Page 126 of 400 FirstFirst ... 2676116124125126127128136176226 ... LastLast
Results 1,251 to 1,260 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1251
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு, கிருஷ்ணா, கார்த்திக், கோபால், வினோத் மற்றும் நண்பர்கள்
    ஒவ்வொருவரின் பங்களிப்பிலும் இத்திரியில் பல புதிய தகவல்கள் தமிழ்த் திரையுலக இசையைப் பொறுத்த வரையில் கிடைக்கின்றன. குறிப்பாக கிருஷ்ணாவிடம் இருக்கும் flow of information is simply amazing. கலக்குங்கள் கிருஷ்ணா.

    வாசு சார்
    Memories of Yester Years என்ற தலைப்பில் TFM Threadல் 1950 முதல் 60 வரை, 1970s, 1980s என்று decades வாரியாக தமிழ்த்திரைப்படப் பாடல்களைப் பற்றிய திரிகள் உள்ளன. நாம் இங்கே கால வரையறை எதுவுமின்றி விவாதிப்போம். 1970களின் கால கட்டம் தமிழ்த்திரையுலகின் பல புதிய இசையமைப்பாளர்களை சந்தித்ததாகும். இதை இங்கே நீங்களெல்லோரும் மிக அருமையாக சிறப்பித்து வருகிறீர்கள். அப்படியே தொடருங்கள். நடுநடுவே மற்ற கால கட்டத்தின் பாடல்களும் தாமாகவே விவாதத்தில் பங்கேற்று விடும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1252
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஜி. தேவராஜன் இசையில் 1969ல் வெளிவந்த மலையாள திரைப்படம் குமார சம்பவம். முருகனின் பெருமையைக் கூறும் பக்திப் படம். இது தமிழில் 1970லும் வெளிவந்தது. இதில் டி.எம்.எஸ். அவர்களின் அருமையான பாடல் இருக்கும். இந்த பக்திப் பாடல் கூட நம் வானொலியில் அதிகம் ஒலிபரப்பப் படவில்லை என்பது கொடுமை. இதனுடைய மொழி மாற்ற வடிவம் இணையத்தில் யூட்யூபில் உள்ளது. கேளுங்கள்



    ஒருவேளை இதுதான் முருகனடிமை என்று வெளிவந்ததோ தெரியவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1253
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்திய சினிமா இருக்கும் வரை இருக்கும் பாட்டு, The Guide ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.



    இப்பாடலின் மெட்டில் பானுமதி ராமகிருஷ்ணா இசையில் இப்படியும் ஒரு பெண் படத்தில் இடம்ப பெற்றது பொங்குதே புன்னகை. பாலாவின் மயக்கும் குரல் மீண்டும் மீண்டும் நம்மைக் கேட்க வைக்கும். கேளுங்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1254
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    "மனதை மயக்கும் மதுர கானங்கள்" என்ற தலைப்புடைய இத்திரியில் இடம்பெறும் கானங்களுக்கும் மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! விளக்குங்களேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #1255
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒப்பீட்டுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.

    இப்போது 'பொங்குதே புன்னகை' பாடல் வீடியோவாக.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1256
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுரை மட்டுமல்ல: திருச்சி, திருநெல்வேலி, கோயமுத்தூர் மற்றும் எல்லா இடங்களுக்கும் மதுர கானத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
    Last edited by vasudevan31355; 2nd July 2014 at 09:07 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1257
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    "மனதை மயக்கும் மதுர கானங்கள்" என்ற தலைப்புடைய இத்திரியில் இடம்பெறும் கானங்களுக்கும் மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! விளக்குங்களேன்.


    ஹம்சத்வனி.

    காதல் வயப்பட்டு விட்டீர்கள். காதலி ஒப்பு கொண்டு விட்டாள் .ஆனாலும் ஊருக்கு தெரியாமல்,உலகுக்கு தெரியாமல் ரகசியம் காத்து, உங்களுக்குள்ளேயே மருகி, சுகம் காக்கும் விகசிப்பை, உணர வேண்டுமா?ரகசியமாக அடையும் சுகத்தை ,திருட்டு சுகத்தை ஊரறியாமல் உணரும் சந்தோசம். இந்த பிரத்யேக உணர்வு தரும் ராகம் ஹம்சத்வனி.

    அந்த பிரபலத்தின் (மதுரைதான்)இரண்டாவது படைப்பு.நடிகர்திலகம் வெள்ளிவிழா கேடயம் வழங்கிய தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்று. இளைய ராஜா கிராமத்து பின்னணியில் கலப்பிசையில் பெடலெடுத்த கிழக்கே போகும் ரயில்.ஆனாலும் இந்த பாடல் படத்திலில்லை."மலர்களே நாதஸ்வரங்கள்". அருமையான பாடல்.வெட்ட பட்டது நீளம் கருதி.ஆனால் அதே இயக்குனரின் இன்னொரு அரை வேக்காட்டு ரொமாண்டிக் த்ரில்லெர் .இசை புயலின் விஸ்வரூபம்.எடு படாத படத்தில் ஒரு composition marvel . "தீகுருவியாய் தீங்கனியென தீபொழுதினில் தீண்டுகிறாய்." கண்களால் கைது செய்யா விட்டாலும் ,காதுகளால் என்னை கைது செய்த இணைப்பு-படைப்பிசை அபூர்வம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1258
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெங்கிராம் சார்,

    வருக! தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    நல்ல அனுபவசாலியான நீங்கள் இந்தத் திரியில் தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1259
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    02/07/14

    அனைவருக்கும் காலை வணக்கம்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    இன்று தேவமாதா காட்சி அருளிய நாள்

    முத்துராமன் நடித்த புனித அந்தோனியார் நினைவுக்கு வருகிறது
    வாணியின் அருமையான குரல்

    "மண் உலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்
    நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறான்
    எண்ணில்லாத அதிசயம் செய்து காட்டவே
    ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறான்"

    ஜேசுதாஸ் குரலில்
    "ஆனந்தமானது அற்புதமானது நான் அந்த மருந்தை கண்டு கொண்டேன் "

    ஹம்சத்வனி அமைத்த மன்னவன் கோபால் சார்

    கீழே வரும் தகவல்கள் எனது சொந்த சரக்கு அல்ல .ஒரு வலைபதிவில்
    படித்து பகிர்ந்து கொள்ளுகிறேன் .

    எந்த ஒரு காரியத்திற்கும் நல்லதொரு தொடக்கம் அவசியம். தொடக்கம் சரியாக இருந்துவிட்டால் காரியம் பாதி முடிந்தாற் போலத்தான். கர்நாடக இசைக் கச்சேரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

    ஒரு கச்சேரியைத் தொடங்கும் ராகம், ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் கச்சேரியைக் களை கட்ட வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமெனில், அந்த ராகம் அதிக கனமில்லாததாகவும் அதே சமயத்தில், அதிகம் 'scope' இலலாத துக்கடா ராகமாக இல்லாமலும், விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் பாடுவதற்குத் தோதாகவும் இருத்தல் நலம். மேற்கூறிய குணாதிசயங்கள் பல ராகங்களுக்கு இருப்பினும், ஒரு கச்சேரியைச் சிறப்பாக தொடங்க என்ன பாடலாம் என்றதும், முதலில் மனதில் தோன்றும் ராகம் 'ஹம்சத்வனி'..
    இதை minimum guarantee ராகம் என்று கூறுவார்கள்

    ஹம்சத்வனி சங்கராபரண ராகத்தின் ஜன்யம். பெரும்பாலான கச்சேரிகளின் முதல் பாடல் விநாயகப் பெருமானின் மீதே இருக்கும். இதனாலேயே, கச்சேரியைத் தொடங்கத் தோதான ராகமான ஹம்சத்வனியில் எண்ணற்ற 'விநாயகர் கீர்த்தனைகள்' இருக்கின்றது. முத்துஸ்வாமி தீக்ஷதரின் 'வாதாபி கணபதிம்' என்ற பாடல் மிகப் பிரபலமான ஒன்று.

    கேட்பவர் மனதில் உற்சாகத்தை எழுப்பக் கூடிய ராகமான ஹம்சத்வனி, திரையிசையிலும் பிரபலமான ஒன்று. இசைஞானி இளையராஜாவின் இசையில் பல ஹம்சத்வனி ராகப் பாடல்கள் திரையில் மலர்ந்துள்ளன. 'கடவுள் அமைத்த மேடை' படத்தில் வரும்
    'மயிலே மயிலே உன் தோகை எங்கே'

    இதை பற்றி ஏற்கனவே சின்னக்கண்ணன் சார் உடன் பகிர்ந்து கொண்ட பதிவு உண்டு.
    இருந்த போதிலும் சற்று கூடுதல் விவரங்கள்

    இந்த பாடலின் முன்னோட்ட இசையை (prelude), கிதாரின் chords-உம், குழலின் கிராமிய மணமும், பல வயலின்களின் கூட்டணியில் அமைந்த 'strings'-உம் அழகாக நிரப்புகிறது. பாடல் திஸ்ர நடையில் (நிறைய டப்பாங்குத்து பாடல்கள் திஸ்ர நடை எனப்படும் தாளகதியில் அமைந்திருக்கும்) துள்ளலாக அமைந்துள்ளது. பாடலில் வரும் 'percussion'-ஐக் கூர்ந்து கவனித்தால், ஆங்காங்கே மிருதங்கத்தில் எழுப்பப்படும் 'சாப்பு' எனப்படும் ஒருவித 'metallic sound' பொன்ற ஒரு ஒலி ஒலிப்பது கேட்கும். பாடல் கர்நாடக ராகத்தை அமைந்திருப்பினும், மேற்கத்திய வாத்தியங்களும் கிராமிய பிரயோகங்களும் நிரம்பிய பாடலில், 'carnatic feel' ஒலிக்க அது மட்டுமே காரணம் ஆகிவிடாது. நுணுக்கமாக சேர்க்கப்பட்டுள்ள 'percussion'-உம் இதற்கு முக்கிய காரணமாகும்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஜென்சியும் அளவான, அழகான கமகங்களால் இழைத்து இழைத்து காதல் வயப்பட்ட இருவரின் மனநிலையை தங்கள் சர்க்கரைக் கரைச்சல் குரலால் அற்புதமாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

    ஹம்சத்வனி ராகத்தை புதிதாகக் கேட்பவர்கள், 'என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்' படத்தில் ஜெயச்சந்திரனும் சுனந்தாவும் பாடியுள்ள 'பூ முடிச்சு பொட்டு வைத்த வட்ட நிலா',
    'சிவா' படத்தில் வரும் 'இரு விழியின் வழியே' , ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த இம்மூன்று பாடல்களை அடுத்தடுத்து கேட்டால், இப்பாடல்களுக்குள்ள ஒற்றுமை நன்றாக விளங்கி ராகம் சற்று புரிபடும்.

    இப்பாடல்கள் அனைத்தும் 100% அக்மார்க் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தவை என்று சொல்வதற்கில்லை. ஆங்காங்கே அழகிற்காக பாடல் ராகத்தின் வரம்புகளை மீறியிருக்கிறது. இருப்பினும், பாடலின் பெரும்பாலான பகுதி ராகத்தின் கட்டமைப்புள் இருப்பதால், ஹம்சத்வனியில் அமைந்தது என்று கொள்வதிலும் ஒன்றும் பாதகமில்லை.
    கர்நாடக கீர்த்த்னையை ஒத்து அமைந்த ஹம்சத்வனி என்று 'மகாநதி' படத்தில் வரும் 'ஸ்ர்ரங்க ரங்கநாதரின் பாதம்' பாடலைச் சொல்லலாம். 'கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்' என்ற வரியில் 'தீர்த்தம்' என்ற வார்த்தையில் எஸ்.பி.பி கொடுக்கும் கமகத்தை கவனித்துப் பாருங்கள். அது ஹம்சத்வனி ராகத்திற்கே உரிய typical கமகமாகும். இப்பாடலின் இடையிசையையும் (interlude) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    ஹம்சத்வனி பொதுவாக மகிழ்ச்சியை, உற்சாகத்தைக் குறிக்கும் ராகம். பாடலின் இடையிசைப் படமாக்கப்பட்ட விதத்தை கவனித்தால், கதாநாயகனுக்கு தன் மகளைப் பார்த்ததும், மறைந்த மனைவியின் நினைவு தோன்றி துக்கம் எழும். மகிழ்ச்சியான தருணத்தில் திடீர் என சோகம் நுழைந்ததை, ஷெனாய் என்ற வாத்தியத்தை உபயோகித்ததன் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜா.

    மேற்கூறிய பிரபலமான ஹம்சத்வனி ராகப் பாடல்களைத் தவிர 'சிறையில் பூத்த சின்ன மலர்' என்ற படத்தில்
    யேசுதாச், சித்ரா பாடிய 'அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ' போன்ற அபூர்வமான பாடல்களிலும் அற்புதமான ஹம்சத்வனி பொதிந்திருக்கிறது.
    எஸ்.பி.பி-யும் சித்ராவும் பாடியிருக்கும் 'ராகம் தாளம் -- இருவரின் தேகம் ஆகும் -- இது ஒரு காமன் கீதம் இன்பமயம்' என்றொரு அசர வைக்கும் ஹம்சத்வனி ராகப் பாடல் உள்ளது.
    பாடல் எந்த படம் என்று தெரியவில்லை

    ஹம்சத்வனி பற்றிய ஒரு மருத்துவ குறிப்பு

    Raga eases tension and provides relaxation.Celebration & Happiness,evoke a very pleasing effect on the nerves.Energy giving. Provides good thinking, chaitanya. Sarvarogaharini (panacea)

    பொதுவாக லேட் evening இல் பாட கூடிய ராகம்

    "காலையில் அரும்பி பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்வது அன்றோ காதல் நோய் "
    gkrishna

  11. #1260
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (19)

    மிக மிக ஸ்பெஷலான பதிவு

    ஒரு பாடலால் ஜீவன் முழுதையும் கட்டிபோட முடியுமா!

    நாள் முழுக்க சாப்பாடே இல்லாமல் ஒரு பாடலை மட்டும் கேட்டு கேட்டு மெய் சிலிர்க்க முடியுமா!

    ஒரு தரம் கேட்டு விட்டால் குறைந்தது இரண்டு நாட்களாவது காதுகளிலேயே அமர்ந்து ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல் உண்டா!

    நம் வாய் வழியே மெதுவாக யாருக்கும் தெரியாமல் ஒரு பாடலை திரும்பத் திரும்ப உச்சரித்தபடியே இருக்க முடியுமா!

    மீண்டும் மீண்டும் மீண்டும் இப்படி எத்தனை எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு பாடலை சலிக்காமல் கேட்க முடியுமா!

    முடியும்...முடியும்...முடியும்...


    'இன்றைய ஸ்பெஷலி' ல் வரும் இந்தப் பாடலால் அனைத்து மாயாஜாலங்களையும் செய்ய முடியும்.



    'கண்ணே பாப்பா' திரைப்படத்தில் வரும் கண்ணான பாடல். பி. மாதவன் இயக்கம். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.


    ஒரு அந்தி வேளையில் குற்றாலத்தில் தன்னந்தனியாக (!) குளித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண் (!) தன் மனநிலையையும், தன்னையொத்த இளைஞன் ஒருவன் மீது மையல் கொண்டு அவன் மேல் காதல் வசப்படுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு விவரிக்கும் அழகு!

    குளிக்கும் போது தென்றல் வருடாமல் சற்றே முரட்டுத்தனம் செய்ய அந்தத் தென்றலில் அவள் ஆடை பின்னுகிறதாம். அருவி நீரில் ஆசையாய்க் குளிப்பதனால் ஐந்தருவிகளில் ஒன்றான தேனருவி போல அவள் மேனி மின்னுகிறதாம். அவள் அங்கங்கள் அருவியில் நனைந்து தங்கங்களாக காட்சி தருகின்றதாம்.

    மேலாடையை கையில் எடுத்து தண்ணீரை உதறியபடி குளிக்கையில் பாலாடை போல அவள் நெஞ்சங்கள் பளபளக்கிறதாம். அப்போது பாருங்கள். அவள் மனதை திருட இருக்கும் கள்வன் ஒருவன் மறைந்திருந்து (நிஜத்திலும் கள்வன்தான்) யாருக்கும் தெரியாமல் தன் விழிகள் இரண்டையும் அவள் கு(த)ளிர் மேனியில் செலுத்துகின்றதை இவள் கவனித்து விட்டாளாம்.

    பார்த்த அதிர்ச்சி ஆனால் இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து விட்டாளாம். அதனால் தான் நீராடும் கோலத்தில் இருப்பதை மறந்து விட்டாளாம். உடனே சுதாகரித்து வெட்கம் பிடுங்கித் தின்ன தலை சாய்த்துக் கொண்டாளாம்

    சரி! பிறகென்ன நடந்தது.

    குளித்தாயிற்று. உடலும் மனதும் இப்போது சுத்தம். அருகில் உள்ள ஆனைமுகன் கோயிலைப் போய் இந்தக் கன்னி வலம் வருகிறாள் பக்தியுடன். ஆனால் குளிக்கும் போது பார்த்த ஆணின் அதே இரண்டு கண்கள் தன்னை தொடர்வதைப் பார்த்துவிட்டாள் அந்தப் பாவை. தவிர்க்க இயலாத பார்வை. அவனை நானும் பார்க்க வேண்டுமே! தேடு! தேடு! அதோ நிற்கிறான்... என்னையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்... அவனேதான்... அழகனாய் தெரிகின்றானே! அடடா! நேரம் போவதே தெரியவில்லையே! பார்க்கிறான்... என்னையே பார்க்கிறான்... வெட்கத்தில் தலை கவிழ்கிறாள் மறுபடி.

    சரி விடு! ஆயிரம் பேர் வருவார்கள்... போவார்கள். நாம் நம் வேலையைப் பார்ப்போம். கடைக்குச் சென்று வளையல்கள் வாங்குவோம் என்று அவள் கண்ணடி வளையல்கள் விற்கும் கடை சென்று தனக்கு விருப்பமான வளையல்களை எடுக்கிறாள். திடீரென்று வேறு இரு கைகள் அதுவும் ஒரு ஆணின் கைகள் தன் கைகளுடன் இணைவதைக் கண்டு திடுக்கிடுகிறாள். 'யாரடா அது'? என்று ஏறிட்டுப் பார்க்கிறாள். அதே கள்வன் கைபிடித்து மந்தகாசப் புன்னகை புரிகிறான். அருகில் காணுகிறாள் அந்த அழகனை. மனமெல்லாம் நிறைகிறான். முதன்முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசம். சுகமான ஸ்பரிசம். உடல் சிலிர்க்கிறாள் அவள். ஆனால் இதுவரை நாணத்தால் மட்டுமே தலை குனிந்தவள் இப்போது யாராவது கண்டுவிடப் போகிறார்கள் என்று அச்சத்தால் தலை குனிகிறாள். விருப்பமில்லாமல் நடையைக் கட்டுகிறாள். மூன்றாவது முத்தான சந்திப்பு.



    இப்போது மலைக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு படிக்கட்டுகளில் கை நிறையப் பூக்களை இந்தப் பூவை சுமந்து வருகிறாள். எப்படி நடந்து வருகிறாள்? காற்று போலவாம். தென்றல் தவழ்ந்து வருவதைப்
    போலவாம்.

    இப்போது பூக்கள் அவள் கையிலிருந்து நழுவி விடுகின்றன. அடடா! பூக்கள் கை நழுவி விட்டதே என்று பதைபதைத்தால் அந்தப் பூக்கள் வேறு யாருடைய கால்களைப் போய் சேர்ந்து பூஜை செய்கின்றனவே!
    சரி! யார் என்று பார்ப்போம் என்று கால்களைப் பார்த்து, பின் தலை நிமிர்ந்து பார்த்தால் அங்கே அந்தப் பூவுக்கும், இந்தப் பூவைக்கும் சொந்தமாகப் போகும் கள்வன் நிற்கிறான் நான்காவது முறையாக. கால் பார்த்து தலை நிமிர்ந்தவள் அவன் கண் பார்த்துத் தலை குனிந்து விட்டாள் மீண்டும் நாணத்தில்.

    அந்தியில் குளிக்கத் தொடங்கியதில் இருந்து நான்கு சந்திப்புகள் அவனுடன் நடந்தேறி விட்டது. பொழுது சாய்ந்து நிலாவும் முளைத்து விட்டது. குற்றாலமாயிற்றே! மேகங்கள் திரண்டு அவ்வப்போது அந்த நிலாவை மறைக்கின்றன. அங்கே ஒரு சிறு பாழடைந்த மண்டபம். விளக்கொளி எதுவும் இல்லை. ஆனால் அவனும் அவளும் மட்டும் தனியாக.

    தன்னுடைய சிகரெட் லைட்டரை 'ஆன்' செய்து வெளிச்சம் உண்டாக்கி அதைவிட வெளிச்சமான அவளின் முகத்தை நோக்குகிறான் சற்றே காமக்கண் கொண்டு அந்த ஆணழகன். மாலை மயக்கம் கொடுக்க, ஆசைக்காதலன் அரவணைக்க, மன்னவனின் முகத்தோடு தன்னையறியாமல் தன்முகம் புதைக்கிறாள் அவள். தன் தேகம் தன்னுடையது என்பதை அறவே மறந்தாள். அவனுடன் கூடலில் இணைகிறாள். இப்போது அவன் அந்நிய ஆண் இல்லை. காதலனும் இல்லை. வேறென்னவாம்? தெய்வம் என்கிறாள் அவனை. தெய்வத்துடன் நான் இணைந்தேன் என்கிறாள்.

    அதன் பிறகு?


    நாளை சொல்கிறேன் தொடர்ச்சியாக.

    ஒரு பெண் ஒரு ஆடவனின் பார்வையில் மயங்கி எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் தன்னை இழக்கிறாள் என்பதை இந்தப் பாடலில் வரும் வரிகளிலேயே கவிஞர் என்னமாய் விளக்கி வெற்றிநடை போடுகிறார்!

    மயங்கும் மங்கையாக 'புன்னகை அரசி'யும், மயக்கும் காதலனாக நவரசத் திலகமும் அழகான நடிப்பைச் சிந்தியிருக்கும் அமைதியான அற்புதமான, ஆழமான, ஒரு பாடல் இது.

    'மெல்லிசை மன்னர்' இப்பாடலில் பின்னியெடுத்திருக்கும் அற்புதங்கள் அளவிட முடியாதவை. புல்லாங்குழலும், ஷெனாயும் புரியும் விந்தைகள் விவரிக்கும் அளவிற்கு வார்த்தையில் அடங்காதவை.



    பாடல் வரிகளைப் படிப்பதற்கு முன்னால் அப்பாடலுக்கான விளக்கத்தைப் படித்துவிட்டு பாடல் வரிகளைப் படிக்கவும்

    தென்றலில் ஆடை பின்ன
    தேனருவி மேனி மின்ன
    அன்று நான் குற்றாலத்தில்
    ஆசையாய் குளித்திருந்தேன்
    அங்கங்கள் நனைத்திருந்தேன்

    பாலாடை பளபளக்க
    மேலாடை சாய்த்தெடுத்தேன்
    பாராத விழி இரண்டு
    பார்ப்பதை நான் அறிந்தேன்
    வேஷத்தை நான் மறந்தேன்
    வெட்கத்தில் தலை குனிந்தேன்
    வேஷத்தை நான் மறந்தேன்
    வெட்கத்தில் தலை குனிந்தேன்

    தென்றலில் ஆடை பின்ன
    தேனருவி மேனி மின்ன
    அன்று நான் குற்றாலத்தில்
    ஆசையாய் குளித்திருந்தேன்
    அங்கங்கள் நனைத்திருந்தேன்

    ஆனைமுகன் கோவிலிலே
    அந்திப்படும் வேளையிலே
    ஆனைமுகன் கோவிலிலே
    அந்திப்படும் வேளையிலே
    கன்னி வலம் சுற்றி வந்தேன்
    கண்ணிரெண்டை அங்கும் கண்டேன்
    நேரத்தை நான் மறந்தேன்
    நாணத்தில் தலைகுனிந்தேன்.
    நேரத்தை நான் மறந்தேன்
    நாணத்தில் தலைகுனிந்தேன்.

    (ஷெனாய் கலக்கும் அற்புதம் ஜென்மத்திற்கும் மறக்க இயலாது)

    கண்ணாடி வளையல்களை
    கையோடு நான் எடுத்தேன்
    கண்ணாடி வளையல்களை
    கையோடு நான் எடுத்தேன்
    என்னோடு கையிரண்டு
    இணைவதை நான் அறிந்தேன்
    அம்மம்மா! மெய் சிலிர்த்தேன்
    அச்சத்தால் தலை குனிந்தேன்
    அம்மம்மா! மெய் சிலிர்த்தேன்
    அச்சத்தால் தலை குனிந்தேன்

    கை நிறையப் பூவெடுத்து
    காற்று போல் நடந்து வந்தேன்
    கை நழுவிப் பூ விழுந்து
    கால் தேடிப் போகக் கண்டேன்
    கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
    கண் பார்த்துத் தலை குனிந்தேன்.
    கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
    கண் பார்த்துத் தலை குனிந்தேன்.

    (இடையில் வரும் புல்லாங்குழலின் இனிமையை மறக்காமல் அனுபவியுங்கள்)

    மேகம் மறைத்த நிலா ஆஆ........ஆஆ (சுசீலா அவர்களின் அந்த 'மேகம் மறைத்த நிலா' முடிவு இழுப்பு உணர்ச்சி பிழம்பாய் நம் நாடி நரம்புகளைப் பின்னிப் பதம் பார்ப்பதை நம்மால் இலகுவாக உணர முடியும்)
    விளக்கொளி ஏதுமில்லை
    மோதும் சிறு ஒளியில்
    முகத்தில் முகம் இணைத்தேன்
    தேகம் மறந்து விட்டேன்
    தெய்வத்தில் நான் இணைந்தேன்.


    சுசீலாவின் டாப் 10-ல் என்னுடைய இரண்டாவது பாடல்.

    முதல் பாடல்? கண்டிப்பாகத் தருகிறேன் விரைவில். நீங்கள் விரும்பும் பட்சத்தில்.

    இப்பதிவை நான் இடும்போது ஏதோ லாட்டரி சீட்டில் கோடி கிடைத்தது போல் மனமெல்லாம் ஒரு சந்தோஷம். இனம் புரியா இன்ப உணர்வு.

    இப்போது அற்புதமான இப்பாடலையும், அது படமாக்கப் பட்டிருக்கும் விதத்தையும் கண்டு மகிழுங்கள்.


    Last edited by vasudevan31355; 2nd July 2014 at 02:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •