ராஜேஷ் அவர்களின் பங்களிப்புகள் அருமை. அரிதான, வித்தியாசமான, தகவல்கள் அடங்கிய அவரது பதிவுகள் திரிக்கு பெருமை. அவர் இப்படியே தொடர்ந்து அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜேஷ். இரவு நேரம் அழகாகத் திரியையும் முடித்து வைக்கிறீர்கள்.
ராஜேஷ் அவர்களின் பங்களிப்புகள் அருமை. அரிதான, வித்தியாசமான, தகவல்கள் அடங்கிய அவரது பதிவுகள் திரிக்கு பெருமை. அவர் இப்படியே தொடர்ந்து அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜேஷ். இரவு நேரம் அழகாகத் திரியையும் முடித்து வைக்கிறீர்கள்.
Nandri sir. edho anil madhiri en pangayum seyya muyarchikkiren
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி டாட்டடா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி வா
பக்கம் வந்து பக்கம் வந்து பார்க்க வா
பட்டு இதழ் தொட்டுக் கொள்ளவா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி டாட்டடா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி வா
உனக்கென்ன எனக்கென்ன ரகசியம்
ஒருதரம் அருகினில் வா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
அதே பி.பி.எஸ்ஸும், ராட்சஸியும்.
'டாட்டடா' கோரஸ் முடிந்தவுடன் ஈஸ்வரி 'ஹஹஹ்ஹஹா' என்று மயில் மாதிரி ஒரு அலட்சியக் கூவல் கூவுவாறே! ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம்.
கோரஸ், இசை, நடனம் என்று சகலமும் சிறப்பாக வேதாவின் கைவண்ணத்தில் ஆனந்தக் கூத்தாட வைக்கும் பாடல்.
Last edited by vasudevan31355; 11th July 2014 at 10:34 AM.
கண்ணம்மா படத்தின் 'தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' தங்களின் வித்தியாச ரசனையை எங்களுக்கு இன்னொருதரம் உணர்த்தி விட்டது. நன்றி சார்.
நவரசத்திலகம் முத்துராமன் திரியில் நமது அருமை கார்த்திக் சார் நீங்கள் கேட்டிருந்த 'கண்ணம்மா' படத்தைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்றை அற்புதமாக எழுதி இருந்தார்.
அதை நான் தங்களுக்காக மறுபதிவு செய்கிறேன்.
அருமையான் தகவல்களுடன் கூடிய அட்டகாசமான கட்டுரை. மேற்கொண்டும் இப்படத்தின் பாடல்களை நாம் அலசலாம்.
இப்போது கார்த்திக் சாரின் 'கண்ணம்மா' கட்டுரை
'கண்ணம்மா (1972)
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, (தென்னகத்துக்கு தேசிய விருதுகள் குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில்) தேசிய விருதை அள்ளிய செம்மீன் படத்தை இயக்கிய ராமுகாரியத், தமிழில் தயாரித்த வண்ணப்படம் கண்ணம்மா. இப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்கியவர் மா. லட்சுமணன்.
நாயகனாக நவரசத்திலகம் முத்துராமன், நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த இப்படத்தில் மிக அருமையான குணசித்திர பாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் நம்பியாரும், பாலாஜியும். பிற்காலத்தில் நம்பியார் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்துவங்கியபின் வந்த படமல்ல, அவர் வில்லனாக கொடிகட்டிப்பறந்த காலத்தில் வந்த படம். இப்படி ஒரு வேடத்தில் கொஞ்சமும் எதிர்பாராமல் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இன்னொரு திருப்பம் இப்படத்தின் பிரதான வில்லனாக நாகேஷ். அழகான பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாகக்கொண்ட காமுகன். இவர்தான் எந்த ரோலிலும் தூள் கிளப்புவாரே. அதகளம் பண்ணிட்டார். நீச்சல் குளத்தை ஒட்டிய, கண்ணாடி சுவர் வைத்த பாதாள அறையில் அமர்ந்து, குளிக்கும் பெண்களின் அழகை அவர்கள் அறியாவண்ணம் ரசிப்பது, பின் அவர்களில் ஒருவரை மிரட்டி படுக்கை அறைக்கு வரவழைப்பது போன்ற காமக் கொடுரங்களில் '24 மணிநேரம்' எக்ஸ்.டபிள்யூ.ராமரத்னம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு பிளே-பாய்.
நகைச்சுவை நடிகர் வில்லனாக கோட்டையைப் பிடித்தாரென்றால், வில்லன் நடிகர் குணச்சித்திர ரோலில் கொடிநாட்டினார். இரண்டு பெண்குழந்தைகளில் ஒன்றை இறந்தும், இன்னொன்றை உயிரோடும் பறிகொடுத்துவிட்டு பிள்ளைப்பாசத்தில் துடிக்கும் துடிப்பை நம்பியார் மிக அருமையாக காட்டியிருந்தார்.
அதிலும் பிளாஷ் பேக்கில் காட்டப்படும் காட்சி மனதை அதிர வைக்கும். ரங்கூனிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்குழந்தை இறந்துவிட, சொந்த ஊரில் கொண்டுபோய் இறுதிச்சடங்கு செய்ய கொண்டுவரும்போது, ரயிலில் உடன் பயணம் செய்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிணத்தை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியும்படி வற்புறுத்த, இவர் மறுக்க, இதனிடையே இறந்த குழந்தையின் பிணத்தை பக்கத்தில் கிடத்திவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, பயணிகள் அனைவரும் தொடர்ந்து விடாமல் நச்சரிக்க, அவசரத்தில் செய்வதறியாமல் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே வீசியெறிய, ஜன்னலைத்தாண்டி விழும்போது குழந்தை 'அப்பா'வென்று காத்த, அதிர்ச்சியில் "கண்ணம்மா" என்று நம்பியார் அலறும்போது தியேட்டர் மொத்தமும் அதிர்ச்சி அலையில்.
இன்னொருபக்கம் பாலாஜி, கண்சிமிட்டும் வக்கீல் பத்திரத்தை மிக அழகாக செய்திருந்தார். முத்துராமனுக்கு அளவான, அமைதியான கதாநாயகன் ரோல், மிக நன்றாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயாதான் வழக்கம்போல கொஞ்சம் ஓவராக அலட்டிக்கொண்டார். டைட்டில் அவர் பெயரிலாச்சே, அதுவும் ஒரு காரணமோ. இவர்களோடு ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக சுகுமாரி, முஸ்லிம் பெரியவராக ஓ.ஏ.கே.தேவர், நாயகனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக ஜெய்குமாரி நடித்திருந்தனர். (அழகான ஜெய்குமாரியை விட்டுவிட்டு, அவரைப்போல இருமடங்கு உருவம் கொண்ட மொக்கை கே.ஆர்.விஜயாவை நாயகன் காதலிக்கும்போது 'என்னய்யா உன் டேஸ்ட்டு' என்று தோன்றுகிறது நமக்கு).
இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல்கள் அனைத்தும் காதுக்கினிய மதுர கீதங்கள். நீண்ட நெடிய காலத்துக்குப்பிறகு இப்படத்தின் பாடல்கள் தற்போது தொலைக்காட்சிகளில் (குறிப்பாக 'முரசு' சேனலில்) ஒளிபரப்பாகின்றன.
கிராமத்து கல்யாண ரிசப்ஷனில் முத்துராமன் பாடுவதாக அமைந்த "எங்கெங்கும் என் எண்ணம், அங்கெல்லாம் உன் வண்ணம்" பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய இறுதிக்காலப் பாடல்களில் ஒன்று. நிஜமான கிராமத்து கல்யாண வரவேற்பு இசை நிகழ்ச்சி போலவே அமைத்திருப்பார் இயக்குனர். மேடையில் அமர்ந்து மடியில் 'புல்-புல்-தராங்' இசைக்கருவியை வைத்து இசைததவாரே ரொம்ப கேஷுவலாக நடித்திருப்பார் முத்துராமன். (இந்த -புல்-புல்-தராங்' இசைக்கருவி எங்கள் வீட்டிலும் ரொம்ப காலம் இருந்தது. இந்த இசைக்கருவியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' பாடல்தான்).
அடுத்த பாடல் விஜயாவின் கற்பனையில் கே.ஆர்.விஜயா, முத்துராமனுடன் டூயட் பாடுவதாக வரும் "அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு" என்ற சுசீலாவின் சோலோ பாடல். ஊட்டி கார்டனில் கண்களுக்கு குளிர்ச்சியாக படமாக்கியிருப்பார்கள். மெட்டும் அழகான மெட்டு. என்ன ஒன்று, விஜயா பல்வேறு மாடர்ன் உடைகளில் வந்து பாடாய் படுத்துவார். (அவரது கணவர் இப்படத்தின் துணைத்தயாரிப்பாளர் என்பதால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது?).
எனக்குப்பிடித்த இன்னொரு அருமையான பாடல் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா இணைந்து பாடிய "தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்". இப்பாடலில் முத்துராமனும் விஜயாவும் கேரளா முஸ்லிம் பணியில் உடையணிந்திருக்க, கேரளா சூழலில் படமாக்கப்பட்ட அழகான பாடல். கேரள ஏரியில் படகு சவாரி கண்களுக்கு விருந்து.
விஜயாவுக்காக சுசீலா பாடும் மற்றொரு பாடல், "செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே" என்ற பாடல். தன் வளர்ப்புத்தந்தை நம்பியார் அளிக்கும் விருந்தில் செல்வர்கள் கூடியிருக்க, தன் ஏழைக்காதலன் முத்துராமனை நினைத்துப் பாடும் பாடல். அனைத்துப்பாடல்களுமே சங்கர்-கணேஷ் இரட்டையர் உழைத்து உருவாக்கியிருந்தனர்.
படத்தின் டைட்டில் காட்சியில் சென்னை மௌண்ட்ரோட்டில் கேமரா பயணிக்கும்போது சாந்தியில் பட்டிக்காடா பட்டணமா, பிளாசாவில் பிள்ளையோ பிள்ளை, குளோப்பில் நான் ஏன் பிறந்தேன் படங்களின் கட்-அவுட் மற்றும் பேனர்களைக் காணலாம்.
எனது அனுபவம்: பட ரீலீஸின்போதே குளுகுளு மிட்லண்ட் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன். சற்று வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களின் வித்தியாசமான உருவாக்கம், நட்சத்திரங்களின் மாறுபட்ட நடிப்பு, இனிய பாடல்கள் மற்றும் இசை என எல்லாவிதத்திலும் எனக்குப்பிடித்திருந்தது
Last edited by vasudevan31355; 11th July 2014 at 10:37 AM.
Bookmarks