Page 172 of 400 FirstFirst ... 72122162170171172173174182222272 ... LastLast
Results 1,711 to 1,720 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1711
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கரஹர ப்ரியா.

    மையலான ராகத்தை சமையல் கொண்டே விவரிக்கலாம்.நன்கு சர்க்கரை பாகு காய்ச்சி வையுங்கள். ஒரு கம்பி பதம். இதை வைத்து லட்டு,பூந்தி,மைசூர் பாகு,ஜாங்கிரி,பாதுஷா என்று பல பல item செய்து வெட்டலாம் இல்லையா ,அப்படி ஒரு சர்க்கரை பாகு இந்த ராகம்.

    இதமான மெலடியுடன் இழையோடும் மெல்லிய சோக ரசம் கொண்ட கருணை சுரக்க வைக்கும் அதிசயம் இந்த ராகம்.

    ஹரப்ரியா என்ற பெயர் பின்னால் திரிந்தது. ஹிந்துஸ்தானியில் காஃ பி என்ற பிரிவில் வரும் மேளகர்த்தா சம்பூர்ணமே. பல ஜன்ய உறவினர்கள் வச வசவென்று. உங்களுக்கு ஏற்கெனெவே சிலரை அறிமுக படுத்தி விட்டேன்.ஆபேரி,ஆபோகி,பிருந்தாவன சாரங்கா,காபி,ரீதி கௌளை ஆகியவர்களை உங்களுக்கு தெரியும்.

    இந்த ராகம் versatile ,fluid and flexible என்ற வகையில் கற்பனை நீட்சியை தடையின்றி அனுமதிக்கும் நண்பன்.ஸ்வரங்களின் இடைவெளி மிக சீரானது.கமகம் (variation of pitch of notes )கொண்டு டோனை மேல் அழுத்தம்,கீழ் அழுத்தம்,ஊசலாட்டம்,திடீரென்று மேலெழுப்பும் உயர் பிட்ச் என்று இஷ்டத்துக்கு விளையாட அனுமதிக்கும் ராகம்.

    ஒரு பாடல் டூயட் தான் .சிறு வயதில் எனக்கு மிக மிக பிடித்த இரட்டையர்களின் இசையில் டி.எம்.எஸ் சுசிலாவில் பாடல்.ரொம்ப அழகான பாடல்.peppy ஆக இருக்கும்(recording கொஞ்சம் தேய்ந்தாற்போல ஒலிக்கும். ஆனால் archestration ஆரம்பமே களை கட்டும்.)என்ன ஏமாற்றம் .படம் பார்க்கும் போது மகாராஜன் உலகை ஆளவில்லை.இரவும் நிலவுமே வளர்ந்தது.நண்பன் குறிப்பிட்ட காரணம் தஞ்சை கோவிலில் படமாக்கியதால்,தமிழ் nativity வந்து,கைவிட பட்டது என்றான் .இன்னும் ஒரு ஓரத்தில் என் மூன்றாவது பிரிய ஜோடியுடன் இந்த பாடலை காணாமல் போனோமே என்று மனம் எங்கும்."மகாராஜன் உலகை ஆளலாம்"

    கவிஞர் தான் பிரித்து ,ஆதரித்து, போஷித்த ஒரு இசையமைப்பாளரை குழந்தை என்றே எண்ணி போஷித்து,ஒரு தமிழ் மேதையை வஞ்சித்தார்.இந்த கேரள குழந்தையோ கவிஞர்தான் உண்மையில் குழந்தை என்று நிரூபித்து விட்டது. ஒரு போட்டியாளரை ,கவிஞருக்கு எதிரான நடிகருடன் சேர்த்து வளர்த்து கண்ணதாசன் வயிற்றில் அடிக்க பார்த்தது. கவிஞர் முதலில் சிணுங்கி ,பிணங்கினாலும் ,ஒரு பாடலை கேட்டு போட்டியாளரை அங்கீகரித்து தடவி கொடுத்தார்.
    "மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் ".

    அந்த நடிக மேதையின் 1976 க்கு பிந்திய படங்கள் பிரம்மாண்ட வெற்றிகளை பெற்று மேதைக்கு மகுடம் கொடுத்து கொண்டிருந்தாலும் ,உண்மையான கலை ரசிகர்கள் வருத்தத்தில் மிதந்தார்கள்.அந்த வாட்டம் போக்க நடிக இமயமும் ,அவரின் பரம ரசிகரான இயக்குன இமயமும் இணைந்து உரிய மரியாதை செய்தனர் உண்மை ரசிகர்களுக்கு. ஆனால் மத்திய அரசோ ,ராஜீவின் நண்பரின் விஷ பாம்பு குணம் கொண்ட வஞ்சக மனைவி எம்.பீ விவகாரத்தில் கணவரின் தோல்வியை தாங்காமல் கழுத்தறுக்க ,தனக்கு இந்த கலைஞனை கவுரவித்து ,அந்த பட்டத்துக்கு உரிய பட்டத்தை மறுத்து விட்டு ,தீரா பழியை தேடி கொண்டது.வேஷம் மாறியும் ,இந்த சாமிக்கு மகுடம் ஏறலை."பூங்காற்று திரும்புமா ,என் பாட்டை விரும்புமா".

    என்னை கவர்ந்த பிற பாடல்கள்.

    இளங்காற்று வீசுதே- பிதா மகன்.

    பச்சை நிறமே பச்சை நிறமே-அலை பாயுதே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1712
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை கார்த்திக். இன்னொன்னு தெரியுமோ?இந்த வேடிக்கை ரிலாக்ஸ் பாடலை படமாக்கும் போது நடிகர்திலகத்துக்கு 104 டிகிரி காய்ச்சல்.

    Last edited by Gopal.s; 12th July 2014 at 07:43 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1713
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
    அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'

    முடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.

    அது என்ன ஒயிலா
    அது என்ன அழகா
    அது என்ன அற்புதமா
    அது என்ன நளினமா
    அது என்ன வெறுப்பா
    அது என்ன துன்பமா
    அது என்ன ஸ்டைலா
    அது என்ன நடையா

    முடிந்தால் சொல்லுங்கள்.

    கார்த்திக் சாருக்கு இன்று இரவு என்னை தூங்க விடாமல் செய்வதில் அப்படி என்ன இன்பமோ? ஹும். (நாகையா பெருமூச்சு)
    Last edited by vasudevan31355; 12th July 2014 at 09:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1714
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    honey honey male voice saibaba ( andha pakkam vaazhbavan fame)

  6. #1715
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    karthik sir, suggestion taken will avoid quoting

  7. #1716
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    honey honey male voice saibaba ( andha pakkam vaazhbavan fame)
    thank u rajesh.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1717
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    கவி மாயவநாதன் பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை ராஜேஷ் சார்

    அது போல் தான் மெல்லிசை மன்னர்கள் அல்லது திரை இசை திலகம் போன்றவர்கள் மாயவநாதன் போன்றவர்களை அரவணைத்து இருக்க வேண்டும்
    கிருஷ்ணா சார், திரையிசைத்திலகம் மாமா அவர்கள்தான் மற்றவர்களுக்கும் நிறைய வாய்ப்பு வழங்கினார் .. மருதகாசி ஐயா போன்ற்வர்களுக்கு எப்பொழுதும் வாய்ப்பு வழங்கியது கே.வி.மகாதேவன் அவர்கள்


    இதோ ஞானக்குழந்தையில் மருதகாசி ஐயாவின் கைவண்ணத்தில் மகாதேவனின் இசையில் இசையரசி இசைத்த அற்புத கானம்
    இதில் மெட்டுக்குள் அடங்க ஓசஒ கொடுத்த நாயகியே ஈசன் ஒரு பாதி தனை கொண்ட நான்முகியே சுரலய ஓசை கொடுத்த நாயகியே என அந்த சுரலய என்ற வார்த்தை பிரயோகம் அருமை ..


  9. #1718
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஜாலி ஆபிரகாம் -
    இவருடைய தமிழ் உச்சரிப்பு விவாதத்திற்குரியது என்றாலும் குரல் சொக்க வைத்து விடும். பெரும்பாலும் மெல்லிசை மன்னரின் இசையில் தான் இவர் அதிகம் பாடியிருக்கிறார். பாடிய அனைத்துப் பாடல்களும் மறக்க முடியாதவை.



    இவர் பாடிய பாடல்களில் அக்னிப் பிரவேசம் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் இவர் பாடிய இப்பாடல் ஒரு முறை கேட்டாலே போதும் நெஞ்சில் உடனே நிலைத்து விடும்.

    கேளுங்கள்

    http://www.inbaminge.com/t/a/Agni%20Pravesam/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1719
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1978ல் வெளிவந்த அவள் ஒரு அதிசயம், விட்டலாச்சாரியாவின் புதல்வர் ஸ்ரீநிவாஸ் இயக்கிய திரைப்படம். ஜெய்சங்கர் ஸ்ரீப்ரியா நடித்து விஜய பாஸ்கர் இசையமைத்த திரைப்படம். இதில் இரு பாடல்கள் மிகவும் இனிமையானதாகும்.

    அடி கண்மணி வண்ணப் பூங்கொடி மற்றும் சொர்க்கத்தைப் பார்க்கிறேன் உன்னிடம் ...

    நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பாடல்கள்.. இன்றைய பொழுது இப்பாடல்களை முணுமுணுத்தவாறே சென்று விடும். It will leave a hangover on you to last long.

    Listen:

    http://www.inbaminge.com/t/a/Aval%20Oru%20Athisayam/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1720
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கார்த்திக்
    தங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு மாறுதலுக்காக அவ்வப்பொழுது அந்த பழைய பாடல்களை நினைவூட்டிக் கொள்வோமே என்கிற எண்ணமே காரணம்.

    வாசு சார்
    கூடிய விரைவில் தாங்கள் கோரிய பூவா தலையா இசையைத் தொகுக்க முயல்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •