Page 162 of 400 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1611
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    அம்மன் அருள் 1973
    அம்பிகா movies தயாரிப்பு
    பட்டு என்ற பட்டாபிராமன் இயக்கம்
    ஜெய் ஷங்கர்,மஞ்சுளா விஜயகுமார்,நடிப்புசுடர் ஏவிஎம் ராஜன்,
    அசோகன் நடித்து வந்த கருப்பு வெள்ளை
    இசை இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்

    AVM ராஜன் அம்மன் கோயில் பூசாரி அவர் மகள் மஞ்சுளா .அசோகன் அந்த ஊர் பண்ணயார் அவர் மகன் ஜெய்சங்கர் இவர் மேல்நாட்டில் டாக்டர் பட்டம் படித்து விட்டு வரும் பகுத்தறிவு வாதி .கடவுள் உண்டா இல்லையா என்ற வாக்கு வாதம் அடிக்கடி நடக்கும்
    ஏவிஎம் ராஜன் இந்த படத்தில் இருந்து தான் 'மகமாய் மகமாய் அம்மா கருமாரி ' என்று அடிகடி சொன்னதாக நினவு
    இப்போது கிறிஸ்துவ மத போதகர் ஆக இருக்கிறார் .
    ஜெய்சங்கர் மஞ்சுளாவை விரும்புவார் ஆனால் இதை அசோகன் விரும்பமாட்டார் . அம்மன் கோயிலில் சீட்டு போட்டு பார்த்து விபுதி வந்த காதலை கை விடுவது ,குங்குமம் வந்தால் காதலியுடன் சேர்வது என்று முடிவாகும் .ஏவிஎம் ராஜனே எல்லா பொட்டலதிலும் விபுதி வைத்து விடுவார் .ஜெய் கோபித்துகொண்டு ஊரை விட்டு போவார் அசோகன் கோபம் கொண்டு கோயிலையும் அம்மன் சிலையையும் உடைக்க முயற்ச்சி செய்வார். இதற்கு நடுவில் ஒரு சங்கிலி ஒன்று காணமல் போகும் . அது அம்மன் கழுத்து சங்கிலியா அல்லது மஞ்சுளா கழுத்து சங்கிலியா என்று நினைவில் இல்லை
    முடிவு dvd (கிடச்சா வாங்கி ) பாருங்க


    இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும்
    radha jayalakshmi சகோதரிகள் குரலில்
    'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ' என்ற பாடல்
    நவராத்திரி சமயத்தில் எல்லா அம்மன் கோயில்லும்,ஆடி மாத கொடை விழாக்களிலும் கலந்து கட்டிய பாடல்


    http://www.mediafire.com/?p9k42abuh9d64p2

    பாலா சுசீலா குரல்களில்
    கொஞ்சம் மாணவன் "கல்யாண ராமனுக்கும் " பாடலை நினைவு படுத்தும் . ஆனால் பாலாவின் ஆரம்ப குரல் ஹம்மிங் தொடர்ந்து சுசீலாவின் குரல் இனிமை நம்மை மயக்கும் .வழக்கம் போல் கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்கள் வீணை flute கலந்து

    ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
    ஒன்றென நூறாய் நான் தருவேனே
    இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
    கேட்டதை தருவேன் நான்தானே
    ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
    ஒன்றென நூறாய் நான் தருவேனே

    பட்டு தளிர் கோடியில் பச்சை பசும் கிளிகள்
    தொட்டு கொண்டு பேசும் சிந்து
    புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
    கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
    ஓடை நீரில் வாலை மீன்கள்
    ஜாடையில் சொல்லும் நாடகம் என்ன
    ஓடும் தென்றல் பூவை பார்த்து
    கூறும் கதைகள் என்னனென்ன
    ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
    ஒன்றென நூறாய் நான் தருவேனே


    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1612
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ராஜ பாண்டியந்தானே மல்லிகை பூபோட்டு கண்ணனுக்கு மங்கல தாலாட்டு?

    நினைப்பது நிறைவேறும் -எம்.எல்.ஸ்ரீகாந்த்?

    ninappathu niraiverum yes m.l.srikanth music
    song vani with m.l.srikanth

    ராஜபாண்டியன் பழைய தாலாட்டு பட ஹீரோ நினைவில் உள்ளது
    பாட்டு நினைவில் இல்லை
    gkrishna

  4. #1613
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    but, my favourite one is during the fight (before that long but interesting climax) between NT and Balajee in which NT's stance with cream colour shirt and pant with scarf...Wow. I remember Mr. Raghvender also shared some thing about this still photo some time back.
    'ராஜா' படத்தின் செய்தித்தாள் விளம்பரங்களில், பாட்டுப்புத்தக அட்டையில், பொம்மை பேசும்படம் பத்திரிகைகளில், தியேட்டர் கட்-அவுட்களில் (மவுண்ட் ரோடு அண்ணாசிலை பின்புறம் வைக்கப்பட்ட கட்-அவுட் ரொம்ப பேமஸ்) இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த அந்த போஸ் (மஞ்சள் பேண்ட், மஞ்சள் முழுக்கை ஷர்ட், கழுத்தில் கருப்பு ஸ்கார்ப் இவற்றுடன் இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் தோற்றம்), ஆனால் படத்தில்......??????

    கண்மூடித் திறப்பதற்குள், ஒரு செகண்டின் பத்தில் ஒரு பகுதியில் சட்டென வந்து மறைந்துவிடும்...

  5. #1614
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார் /பார்த்தசாரதி சார்/ கிருஷ்ணா சார்,

    என்னிடம் இருந்த என் இதய தெய்வத்தின், நம் நடிக தெய்வத்தின் அசர வைக்கும் இன்னொரு 'ராஜா' ஸ்டில்.

    இதுவரை போடாமல் காத்து வந்தேன். இன்று 'ரா(ஜா)ஜ' நேரம் போல் இருக்கிறது.

    இப்போது உங்கள் எல்லோருக்கும் இங்கு முதன் முறையாக.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1615
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    "come on..... Get up...!"

    டியர் வாசு சார்,

    என்ன ஒரு அற்புதமான போஸ்.

    "உலகத்துக்கே 'ஸ்டைல் கிங்' நான்தான். இல்லையென்பவன் எவனடா" என்று கைநீட்டிக் கேட்கிறாரோ...
    Last edited by mr_karthik; 10th July 2014 at 07:20 PM.

  7. #1616
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    டியர் கார்த்திக் சார் /பார்த்தசாரதி சார்/ கிருஷ்ணா சார்,

    என்னிடம் இருந்த என் இதய தெய்வத்தின், நம் நடிக தெய்வத்தின் அசர வைக்கும் இன்னொரு 'ராஜா' ஸ்டில்.

    இதுவரை போடாமல் காத்து வந்தேன். இன்று 'ரா(ஜா)ஜ' நேரம் போல் இருக்கிறது.

    இப்போது உங்கள் எல்லோருக்கும் இங்கு முதன் முறையாக.

    dear vasu sir

    உன் பையர் என்ன
    ராஜா
    மெல்லிசை மன்னரின் bgm
    டன் டன் டன் டென்
    உன் பையர் என்ன
    ராஜா
    மீண்டும் மெல்லிசை மன்னரின் bgm
    டன் டன் டன் டென்
    என் பெயர் ராஜா இல்லை
    டன் டன் டன் டென்
    சேகர்
    சந்தர்

    லாங் சாட் மனோகர் yellow கலர் pant
    கலக்கல் வாசு சார்
    4வது தோசை சூப்பர் முறுகல் கருக்காமல்
    gkrishna

  8. #1617
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.



    எப்போது பார்த்தாலும் புதுமையாகவே தெரியும் நடிகர் திலகம்.

    இதில் முக்கியமாக ஒன்று கவனித்தேன்.

    பொதுவாக நடிகர்கள் கையில் எதுவுமில்லாமல் சும்மா நிற்கும் போது அந்தக் கைகளை, அல்லது கால்களை எப்படி வைத்துக் கொள்வது என்று திண்டாடுவார்கள். எஸ்.எஸ்.ஆர், ஜெமினி தேவயில்லாமல் இடுப்பில் விறைப்பாக கை வைத்துக் கொள்வார்கள்)

    (கோபால் கூட ஜெமினியைத் தாக்கியிருப்பார்)

    ஆனால் இதில் நடிகர் திலகத்தைப் பார்த்த போது அந்தக் கைகளையும், கால்களையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமல்லாமல் அதையே எவ்வளவு ஸ்டைலாகக் காட்ட வேண்டும் என்றும் பாடம் எடுத்து ஜமாய்க்கிறாரே!

    பாடலின் முதல் வரியில் ஜெயலலிதா படிக்கட்டுகளில் ஏறி மேலே ஒரு சிறு நீள்சமதள தரையில் நிற்கும் நடிகர் திலகத்திடம் செல்வார். அப்போது நடிகர் திலகம் ஒரு சிறு அழகிய மெதுவான நடை ஒன்றை நடப்பார். நான்காவது ஸ்டெப் நடக்க ஆரம்பிக்கும் போது கைகளை எடுத்து கோட்டைத் தூக்கி பேண்ட் முன் பாக்கெட்டுகளில் நுழைப்பார். பின் மெதுவாக அந்த நடையை மறுபடி தொடர்வார்.

    பாடலின் பல்லவி முடிந்து அருமையான அந்த ஷெனாய் ஓசை வரும் போது நடிகர் திலகம் தன் ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்து ஜெயாவிடம் ஒரு 'இச்' கேட்க ஜெயா மறுத்து பாறைகளின் மேலே ஓடி வருவார்.
    அப்போது நடிகர் திலகம் 'அடடா! மிஸ் ஆயிடுச்சே' என்பது போல வலது கையை லேசாக உதறி கால் முட்டி மீது வைத்து ஒரு செகண்ட் நிற்பார்.

    'இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்' வரியின் போது பாறைகளின் இறக்கத்தில் கால்களை சற்று மடக்கி நின்றபடி ஜெயாவின் கைகளை இங்கிருந்து அங்குவரை மோப்பம் பிடித்தபடி பெட்டியை வாங்குவார்.

    'காலமும் நமக்கினி சாதகமே' வரியின் போது பாருங்கள்... பாறைகளின் சரிவென்றாலும் ஜெயாவின் இடுப்பைத் தாங்கிப் பிடித்தபடி நிற்கும் கால்களின் கம்பீர ஸ்டைல்... லாங் ஷாட்டாக இருந்தாலும் கீழே கடல் அலைகள் ஆர்ப்பரிக்க அட்டகாசமாய் இருக்கும்.

    இராண்டாவது சரணத்தின் இடையிசையில் பாறையின் மேல் நடந்து வந்து அழகாய் நின்றபடி கை விரல்களைச் சொடுக்கி (சொடுக்கி விட்டு வலது கையை கால் முட்டிமீதும் இடது கையை இடுப்பின் மீதும் வைத்துக் கொள்வார்) பின்னால் நிற்கும் ஜெயாவைக் கூப்பிடுவார். ஜெயா அருகில் வந்ததும் மீண்டும் முன்னால் ஒரு நடை நடந்து கைகளை பின்னே கட்டி விசிலடித்தபடி தலையாலே சைகை செய்து மறுபடி ஜெயாவை அழைப்பார். ஒரு இடத்தில் கூட கை,கால்கள் தவறு பண்ணாது. மாறாக தன்னிகரில்லா ஸ்டைலைத்தான் காட்டும்.

    (நடுவில் 'போலீஸிடம் சொல்லி விடுவேன்' என்ற மிரட்டலில் ஜெயாவின் கன்னத்தை அவர் கைகளைக் கொண்டே தன் கைவிரல்களின் பின் பக்கங்களால் வருடச் செய்து காரியம் சாதிப்பார். கன்னம் தொட்ட கை விரல்களுக்கு தானே முத்தம் வேறு கொடுத்துக்கொள்வர்)

    'வைரமென்றே எனை நீ பாடு' என்று ஜெயா ஆடியபடி பின்னோக்கி நடக்க, நடிகர் திலகம் படு காஷுவலாக மறுபடியும் சொல்கிறேன் படுபடு காஷுவலாக ஒரு அலட்சிய நடை முன்னோக்கி நடப்பார்.

    'உன் மனமும் குணமும் நாடகம்' என்று பாடியபடி ஜெயாவைக் கை கோர்த்துக் கொண்டு கையில் சூட்கேசுடன் உற்சாகம் கொப்பளிக்க ஒரு வேக நடை நடப்பார் பாருங்கள்.

    பாடல் முடியும்போது (ஆஹா ஆஹா சுசீலா ஹம்மிங்) பெட்டியைக் கையில் மாற்றியபடியே நடந்து வருவது இன்னும் சூப்பர்.

    ஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்டி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே!

    கொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன!

    Last edited by vasudevan31355; 10th July 2014 at 07:50 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1618
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    ரொம்ப கஷ்ட படுத்துறீங்க (இன்ப கஷ்டம்)
    ஒரு பாட்டை எப்படி எல்லாம் கவனிகீறீர்கள் என்பதற்கு இந்த பதிவு மிக சிறந்த உதாரணம்
    மன்மத லீலை யை சீன் க்கு சீன் க்கு அலசியது போல் ராஜாவை ஒரு நாள் அலசுவோமா
    gkrishna

  10. #1619
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    படத்தில் முகவாய்க் கட்டையில் கை வைத்திருப்பவர் உதயசந்திரிகா. (தில்லானா மோகனாம்பாளி'ல் பாலாஜி மனைவி இவர்).

    udhayachandrika acted in velli vizha, also as Muthuraman's sister in kasethan kadavulada i guess

  11. #1620
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    M/s. Vasu / Krishnaji / Karthik:

    Outstanding entertainment. Special thanks to Vasu Sir for that pose from Raja; but, my favourite one is during the fight (before that long but interesting climax) between NT and Balajee in which NT's stance with cream colour shirt and pant with scarf...Wow. I remember Mr. Raghvender also shared some thing about this still photo some time back.

    Kalpana committed suicide and died, which was followed by another Kannada actress Vijayasree (NT's love interest in Babu). She was very famous for heroine oriented roles and was groomed by Puttanna Kanagal. However, both got separated. Irulum Oliyum's original was Puttanna's in which Kalpana acted as lead lady. Her way of wearing blouse with almost full sleeves with collar around neck was very famous. When this movie was remade as Irulum Oliyum, this was also copied by Vanisree!

    Bharathi only will almost like Saroja Devi; not Kalpana. Kalpana's is a unique face. Good talent; as usual wasted in Tamil.

    Regards,

    R. Parthasarathy
    To an extent Kalpana & bharathi were like SD. Kalpana was introduced by B.R.PAnthulu . If you see Karnan movie She will be the one who played the role of Dharma devathai , she will appear in the end in the battle field as well.

    She had relationship with Puttanna and Their combination movies were super duper hit, my fav is sharapanjara (what a performance by kalpana
    )

    what a rendition by PS

    she was called minugu thare (shining star), her dressing style was class.

    Puttanna brought Arthi in the movie NAgarahaavu( rajanagam in tamil) and Kalpana was not given any role and slowly she went into depression and finally committed suicide..

    both barathi & Kalpana are extremely talented artists .. Barathi went to act in all languages (including telugu & malayalam & lent her own voice in those languages too)

    bad that these 2 were not utilized in tamil that much.
    Last edited by rajeshkrv; 10th July 2014 at 08:49 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •