-
12th July 2014, 06:49 AM
#121
Junior Member
Newbie Hubber
K .c .s ,
காமராஜ் படத்தை மீண்டும் தூசு துடைக்க போகிறார்களாம் நன்றி கெட்டவர்கள். சிவாஜியை விட்டு விட்டு எவனாவது காமராஜ் சரித்திரத்தை சொன்னால் அது எப்படி சரித்திரமாகும்? காமராஜின் கடைசி நிகழ்ச்சியே சிவாஜியின் பிறந்த நாள்தானே? இருட்டடிப்பு செய்வதால் இவர்கள் எதை சாதித்தார்கள்?
கொஞ்சம் நீங்கள் இதில் கவனம் செலுத்தி,உரியவர்களிடம் சேர்ப்பீர்களா?
Last edited by Gopal.s; 12th July 2014 at 06:19 PM.
-
12th July 2014 06:49 AM
# ADS
Circuit advertisement
-
12th July 2014, 09:28 AM
#122
Junior Member
Newbie Hubber
திராவிட பேரழகன், மன்மதனை நாண செய்யும் உயிர்ப்பான விழிகள்,கத்தியை கூர்பார்க்கும் நாசி, ஆண்மையின் ஆதி சரித்திரம் சொல்லும் உதடுகள், பிரம்மனுக்கு சவால் விட்ட காது மடல்கள், தலைவனின் கம்பீரம்,தோழனின் நேசம்,காதலனின் இளக்கம் ,சகோதரனின் பாசம்,கலையின் சிருங்காரம் அனைத்தும் காட்டும் உடலமைப்பு, எத்தனை என்று எண்ண இயலா நடையழகை கூட்டிய கால்கள்,அதற்கு இசையும் கரங்கள் என்று பிரம்மா இவரை படைக்க தன்னை பல லட்ச வருடங்கள் அர்பணித்து ,மற்ற அனைத்து மாந்தரையும் தன் உதவியாளர்கள் கொண்டே படைத்து தள்ளினானோ ,என்று எண்ண வைக்கும்.
இந்த பேரழகன்,பாத்திரங்களுக்காக ,தன்னை உருமாற்றி சிதைத்து கொண்ட சரித்திரங்கள் ஏராளம். ஆனாலும் ஆண்மை நிறை அழகின் ஜொலிப்பு எல்லா நேரங்களிலும்,எல்லா கோணங்களிலும் விகசித்த பேரதிசயம் என் சொல்வேன்?
அதிலும் என்னை அடிமையாக்கிய சிறந்த பத்து.
1)சிவந்த மண் .
2)தங்க சுரங்கம்.
3)ராஜா.
4)சுமதி என் சுந்தரி.
5)வசந்த மாளிகை.
6)எங்க மாமா.
7)சவாலே சமாளி.
8)ராஜா ராணி.
9)கோடீஸ்வரன்.
10)செல்வம்.
Last edited by Gopal.s; 12th July 2014 at 09:31 AM.
-
12th July 2014, 11:29 AM
#123
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
Joe ,
தாங்கள் சொல்வதில் உடன்பாடும் உண்டு.எதிர்கருத்துக்களும் உண்டு.
1)face book போல ஒற்றை வரிகளில் நன்றி/பிடித்தம் என்று போட்டால் ,சில பதிவுகள் சரியாக சென்று சேர்ந்ததா என்றே இனம் காண முடியாது.
2)நிறைய உழைப்பை கோரும் பதிவுகளுக்கு சிறிதே வாசிப்பிற்கு இடம் விட்டு, எதிர்வினை தர வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.
3)நிறைய பிரபல எழுத்தாளர்களும்,ஒரு வார்த்தையில் ,உங்க எழுத்து பிடிக்கும் என்று சொல்வதை விட ,சில கதைகளை,எழுத்தின் பகுதிகளை சிலாகிப்பதையோ ,எதிர்ப்பதையோ விரும்புவதை கண்டிருக்கிறேன் ,கேட்டிருக்கிறேன்.
4)ஆனால் மொக்கையாக சூப்பர்,பின்னி விட்டீர்கள் ,நன்றி போன்ற பதிவுகளை பிடித்தம்/நன்றி கிளிக் பண்ணி காண்பித்து விடலாம்.
5)பிறந்த நாள்,landmark achievement appreciation எல்லாம் உழைப்பவர்களுக்கு ஒரு மரியாதை,நட்பின் பரிமாறல் என விட்டு விட்டு கடக்கலாமே?
6)criticism அவசியம். சூப்பர் பதிவை ரசிக்கும் போது ,திட்டையும் தாங்க வேண்டியது எழுதுபவரின் பொறுப்பு.
7)நிச்சயம் இது ஒரு interactive திரி .தாங்கள் சொல்வது போல நடிகர்திலகத்தை பற்றி செய்தி போட்டு விட்டு போய் கொண்டே இருக்க முடியாது.
8)இந்த விதத்தில் கார்த்திக் பாணி எனக்கு உவப்புடையது.எதிர்வினை/உடன்வினை/ புரிந்து கூடுதல் தகவல்களை பகிர்வார்.
கோபால்,
உங்கள் ஒவ்வொரு பாயிண்டுக்கும் பதில் இருக்கு .ஆனா நானும் அக்கப்போர் களத்தில் குதிக்க விரும்பல்ல.
தேவையில்லையென்று எதுவுமில்லை , தேவைக்கதிகமாக சென்று நோக்கத்தையே குலைக்காமல் இருக்கும் வரை .
ஆக மொத்தத்துல இப்ப நடந்துட்டிருக்கதுக்கு விமோசனமே கிடையாதுங்குறீங்க
-
12th July 2014, 11:42 AM
#124
Junior Member
Veteran Hubber
RECAP......FOR CONTINUITY
இரெண்டாவது திரைப்படம் அதுவும் மிக பெரிய ஜாம்பவான்கள் தயாரிப்பில் ....இந்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும்..என்னதான் திறமை இருந்தாலும் திரை உலகில் ஏற்கனவே உள்ள அவ்வளவு கதாநாயகர் மத்தியில் நிற்கமுடியுமா, நின்றாலும் நிலைக்க முடியும்மா இப்படி பல கேள்விகள்..!
சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற கேள்வி போய்...நிற்க முடியுமா ...நிலைக்கமுடியும்மா என்ற கேள்வி வருகிறது ..அடுத்த கட்டத்திற்கு போய் ஆயிற்று என்பதால் !
இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிவு செய்த பின்னர் பராசக்தி என்று பெயரிட்டு திரைப்படம்" தொடங்கபடுகிறது என்ற செய்தி பத்திரிகையில் வெளிவருகிறது !

"பராசக்தி" படபிடிப்பு தொடக்கம் -
மகிழ்ச்சி நிலைக்குமா ?
சற்றே பொறுப்போம் !
-
12th July 2014, 01:41 PM
#125
Junior Member
Veteran Hubber
ஒரு நல்ல காரியம் நடக்கும்போது நான்கு தடைகளும் கூடவே வருவது இயற்கைதானே நம் நாட்டை பொருத்தவரை.
அதே போலதான் பராசக்தி படபிடிப்பு நடுவிலும் வந்தது...
அது....
-
12th July 2014, 01:47 PM
#126
Junior Member
Veteran Hubber
படபிடிப்பில் கேமரா, lighting பார்பவர்கள், மற்றும் துணை ஆட்கள் மூலம் திரு AV மெய்யப்பன் அவர்களுக்கு கணேசன் என்ற இந்த இளம் நடிகரை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக தூபம் போடபடுகிறது...எப்படி என்றால்...
அதுவரை வசனத்தை பாடியே, மொனகியே நாயகர்கள் பேசுவதை பார்த்த இந்த புல்லுருவிகளுக்கு நடிப்பு என்ற ஒன்று இருக்கிறதென்றே தெரியாத இந்த கனவான்கள் ...திரு AV மெய்யப்பன் அவர்களிடம் சென்று...இந்த நடிகர் செய்வது எல்லாமே வித்தியாசமாக புதிர்ரக உள்ளது...பேசும்போது வாயை மீன் மாதிரி திறக்கிறார்...முகம் நீளமாக உள்ளது...மக்கள் இதெல்லாம் ரசிப்பது சந்தேகம்....இப்படி பல ஏதிர்மறை கருத்துக்கள் நடிகர் திலகம் காதுபடவும்...AVM இடம் காதுகடித்தும் கோள் மூட்டபடுகிறது..!
நடிகர் திலகம் பற்றி அதிகம் அறியாத AVM அவர்களும் இவர்கள் நீண்டநாட்கள் வேலை செய்பவர்கள் இவர்கள் கூறுவது உண்மையாக இருக்கும் என்று எண்ணுகிறார்....
இந்த எண்ணத்தால் திரு பெருமாள் அவர்களை அழைக்கிறார் !
எதற்க்காக ?
-
12th July 2014, 05:02 PM
#127
Junior Member
Veteran Hubber
STATISTICAL TID-BITS OF NADIGAR THILAGAM SIVAJI GANESAN -
THE REAL BOX OFFICE SAMRAAT OF ALL TIMES !
THE ONLY HERO WHO GAVE THE MOST NO OF STRAIGHT 100 DAYS RUN FILMS
(DATA GIVEN BELOW DOES NOT INCLUDE 100 DAYS RUN BY SHIFTING LIKE OTHERS) &

THE MOST NO OF SILVER JUBILEE HITS IN THE ENTIRE FILM WORLD !!
Last edited by RavikiranSurya; 12th July 2014 at 09:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th July 2014, 06:24 PM
#128
Junior Member
Veteran Hubber
நான் உண்மையை ஒத்துக் கொள்கிறேன். எனக்கு பதிவுகள் போட வராது. அதனால் ஒதுங்கி இருக்கிறேன். நல்ல பதிவுகளை ரசிக்கிறேன்.
அப்படியாவது என்னைப் போல் இந்த செந்தில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் இல்லை.
இன்ட்ரெஸ்ட்ட்டாக ஒரு பதிவும் இல்லை.
நன்றாகப் பதிவு போட்ட கார்த்திக் சாரும் இப்போது காணோம்.
ஆமாம் ! இந்த ரவி, ராகுல்ராம், கார்த்திக், வாசுதேவன், பார்த்தசாரதி, ராகவேந்திரன், பம்மலார் எல்லாம் ஏன் ஓடி விட்டார்கள். ஏன் ஓட மாட்டார்கள் இப்படி திரியில் போட்டு அறுத்தால்.by one "Rama Doss"
dear moderator of this thread/RKS Sir.
This posting by one "Rama Doss" is 'intentional' in order to keep me away from this thread. However such a personal attack on me, that too, suddenly by a gentleman who was 'off'the thread for a long time is unwarranted and regrettble. Perhaps due to his relative literacy deficit level, he was unable to understand my write-ups in a proper grammar structured pattern, as frequently appreciated by other well educated friends of this thread. If I go through his 'dust bin' quality write-ups I can also make very critical reviews, analyses and interpretations as a qualified doctoral holder that will really drive him getting admitted in his own "sethu" hospital as a coma psychy! Ever since I entered this thread I have not used such phrases or revealed my educational background but now due to the purposeful insult from a relatively low educated person compared to my standards I am forced to defend and retaliate like this only.
If that posting is not deleted by the moderator, let this also remain, reminding that gentleman his relative status of merit in this esteemed thread and what he is upto!.
I continue to write as my aim is only to contribute to the glory of NT and I am not answerable to such low standard and filthy postings which deserve immediate deletion (That Gentleman could have preferred to post a PM to me rather than making an attempt to degrade my name openly with a vested interest, eventually becoming the Jungleman of this thread)
Ravi and Raghul can kindly reply who made them to bow out of this thread. The other resource persons... I do not at all know any of them...better ask them too! the truth will come out and the cats too...!If this gentleman is a newbie hubber, how dare he addresses the stalwart seniors by their names in a tone without any respect...It shows that he may not be a newbie....and well known to have moved with these seniors!!
with regards,
Dr.S.Senthilvel
Last edited by sivajisenthil; 12th July 2014 at 08:40 PM.
-
12th July 2014, 08:17 PM
#129
Junior Member
Seasoned Hubber
Enjoying Watching Thillana Mohanambal in Sun Life.
Those who do not know please watch it.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th July 2014, 09:02 PM
#130
Junior Member
Veteran Hubber
பராசக்தியில் சிவாஜி கதாநாயகனாக நீடிக்கவேண்டுமா ? எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும் ? - மறுபரிசீலனை செய்யுங்கள் - av மெய்யப்பன் அவர்கள் கேள்வி
திரு pa பெருமாள் அவர்கள் திரு avm அழைப்பின் பெயரில் அவரை சந்திக்க செல்கிறார். அங்கு மிகபெரிய அதிர்ச்சி அவருக்கு காத்திருப்பது தெரியாமல் !
சென்று அமர்ந்ததும் திரு avm அவர்கள் இந்த புது பய்யன் சரியில்லை என்று அனைவரும் கூறுகிறார்கள்...அவன் பேசுவது, நடிப்பது எல்லாமே புதுமையாக இருக்கிறதாம், மிகவும் நோஞ்சானாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். பொதுமக்கள் ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று அபிப்ராயம் கூறுகிறார்கள். நம் ஆட்களிடத்தில் இப்படி ஒரு ரிசல்ட் கிடைக்கும்போது திரைப்படம் வெளிவந்தால் வெற்றிபெறுமா என்பது தெரியவில்லை ...!
எதற்கு இந்த ரிஸ்க் ? பேசாமல் எடுத்தவரை நஷ்டமானாலும் பரவில்லை. கே ர ராமசாமியை வைத்து முதலில் இருந்து எடுக்கலாம் என்று கூறுகிறார்.
இதை கேட்டதும் திரு பெருமாள் அவர்கள் அதை எதிர்கிறார். நோஞ்சானாக இருப்பது ஒரு குறை அல்ல...நன்றாக உணவு சாபிடவைத்தால் உடம்பு தேறிவிடும். மேலும் இந்த பய்யன் தனது முதல் படத்தில் நடிக்கிறான். நாம் இதிலிருந்து நீக்கிவிட்டால் அவன் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதற்க்கு நாம் ஆளாகக்கூடாது என்று வாதிடுகிறார்.
என்ன சொன்னாலும் avm அவர்கள் ஒத்துகொள்வதாக தெரியவில்லை. அவர் ஒரு business man என்பது ஒருபுறம் இருந்தாலும் எப்போதும் ஒரு minimum calculated risk மட்டுமே எடுத்து பழக்கப்பட்டவர்.
இப்படியாக படபிடிப்பு ஒரு முடிவுக்கு வராதபடியால் நிறுத்திவைக்க படுகிறது.
Last edited by RavikiranSurya; 12th July 2014 at 09:20 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks