Page 19 of 400 FirstFirst ... 917181920212969119 ... LastLast
Results 181 to 190 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #181
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பெரும் தலைவர் காமராஜர் அவர்களுக்கு அவர் பிறந்த நாளில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.



    இந்த நேரத்தில் சில விண்ணப்பங்கள்.



    காமராஜர் தன்னுடைய அற்புதமான காமராஜர் திட்ட வலையில் அவரே வீழ்ந்து ,காங்கிரெஸ் ,தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் வீழ்ச்சியுற வைத்தார். பக்தவத்சலத்தின் ஆட்சியே காங்கிரஸ் முதல் வீட்சி. திராவிட கட்சியின் (அப்போது ஒன்றுதான்) எழுச்சிக்கு இணையாக ,தமிழகத்தில் காங்கிரஸ் திட்டமிடவே இல்லை.

    தேசிய அரசியல்,நேரு மறைந்த பிறகு கிங் மேக்கர் என்பதெல்லாம் ஒரு புறம். இந்திரா அழகாக திட்டமிட்டு சீனியர் தலைவர்களை டம்மியாக்கி விட்டார்.



    இதனால் பெரும் இழப்பு தமிழ் நாட்டுக்கு. தன் உயரம், limitation தெரியாத ,தேசிய விளையாட்டு காமராஜ் திட்டம்.



    இந்த நேரத்தில் காங்கிரஸ் புத்துயிர் பெற,தன்னுடைய புகழை பணயம் வைத்து,பலன் கருதாமல் உழைத்த சிவாஜி என்ற நல்ல உள்ளம் கொண்ட ,பெரும் தலைவரின் தொண்டரை,பெரும் தலைவராலேயே அங்கீகரிக்க பட்டு, இறப்புக்கு முன் அவர் இல்லம் தேடி சென்ற அவரின் செல்ல பிள்ளையான சிவாஜி அவர்களை காங்கிரஸ் நன்றாக உறிஞ்சி,அவர் உழைப்பை பயன் படுத்தி ,அவரை கறிவேப்பிலை போல நடத்துவது வருத்தமளிப்பது.ஓரளவாவது காங்கிரஸ் 1967 முதல், 1987 வரை தமிழ் நாட்டில் ஜீவித்தது சிவாஜியின் ரசிகர் கூட்டத்தால் மட்டுமே. என்னை மாதிரி பலரை காங்கிரஸ் கட்சிக்கு ஈர்த்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே.



    சத்யமூர்த்தி பவன், காமராஜ் மணி மண்டபம்,நினைவு இல்லம்,காமராஜர் சினிமா படம் இவற்றில் நடிகர்திலகத்தின் பங்கை உரிய வகையில் அங்கீகரித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ,காங்கிரஸ் ,திரும்ப தூசு தட்ட இருக்கும் காமராஜ் சினிமா சிவாஜி ரசிகர்களின் புறக்கணிப்பை சந்திக்கும்.உரியவர்களுடன் சேர்ப்பிக்க வேண்டியது ராகவேந்தர்,சந்திர சேகர் போன்றோர் கடமை.



    சிவாஜியை செல்ல பிள்ளையாக கருதிய காமராஜருக்கு ,அவர் நினைவு பிறந்த நாளில் எங்கள் மானசீக தலை வணக்கம்.
    Last edited by Gopal.s; 15th July 2014 at 05:11 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks uzzimah thanked for this post
    Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #182
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார் கோபால் சார் இருவரின் கருத்துமே நம் அனைவரின் கருத்தும்.



    பெருந்தலைவர் பிறந்த நாளில் மாலை அணிவித்து விட்டு மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற மனப்போக்கில் இருக்கும் தமிழக காங்கிரஸார் இருக்கும் வரை திராவிட இயக்கங்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.

    தவறு திராவிட இயக்கங்களின் மீதல்ல.

    தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அரசியல் காய்களை நகர்த்தாத காங்கிரஸின் பிற்போக்குத் தனமே இதற்குக் காரணம்.

    ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத வகையில் தமிழக மீனவர்களின் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    இதற்கெல்லாம் காமராஜர் தான் வழி காட்ட வேண்டும்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks kalnayak, uzzimah thanked for this post
    Likes Russellhaj liked this post
  6. #183
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பெருந்தலைவரே!
    உன்னாலே படித்தோம் .உன்னாலே வளர்ந்தோம் .உயிருள்ளவரை உன்னை மறக்க மாட்டோம்
    --உன்னை கைவிடாத நாஞ்சில் நாட்டுக்காரன் என்ற பெருமையுடன்

  7. Thanks uzzimah thanked for this post
    Likes uzzimah, Russellhaj liked this post
  8. #184
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தேசங்களில் ஒன்றின் நீட்சியாக வாழ்கிறோமா? சில விடுதிகளில் வேட்டி கட்டி உள் செல்ல தடையாம்.அதுவும் தமிழ் நாட்டில்?? என்ன பைத்தியகாரத்தனம்?



    நான் சென்ற பல நாடுகளில் ,குறிப்பாக இந்தோனேசியாவை எடுத்து கொள்வோம். அங்கு dress code -Formal wear என்று குறித்திருந்தால் கோட்டு சூட்டு அல்லது அதற்கு மாற்றான அவர்கள் பாரம்பரிய தேசிய உடையான batik சட்டை (முழுக்கை)in பண்ணாமல் அணிய பட்டால் அது formal ஆகவே கருத படும்.அவர்கள் பாரம்பரியத்தை அவ்வளவு மதிக்கிறார்கள்.



    நம் அறிவு கெட்ட ,தமிழ் மேட்டு குடிகளுக்கோ(எல்லா சாதி பணக்கார ,மேல் நடுத்தரவர்க்கங்களும் அடக்கம் ) ,நம் கலாசார உடை வேட்டி என்றால் கேவலம். தமிழ் மொழி என்றால் இளப்பம். பிளாஸ்டிக் பைக்கு(உலகின் அழிவு) பதில் பருத்தி அல்லது சணல் பை (உலகின் நண்பன்)எடுத்து சென்றால் அவமானம். ச்சீ.....இவர்களை பொறுக்கும் நாம் ஒரு நல்ல குடி மகன்களா?



    இதை நம் நடிகர்திலகம் (இரண்டு உடைகளும் பொருந்தும் திராவிட அழகன்)திரியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
    Last edited by Gopal.s; 15th July 2014 at 09:19 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #185
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. Thanks uzzimah, eehaiupehazij thanked for this post
  11. #186
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமை முரளி சார்
    gkrishna

  12. #187
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    [QUOTE=Gopal,S.;1147712]நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தேசங்களில் ஒன்றின் நீட்சியாக வாழ்கிறோமா? சில விடுதிகளில் வேட்டி கட்டி உள் செல்ல தடையாம்.அதுவும் தமிழ் நாட்டில்?? என்ன பைத்தியகாரத்தனம்?

    dear gopal sir

    இந்த அநியாயம் நீண்ட நாட்களாக சென்னையில் உள்ள எல்லா மனமகிழ் மன்றதில் நடைபெற்று கொண்டு இருக்கிறது . இப்போது மூத்த வழக்கறிஞர் அவர்களுக்கும் நீதிபதி அவர்களுக்கும் நடைபெற்றதால் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நீதிபதி கிருஷ்ண ஐயர்க்கு 1990 கால கட்டத்தில் இதே போல் நடந்து உள்ளது
    gkrishna

  13. #188
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  15. #189
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினம் இன்று... 15/07

    விருதுப்பட்டி, தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு இந்த ஊரை தெரியும் என தெரியவில்லை. ஒரே ஒரு மனிதனால் இந்த பட்டியின் மேல் இந்தியா மக்களின் பார்வை பட்டது. அவர் தான் பெருந்தலைவர் காமராஜ...ர் அவர்கள். அந்த பட்டி அவர் பிறந்த சில நாட்களுக்கு பிறகு நகர் ஆனது. அது தான் தற்போதைய விருதுநகர். காமராஜர் ,விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார்.

    903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

    படிப்பு

    ”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

    சிறை

    காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராசு சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.

    அரசியல்

    மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

    தமிழக ஆட்சிப் பொறுப்பு

    1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

    1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

    வித்தியாசமான அமைச்சரவை

    காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:


    மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

    தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

    அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)

    அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

    முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
    அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
    காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.


    அகிலஇந்திய காங்கிரசு தலைமை
    மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர்
    . அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

    கல்விக்கண் கொடுத்தவர்


    ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

    “தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

    “எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

    “பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

    “ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

    உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.


    காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.

    அணைக்கட்டுகள்

    காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.நெல்லை மாவட்டம்தாமிர பரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    தொழில் நிறுவனங்கள்

    காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

    இறுதிக் காலம்

    இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

    நன்றி : Wikipedia, Dr.Google

  16. Thanks kalnayak, Russellhaj thanked for this post
    Likes Russellhaj, Harrietlgy liked this post
  17. #190
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    அத்தனை பேரும் படிக்கனும் என்கின்றேன்...

    வயிற்றில் ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்..? அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்..?

    ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிகூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கனும். தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று தன...ியாக வரி போடத் தயங்கமாட்டேன்...

    அதனால் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்...!

    -காமராஜர்

    (அதனால் தான் மக்கள் மனதில் உயர்ந்து நி்ற்க்கிறார்..)


  18. Likes Russellhaj liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •