-
13th July 2014, 10:29 AM
#1721
Senior Member
Seasoned Hubber
மகராசி வாழ்க... மெல்லிசை மன்னரின் இசையில் மறக்க முடியாத அத்தாணி மண்டபத்தில் பாடல் நம் அனைவர்க்கும் நினைவிருக்கும். ஆனால் இதே படத்தில் வாணி பாடிய இப்பாடல் எப்பேர்ப்பட்ட ஈடு செய்ய முடியாத குரல் வளம் கொண்ட பாடகியை இந்தித் திரையுலகம் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பது நம் மனதில் தோன்றும் எண்ணம்.
குறிப்பாக இப்பாடலில் உள்ள நுணுக்கங்கள் வாணி ஜெயராம் அவர்களால் மட்டுமே சாத்தியம்.
பாடலின் பதிவுத்ததரம் நடுவில் சற்றே குறைகின்றது. என்றாலும் நினைவில் நீங்கா பாடலாயிற்றே..
வேகம் என்ற வார்த்தை சொல்லும் போது அவர் தரும் சங்கதியும் பின்னணியில் தபேலாவின் இணைப்பும் நம்மை சொக்க வைக்கும்.
http://www.inbaminge.com/t/m/Maharasi%20Vazhga/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th July 2014 10:29 AM
# ADS
Circuit advertisement
-
13th July 2014, 10:42 AM
#1722
Junior Member
Newbie Hubber
வேந்தரே,
அட்டகாசம். என்னா choice !!!!எல்லாமே புதிசு. எனக்கு இந்த திரியில் ,இது வரை தெரியாத பாடல்கள் என்றால் தெனாலி ராமன் ரீதி கவுளை பாடலும்,பஞ்சமியுமே.இது இரண்டையும் பதித்தவர் நீங்களே.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th July 2014, 01:06 PM
#1723
Senior Member
Seasoned Hubber
-
13th July 2014, 01:46 PM
#1724
Junior Member
Newbie Hubber
ஏ.எல்.ராகவன்.
தமிழில் சீர்காழி,டி.எம்.எஸ்,சி.எஸ்.ஜெயராமன் என்ற வன் குரலாளிகள் ,மெலடி கழுத்தை நெரித்து கத்திக் கொண்டு சங்கீதம் கத்த(எல்லா ஹீரோக்களுக்கும்),தமிழ் பட மெல்லிசை பாடல்கள் intensive care unit இல் coma நிலையில் இருக்க,ஹிந்தி பாடல்கள் கோலோச்சி நின்றன 1950 களில்.
கொஞ்சம் .ராமநாதன் புண்ணியத்தில் சுத்த சங்கீதத்தில் பிழைத்து நின்றன.ராஜாவும்,ராகவனுமே மென் குரல் இசையை மேன்மையாக்கி நின்றனர்.ஆனால் பீ.பீ.எஸ் வந்து விஸ்வரூபம் எடுக்கும் வரை இவர்கள் இருவருமே மெல்லிசையை ஓரளவு காப்பாற்றி நின்றனர்.
சுப்புராமனின் தேவதாஸ்,ஏ.எம்.ராஜாவின் கல்யாண பரிசு,கே.வீ.எம் மின் முதலாளி,வண்ணக்கிளி ,ஜி.ராமநாதனின் உத்தம புத்திரன் ,மெல்லிசை மன்னர்களின் பாக பிரிவினை ஓரளவு தமிழ் இசையை முன்னெடுத்து சென்றாலும்,தமிழ் பட இசை தழைத்தது மன்னாதி மன்னன்,பாவ மன்னிப்பு,தா வரிசை படங்கள்,தேன் நிலவு போன்ற திருப்பு
முனைகளால்தான்.
அப்போது சீர்காழியும்,சி.எஸ்.ஜெயராமனும் முன்னணி கதாநாயகர்களுக்கு பொருத்தமற்றவர்கள் ஆகி விட, டி.எம்.எஸ் முன்னணி பாடகராக மெல்லிசைக்கு தன்னை பொருத்தி கொண்டாலும்,ஹிந்தியில் ஒரு ஆறு பாடகர்கள் variety கொடுத்தது போல இல்லாமல் , வேறு பட்ட குற்ற குரல் வளம் இன்றி ,இசையமைப்பாளர்கள் வாடி கொண்டிருக்க,பருவ மழையாக ஏ.எல்.ராகவன்,ஏ.எம்.ராஜா.,பீ.பீ.ஸ்ரீநிவாஸ். ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக சாதித்தாலும்,முன் கோபத்தால் எதிரிகளை உற்பத்தி செய்து ஒதுக்க பட்டார். ஏ.எல்.ராகவன் குரல் ஜெமினிக்கு படு பொருத்தம்.(மற்ற இருவரை விட)ஆனா ஆவன்னா ஜெமினி பேசுவதை கேட்டு,ஏ.எல்.ராகவன் பாடுவதை கேட்போருக்கு புரியும். ஆனால் முக்கிய கதாநாயகர்களுக்கு டி.எம்.எஸ்,ஜெமினிக்கும் ,இரண்டாவது நாயகர்களுக்கும் பீ.பீ.எஸ் என்று சூத்திரம் வரைய பட்டு விட ,ராகவன் நகைச் சுவைக்கும்,சீர்காழி அசரீரிக்கும் தள்ள பட்டனர்.
அதையும் மீறி ராகவனின் மனதில் நிற்கும் அற்புத பாடல்கள். (ஏ.எல்.ஆர,பீ.பீ.எஸ் இருவரின் சோகம்,,காதல் ஒரே மாதிரி தொனிக்கும்)
இன்பமான இரவிதுவே ,காதல் என்றால்,அன்று ஊமை பெண்ணல்லோ,திங்களுக்கு என்ன இன்று ,கால்கள் நின்றது ,தீர்த்த யாத்திரைக்கு ,அத்தான் என்றேன் முத்து முத்தாக என்ற காதல் பாடல்கள்,
எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதல் சோகம்.
பார்த்தீரா ஐயா ,வானும் நிலமும், வாழை தண்டு போல உடம்பு என்ற காமெடி பாடல்கள்.
மேற்கத்திய பாணி boy பாய்,பாயின்னா பையன்,பார்த்ததும் காதலை .
ராகவனின் மணிகள் (samples )
Last edited by Gopal.s; 13th July 2014 at 01:52 PM.
-
13th July 2014, 03:51 PM
#1725
Senior Member
Diamond Hubber
கோபால் சார்,
அசத்தலான பதிவு.
ராகவன் எனக்குப் பிடித்த பாடகர். இவர் குரல் வளம் ஒரு புறம் இருக்கட்டும். presentation ரொம்ப அற்புதம். பல்வேறுபட்ட திறமைகள் கொண்டவர்.
சோவுக்குப் பொருந்தாவிட்டாலும் "அந்த ஏழை வாழ்வு சிம்பிள்" great.
நகைச்சுவைப் பாடல்களில் இவரின் நையாண்டிகள் நகாசு வேலைகள் சுகமோ சுகம். ராகவன் பாடினாலே அப்பாடலுக்கு நாகேஷ் நடித்திருப்பார் என்ற நினைப்பு வருமளவிற்கு நாகேஷுக்குப் பொருந்தியவர்.
'அட இந்தாம்மே! நடைய மாத்து'
'போட்டுடாதே'
வாழைத்தண்டு போல வளமையான குரலில் நம்மை வழுக்கி விழச் செய்தவர்.
அது போல நீங்கள் குறிப்பிட்ட பூஜைக்கு வந்த மலரின் 'கால்கள் நின்றது நின்றதுதான்' என்னுடைய பேவரைட்.
ஆனால் மனிதர் பண்ணின மகத்தான சாதனை என்ன தெரியமா. நான் யார் தெரியுமா பாட்டில் தரும் அந்த எக்கோ வாய்ஸ். ரொம்ப கஷ்டம் கோ. தொலைகாட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியது.
"இப்போது இருக்கும் தொழில் நுட்ப நுணுக்கங்களில் எப்படி வேண்டுமானாலும் என்ன தேவையானாலும் எதை வேண்டுமானாலும் இசையில் கோர்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காலத்தில் 'பார்த்ததும் காதலை' பாடலில் வரும் 'பெபபி பெபபி' என்று என் குரலிலேயே எக்கோ கொடுக்க ரொம்ப சிரமப்பட்டேன்".
உண்மை! செம வெரைட்டியாக இந்தப் பாடலில் பிளந்து கட்டியிருப்பார் ராகவன்.
அது போல இவர் பாடல்களை கேட்கும் மாத்திரத்தில் உற்சாகம் நம்மையறியாமல் தொற்றிக் கொள்ளும்.
தங்கைக்காக படத்தில் நாகேஷ் கூத்தடிக்கும் பாடல்.
'அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல'
சிலோனின் பொப்பிசை போல மனசை சிறகடிக்க வைக்கும் பாட்டு.
அடுத்து 'சுமதி என் சுந்தரி'யில் அற்புதமாக ரயிலில் படமாக்கப்பட்ட
'எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும்' ராட்சஸியோடு ராகவன் ரகளை.
(ஆஹா! இந்தப் பாடலில் ஒவ்வொரு கலைஞர்களிடமும் கொப்பளிக்கும் உற்சாகத்தை ஒரு கட்டுரையாகவே வடிக்கலாம். என்ன ஜாலி! என்ன ஜாலி) இதே போல இதற்கு முன்னாடி வெளிவந்த 'நீலகிரி எக்ஸ்பிரெஸி'ல் இதே போல இன்பத்தை அள்ளித் தரும் பாட்டு 'வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு" ராகவன் கலக்காதது. டிரெயினில்.
சாத்தனூர் அணைக்கட்டில் பாலாஜிக்கு பட்டு சிறகு கொடுத்து நம்மை காலம் முழுக்க கட்டி போட்ட விந்தை. (இதுவும் ராட்சஸியோடு)
ராகவன் அருமையான 'கிளாஸ்'கள் கொடுத்திருந்தாலும் என்னுடைய வோட்டு அவருடைய ஜனரஞ்சகங்களுக்கே.
கோபால்,
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். என் அபிமானப் பாடகரை எடுத்து கௌரவப்படுத்தி நினைவு கூர்ந்து என்னையும் நினைவு கூறச் செய்ததற்கு.
எனக்குப் பிடித்த உங்களின் பதிவுகளில் முக்கியமானது இது. உங்கள் எழுத்துக்களினால் அல்ல. ராகவன் அதில் கலந்ததினால்.
Last edited by vasudevan31355; 13th July 2014 at 03:59 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th July 2014, 03:58 PM
#1726
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ஏ.எல்.ராகவன்.
ராகவனின் மனதில் நிற்கும் அற்புத பாடல்கள். (ஏ.எல்.ஆர,பீ.பீ.எஸ் இருவரின் சோகம்,,காதல் ஒரே மாதிரி தொனிக்கும்)
இன்பமான இரவிதுவே ,காதல் என்றால்,அன்று ஊமை பெண்ணல்லோ,திங்களுக்கு என்ன இன்று ,கால்கள் நின்றது ,தீர்த்த யாத்திரைக்கு ,அத்தான் என்றேன் முத்து முத்தாக என்ற காதல் பாடல்கள்,
எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதல் சோகம்.
பார்த்தீரா ஐயா ,வானும் நிலமும், வாழை தண்டு போல உடம்பு என்ற காமெடி பாடல்கள்.
மேற்கத்திய பாணி boy பாய்,பாயின்னா பையன்,பார்த்ததும் காதலை .
டியர் கோபால் சார்,
ஏ.எல்.ராகவன் பற்றிய நினைவு கூறல் பதிவு அருமை அவர் பாடிய பாடல்களின் பட்டியலும் கூட. அவருடைய 'கால்கள் நின்றது நின்றதுதான்' பாடலை எங்கு கேட்டாலும் என் கால்கள் நின்றது நின்றதுதான்.
அவர் பாடிய மேலும் சில நல்ல பாடல்கள் நினைவுக்கு வந்தவை...
வாழைத் தண்டு போல உடம்பு அலேக் (பணமா பாசமா)
இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா (சித்தி)
சீட்டுக்கட்டு ராஜா.. ராஜா (வேட்டைக்காரன்)
போடச்சொன்னா போட்டுக்கிறேன் (பூவா தலையா) ஸ்ரீகாந்துக்காக.
சாமி இல்லாமல் ஊர்கோலமா..தாலி இல்லாமல் கல்யாணமா
இப்படி எத்தனையோ..
அவரிடம் பிடிக்காதது, எந்த விழாவுக்கு போனாலும் 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடலை மட்டுமே பாடுவது. ஒரு சில பாடகர்கள் / பாடகிகள் ஏன்தான் இப்படி ஒரே பாடலைப்பாடி அறுக்கிறார்களோ....
சுசீலாவா.... 'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல'
வாணியா... 'மல்லிகை என் மன்னன் மயங்கும்'
மாலதியா.. 'மன்மத ராசா.. மன்மத ராசா'
ராட்சசியா... 'காதோடுதான் நான் பாடுவேன்'
மஞ்சள் சட்டை கருப்பு கண்ணாடியா... 'வாழை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்'
மாணிக்க விநாயகமா... 'கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி'
கொடுமைடா சாமி......
-
13th July 2014, 04:13 PM
#1727
Senior Member
Veteran Hubber
// 'சுமதி என் சுந்தரி'யில் அற்புதமாக ரயிலில் படமாக்கப்பட்ட
'எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும்' ராட்சஸியோடு ராகவன் ரகளை.
(ஆஹா! இந்தப் பாடலில் ஒவ்வொரு கலைஞர்களிடமும் கொப்பளிக்கும் உற்சாகத்தை //
டியர் வாசு சார்,
இந்தப்பாடலை 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் வரிசையில் எடுத்து அலசி ஜமாயுங்களேன். மிகப்பொருத்தமான பாடல். எல்லா நகைச்சுவை நடிகர்களுடன் 'நம்ம' ஜெய்குமாரியும் இருக்கிறார்....
-
13th July 2014, 07:00 PM
#1728
Junior Member
Newbie Hubber
சிறு வயதில், ஒரு பாட்டில் மோகம் என்றால் மோகம்.அப்படி ஒரு மோகம். கே.ஜே .ஜேசுதாஸ்-எல்.ஆர்.ஈஸ்வரி,கண்ணதாசன்-மெல்லிசை மன்னர் ஜாலம். simple orchestration . simple structure . பாடகர்கள் எல்லைக்குள்ளே விளையாடுவார்கள்.
அலங்காரம் கலையாமல் கலையாமல் அணைப்பதுதான் என்ன கலையோ,
அழகோடு விளையாடி சுவைத்தால் அது என்ன சுவையோ
இதில் சரணத்தில் நாலு twist வரும். பதமாக கொஞ்சம் மெதுவாக,இதமாக காதல் மிதமாக, என்று யேசுதாஸ் சரணம் தொடங்க ஈஸ்வரி பலவிதமாக உள்ளம் வசமாக பழகுவதென்ன சுவையாக என்று முதல் திருப்பு. யேசுதாஸ் , நடமாடும் தங்க குடமாக ,நதியோடும் செல்லும் படகாக என்று மூன்றாவது திருப்பு. தொட்டு வரும் காற்று பட்டு இதமாக, தொடருவதென்ன சுவையாக என்று நாலாவது திருப்பு. பல்லவியுடன் இணைய இன்னொரு தொடருவதென்ன சுவையாக.
கோபாலை கவருவதேன்றால் சும்மாவா?நம்ம பந்துலு மாமாவின் நம்ம வீட்டு லட்சுமி.
இந்த படத்தில் ,என் இரு கன்று குட்டி காதல் நாயகிகள்.(வாணிஸ்ரீ,பாரதி)
இதே படத்தில் வித்யாசமான டி.எம்.எஸ் -பீ.எஸ் டூயட். தன் இன்னொரு குரு எஸ்.எம்.எஸ் பாணியில் எம்.எஸ்.வீ. சரணம் இலக்கில்லாமல் வித்யாசமாக அலையும். பாக்கெட்டில் அடைக்க முடியாத வகை.கேளுங்கள்.யாரிடம்
Last edited by Gopal.s; 13th July 2014 at 08:04 PM.
-
13th July 2014, 07:19 PM
#1729
Junior Member
Newbie Hubber
வெகுளி பெண் என்றொரு படம்.நமது கார்த்திக்கின் அண்ணியார் தயாரிப்பு.(நடித்தும் இருப்பார் அண்ணியாகவே) அவருடைய ஒன்று விட்ட கணவர் தேவதாஸ் டைரக்டர்.வெண்ணிற ஆடை நிர்மலா பின்னி பெடலெடுத்திருப்பார் வெகுளி பெண்ணாக. அந்த வருட (1971 )சிறந்த படமாக தேர்வு.
இதில் ஒரு பாடல். டி.எம்.எஸ் மூக்காலும்,முக்காமலும் அவருடைய இயல்பான பிட்சில் நன்றாக விளையாடியிருப்பார்.மெல்லிசை மாமணி வீ.குமார் இசை.
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது.
என்னை தொட்ட எண்ணங்கள்.மின்னலிட்ட கன்னங்கள் ,என்னென்று நான் சொல்வதோ,(எங்கெல்லாம்)
சுகமான இசை பாடும் இள மங்கை யாரோ,பதமாக நடமாடும் அவள் வண்ண தேரோ,
வானத்தில் இருந்து தேவதை இறங்கி ,வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி (என்னை தொட்ட)
லாலா லாலா லாலா லாலா லாலா லலல்லா
கரை போட முடியாத புது வெள்ளை ஆடை,கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை,
பார்வையில் இளமை,வார்த்தையில் மழலை,கூந்தலும் வணங்கும் காலடி நிழலை (என்னை தொட்ட)
Last edited by Gopal.s; 13th July 2014 at 07:24 PM.
-
13th July 2014, 07:49 PM
#1730
Junior Member
Newbie Hubber
ஹரி போத்தன் (நம்ம பிரதாப் போத்தன் அண்ணாச்சி)தயாரிப்பில் 1969 இல் வந்த நல்ல தங்காள் remake துலாபாரம். (மலையாளம் மூலம்).வின்சென்ட் இயக்கம்(ரியலிசம் ???). நல்ல படம். (சோகம்தான் நெஞ்சு முட்டும்).ஏ.வீ.எம் .ராஜன்-சாரதா இணைவு அபாரம். பின்னியிருப்பார்கள். தேவராஜன் இசையில் பூஞ்சிட்டு, சங்கம் வளர்த்த தமிழ்,வாடி தோழி, துடிக்கும் ரத்தம் பேசட்டும் எல்லாமே வித்யாசமான flavour .
டி.எம்.எஸ் அவருக்கு இசைவான octave கொண்டு பின்னியிருப்பார் . அருமை.
சிரிப்போ இல்லை நடிப்போ ,இது சிங்கார பொன்னூஞ்சல் அழைப்போ.
விழிப்போ வலை விரிப்போ என்னை விருந்து பருக சொல்லும் துடிப்போ
கோபுர கலசத்தை கூந்தலில் மறைக்கும் கோலத்தை ரசிப்பேனா ,(கோபுர)
இளம் கோடி விட்ட பூவென இடை விட்ட பூவுக்கு ஆசையை விரிப்பேனா (இளம்)
அந்த ஆற்றினில் மிதப்பேனா ,ஆற்றினில் மிதப்பேனா (சிரிப்போ)
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை நான் வலம் வருவேனா (ஊர்வலம் )
அவர் ஒரு பக்க ஜாடையை ,கலை வட்ட மேடையை ஓவியம் வரைவேனா (அவர் ஒரு)
அதில் என் உள்ளத்தை வரைவேனா ,உள்ளத்தை வரைவேனா (சிரிப்போ)
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள் என பாத்திரம் படைத்தானோ (பார்க்கின்ற)
அந்த பனிமுத்து துளிகளை பெருகிடவே எனை மாத்திரம் படைத்தானோ (அந்த)
இதுதான் வாழ்க்கை என்றுரைத்தானோ,வாழ்க்கை என்றுரைத்தானோ (சிரிப்போ)
Bookmarks