Page 169 of 400 FirstFirst ... 69119159167168169170171179219269 ... LastLast
Results 1,681 to 1,690 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1681
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இங்கு தெரிந்த அனைத்தையும் ஒரே நாளில் கொட்டி தீர்த்து விடும் வெறியுடனே வர வேண்டியதில்லை. பதிவுகளுக்கு வேண்டிய spacing ,interraction ,digestion அவசியம். போட்டு ஒரு நாளைக்கு இருபது பக்கங்கள் என்று எல்லாவற்றையும் சமாதியாக்காமல்,மற்றவர் பதிவுகளுக்கும் இடமளித்தால் நலம்.

    இங்கு ரசிக்கவும் வரலாமே?தவறில்லையே?ஒரு பார்வையாளர் ஒரு நாள் எத்தனைதான் தாங்க முடியும்?மயில் தோகையானாலும்,ஒரு அளவு மேல் வண்டியில் ஏற்றினால் அச்சு முறிந்து விடும் என்று வள்ளுவன் கூறியுள்ளானே?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #1682
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டிங் டிங் டாங் டிங் டாங் டிங்கிலோலா நீச்சல் குளத்திலா?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1683
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஒரு உண்மையான தமிழ்க்கவிஞன் மாயவனாதனை நினைவுகூர்ந்த கோபால், ராஜேஷ், ராகவேந்தர், கிருஷ்ணா மற்றும் அன்புள்ளங்களுக்கு நன்றி. இதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.

    திரு மாயவநாதன் இயற்றிய பல பாடல்கள் இங்கு நினைவு கூறப்பட்டன. நண்பர்கள் சொல்ல மறந்த ஒரு அருமையான பாடலை பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பால் கோவலன் கொலைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு, பலிபீடத்தில் அவன் தலை வெட்டப்பட்ட அடுத்த கணம் கணீரென்று அசரீரியாய் ஒலிக்கிறது ஒரு குரல்

    "நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?. அல்லது நீயும் சென்று அந்தக்கொலைக்களத்தில் உயிர் விட்டாயா?"

    என்ற தொகையறாவை தொடர்ந்து துவங்குகிறது பல்லவி, அருளிசைப் பாடகி கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரலில்....

    அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
    நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.

    காலடி தாமரை நோவதை மறந்து காதலனோடு நடந்தாளே
    அந்தக்காலனும் தொடர்ந்து நடந்ததை எண்ணி கற்புக்கரசி துடித்தாளே
    அடையாகதவாய் இமையா விழியாய் ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே
    இன்று விளையாநிலத்தின் விதையாய்ப்போன வேதனையறிந்து தவித்தாளே

    (ஆகா என்னவொரு வார்த்தை ஜாலம்.., சொற்சிலம்பம்...,)

    அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
    நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.

    வெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற நிழலால் பயனென்ன
    கெஞ்சி வேண்டியபோது ஒதுங்கிய நீதி வந்தேன்ன போயென்ன
    உயிரே போனபின் உடலெனும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன
    செய்யா பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதியென்ன
    செய்தவன் கதியென்ன
    பிழை செய்தவன் கதியென்ன

    சுதர்சனத்தின் அதிரடி இசையுடன் பாடல் நிறைவுறும்.

    என்ன அருமையான பாடல், என்னவொரு கருத்துச்செறிவு, என்னவொரு சொல்லாடல்... ஆகா இவ்னடா கவிஞன். நாயகர்களை துதி பாடியவர்களை பெருங்கவிஞர்கள் என்று கொண்டாடிய நம் சிறுமதியை என்ன சொல்வது?

    முதலில் இப்பாடலின் பல்லவியை

    அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
    நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது

    என்று எழுதினார் மாயவநாதன். ஆனால் 'தெய்வம் எங்கே சென்று விட்டது என்று நான் பாடலாமா? அதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கே.பி.எஸ். கேட்க 'தெய்வம் இங்கே வந்து விட்டது' என்று மாற்றி, அந்த வரி வரும்போது கண்ணகி கையில் சிலம்போடு பொட்டல்வெளியில் கோபாவேசத்தோடு வருவதாக காட்டியிருப்பார்கள்.

    படம் : "பூம்புகார்....

  5. #1684
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post

    கார்த்திக் சார்,

    அன்று கொல்லும் அரசின் ஆணை பாடலை படு விவரமாக நினைவு கூர்ந்து (மாற்ற பட்ட வரிகள் உட்பட) சொன்ன விதம் சுகமோ சுகம்.

    இவர் காகித ஓடத்தில் ஏறாமல் போனது வருத்தமே.

    இவரின் இன்னொரு வசீகர பாடல் திரை இசை திலகத்தின் கை வண்ணத்தில் தொழிலாளியில் என்ன கொடுப்பாய்,என்ன கொடுப்பாய்.

    இந்த பாடலும்,காதல் எந்தன் மீதில் பாடலும் cute என்று சொல்ல வேண்டிய ரகம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1685
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...

    மூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....

    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000

    (ராஜேஷ் சார், நூல்வேலி படத்தின் பாடலுக்கான தங்கள் பின்னூட்டத்தை பார்த்தபின் வேண்டுகோள் விடுக்கத் தோன்றியது. வருத்தப்பட வேண்டாம்)..
    Last edited by mr_karthik; 12th July 2014 at 01:11 PM.

  7. #1686
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    இதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.
    டி.கே.ராமமூர்த்தி தவிர.....???????????
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1687
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    நான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...

    மூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....

    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள்
    தயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000
    அன்பு கார்த்திக் சார்/கோப்ல சார்

    நீங்கள் இருவரும் சில improvement suggestions கொடுத்து உள்ளீர்கள்

    என்னுடைய வேண்டுகோள்

    ஒரு உதாரணத்திற்கு எந்த பதிவில் எப்படி இருந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் எனக்கு கொஞ்சம் புரிந்து கொள்ள வசதி ஆக இருக்கும் . நான் இதை positive feedback ஆகவே எடுத்து கொள்கிறேன்

    நான் நிறையவே சொல்புத்திகாரன் .கொஞ்சம் தான் சுயபுத்தி
    .
    gkrishna

  9. #1688
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    டி.கே.ராமமூர்த்தி தவிர.....???????????
    அவரையும்தான். (அடுத்தவரை மட்டம் தட்டாது சரியான முறையில் நினைவு கூறப்பட்டால்)..

  10. #1689
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    நான் சொன்னது நண்பர் ராஜேஷ் அவர்களின் பதிவு குறித்து. (பதிவில் மாற்றம் செய்திருக்கிறேன் பாருங்கள்)

    மற்றபடி பதிவுகளின் எண்ணிக்கை குறித்து நான் எதுவும் சொல்லவில்லை.

    பதிப்பவர்களுக்கே சிரமம் இல்லாதபோது
    படிப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன்
    Last edited by mr_karthik; 12th July 2014 at 01:25 PM.

  11. #1690
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி கார்த்திக் சார்

    என்னுடைய பதிவில் ஏதாவது தவறு அல்லது improvement தேவை என்றால் நீங்கள் பதிவை குறிப்பிட்டு தவறை சுட்டி காட்டீர்களானால்
    திருத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்

    இந்த வேண்டுகோள் எல்லோருக்குமே பொதுவாக வைக்கப்படும் ஒன்று

    அதே போல நேற்று விடுதலை படத்தில் பாடல்கள் சரியாக அமையவில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன். அது நம் NT அல்லது ரஜினி ரசிகர்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் என்றால் அதையும் திருத்தி கொள்ள தயார் ஆக இருக்கிறேன்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •