-
11th July 2014, 09:12 AM
#11
Junior Member
Veteran Hubber
RECAP FOR CONTINUITY
இது ஒருபுறம் இருக்க , நாடகங்களில் பல கதாபாத்திரங்களை சர்வ சாதாரணமாக நடித்து, போட்ட வேடம் அனைத்திற்கும் பல கரகோஷங்கள் பெற்று வந்த ஒரு இளம் வயது நடிகன் ...
அவர் தான் கலை கடவுள் கலைவாணியின் ஒரே தவப்புதல்வன் என்று என்றும் பல கோடி மக்கள் நம்பிகொண்டிருக்கும் நமது இப்போதைய நடிகர் திலகம் !
அப்போதைய v c கணேசன்.
நாடகங்களில் எந்த வேடமானாலும் அதை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து சக்கை போடு போடும் திறம் கொண்ட நடிகர் என்ற பெயர் மட்டும் இருந்தது.
தன்னுடன் இருந்த மற்ற நண்பர்கள் என்று கருதப்பட்ட சக நடிகர்கள் திரைப்படங்களில் அவ்வபோது தலைகாட்டிய வண்ணம் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தை விட 10 - 18 வயது மூத்த கலைஞர்கள். இருந்தாலும் தங்களுக்கு கதாநாயக வேடம் இல்லை என்றாலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து அந்த ஒரு சந்தற்பத்திர்க்காக காத்திருந்தார்கள் ஒரு சில நடிகர்கள்..
மற்றும் சிலரோ கதாநாயகன் வேடம் புனைந்தார்கள் என்றாலும் அவர்களால் தொடர்ந்து பரிமளிக்க முடியவில்லை, தொடர்ந்து படங்கள் கிடைக்கவும் வழியில்லை. தயாரிப்பாளர்கள் ஏனோ அவர்களை திரும்ப திரும்ப அணுகவில்லை. .ஆந்திரா நடிகர்கள் பக்கம் காற்று தொடர்ந்து வீசிகொண்டிருந்தது...!
தமிழ் நடிகர்கள் என்று கூறப்பட்டவர்கள், இந்த நிலை எவ்வளவு நாள் இனியும் தொடர்ந்துகொண்டு இருக்கும் என்று கவலைப்பட்ட நேரம் !
அப்படி இருக்கும்போது...அவர்கள் நிலையே நிரந்தரம் இல்லாதபோது அவர்கள் எப்படி நடிகர் திலகத்தையும் தங்களுடன் இணைக்க முடியும் ?
நிலைமை இப்படி இருக்க நாடகத்தின் மூலம் வரும் வருவாய் போதுமானதாக வருமா என்று ஒரு ஏக்கம் ஒருபுறம், வந்த வருமானத்தை வைத்து குடும்பத்தில் உள்ள (சுமார் 8 முதல் 10 பேர் தாய் தந்தையார் தவிர )அனைவரையும் காப்பாற்றி கரை ஏற்ற, தானும் கரை ஏற முடியுமா என்ற கவலை மற்றொருபுறம் ....
இப்படி ஒரு நிம்மதி இல்லாத நிலை இருந்தாலும் நாடகத்தில் நடிக்கும்போது தொழிலில் அப்படி ஒரு பக்தி. நேரம் தவறாமை, பேச்சில் கண்ணியம், செயலில் கண்ணியம், எந்த வேடமானாலும் திறம்பட நடித்தல் இப்படி அசாத்ய திறமை கொண்ட ஒரு நடிகர் ..இப்படி ஒரு கலைஞனை தமிழ் நாடக கலை மன்றம் அதுவரை கண்டதில்லை !
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th July 2014 09:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks