திரு கோபால் சார் இன் சங்கீத வகுப்பு பதிவு மிக அருமை எளிமை இனிமை
அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ள மிக உபயோகமான பதிவு
காபி ராகத்தின் மருத்தவ குணங்கள்
Sick patients get ove their depression, anxiety. Reduces absent mindednes
எல்லா நேரங்களிலும் பாடபட கூடிய ராகம்
மேலும் சில பாடல்கள் நான் ரசித்தது
செம்பருத்தி படத்தில் வரும் பானுமதி நீண்ட நாள் கழித்து பாடிய பாடல்
மனோ ஜானகி உடன்
"செம்பருத்தி பூவு சித்திரத்தை போலே "
பிரியா படத்தில் "என்னுயிர் நீ தானே " பிலு ராகத்தின் ஜாடையில்
ஆட்டோ ராஜா படத்தில் வரும் இளையராஜா ஜானகி குரல்களில்
"சந்தத்தில் பாடாத கவிதை "
தளபதி படத்தில் வரும் "சின்ன தாயவள் "
துணை இருப்பாள் மீனாட்சி படத்தில் வரும் சுசீலாவின் குரலில்
"சுகமோ ஆயிரம் " (திரு வாசு சார் இந்த பாடலையும் ஒரு நாள் நீங்கள்
சிறப்பு ஆய்வு செய்ய வேண்டுகிறான் )
(ஆனா எல்லாத்துக்கும் காரணம் அந்த காதல் மன்னன் தான். எங்க போனாலும் இந்த ஆளு சும்மா இருக்க மாட்டாரா? அங்க ஒன்ன பிக்-அப் பண்ணிக்கிட்டு அப்புறம் இங்க ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு தானும் அவதிப்பட்டு, அந்த இரண்டையும் அழவைத்து. இதே வேலையா இந்த ஜெமினிக்கு. 'பார்த்தால் பசிதீரும்'ல சாவித்திரியை காதலிச்சிட்டு சௌகாரை கல்யாணம் பண்ணிப்பார். வழக்கம் போல மூவரும் அவஸ்தைப் படுவார்கள். அதுல சௌகார் ரெண்டாந்தாரம்.)
யுவர் ஆனர்,
காதல் மன்னன் ஜெமினியின் வக்கீலாக என் வாதங்களை வைக்க அனுமதிக்க வேண்டுகிறேன். அவர் காதல் மன்னன் பட்டம் பெற்றுவிட்டார் என்பதற்காக அவரையே குற்றம் சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன். இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலும், அவர் மீது எந்த குற்றமும் இல்லை. வழக்கு எண் 1. இரு கோடுகளாகட்டும், வழக்கு எண் 2. பார்த்தால் பசிதீருமாகட்டும் இரண்டிலுமே அவர், தன் முதல் மனைவி முறையே சௌகார் மற்றும் சாவித்திரி இறந்த பின்தான் (அதாவது இறந்ததாக மற்றவர்களால் சொல்லப்பட்ட பிறகுதான்) இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார்.
ஆக, இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்போது, இரண்டு கேஸ்களிலுமே அவர் மனைவியற்றவர். தனி ஆள். வாழ வேண்டிய வாலிபம் இன்னும் அவரிடம் மிச்சமிருக்கிறது. முதல்மனைவிகள் இப்படி திடீரென்று உயிரோடு வந்து நிற்பார்கள் என்று அவர் கண்டாரா?.
இதே போல முதல் மனைவி இறந்த பின் இன்னொரு பெண் மீது காதல் கொண்டதாக கொலாலம்பூர் கோர்ட்டில் நடந்த 'புதியபறவை' கேஸையும், முதல் மனைவி இறந்த பின் மற்றவர்களின் வற்புறுத்தலால் நடந்த இரண்டாவது திருமணம் பற்றி சென்னை கோர்ட்டில் நடந்த 'பாலும் பழமும்' கேஸையும் முன்மாதிரியாக கொண்டு, அவற்றுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் என் கட்சிக்காரர் ஜெமினி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய சிறப்புப் பதிவாக நீங்கள் பதிவிட்ட 'இரு கோடுகள்' படத்தில் இடம்பெற்ற படத்தின் உயிர்நாடிப்பாடலான 'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்' பாடல் பற்றிய உங்கள் விவரமான ஆய்வுக்கட்டுரையும், ஒவ்வொரு வரிக்கும் நீங்கள் தந்துள்ள விளக்கங்களும் அருமையோ அருமை.
அந்தப்பாடல் வரிகளைப்பற்றி, அதனுள் பொதிந்துள்ள அர்த்தங்கள் பற்றி சும்மா புட்டு, புட்டு வைத்துள்ளீர்கள். யாருக்கும் தெரியாத பாடலாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் தெரிந்த பாடலாக இருந்தாலும் சரி, உங்கள் கைபட்டால் அது அடையும் பிரகாசமே வேறுதான்.
சில சமயங்களில் நமக்குத் தெரியாமலே சில விஷயங்களில் நமக்கு பற்றில்லாமல் போவதுண்டு. மெல்லிசை மன்னரின் தீவிர, அதிதீவிர ரசிகனான எனக்கு, அவர் இசையமைத்து அவரும் சேர்ந்து பாடிய, பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த, (முத்தான முத்தல்லவோ படத்தில் வரும்) "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" பாடல் வந்த நாள் முதல் இந்த நாள் வரை எனக்குப்பிடிக்கவேயில்லை. என்ன காரணம் என்பது தெரியவில்லை.
கார்த்திக் சார் தரப்பு வாதங்களை வைத்துப் பார்க்கும் போது அந்த கணேசன் போன வழியைப் பின்பற்றித்தான் இந்த கணேசனும் போய் இருக்கிறார் என்று புலனாகிறது.
மேலும் இந்த ராமுவின் அப்பா புஷ்பலதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாமல் 'நிலவே என்னிடம் நெருங்காதே' என்று தன்னையே சுற்றிய கே.ஆர்.விஜயாவை நெருங்கவிடாமல் செய்ததாலும், 'கற்பகத்'தை உண்மையாய் மறக்க முடியாமல் தவித்து, பின் பல யோசனைகளுக்குப் பிறகு அமுதாவைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததை கருத்தில் கொண்டும் அந்த 'கணேச மூர்த்தி' எது செய்தாலும் அது தப்பே இல்லை என்பதால் அதை மனதிற்கொண்டு இந்த புதுக்கோட்டை கணேசனுக்கு மன்னிப்பு வழங்கி இனி 'நான் அவனில்லை' என்று அவர் சொல்லவே கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவரை மன்னித்து விடுதலை செய்கிறேன்.
நாட்டாமை தீர்ப்பு நல்ல தீர்ப்பா?
Last edited by vasudevan31355; 28th June 2014 at 12:31 PM.
என்னப்பா இது, ஒருத்தர் பாவம் ஆயுசு முழுக்க திரி பஞ்சாயத்து நாட்டாமையாகவே தொடர ,ஆளாளுக்கு கெளரவம் ரஜினிகாந்த் ரேஞ்சில் ,lawyer ,judge என்று கிளம்பினால் ,அந்த பிஞ்சு மனம் என்ன பாடு படும்?
Bookmarks