Page 311 of 402 FirstFirst ... 211261301309310311312313321361 ... LastLast
Results 3,101 to 3,110 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #3101
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

    “ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

    மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

    “மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

    மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

    மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

    தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

    “வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

    அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

    ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

    கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

    நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

    “பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

    “கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

    “என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

    “ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

    “இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

    “கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

    “கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

    அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

    _ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.


    எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

    (மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)

    “மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

    நன்றி : மாலை மலர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3102
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    "மந்திரிகுமாரி'யின் மூலம், பிரபலமான கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தது எம்.ஜி.ஆர்., மட்டுமல்ல, வில்லனாக நடித்த எம்.என்.நம்பியாரும் தான். ஏற்கனவே, கதாநாயக அந்தஸ்தைப் பெற்று இருந்த எம்.ஜி.ஆர்., மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது, "மந்திரிகுமாரி'யின் மூலம்தான். நம்பியாரும் அவ்வாறே தலையை மொட்டை அடித்தும், அவர் ராஜகுருவாக நடித்ததையும் எப்படி மறக்க முடியும்?

    ஆக, மந்திரிகுமாரி மூலம் பலர், பிரபலமடைந்தனர் என்றால், அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ரிலீஸ் செய்யப்பட்ட தேதியிலிருந்து, அந்தப்படம் வசூலில் சாதனை படைத்தது எனலாம். இந்தப் படத்தின் பல பகுதிகள் எடுக்கப்படாமல் இருக்கும் போதே, எல்லீஸ்.ஆர்.டங்கன், ஏதோ அவசர வேலையின் காரணமாக அயல்நாடு சென்றுவிட, பாக்கி எல்லா வேலைகளையும் டி.ஆர்.சுந்தரம் தான் செய்தார். படம் சென்சாருக்குப் போன போது, சிறு பிரச்னைகள் தலைதூக்கின. அதையும் மிகவும் நன்றாக ஒழுங்குபடுத்தி, படத்தை ரிலீஸ் செய்தார் டி.ஆர்.சுந்தரம்.

  4. #3103
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கலைத்துறையிலே பெரிய வெற்றியைத் தந்த மந்திரிகுமாரி படம்

    என்னுடைய அனுபவத்தையே சொல்ல வேண் டுமேயானால், எல்லோரும் நாடகங்களை, ஓரங்க நாடகங் களை எழுதி வானொலிக்கு அனுப்பி, வானொலி நாடகமாக நடத்தப்பட்ட அந்தக் கால கட்டத்தில் 1940 என்று கருதுகிறேன் - அப்போது நான் குண்டலகேசி இலக்கியத்தை அடிப்படை யாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத் திருந்தேன். அது வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை.

    திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். ஆனால் வரும் வரும் என்று காத்திருந்து அது வராமலே நின்று விட்டது. அதற்குப் பிறகு அதை விரிவுபடுத்தி மந்திரி குமாரி என்ற பெயரில் நாடகமாக எழுதி, கே.என். ரத்தினம் என்ற நண்பருக்கு -அவருடைய நாடகக் குழுவிற்கு அதைத் தந்தேன். அவர்கள் அந்த நாடகத்தை குடந் தையிலே நடத்திய போது, அதைக் கண்ணுற்ற பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் அவர்கள், அந்த நாடகத்தைப் பார்த்து வியந்து - இந்தக் கதையை யார் எழுதியது என்று கேட்டு - அருகிலே இருந்த என்னுடைய அருமை நண்பர்கள் கா.மு. ஷெரீப், மருதகாசி போன்றவர்கள் எல்லாம், நான் எழுதியது என்று சொன்ன பிறகு, அவர்கள் என்னை அழைத்து இதை நாங்கள் படமாக ஆக்குகிறோம், தருவீர்களா என்று கேட்டார்கள்.

    ஒப்புக் கொண் டேன். அதுதான் எம்.ஜி.ஆர். நடித்த மந்திரிகுமாரி - இது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தப் படம் எவ்வளவு பெயர் பெற்றது, புகழ் பெற்றது, வசூலை அள்ளிக் கொடுத்தது என்பதெல்லாம் கலைத் துறையிலே உள்ள நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பார்த்த ரசிகர்களிலே பலருக்கும் நன்றாகத் தெரியும்.
    Courtesy - thiru mu.ka.

  5. #3104
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3105
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ][/QUOTE]

  7. #3106
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    [/QUOTE]

  8. #3107
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3108
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

    மக்கள் திலகம் திரியில் தாங்கள் கேட்டிருந்த தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் பற்றிய தகவல் .

    திரு பம்மலார் அவர்கள் இதுவரை தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் வெளியிடவில்லை .

    மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 இன்னும் வெளியாகவில்லை .விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் .

    அன்புடன்

    வினோத்

  10. Likes ainefal liked this post
  11. #3109
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

    மக்கள் திலகம் திரியில் தாங்கள் கேட்டிருந்த தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் பற்றிய தகவல் .

    திரு பம்மலார் அவர்கள் இதுவரை தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் வெளியிடவில்லை .

    மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 இன்னும் வெளியாகவில்லை .விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் .

    அன்புடன்

    வினோத்
    Thanks very much Vinod Sir for confirming that the info. [ albums are published by Mr.Pammalar as per seniority] which I received is incorrect.
    Last edited by saileshbasu; 26th June 2014 at 08:47 PM.

  12. #3110
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

    பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,
    .
    எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
    பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும் ..,
    .
    மிதி வண்டி வைத்திருந்தோம்.,
    .
    எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,
    .
    கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,
    .
    எல்லா வீடுகளிலும்
    முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,
    .
    வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
    .
    எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,
    .
    சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,
    .
    மழை நின்று நிதானமாக பொழியும் ,
    .
    சாராய கடைகள் இருந்தன.,ஆனால்
    இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,
    .
    தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,
    .
    வேலைக்கு போகாதவன்
    எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,
    .
    எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
    .
    வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,
    .
    சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,
    .
    முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,
    .
    பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,
    சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,
    .
    சுவாசிக்க காற்று இருந்தது.,
    .
    குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
    .
    தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
    அவர்களை கலாய்த்து கொண்டே
    நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
    .
    மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,
    .
    ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
    அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,
    .
    மூன்றாம் வகுப்பிலிருந்துமட்டுமே,ஆங்கிலம்.,
    .
    ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,
    .
    கடந்து தொலைந்து போனவை
    நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,
    நம்பிக்கைகளும்தான்.........!!!!!!!!!!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •