியாக இது இருக்க முடியாது - அப்படி பட்ட பதிவுகள் வரவில்லை என்றால் உங்கள் பதிவுகள் அண்ணாமலை தீபமாக இன்று சுடர் விட்டு கொண்டிருக்கவும் முடியாது . TMS , ப.சுசீலா ஒரு கால கட்டத்தில் bath room singers தான் - TMS இன் சுய சரிதத்தில் அவர் railway station இல் நின்று கொண்டு பாடுவாராம் , படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்காக - பாத்ரூம் singers , stage singers ஆக அதிக நாட்கள் ஆகவில்லை - it was question of time

    உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இவ்வளவு தான் - மூர்க்கமான பதிவுகள் என்று எதையுமே நினைக்காதீர்கள் - அதுவும் ஒரு வகையான பக்தி தான் - give constructive criticism - உங்கள் வார்த்தைகளில் ஒரு கௌதம புத்தரை பார்க்க விரும்புகிறோம் - எங்கள் ஆசை நிறைவேறுமா ?

    உங்கள் "கெளரவம் " பாதித்ததாக சொன்னீர்கள் - நீங்கள் சொன்ன வந்தவைகளை எழுதுங்கள் - படிக்க என்றுமே காத்திருப்போம்

  7. #3515
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கொஞ்சம் கிடைத்த இடைவேளையில் இப்பொழுது எழுதியது இது..சுவாரஸ்யக் குறைவின் அதற்கு நான் தான் காரணம்..
    யானை படுத்தாலும் குதிரை மட்டம்தான் சின்னக்கண்ணன் சார்

  8. Likes kalnayak, chinnakkannan liked this post
  9. #3516
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள கார்த்திக்

    உங்கள் பதிவுகளில் மனத்தை பறிகொடுத்தவர்களில் நானும் ஒருவன் - நீங்கள் என்னால் தான் பதிவுகள் இங்கு போடுவதில்லை என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நீங்கள் எல்லோரும் founding fathers of this great thread - இதை யாரும் மறுக்கவோ , மறக்கவோ முடியாது - மூன்று "R " கள் தான் இந்த திரியை தூக்கி பிடித்து கொண்டுருக்கின்றன என்று யாராவது சொன்னால் அது மிகவும் தவறு - அப்படி நான் என்றுமே நினைத்தது இல்லை - கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றை மிகவும் சர்வ சாதாரணமாக எழுதி விட்டீர்கள் . தவறாக ஒரு பதிவு வருமானால் அதை யார் வேண்டுமானாலும் ( வார்த்தைகளில் கண்ணியம் தவறாமல் ) சுட்டி காட்டலாம் என்பது என் தாழ்மையான கருத்து - இவ்வளவு பதிவுகள் போட்டவர்களுக்குத்தான் அந்த உரிமை தரப்படும் என்றால் சில தவறுகள் திருத்தபடாமலேயே நின்று விடும்

    எனக்கு ஈகோ இருப்பதாக இன்னும் நீங்கள் நினைப்பது தவறு - உங்களுக்கு என்னுடைய இந்த பதிவை படித்தவுடன் ஈகோ இன்னும் தொடரும் என்று நான் நினைப்பதும் தவறு

    " மன்னிப்பு கேட்பதாக இருந்தால் மட்டுமே இந்த திரிக்கு மீண்டும் வருவேன் " என்று நீங்கள் இன்னும் நினைத்து கொண்டிருந்தால் , நான் தினமும் ஒரு மன்னிப்பு பதிவை போடுவதற்கு தயாராக இருக்கிறேன்

    அன்புடன்

  10. Thanks kalnayak thanked for this post
  11. #3517
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ravi sir
    கர்ணனை கண் முன் கொண்டு நிறுத்து விட்டீர்கள்

    பந்துலுவின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்று

    1964 ரிலீஸ் அப்ப 3 வயசு அதனாலே நினவு இல்லை

    இந்த படத்தை பார்த்தது 1978 rerelease இல் தான் சார்

    காத்து கிடந்தேன் 1969இல் இருந்து 9 ஆண்டுகள்
    அன்புள்ள gk - உங்களுடன் அதிகமாக உரையாடியதில்லை - நீங்கள் என் பதிவுகளை படிப்பதுடன் நிறுத்தாமல் , பாராட்டவும் செய்கிண்டீர்கள் - மிகவும் நன்றி - மதுர கானம் உங்கள் கை வண்ணத்தில் வீறு நடை போடுகின்றது - கலக்குகிண்டீர்கள் - இரண்டு காரணங்களால் உங்கள் பதிவுகளை மிகவும் விருப்பத்துடன் பார்க்கிறேன் - ஒன்று தமிழ் உங்களிடம் விளையாடுவதால் , இரண்டாவது எங்கள் எல்லோரையும் பாசம் என்ற கயிற்றினால் கட்டி போடும் வாசுவின் உற்ற நண்பர் நீங்கள் என்பதை அறிந்ததினால்

  12. #3518
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ravi. We are now in the 12th thread on NT. When we review patiently all the earlier 11 threads, we can perceive the painstaking efforts put forth by all these stalwarts in nourishing and bringing up the threads up to this level. In fact, I am an ardent fan of NT but except seeing and enjoying his movies I did nothing till I happened to enter in any one of these threads by chance. Then it changed my times! I could get so many data and information with meticulous and bold analyses.. all towards disseminating the name and fame of NT, the greatest. Having gone through each and every thread, I felt my place nothing compared to these indelible contributions from these thespians of writing, whom I have never seen so far!Each one had paraded their writing skills with originality and individuality and they were able to furnish us with a first hand compendium of NT related matters. However, the entries of freshers are inevitable even as the contributions from the senior doyens are indispensable. Now it is time we forgot our differences and resume to our motto of disseminating NT's achievements. 'United we stand, divided we fall' is a mere outdated saying on the premise that 'divide and rule' is made easier. Now, I fear, the paradigm shift is 'United we fall (due to ego and intellectual controversies) and divided we stand (on our own leg to prove what we are up to)'! Even for a healthy growth of a crop it needs to be separated from the seed bed after it reaches the stage of seedling and transplanted to enjoy its own environment of sun, air and water. Ravi sir, Raghul thambi...Subramaniam Ramajeyam.. CK..Kalnayak, Sivaa and RKS.. I can share as we are novices sailing in the same boat. But for senior stalwarts, doyens and thespians....like Gopal Sir, Karthik sir, Raghavendra sir, Murali Srinivas sir, Sharadha madam, Prabhu Ram sir, Joe sir, Parthasarathy sir, Pammalar sir, Vasu sir. they know by themselves and they will come back to guide us! I am optimistic.
    Last edited by sivajisenthil; 23rd June 2014 at 08:19 PM.

  13. #3519
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    கோபால் :



    மற்ற சில பதிவுகள் மூலம் திரியை கழுவி விடும் வேலையை கொடுத்து விடுகிண்டீர்கள் - ஏன் இந்த two extremes ?? இந்த திரி வெறும் அகலில் ஏற்றும் திரி அல்ல - அண்ணாமலை தீபம் - பல மயில்களுக்கும் தள்ளி இருப்பவர்களுக்கும் தரிசனம் கொடுக்கும் தீபம் - நீங்கள் யாரையும் திருப்பி கூப்பிட வேண்டிய தேவையே இல்லை - உங்கள் பதிவுகளில் consistency மட்டும் இருந்தால் , bio -break கூட யாரும் எடுத்து கொள்ள மாட்டார்கள் - இந்த திரியை விட்டு சென்றவர்கள் இன்னும் யாரவது வரவில்லை என்றால் உங்கள் அருமையான பதிவுகளை இன்னும் படித்து முடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்
    "மையில்கள் " என்று படிக்கவும்

  14. #3520
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Karnan- 1964

    கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.

    அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.

    இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.

    முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...

    இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.

    கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.

    கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.

    ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.

    மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.

    குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.

    சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.

    வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
    தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.

    துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.

    தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.

    சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.

    எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .

    இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.

    இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.

    இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.

    இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Likes KCSHEKAR, kalnayak, eehaiupehazij liked this post

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •