-
4th July 2014, 02:25 PM
#1331
Junior Member
Newbie Hubber
Murali,
Thanks for your intervention. It is always a pleasure to be countered by knowledgeable ......... like you. Of all the people Bakthavatsalam? Do you the deterioration of Governance and initiation of corruption started with him causing fall of Congress? He is known as Mr.10%?
Apart from that I never stated it is 100% Kannadhasan's effort alone and M.S.V would have had some clout with AVM,Velumani(Ex-partner) and I rated him as a good PR. It is the combination worked against TKR. Nenjirukkum varai is not in my list. petralthaan pillaiyaa -I am not sure.I can tell you that I am 90% accurate and contents are based on facts and first hand informations.
-
4th July 2014 02:25 PM
# ADS
Circuit advertisement
-
4th July 2014, 03:52 PM
#1332
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (21)
இன்றைய ஸ்பெஷலாக நான் எடுத்திருப்பது ஒரு வித்தியாசமான பாடல்.
நம் கார்த்திக் சார் எழுதுவது போல நல்ல பாடலாக இருந்தும் புறம் தள்ளப்பட்ட பாடல்.

'அதே கண்கள்' படத்தில் இருந்து நம் சுசீலாம்மாவின் குரலில் மனத்தைக் கிறங்கச் செய்யும் இன்ப கானம். இதிலேயே துன்பமும் சேர்ந்து கொள்கிறது.
ஒரு பெரிய மனிதரின் ஆசைநாயகியாக இருக்கும் இளம்பெண்ணின் ஆதங்கம் இப்பாட்டின் வாயிலாக வெளிப்படுகிறது. அந்தப் பெரிய மனிதர் நல்லவராக இருந்தும் சமூகத்தில் தன் பெயருக்கு இழுக்கு வராமல் காத்துக் கொள்ளவும், தன் அந்தஸ்து, பெயர், கௌரவம், புகழை தக்க வைத்துக் கொள்ளவும் அவளை பகிரங்கமாக தன் துணைவியாக அறிவிக்க முடியாத சூழல்.
அவளும் அந்த அங்கீகாரத்துக்காக ஏங்குகிறாள். அவ்வப்போது விருந்துக்கு மட்டும் வந்து போகும் அந்த சீமானுக்கு இன்பத்தை அன்புடன் வாரி வழங்குகிறாள். அதே சமயம் 'என்னை எப்போது முறையாக அங்கீகரித்துக் கொள்ளப் போகிறாய்' என்று இப்பாட்டின் வாயிலாகக் கேட்கிறாள்.
அழகிய கடற்கரை. அந்த மனிதர் சாய்வு நாற்காலியில் நிழற்குடையின் கீழ் அமர்ந்து தன் இளம் காதலியின் அழகை பைனாகுலரில் ரசித்தபடி பார்த்திருக்க அந்த பருவ மங்கை சிகப்பு வண்ண நீச்சலுடை அணிந்து, ஒரு குழந்தையைப் போல் கடற்கரைப் பாறைகளின் மேல் பந்து விளையாடியபடி, ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவில் ஆனந்தக் குளியல் போடுகிறாள். அவளுடன் அந்த மனிதரும் சேர்ந்து கொள்ள 'உனக்கு என் தோளும், எனக்கு உன் மார்பும் போதும். இதைவிட இன்பம் வேறு என்ன இருக்க முடியும்? என்று மெய்மறந்து பாடுகிறாள்.
'மாதங்கள் உருண்டோடி வருடங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிவிடும். நாம் இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இருப்பது? நீயோ வயதானவன். நம் வாழ்க்கை என்னும் மலர் வாடிப் போகுமுன் இன்பம் என்ற மதுவை நாம் உண்ண வேண்டாமா? என்று நாசூக்காக சற்றே வேதனையுடன் அவரிடம் கேட்கிறாள்.

இளம் காதலியாக நடிகை கீதாஞ்சலி. வயதான காதலராக எஸ்.ஏ.அசோகன்.
அழகான இளமை துள்ளும் கீதாஞ்சலி. அதுவும் சிகப்பு வண்ண பிகினியில் உறுத்தாத கவர்ச்சியுடன். பாத்திரமறிந்த அளவான அழகான நடிப்பு. (தெலுங்கில் கொடி நாட்டியவர்)
சின்ன சின்ன அழகான கடற்கரை ஓட்டங்களுடன் ஜமாய்க்கிறார் கீதாஞ்சலி.
கீதாஞ்சலியின் முதிர்வயது காதலராக அசோகன் நடித்திருக்கிறார் வழக்கமான கோணங்கித்தனங்கள் எதுவும் இல்லாமல்.
அசோகன் உலகப் புகழ் பெற்ற ஒரு தமிழ் நடிகரை மனதில் வைத்துக் கொண்டு கடற்கரையில் நடப்பது ஸாரி நடப்பது நமக்குத் தெரியாமலில்லை.
அருமையான கடற்கரைப் படப்பிடிப்பு (எஸ். மாருதிராவ்). அழகான உடை தேர்வு. அம்சமான வண்ணப்பதிவு. கடற்கரயில் நாமே இருப்பது போன்ற ஒரு பிரமை. அலைகள் நம்மைத் தாலாட்டுவது போன்ற உணர்வு.
இப்படத்திற்கு இசை வேதா அவர்கள். பல இந்திப்பட சூப்பர் ஹிட் மெட்டுக்களை யாருக்கும் தெரியாமல் (என்று நினைத்துக் கொண்டு) தமிழில் தந்து 'மாடர்ன் தியேட்டர்ஸ்' கம்பெனியின் கல்லாவை நிரம்ப வைத்தவர்.
ஆனால் இதே வேதா தன் சொந்தமான டியூன்களில் சில நல்ல, இனிமையான பாடல்களையும் தமிழில் தந்த திறமைசாலியும் கூட.
அப்படிப்பட்ட பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சுசீலா அவர்களைப் பற்றி நிறைய சொல்லியாயிற்று. அதிலும் இந்தப் பாடலில் அந்தப் பெண்ணின் மகிழ்வையும், மன துயரத்தையும் நன்கு உள்வாங்கி தன் தேனமுதக் குரலால் வாழ்நாள் விருந்து படைத்திருக்கிறார் என்று மட்டும் ஆணித்தரமாகச் சொல்வேன்.
'அதே கண்களி'ல் இருந்த சூப்பர் ஹிட் ஜனரஞ்சகப் பாடல்களால் இந்த வித்தியாசமான பாடல் கண்டுகொள்ளப் படாமல் போய்விட்டதில் எனக்கு மிக வருத்தமே!
இனியாவது கண்டு கொள்ளப்பட வேண்டும் என்பதில்தான் இன்றைய ஸ்பெஷலாக இந்த இனிமை நிறைந்த பாடல்.
இனி பாடல்.
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்க வில்லையே
லாலாலா லால லால லலல்ல லாலா
லாலாலா லால லால லலல்ல லாலா
நீலக்கடல் மேலே
நீந்தாத காற்று
பேரின்ப வீணை
மீட்டாத பாட்டு
நீலக்கடல் மேலே
நீந்தாத காற்று
பேரின்ப வீணை
மீட்டாத பாட்டு
தோள் மீது நீயும்,
மார் மீது நானும்
சாய்ந்தாலே போதும்
தேனாறு பாயும்
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்க வில்லையே
லாலால்லா லால லால லலல்ல லாலா
லாலால்லா லால லால லலல்ல லாலா
மாதங்கள் மாறும்
ஆண்டொன்று போகும்
நாம் வாழும் வீட்டில்
நாள்தோறும் ஆட்டம்
மாதங்கள் மாறும்
ஆண்டொன்று போகும்
நாம் வாழும் வீட்டில்
நாள்தோறும் ஆட்டம்
இது போலக் காலம்
விரைந்தோடிப் போகும்
மலர் வாடுமுன்னே
மது உன்ன வேண்டும்
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்க வில்லையே
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
லலலாலலல்லாலா
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
லலலாலலல்லாலா
Last edited by vasudevan31355; 4th July 2014 at 04:05 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
4th July 2014, 04:12 PM
#1333
Junior Member
Newbie Hubber
எனக்கு மிக மிக பிடித்த பாடல் மற்றும் நடிகை என்னென்னவோ.. (நினைத்தால் போதும் ).
இந்த படுபாவி,உதவாக்கரை அசோகனுக்கு போய் மனம் கனிவான,எண்ண பறவை,என்னென்னவோ,ஊராயிரம் பார்வையிலே... என்னத்தை சொல்ல?நேரம்.
-
4th July 2014, 04:36 PM
#1334
Senior Member
Veteran Hubber
தலைவரே,
நீங்கள் சொன்னவற்றை பொய் என்று சொல்லவில்லை. ஆனால் மிகை என்பது உண்மை. ராமமூர்த்தியுடன் பல ஆண்டுகள் பல நூறு பாடல்களுக்கு இசையமைத்ததால், பிரிவுக்குப்பின்னும் அவரது சாயல் சில எம்.எஸ்.வி.பாடல்களில் இருந்திருக்கலாம். அதை வைத்து அவையெல்லாம் டி.கே.ஆருடன் இருந்தபோது போட்டு வைத்த ட்யூன்கள் என்று வரையறுக்க இயலாது. மெல்லிசை மன்னரை விட்டு பிரிந்து வெகு காலம் வரை சங்கர் - கணேஷ் இசையில் எம்.எஸ்.வி.யின் பாதிப்பு இருந்ததே.
அப்படிப்பார்த்தால் ராமமூர்த்தியின் பாடல்களில் எம்.எஸ்.வி.யின் சாயல் இருக்கவே செய்தது. உதாரணமாக 'காதலன் வந்தான்' (மூன்றெழுத்து), 'திருத்தணி முருகா' (நீலகிரி எக்ஸ்பிரஸ்), 'தன்னந்தனியாக நான் வந்தபோது' (சங்கமம்) போன்ற பாடல்கள் பக்கா எம்.எஸ்.வி. டைப். அதை சேர்ந்திருந்தபோது ஏற்பட்ட பாதிப்பு என்று சொல்வோமே தவிர, இவர் அப்பவே போட்டு வைத்த ட்யூன் என்று சொல்ல மாட்டோம். அது மனசாட்சிக்கு மாறானது.
நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியல் 1966 டிசம்பர் வரை நீள்கிறது. இவர்கள் பிரிந்ததோ 1965 மத்தியில். அந்தப்பட்டியலில் பல படங்கள் இவர்கள் பிரிவுக்குப்பின்னர்தான் துவங்கப்பட்டவை. உதாரணமாக, இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றியது ஆயிரத்தில் ஒருவன் பைனல் ரீரிக்கார்டிங்கின்போதுதான். அப்போது இருவரும் கட்டித்தழுவி விடைபெற்றபோது உடனிருந்த பந்துலு, சித்ரா கிருஷ்ணசாமி மற்றும் இசைக்குழுவில் இருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதன்பின்னர் இவர்கள் பல ஆண்டுகள் சந்திக்கவே இல்லை. ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 75 நாட்கள் கடந்தபின்னர்தான் பந்துலு 'நாடோடி' படத்தை ஆரம்பித்தார். அப்புறம் எப்படி அதில் ராமமூர்த்தியின் பங்களிப்பு?.
இப்படி நீங்கள் சொன்ன ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வரலாறு சொல்ல முடியும். 'பறக்கும் பாவையும்' அப்படித்தான். 1965 மத்தியில் வெளியான ‘பணம் படைத்தவன்’ வெளியாகி பல மாதங்கள் கழித்து ராமண்ணா அந்தப்படத்தை துவக்கினார். (அப்போது 'நீ' படத்தில் பிசியாக இருந்ததால்). அப்புறம் எப்படி பறக்கும் பாவையில் டி.கே.ஆர். பங்களிப்பு?.
"சர்வர் சுந்தரம் பட ரிக்கார்டிங் காட்சியில் (அவளுக்கென்ன அழகிய முகம்) தன்னைக் காண்பிக்கவில்லை, இது விஸ்வநாதனின் சதிதான்" என்பதும் ராமமூர்த்தியின் குற்றச்சாட்டு. அந்தக்காட்சியில் பல குளறுபடிகள். பாடலை எழுதிய வாலியைக்கூட அந்தக்காட்சியில் உட்கார வைத்தவர்கள், டி.எம்.எஸ்.ஸுடன் உடன் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரியைக்கூட அக்காட்சியில் காண்பிக்கவில்லை. இதிலிருந்தே தெரிந்திருக்கும் இதில் எம்.எஸ்.வி.யின் பங்கு இல்லையென்பது.
ராமமூர்த்தி பெரிய இடத்துப்பெண்ணில் இருந்தே முரண்டு பிடிக்கத்துவங்கியவர்தான். ராமண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சமரசத்தினாலேயே மீண்டும் எம்.எஸ்.வி.யுடன் இணைந்து பணியாற்றினார்.
நான் திரும்பத்திரும்ப கேட்பது ஒன்றுதான். ஒரு திறமையாளரும் (?) ஒரு பி.ஆர்.ஓ.வும் (!) இணைந்து பணியாற்றி, பின்னர் பிரிந்து விட்டால் திறமையாளர் (?) அல்லவா முன்னேறியிருக்க வேண்டும். பி.ஆர்.ஓ. எப்படி முன்னேறினார்?. திறமையாளர்(?) எப்படி சோடை போனார்?.
பிரிந்த பின் ராமமூர்த்தி இசையமைத்த மொத்தப்படங்களே 26 தான். ஆனால் எம்.எஸ்.வி. ஒரு ஆண்டுக்கே 26 படங்களுக்கு இசையமைத்தார். இத்தனைக்கும் இன்னொருபக்கம் கே.வி.மகாதேவனும் ஒரு அச்சுறுத்தலாக இருந்தும் எப்படி அவரால் சாதிக்க முடிந்தது?. திறமையில்லாத ஒரு வெறும் பி.ஆர்.ஓ.வால் சாதிக்க முடியுமா?.
பட்டியலை ஏன் அத்துடன் நிறுத்திக்கொண்டீர்கள்?. ஊட்டிவரை உறவு, குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, உயர்ந்த மனிதன், சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் படங்கள் வரைகூட இடம்பெற்ற பாடல்களுக்கான ட்யூன்களை போட்டுக்கொடுத்து விட்டுத்தான் ராமமூர்த்தி பிரிந்தார் என்று சொல்லுங்களேன். யார் எதிர்க்கேள்வி கேட்கப்போகிறார்கள்?...
-
4th July 2014, 05:12 PM
#1335
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
ஐயோ ஐயோ..., நான் நினைத்துக்கொண்டிருந்த மிக அருமையான ஒரு பாடலை (என்னென்னவோ நான் நினைத்தேன்) இன்றைய ஸ்பெஷலாக தந்து அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டீர்கள். உங்களைப்போலவே எனக்கும் இப்பாடலைப்பற்றி ரொமபவே வருத்தமும் ஆதங்கமும் உண்டு.
இதை விட பல மடங்கு தரம் குறைந்த 'பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்' பாடலெல்லாம் சூபர் ஹிட். ஆனால் மிக அருமையான பாடலான இப்பாடலுக்கு போதிய வரவேற்பில்லாமல் போனது.
பெயர்களை தப்பும் தவறுமாக காட்டினாலும் 'முரசு' சேனலுக்கு நன்றி. இப்போது ஒருபடப்பாடல் நிகழ்ச்சியில் அதே கண்கள் படப்பாடல்கள் ஒளிபரப்பாகும்போது, இப்பாடலையும் ஒளிபரப்பி புண்ணியம் தேடிக்கொள்கிறது. (நேற்றைய தமாஷ்: இமயம் படத்தின் "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" பாடலின் கீழே படம்: இமயம், இசை : இளையராஜா என்று காண்பித்தார்கள். கொடுமைகள் தொடர்கின்றன).
இப்பாடலைப்பொருத்தவரை, வேதாவின் ட்யூன், பாடல் வரிகள், பாடியவர், நடித்தவர், ஒளிப்பதிவு என்று அனைத்து அம்சங்களும் பூரணமாக நிறைந்த பாடல். தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெற்ற மிகச்சிறந்த பத்து கடற்கரைப்பாடல்களில் ஒன்று என்பேன். (லிஸ்டில் 'செந்தமிழ் பாடும் சந்தன காற்றும்' உள்ளது). மீண்டும் வாழ்வேனில் சொதப்பியிருப்பார்கள். இப்பாடலின் திருஷ்டிப்பொட்டு அசோகன்.
போதுமான அளவு வெளிச்சம் படாததற்கு, இப்பாடலில் கதாநாயகனும் கதாநாயகியும் இடம் பெறாததால் இருக்குமோ. ஆனால் அதைவிட அழகான கீதாஞ்சலி இருக்கிறாரே, ஸ்லீவ்ஸ் போடாத வெற்றுக் கால்களுடன்.
மண்ணுக்குள் புதைந்த வைரங்களை வெளிக்கொணர்வதில் வாசுவை மிஞ்ச யார் என்று மீண்டும் கேட்க வைத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள், அதைவிட அதிகமான நன்றிகள்...
-
4th July 2014, 05:38 PM
#1336
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
தலைவரே,
குயிலாக,வெண்ணிலா- என் கூற்றை மெய்ப்பிப்பது போல, எஸ்.வீ (Vinodh),வாலியின் பழைய பதிவை(#1305) போட்டுமா சந்தேகம்?நான் ஆதாரமில்லாமல் எழுதுவதே இல்லை .
டியர் கோபால் சார்,
இப்போதும் இடிக்கிறது. வினோத் அவர்கள் தந்த வாலியின் ஆவணத்தை நானும் பார்த்தேன். அது ஒரு விதத்தில் (விஸ்வநாதன் - ராமமூர்த்தி) உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் உங்களுக்கு பாதகமாக உள்ளது.
நீங்கள் சொன்னது அவ்விரண்டு பாடல்களும் பாலும் பழமும் படத்துக்காக ரெக்கார்ட் செய்யப்பட்டு அப்படத்தில் இடம்பெறாததால் ஜெய்சங்கர் படமான 'செல்வமகளில்' இடம்பெற்றதாக. (அதாவது நடிகர்திலகத்துக்காக உருவான பாடல் (உங்களுக்கு அறவே பிடிக்காத) ஜெய் படத்தில் இடம்பெற்றதாக)
ஆனால் வாலியின் கூற்று: 'பஞ்சவர்ணக்கிளிக்காக' உருவான அவ்விரண்டு பாடல்களும் ப.கிளியில் இடம்பெறவில்லை. அதாவது ஏற்கெனவே ஒரு ஜெய்சங்கர் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்தான் இன்னொரு ஜெய்சங்கர் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே தயாரிப்பாளர் (வேலுமணி) மற்றும் ஒரே இயக்குனர் (சங்கர்) என்பதால்.
ஆக, ஆதார ரீதியாக அவை ஒரிஜினல் ஜெய்சங்கர் படப்பாடல்கள்தான் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.
-
4th July 2014, 05:50 PM
#1337
Junior Member
Newbie Hubber
என்னவோ போங்க கார்த்திக், பட கம்பெனிகள் மற்றும் திரையுலகம் ஒரு அருமையான,சுறு சுறுப்பான , ஆபீஸ் பாயை இழந்தது.1952 இல் நேர்ந்த இந்த இழப்பு இன்று வரை நம்மை பாதிக்கிறது.
Last edited by Gopal.s; 4th July 2014 at 06:19 PM.
-
4th July 2014, 05:58 PM
#1338
Junior Member
Newbie Hubber
கார்த்திக்,
எனக்கு ரொம்ப முன்னாடி படித்த நினைவு.1971 யிலோ என்னவோ,பாலும் பழமும் படத்திற்காக போட்ட அசல் இடம் பெறாமல் தாயுள்ளம் படத்திற்காக(ஞாபகம்) எழுத பட்ட தாய் பேச நினைப்பதெல்லாம் பாட்டை ,நான் பேச நினைப்பதெல்லாம் என்று மாற்றினார்களாம்.பின்னால் இந்த இரண்டு பாடல்கள்,மற்றும் இசை உபயோக படுத்த பட்டது என்று சொன்ன நினைவு. பஞ்ச வர்ண கிளியில் வில்லனுக்கும்,அக்காள் புருஷனுக்காகவும் இருக்க முடியாது.பாடகியை நேசிக்கும் எனக்கு சுமாராக பிடிக்காத முத்துராமனுக்குத்தான் இருந்திருக்க வேண்டும்.
-
4th July 2014, 06:16 PM
#1339
Junior Member
Newbie Hubber
கார்த்திக்,
செல்வ மகள் வசனம் சுப்பு ஆறுமுகம்.இயக்கம் கே.வீ..ஸ்ரீனிவாஸ் b.a. என்று நினைவு.
-
4th July 2014, 06:37 PM
#1340
Senior Member
Diamond Hubber
டியர் கார்த்திக் சார்,
குதிரைகளை அடக்கும் வித்தைகளை எங்கே கற்றீர்கள்?
அடக்கல் அருமை.
(கு.வி.மீ.ம.ஒட்டல)
பாவம். விட்ருங்க ப்ளீஸ். எனக்காக.
குதிரை குப்புற விழுந்து விட்டது.
டிஷ் (என்ன ஒரு சிறு வலி! விழுந்தது என் பிரியக் குதிரை)
எனக்கு இன்று
நான் போட்டால் தெரியும் போடு டிஷ்...
தமிழ்ப் பாட்டால் அடிப்பேன் ஓடு டிஷ்.. டிஷ்
'எங்க பாப்பா' படத்தின் பாட்டை ஞாபகப் படுத்தி விட்டர்கள்.
Last edited by vasudevan31355; 4th July 2014 at 06:43 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks