விஜி நம்ம படங்களில் இன்னும் அதிகமாக வரலையேன்னு நாங்களே வருத்தத்துடன் இருக்கிறோம். இதுல, இருக்கும் ஒன்றிரண்டையும் தியாகம் செய்யச்சொல்வது கொடுமை சார்.
காத்திக் சார்,
ஜோதி லக்ஷ்மி-விஜயலலிதா இரு மாபெரும் "சக்திகளின் "பின்னால் அணிவகுத்து ,கொண்ட கொள்கைகளில் முரண் பட்டு நின்றாலும், உங்கள் தார்மீக கோபம்,கொள்கை பற்று என்னை புல்லரிக்க வைத்து, "எங்கள் இனமடா இவர்" என்று பெருமிதத்தோடு நெ(?)ஞ்சு நிமிர செய்கிறது. அந்த வலிகளை நிறைய சுமந்தவன் என்ற வகையில் உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டாலும்,கொண்ட கொள்கை என் கைகளை கட்டி போட்டு விட்டது.
நானும் இப்படித்தான். பிரிட்டிஷ் காரர்களுக்கு இந்தியாவை திரும்ப கொடுப்பேனே தவிர ,டி.ஆர்.ராஜகுமாரி,ஹெலன்,பத்மினி பிரியதர்சினி,ஜோதிலட்சுமி,ஜெயகுமாரி,ஆலம் ,விஜயஸ்ரீ,சில்க்,ரீமா சென் இவர்களை அந்நிய சக்திகளிடம் விட்டு கொடுக்கவே மாட்டேன்.
Last edited by Gopal.s; 7th July 2014 at 07:27 AM.
கோபால் சார் கார்த்திக் சார் கலந்து கட்டி திரியை
"ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல "
என்று பிளந்து கொண்டு இருக்கிறார்கள்
புராண கதையின் ஒரு அம்சமாக ராவணன் சிவபெருமானை
காம்போதி raagathirku அடிமை ஆக்கினார் என்று சொல்வார்கள் .படித்த நினவு . என்ன ஞானம் கோபால் சார் இன் அறிவு கூர்மை
ஒரு புறம் காம்போதி ராகத்தின் விளக்கம்
மறு புறம் காந்த கணஅழகி,செக்ஸ் queen விஜயலலித மறுபுறம் இடையின diamond queen ஜோதி ஆக்கபூர்வமான விவாதம்
'என்னவென்று சொல்வதம்மா'
ஒரு புறம் அறிவு மறுபுறம் ஆக்கம் எங்களுக்கெல்லாம் ஊக்கம்
revolver ரீட்ட என்று ஒரு படம் புரட்சி தாசன் வசனம் பாடல்கள்
சரஸ்வதி குமார் இயக்கம். டைட்டில் சரஸ்வதிகுமார் என்று தான் காண்பிகபடுகிறது. ஆனால் விளம்பரம் கே எஸ் ராமதாஸ் என்று
போடப்பட்டுள்ளது .
அந்த படத்தில் தான் மேற்கண்ட இரண்டு பட்டங்கள் அடைமொழியாக விஜயலலிதவுக்கும் ஜோதி லக்ஷ்மிக்கும் வழங்கப்பட்டது .
ஷ்யாம் பிலிப்ஸ் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி
வாசு சார் இன் திருமகள் சிறப்பு இன்பம்
சமீபத்தில் இந்த திரை படம் முரசு தொலை காட்சியில் காண்பிக்கபட்டதுமே வாசு சார் இந்த பாடலை பற்றி விவரிப்பார் என்று நினைத்தேன் . கணிப்பு தவறு இல்லை
படம்: நிலவே நீ சாட்சி (எஸ்.பி.பிக்சர்ஸ் தயாரிப்பு)
பாடல்: நீ நினைத்தால்
இசை: 'மெல்லிசை மன்னர்'
பாடல் இயற்றியது: கண்ணதாசன்
நடிகர்கள்: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா
இயக்கம்: பி.மாதவன்
இன்று முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு பாடல். நிச்சயமாக ஆணித்தரமாகக் கூறுகிறேன். என்னுடைய டாப் 10 பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அதிசயப் பாடல்
எப்போது கேட்டாலும் நான் மூக்கின் மேல் விரல் வைத்து வாழ்க்கையின் மொத்த சுகங்களையும் மூன்றே நிமிடங்களில் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும், அனுபவிக்கப் போகிற பாடல்.
என்னடா பீடிகை அதிகமாய் இருக்கிறது என்கிறீர்களா?
நீங்கள் கேட்டால் உண்மையிலே அசந்து போய் விடுவீர்கள்.
எப்போதோ கேட்ட ஞாபகம் இப்போது கேட்டவுடன் ஒரு சிலருக்கு வரலாம். இப்பாடலை நான் கேட்டிருக்கிறேனே என்றும் அலட்சியமாகச் சொல்லி விடலாம்.
அதையெல்லாம் மறந்து இப்போது கேளுங்கள். இந்தப் பாடல்களில் உள்ள சங்கதிகளை கவனியுங்கள். பாம்பாக இழையும் ஷெனாயின் இனிமையை அணு அணுவாக ரசியுங்கள். சில வினாடிகளே தூள் பரத்தும் டிரம்ஸ்களின் இடியோசையில் இணையுங்கள்.
வித்தியாச சிறப்புகளைப் பெற்ற தனித்துவம் நிறைந்த பாடல் இது.
முதல் வித்தியாசம். ஏன் அதுபற்றி ஒரு கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேனே!
கண்களை மூடிக் கொண்டு இப்பாடலைக் கேளுங்கள். இப்பாடலில் ஒலிக்கும் ஆண்குரல் யாரென்று கண்டு பிடியுங்கள். நான் இப்பாடலின் அலசலின் முடிவில் அந்த பின்னணிப் பாடகர் யார் என்று கூறுகிறேன்.
ஆனால் ஒரு கண்டிஷன். எந்த தேடலும் செய்யாமல் உடனே கண்டுபிடிக்க வேண்டும். ஆராயக் கூடாது. தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள்.அவர்களுக்கும் கூட இப்பாடலின் ஆண்குரல் யார் என்று கண்டு கொள்வது கடினமே.
இப்பாடலை என் நண்பர்களிடம் போட்டுக் காட்டி இக்கேள்வியை நான் அவர்களிடம் வைக்கும் போது அவர்கள் கண்டு பிடிக்க முடியாமல் தோல்வியைத்தான் தழுவினார்கள். இறுதியில் புதிர் விடுவிக்கப் பட்டவுடன் அவரா இவர் என்று அசந்து போனார்கள்.
சரி! பெண் பாடகி? இரண்டாவது வித்தியாசம் இல்லை இல்லை உலக அதிசயம்
அந்த மாயக்காரி, ஜாலக்காரி, மாய்மாலக்காரி, மந்திரக்காரி, வசியக்காரி, நம் உள்ளம் கொள்ளை கொண்ட என் ராட்சஸி தன் குரலின் அத்துணை தனித் தன்மைகளையும் காட்டிய ஒரு பாடல்.
குரலை சற்றே உள்ளடக்கி வாய்வழி மூச்சில் இந்தக் கிராதகி பாடும் போது நாடி நரம்பெல்லாம் நம்மையறியாமல் சிலிர்த்துப் போகிறது. ('காதோடுதான்' பாணியில்)
இப்படியெல்லாம் பாட இந்த உலகத்தில் இந்த க(பெ)ண்மணியைத் தவிர வேறு எவரும் உண்டா?
பாடலின் சிச்சுவேஷன் இதுதான். மாணவர் ஜெய்சங்கரிடம் டியூஷன் படிக்கும் கல்லூரி மாணவி (!) புன்னகை அரசி. டியூஷன் எடுக்கும் போது விஜயா மேல் ஜெய் காதலாகிவிட, விஜயாவிற்கும் அதே நிலைமை ஏற்பட இருவருமே சொல்லிக்கொள்ள முடியாத தவிப்பில் மௌனம் சாதிக்கிறார்கள்
ஒருசமயம் கல்லூரி முடிந்து இருவரும் லிப்ட்டில் வரும் போது லிப்ட் ரிப்பேராகி பாதியில் நின்று விடுகிறது. இந்த இருவர் மட்டுமே லிப்ட்டில்.
இரண்டு உள்ளங்களும் தவிக்கும் தவிப்பு பின்னணிப் பாடலாக நம் காதுகளைக் குளிரச் செய்கிறது.
(கார்திக் சார்!
சாரதா மேடம் தொடங்கிய மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் திரியில் நாளை 'நிலவே நீ சாட்சி' படத்தைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்).
சரி! இன்பத்திற்கு வருவோம்.
ஹாஹா லா ஹா ஹா ஹா
ஹாஹா லா ஹா ஹா ஹா
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
(ஷெனாய் + பியானோ)
நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
எண்ணங்கள் வெளியில் வந்தால்
என்னென்ன தருவாயோ
என் கண்கள் சொல்லும் தூது
என்னென்று அறிவாயோ
எண்ணங்கள் வெளியில் வந்தால்
என்னென்ன தருவாயோ
என் கண்கள் சொல்லும் தூது
என்னென்று அறிவாயோ
தேடிய தனிமையில்
ஆயிரம் புதுமையை
இங்கே பெறுவோமா
மூடிய கதவிது திறந்திடும் முன்னே
முழுதும் அறிவோமா
நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
(இடையிசை பின்னல். இசை சற்றே நிறுத்தப்பட்டு அதம் பறக்கும் டிரம்ஸ் களேபரங்களை அனுபவியுங்கள்.)
கன்னங்கள் கனிகள் என்று
கை கொஞ்சம் தழுவாதோ
கை தொட்ட தேகம் கண்டு (எம்.எஸ்.வி.அமர்க்களம்)
பெண் வண்ணம் மலராதோ
கன்னங்கள் கனிகள் என்று
கை கொஞ்சம் தழுவாதோ
கை தொட்ட தேகம் கண்டு
பெண் வண்ணம் மலராதோ
ஆகட்டும் இதுவரை
போனது போகட்டும்
அடுத்ததை சொல்லுங்கள் (என்ன அழுத்தம் அந்த ள்'லில்)
ஆயிரம் சுகங்களை யாரிடம் கேட்பது
அருகினில் நில்லுங்கள்
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
இப்போது சொல்கிறேன். அந்தப் பாடகர் வேறு யாருமல்ல. நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான். மனிதர் என்னமாய் குரலை மாற்றி ஈஸ்வரிக்கு இணையாக துவம்சம் செய்து விட்டார் பார்த்தீர்களா?
தேவையான ஏற்ற இறக்கங்களை அற்புதமாக அளித்து, குரலையும் வித்தியாசமாய்த் தந்து, அத்துடன் இசைக்கருவிகளின் குதூகலத்தையும் சேர்த்து தந்து, வரிகளில் ஈஸ்.... வரியை விளையாடவிட்டு இந்த மனிதர் எங்கேயோ போய் விட்டார்.
மன்னர் மன்னர்தான்.
இப்பாடலைப் பற்றி என் மனதில் உள்ளதை அப்படியே கொட்டித் தீர்த்து விட்டேன்.
மெகா ஹிட் அடைந்திருக்க வேண்டிய பாடல். வழக்கம் போல நம் ரசிகக் கண்மணிகளால் அந்த நிலையை அடையாமல் போய்விட்டது. அதற்காக வருத்தப்பட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. கார்த்திக் சார், முரளி சார், கோபால் சார், கிருஷ்ணா சார், வினோத் சார், ராகவேந்திரன் சார் போன்ற ரசனை மிக்க உள்ளங்கள் அந்தக் குறையை அறவே போக்கி விட்டன.
அந்த ஒன்றே போதும்.
வாழ்க ராட்சஸி புகழ்.
Last edited by vasudevan31355; 7th July 2014 at 09:53 AM.
இன்றைய சிறப்பு மெல்லிசை மன்னரின் மகுடத்தில் ஒரு வைர கல்
நிச்சயமாக உங்களை போலவே நானும் நிறைய நண்பர்களிடம் இந்த பாடல் பற்றி விவரித்து உள்ளேன்
மெல்லிசை மன்னரின் குரல் மாறுபட்ட குரல்
மெல்லிசை மன்னர் என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாத குரல்
இந்த படமே ஒரு புதுமை தான் .முத்துராம் டாக்டர் ஆகா வருவார்
அவர் உடைய மனைவி கே ஆர் விஜய தான் ஜெய் சங்கர் இன் காதலி
ஜெய் சங்கரின் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்யும் டாக்டர் முத்துராமன்
வித்தியாசமான திரைகதை
Bookmarks