-
23rd June 2014, 11:14 PM
#2911
Junior Member
Diamond Hubber
-
23rd June 2014 11:14 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2014, 11:14 PM
#2912
Junior Member
Diamond Hubber
ULAIKUM KARANGAL TELECASTED ON 21.06.14 SUNLIFE CHANNEL 7.00 PM
-
23rd June 2014, 11:20 PM
#2913
Junior Member
Diamond Hubber
Engaveetupillai telecasted on sunday morning 11.00 am in sunlife channel
Last edited by Yukesh Babu; 23rd June 2014 at 11:27 PM.
-
24th June 2014, 12:19 AM
#2914
Junior Member
Diamond Hubber
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார் !

Originally Posted by
saileshbasu
-
24th June 2014, 12:20 AM
#2915
Junior Member
Diamond Hubber
இருந்தாலும் மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல
வேண்டும்....!!

Originally Posted by
esvee
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2014, 12:27 AM
#2916
Junior Member
Diamond Hubber
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....

Originally Posted by
esvee
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2014, 12:30 AM
#2917
Junior Member
Diamond Hubber
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட*
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*
காலமகள் உன்னைத் தாலாட்ட*
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

Originally Posted by
esvee
THANTHI TV
-
24th June 2014, 12:42 AM
#2918
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... இந்த ஒரு பெயருக்கு கிடைத்த முக்கியத்துவமும், புகழும், மக்கள் செல்வாக்கும் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை.. கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் கனவுத் தொழிற்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எப்போதும் அடுத்தவர் புகழைப் பார்த்து, தாங்களும் அதே போல வர வேண்டும் என்ற ஆர்வத்தில் காப்பியடிக்க ஆரம்பிக்கிறார்கள்... அடைமொழியைக் கூட அதே மாதிரி சூட்டிக் கொள்ளத் தலைப்படுகிறார்கள்.
புரட்சித் தலைவர் புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர், பின்னர் மக்கள் திலகமானார். கொஞ்ச நாளில் அந்தப் பட்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி அமைந்தது எம்ஜிஆருக்குத் தரப்பட்ட புரட்சித் தலைவர் பட்டம். அவர் இந்த மண்ணுலகிலிருந்து மறையும் வரை அதுவே அவரது நிரந்தரப் பெயராயிற்று (நல்லவேளை, நானே சூப்பர் ஸ்டார் என்று இன்றைய நடிகர்கள் போட்டுக் கொள்வதைப் போல, இந்தப் புரட்சித் தலைவரை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை!
புரட்சிக் கலைஞர் எண்பதுகளில் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளைக் கண்ட விஜயகாந்துக்கு எம்ஜிஆரையும் பிடிக்கும், கலைஞர் கருணாநிதியையும் பிடிக்கும். பார்த்தார்... எம்ஜிஆரின் புரட்சியையும், கருணாநிதியின் கலைஞரையும் உருவி புரட்சிக் கலைஞர் ஆனார். கேப்டன் பிரபாகரனில் நடித்ததன் மூலம் கேப்டன் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னாலில் அவரது புரட்சிக் கலைஞர் பட்டம் காணாமல் போய், கேப்டன் பட்டம் நிலைத்துவிட்டது. இப்போது அதையும் எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
புரட்சி நாயகன் இன்று ஏதோ ஒரு கட்சியின் (அடிக்கடி கட்சிப் பெயரை மாத்திட்டதால நெசமாவே பேர் ஞாபகமில்லீங்க) தலைவராக இருக்கும் கார்த்திக்கை கொஞ்ச நாள் புரட்சி நாயகன் என்று அடைமொழி போட்டு அழைத்து வந்தார்கள். இப்போது அந்த அடைமொழியை அவரும் மறந்துவிட்டார், சினிமாவும் அவரை மறந்துவிட்டது. இடையில் கொஞ்ச காலம் மறைந்த முரளிக்கும் இந்த அடைமொழியைப் பயன்படுத்தினார்கள். நியாயமாக அவரை எவர்கிரீன் மாணவன் என்றுதான் அழைத்திருக்க வேண்டும்
புரட்சித் தளபதி இந்தப் பட்டத்தை மதுரை ரசிகர்கள் தனக்குக் கொடுத்ததாகச் சொல்லி சில படங்களில் பயன்படுத்தினார் விஷால். ஆனால் அப்படி அவர் போட்டுக் கொண்ட எந்தப் படமும் ஓடவில்லை. பின்னர் ஒரு நாள் சத்தமின்றி புரட்சி, தளபதிகளையெல்லாம் கட் பண்ணிவிட்டு, வெறும் நடிகரானார் விஷால். ஆச்சர்யம்... அடுத்த மூன்று படங்களிலும் நல்ல பெயர் கிடைத்தது அவருக்கு!
புரட்சித் தமிழன் இது சத்யராஜுக்கான அடைமொழி. தமிழர்களிடையே அவர் என்ன புரட்சி செய்தார், அட இந்த அடைமொழிக்கும் சினிமாவுக்கும்தான் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதெல்லாம், மேடை கிடைத்தால் சினிமாவையும் முன்னணி நடிகர்களையும் கலாய்க்கும் சத்யராஜே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.
புரட்சி இயக்குநர் இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா... நம்ம ஹீரோ விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன். அவர் அப்போல்லாம் தொடர்ந்து 'சட்ட'ப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். சட்டம் ஒரு இருட்டறையில் ஆரம்பித்து ஒரு டஜன் சட்டப் படங்கள் எடுத்து, பார்ப்பவர் கண்விழிகளைப் பிதுங்க வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. சட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிட்டதாக நினைத்துக் கொண்டோ என்னவோ, புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியை அவர் எடுத்துக் கொண்டார்.
புரட்சித் திலகம் இந்த டைட்டிலுக்குதான் இப்போது மல்லுக் கட்டு ஆரம்பித்துள்ளது. இந்த அடைமொழியை முதலில் வைத்துக் கொண்டவர் இயக்குநர் நடிகர கே பாக்யராஜ். அவர் அப்போது எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியும் நடத்தி வந்தார். புரட்சித் தலைவரிலிருந்து பாதியையும், மக்கள் திலகத்திலிருந்து மீதியையும் எடுத்து இந்த அடைமொழியை சூடிக் கொண்டார். என் கலையுலக வாரிசு என எம்ஜிஆரே அறிவித்திருந்ததால், இந்த அடைமொழி பெரிதாக யாரையும் உறுத்தவில்லை. இப்போது அந்த அடைமொழியைத்தான் சரத்குமார் சூடிக் கொண்டிருக்கிறார்.
புரட்சித் தலைவி... சினிமாவில் இருந்த வரை ஜெயலலிதாவுக்கு திரையுலகம் வழங்கிய பெயர் கலைச்செல்வி. அவர் அரசியலுக்கு வந்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கட்சி நிர்வாகிகள் கொடுத்த அடைமொழி புரட்சித் தலைவி. சொல்லப் போனால் இவர் புரட்சித் தலைவி -ஆன பிறகுதான் சினிமாவில் 'புரட்சி' என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கே முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது அதை மீறி புரட்சித் திலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.. பார்க்கலாம்!
http://tamil.oneindia.in/movies/news...rs-200941.html
-
24th June 2014, 05:07 AM
#2919
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் அவருடைய வெற்றிக்கு முக்கியமானவர்களில் இருவரின் பிறந்த நாள் இன்று .24.6.2014.
கவியரசர் - கண்ணதாசன்
மெல்லிசை மன்னர் - எம்.எஸ்.விஸ்வநாதன் .
கவியரசரின் பாடலுக்கு மெல்லிசை மன்னரின் இசைக்கு மக்கள் திலகம் உயிர் கொடுத்து திரை உலகை இன்றும் ஆண்டு கொண்டு வருகிறார் என்றால் அதற்கு இவர்களின் கூட்டணி வெற்றியே சாட்சி .
மதுரை வீரனில் துவங்கிய கண்ணதாசனின் வசனங்கள் நாடோடி மன்னனில் உச்சத்தை தொட்டது . 1958ல் கவியரசரின்
உரையாடல்கள் 1977ல் நிஜமாக்கியது .நாடோடி மன்னன் நாடாளும் தகுதி பெற்ற பொற்காலம் .இவரின் பாடல்கள் அழியாத கோலங்கள் .மக்கள் திலகத்தை தன்னுடைய பாடல்களில் புகழ்ந்து எழுதிய வைர வரிகள் மறக்கமுடியுமா ? ;
சில பாடல் வரிகள்
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ....
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் உலக பள்ளி வாழ்க்கையிலே .....
கட்டான கட்டழகு கண்ணா ...உன்னை காணாத கண்ணும் ஒரு ...
தர்மம் தலை காக்கும் .. தக்க சமயத்தில் உயிர் ....
பேசுவது கிளியா ...இல்லை பெண்ணரசி மொழியா .....
கண்ணனுக்கு எத்தனை கோயிலோ ... அவன் தொட்டது பொன்னாகும் ..
ஒன்று எங்கள் ஜாதியே ...உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் ...
கல்யாண நாள் பார்க்க....... நாம் கையேடு கை சேர்த்து ....
சின்னவளை முகம் சிவந்தவளை ....நான் .சேர்த்து கொண்டேன் ....
சத்தியம் நீயே ... தர்ம தாயே ..குழந்தை வடிவே ....
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே ........
என்று பாடல்கள் பட்டியல் நீளும் . ரசிகர்கள் மனதில் கண்ணதாசனின் எல்லா பாடல்களும் என்றென்றும் நினைவில் ஒலித்து கொண்டிருக்கும் என்பது உண்மை .
மெல்லிசை மன்னர் மக்கள் திலகத்தின் படங்கள் ஜெனோவா முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல படங்களுக்கு மேல்
இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்த படைத்தவர் . மெல்லிசை மன்னரை அதிகம் வேலை வாங்கி , அமர்ந்து பல மெட்டுகளை
வாங்கி பாடல்களை வெற்றி பெற செய்த பெருமை மக்கள் திலகத்தை சேரும் .
1960களில் மற்ற தமிழ் படங்களில் மெல்லிசை மன்னர்களின் ஆதிக்கம் இருந்த நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மெல்லிசை மன்னர்களின் திறமைகளை தன்னுடைய படங்களில் மேலும் மிளிர செய்து மகத்தான வெற்றி கண்டார் . டைட்டில் இசை அமைப்பில்
மக்கள் திலகத்தின் படங்களுக்கு தனி முக்கியவத்துவம் தந்தவர் மெல்லிசை மன்னர் .பல புதுமைகளை திரை இசையில் தந்தவர் .
படகோட்டி [ மெல்லிசை மன்னர்கள் ]- மகாதேவி - மன்னாதி மன்னன் - பாசம் - பணத்தோட்டம் .
எங்க வீட்டு பிள்ளை
ஆனந்த ஜோதி
ஆயிரத்தில் ஒருவன்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பில் அட்டகாசமான டைட்டில் இடம் பெற்ற படங்கள் .
கலங்கரை விளக்கம்
அன்பே வா
நான் ஆணையிட்டால்
பறக்கும் பாவை
காவல்காரன்
குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு - ரகசிய போலீஸ் 115- எங்கள் தங்கம் - ரிக்ஷாக்காரன் - ராமன் தேடிய சீதை -சிரித்து வாழவேண்டும் - இதயக்கனி - மீனவ நண்பன் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்னமும் ரசித்து கொண்டிருக்கும் [எதிர்காலத்திலும் ] மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் என்று
நினைவுகளில் கண்ணதாசனும் - விஸ்வநாதனும் [ராமமூர்த்தியும் ] என்றென்றும் வாழ்வார்கள் இன்று பிறந்த நாள் காணும்
இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மகிழ்வோமாக .
-
24th June 2014, 05:19 AM
#2920
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜியார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல .திறமை வாய்ந்த ஒரு இயக்குனர், எடிட்டர் , மற்றும் இசை துறையில் அனுபவம் பெற்ற வித்தகர் .
எம்ஜியார் ஒரு trend setter
எம்ஜியார் ஒரு creative நடிகர் .
அவருடைய படங்கள் 2014லும் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது
என்றால் அதற்கு முழு காரணம் எம்ஜியாரின் தனிப்பட்ட புகழும் அவரது நடிப்பும் .என்றால் மிகையல்ல .
நாடோடி மன்னன்
உலகம் சுற்றும் வாலிபன்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன
மூன்று படங்கள் அவரின் இயக்கத்தின் வெற்றிக்கு சான்று .
நாம் - என்தங்கை - அந்தமான் கைதி - மலைக்கள்ளன் போன்ற படங்களில் அவரது நடிப்பு short & sweet ஆக இருக்கும் . ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அளவிற்கு காந்தசக்தி கொண்ட மனிதர் எம்ஜியார் .
திருடாதே -1961 - ஒரு சமூக சீர் திருத்த படமாக வந்த எம்ஜியாரின் வசூல் படம் .
தொடர்ந்து தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - குடும்ப தலைவன்
பணத்தோட்டம் - தர்மம் தலைகாக்கும் - பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன்
பணக்காரகுடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா - போன்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற முதல் இந்திய நடிகர் எம்ஜியார் .
1967ல் குண்டடி பிறகு அவரது திரைப்பட செல்வாக்கு இமய புகழ் சென்றது .
காவல்காரன் -1967
குடியிருந்தகோயில் -1968
ஒளிவிளக்கு -1968
அடிமைப்பெண் -1969
நம்நாடு -1969
மாட்டுக்காரவேலன் -1970
ரிக்ஷாக்காரன் -1971
நல்ல நேரம் -1972
உலகம் சுற்றும் வாலிபன் -1973
உரிமைக்குரல் -1974
இதயக்கனி -1975
நீதிக்கு தலைவணங்கு -1976
மீனவ நண்பன் -1977
பல வெற்றி படங்கள் - வெள்ளிவிழா - நூறு நாட்கள் படங்கள் என்று ரசிகர்களுக்கு விருந்து தந்தவர் நம் மக்கள் திலகம் .
1950-1977
27 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் ,மாற்றத்திற்கும்
எம்ஜியார் படங்களும் காரணமாக இருந்தது .
தமிழ் சினிமாவிற்கு பல பெருமைகளை சேர்த்தவர் எம்ஜியார்
Bookmarks