-
16th July 2014, 03:39 PM
#1881
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணா சார்,
தங்களின் 'நூல்வேலி' பட பாடல்களின் ஆய்வு நன்றாக இருந்தன. (இப்போது எழுதுகிறேன் என்றால் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளலாம்). இது 'ஆ நிமிஷம்' என்ற மலையாளப்படத்தின் ரீமேக். மலையாளம் கருப்புவெள்ளை. தமிழில் வண்ணம். சரிதா நடித்திருந்த ரோல் மலையாளத்தில் ஸ்ரீதேவி செய்திருந்தார்.
மவுண்ட் ரோடு அண்ணாசிலைக்கு எதிரில் இருந்த 'நியூ எல்பின்ஸ்டன்' என்ற தியேட்டரில் 'ஆ நிமிஷம்' ஓடியது. தியேட்டர் வாசலில் கவர்ச்சியான (வெறும் உள்ளாடையுடன்) ஸ்ரீதேவி கட்-அவுட் வைத்து அதன்மீது நிஜமான ஸ்கர்ட் அணிவித்திருந்தனர். காற்றில் ஸ்கர்ட் பறக்கும்போதெல்லாம் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதைத்ததால் சில நாட்கள் கழிந்து காவல்துறையினர் அந்த கட்-அவுட்டை நீக்கும்படி உத்தரவிட்டனர்.
ஆ நிமிஷம் படத்தின் முடிவில் ஸ்ரீதேவி தற்கொலை செய்வதாக இருக்காது. அந்த தணிக்கை அதிகாரியான பெண்ணின் சிறுவயது மகள் கொலை செய்து விடுவதாக அமைந்திருக்கும். தமிழில் இயக்குனர் சிகரம் முடிவை மாற்றி, சரிதா தற்கொலை செய்துகொள்வதாக அமைத்து, முடிவில் "அவள் மரணத்தை மணந்தாள், மரணம் அவளை அவளை மன்னித்தது" என்று கார்டு போட்டார்.
நூல்வேலி சாந்தியில்தான் ரிலீசானது (ரிஷிமூலத்துக்கு முன்னதாக). சுமாராக ஓடியது. 'மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே' பாடலில் பாடல் வரிகள், பாடிய பாலமுரளி, நடித்தவர்கள் ஆகியோரைவிட அதிகம் கவர்ந்தது பி.எஸ்.லோகநாதனின் கேமரா விளையாட்டுத்தான். மூலைக்கொருவராக நிற்கும் அனைத்து பாத்திரங்களையும் மாறி மாறி கவர் பண்ணிய அழகு
கதை கொஞ்சம் விவகாரமானது. மகளைப்போல ஆதரித்த பெண்ணை சரத்பாபு 'ஒரு மாதிரியாக' அணுகுவது, அதற்கு அந்தப்பெண்ணும் ஒத்துப்போவது என்பதெல்லாம் ஜீரணிக்க முடியாததாக இருந்ததாக பாலச்சந்தர் அதிகம் விமர்சிக்கப்பட்டார்...
-
16th July 2014 03:39 PM
# ADS
Circuit advertisement
-
16th July 2014, 03:42 PM
#1882

Originally Posted by
vasudevan31355
ராட்சஸி பாடிய மிக மிக அரிதான ஒரு பாடல். இலட்சிய நடிகரின் பிரச்சாரப் படமான 'இரட்டை மனிதன்' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்.
'நான் பாடப் பாட மயக்கம் வரும்'
இப்படிப் பாடினால் வராது பின்னே!
vasu sir
இரட்டை மனிதன் தில்லு முல்லு கதை என்று படித்த நினைவு
லதா
வும் உண்டு என்று நினைவு
ஒரு tms பாட்டு நினைவில் உண்டு
இன்றைக்கு நான் பிறந்தேன் என்ற நன்மைக்கோ நான் பிறந்தேன்
SSR t ஷர்ட் எல்லாம் போட்டுண்டு ஒரு மாதிரி arm ஐ மடக்கிண்டு 15 வயசு குறைச்சு காட்ட பாப்பார் . ஆனால் முடியலீஈஈஎ
-
16th July 2014, 03:56 PM
#1883

Originally Posted by
mr_karthik
டியர் கிருஷ்ணா சார்,
தங்களின் 'நூல்வேலி' பட பாடல்களின் ஆய்வு நன்றாக இருந்தன.
இது 'ஆ நிமிஷம்' என்ற மலையாளப்படத்தின் ரீமேக். மலையாளம் கருப்புவெள்ளை. தமிழில் வண்ணம். சரிதா நடித்திருந்த ரோல் மலையாளத்தில் ஸ்ரீதேவி செய்திருந்தார்.
கதை கொஞ்சம் விவகாரமானது. மகளைப்போல ஆதரித்த பெண்ணை சரத்பாபு 'ஒரு மாதிரியாக' அணுகுவது, அதற்கு அந்தப்பெண்ணும் ஒத்துப்போவது என்பதெல்லாம் ஜீரணிக்க முடியாததாக இருந்ததாக பாலச்சந்தர் அதிகம் விமர்சிக்கப்பட்டார்...
டியர் கார்த்திக் சார்
நீங்கள் லேட் என்றாலும் லேட்டஸ்ட் சார்
ஸ்ரீதேவி பற்றிய உங்கள் குறிப்பு எனக்கும் நினைவில் உள்ளது .
பகலில் ஒரு இரவு படத்திலும் ஸ்ரீதேவி குட்டை கௌன் அணிந்து கொண்டு 'இளமை எனும் பூங்காற்று பாடியது ஊர் பாட்டு " கலக்கி இருப்பார்
என் நண்பர் ஒருவர் காலேஜ் படிக்கும் போது அவர் தந்தையிடம் இந்த படம் பார்பதற்கு permission கேட்டு அவர் தந்தை அவரிடம் 'இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது' என்று கேட்டதற்கு அவர் 'ஸ்ரீதேவி கௌன் அணிந்து கொண்டு வருகிறார் காலேஜ் friends எல்லாம் பார்த்துட்டங்க
நானும் பார்க்கணும் ' என்று சொன்னதற்கு 'இப்ப தானே தெரியுது நீ ஏன் இவ்வளுவு arrear விழுது னு' என்று கலாய்தார்.
நினைவலைகள்
-
16th July 2014, 04:17 PM
#1884

Originally Posted by
esvee
எஸ்வி சார்
நீங்கள் ஒரு ஆவண (ஆணவ அல்ல) திலகம் என்று சொன்னால் அது
மிகையாகாது.
உங்கள் ராஜஸ்ரீ படம்,வெளி வராத பாடல்கள் ,ஏன் திரை விமர்சனம்
எல்லாம் அருமை
-
16th July 2014, 04:39 PM
#1885
Junior Member
Newbie Hubber
பார்த்தசாரதி அருமையான ,வித்யாசமான இசையமைப்பாளர்.
இவருடைய அவன் பித்தனா "இறைவன் இருக்கின்றானா ", பால் மனம் படத்தின் "கன்னி ஒருத்தியிடம்" , நிலவுப்பெண் முகம் பார்க்க ,கல்யாண ஊர்வலம் படத்தின் கூந்தலிலே.
எல்லாமே வித்யாசம்.
-
16th July 2014, 06:10 PM
#1886
Senior Member
Diamond Hubber
'பாகப் பிரிவினை' படம் 1959 இல் வெளியானது. பின் இந்தியில் 'கந்தன்' என்ற பெயரில் இந்தியில் 'நிறகுடம்' (1977)தயாரிக்கப்பட்டு மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டது.
நடிகர் திலகம் ஏற்றிருந்த பாத்திரத்தை மலையாளத்தில் கமல் ஏற்றிருந்தார். சரோஜாதேவி பாத்திரத்திற்கு நம்ம ஸ்ரீதேவி. பீம்சிங்கே மூன்று மொழிகளிலும் இயக்கம்.
'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலை இப்போது மலையாளத்தில் பாருங்கள்.
'ஸ்வர்ணத்தினெந்தினு சாருகந்தம்
ராஜ ஹம்சங்கள்கெந்தினு பஞ்சவர்ணம்'
அதே சுசீலாவின் குரலில்.
'பாகப் பிரிவினை' படம் 1959 இல் வெளியானது. பின் இந்தியில் 'கந்தன்' என்ற பெயரில் இந்தியில் 'நிறகுடம்' (1977)தயாரிக்கப்பட்டு மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டது. நடிகர் திலகம் ஏற்றிருந்த பாத்திரத்தை மலையாளத்தில் கமல் ஏற்றிருந்தார். சரோஜாதேவி பாத்திரத்திற்கு நம்ம ஸ்ரீதேவி. பீம்சிங்கே மூன்று மொழிகளிலும் இயக்கம். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலை இப்போது மலையாளத்தில் பாருங்கள். '
ஸ்வர்ணத்தினெந்தினு சாருகந்தம்
ராஜ ஹம்சங்கள்கெந்தினு பஞ்சவர்ணம்'
அதே சுசீலாவின் குரலில்
-
16th July 2014, 06:47 PM
#1887
Senior Member
Diamond Hubber

இயக்குனர் வரிசை (சி.வி.ராஜேந்திரன்)
தொடர்கிறது.....
'எல்லோருக்கும் காலம் வரும்... சம்பாதிக்க நேரம் வரும்' பாடல். (விரிவான அலசல்)
அன்பு கார்த்திக் சார் சந்தோஷமாக செய்ய எனக்கு ஒரு வேலையை அளித்திருந்தார்.
'சுமதி என் சுந்தரி' படத்தின் வெகு சிறந்த பொழுது போக்குப் பாடலான 'எல்லோருக்கும் காலம் வரும்... சம்பாதிக்க நேரம் வரும்' பாடலை ஜஸ்ட் ரிலாக்ஸில் எழுதச் சொல்லி. அவருக்கு நன்றி!


என்றும் இளமையான, இளசான எவர்கிரீன் 'சுமதி என் சுந்தரி'. அத்தனை வயதினரையும் வசீகரித்த சுந்தரனும், சுந்தரியும்.
இளமைத் தேவன், சுந்தர வடிவனாக திராவிட மன்மதன் நடிகர் திலகம். இப்போது பூத்த ரோஜாவாக மேடம். நகைச்சுவையில் 'மிரட்டும்' டணால், புலி சுட்ட கதை சொல்லி ரீல் விடும் நாகேஷ், ('புலி 'லொள்ளு லொள்ளு'ன்னு ஒரே குலை') சுந்தரிக்குத் துணையாக சச்சு, பைனான்சியரிடம் பணம் பிடுங்கும் தயாரிப்பாளர் தேங்காய், சதா இயக்க யோசனையில் ஆழ்ந்து, ஆங்கிள் பார்த்துக் கொண்டே இருக்கும் டைரக்டர் கோபால கிருஷ்ணன்.
பொட்டு வைத்து கட்டி வைத்த குழலை கில்லியடித்துப் பாடிய 'பாடும் நிலா', 'லால்லா ஹாஹா ஹோ ஹோ' கோரஸ் ஹம்மிங் அளித்து அன்றைய நாட்டின் ஜனத்தொகையை பெருக்க உதவி செய்து, முத்திரை பதித்த பாடல்களைத் தந்து இப்போதும் முணுமுணுக்க வைக்கும் மெல்லிசை மன்னர், 'ஒருதரம் ஒரே தரம்' என்று தரம் மிக்க காதலை வரிகளை இன்னும் ஒரே ஒரு தரம்' என்று கேட்க வைத்த கவிஞன், ஊட்டி தேயிலை எஸ்டேட்டின் குளுமையை அப்படியே திரையரங்கில் பிரதிபலிக்கும் ஜெமினி வண்ணம், தன்னிகரில்லா ஒளிப்பதிவைத் தந்த தம்பு, வெட்கத்துடன் மன்மதனை ஆடச் செய்த சலீம், சோபியா லாரன் குளோசப் நிழற்படத்தில் தன் பெயரைப் போட்டு குதூகலித்துக் கொண்டு நம்மையும் குதூகலிக்க வைத்த சி.வி.ஆர்.
இளமை முத்துக்கள் அனைத்தும் ஒரு பேழைக்குள்.
அதுதான் சு.எ.சு.
சுமதி ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகை. ஆனால் சுதந்திரத்தைப் பறி கொடுத்தவள். நடிகை என்று அவளை உயர்த்தி தன்னுடன் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறது சமூகம். கடைகண்ணிக்குப் போய் ஒரு கறிகாய் கூட வாங்க முடியாது அவளால். அவள் அழகைப் பார்க்க கூட்டம் சூழ்ந்து கொள்ளும். அவளுக்கு இயல்பாக மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்ற தணியாத ஆசை. சுதந்திரமாக சுற்றித் திரிய எண்ணி அது முடியாமல் போன சூழ்நிலை சொகுசுக் கைதி சுமதி.
அவளை நாயகியாக வைத்து படம் எடுக்கும் நிறுவனம் பட யூனிட்டுடன் அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு டிரெயினில் புறப்படுகிறது. சுமதி பெரிய நடிகையாதலால் அவளுக்கு ரயிலில் முதல் வகுப்பு. அவளுடன் அவள் பணிப்பெண் மட்டுமே பயணிக்கிறாள்.
மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பட யூனிட். நடன இயக்குனர், துணை நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்ஸ் என்று ஒன்றாகக் சேர்ந்து பயணிக்கிறார்கள்.
இரவு வேளை. போரடித்து முதலாம் வகுப்புப் பெட்டியில் பொழுது போகாமல் அமர்ந்து இருக்கிறாள் சுமதி. பணிபெண்ணோ தூக்கம் போடத் தொடக்கி விட்டாள். பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் பட யூனிட் ஆட்களின் உற்சாக கும்மாள சத்தம். சுமதிக்கு அவர்களுடன் சேர்ந்து பொழுது போக்க ஆசை. பணிப்பெண்ணை எழுப்பி அங்கு போகலாம் என்று கூறுகிறாள்,. பணிப்பெண்ணோ தூக்கக் கலக்கத்தில் 'நீங்கள் அங்கு போனால் கூட்டம் சேர்ந்து விடும் அம்மா' என்று 144 போட்டு தூக்கத்தை தொடர்கிறாள்.

அங்கோ கூத்தும், கும்மாளமும், கொண்டாட்டமுமாய் இருக்கிறது. இரவு நேரம் பொழுது போக்கின் உச்சக் கொண்டாட்டத்தில் அமர்க்களமாகக் ஆரம்பமாகின்றது.
நீ நான் பெரியவன், சின்னவன் என்று வித்தியாசம் பாராமல் அனைவரும் ஆட்டம் போடுகின்றனர் இனிமையான ஒரு பாடலை ஆளாளுக்குப் பகிர்ந்தபடியே. கவலை என்பதே கிஞ்சித்தும் இல்லாமல் ஆடிப் பாடுகின்றனர்.
பொம்மை தலையில் இருக்கும் விக்கை (wig ) சீப்பால் வாரி அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு ரெடி பண்ணி வைக்கும் உதவி மேக்-அப் மேன்.
காமெராவை அழகாக பிரஷ் போட்டு துடைத்து சுத்தம் பண்ணி வைக்கும் உதவியாளர்,
பக்கத்தில் நிற்கும் ஆளுடைய நாக்கில் எச்சில் தொட்டு பைனான்சியரின் பணத்தை 'விறுவிறு' என்று எண்ணும் ஜம்பு,
சீட்டுக்கட்டை கையில் பிடித்தபடி 'வெண்ணிற ஆடை' மூர்த்தி ஆட, உடன் 'ஜெக அழகி' ஜெயகுமாரி வயலட் கலரில் நீள் அங்கி போன்ற சட்டையும், ஸ்கை பளுவில் ஜீன்ஸ் டைப் பேண்ட்டும் போட்டு 'சிக்'கென்று 'கிக்' தர ஆரம்பிக்க, இந்தப் பாடல் படு ஸ்பீடாக ரயிலின் வேகத்தில் ரயிலிலேயே அமோகமாக களை கட்டத் துவங்கிவிடும்.
(ஜெயகுமாரிக்கு அந்த டிரஸ் கொள்ளை அழகு! ஸ்லிம் என்றால் அப்படி ஒரு ஸ்லிம். இவரிடம் எனக்குப் பிடித்ததே அலட்டல் இல்லாத அழகு, நடனம், நடிப்பு. தையா தக்கா என்று குதிக்க மாட்டார். அழகாக அளவுடன் ஆடுவார். உடம்பை எப்போதுமே கச்சிதமாக வைத்திருப்பார்)
'எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
அதுவரை என்ன வழியோ'
உடன் ஆடும் துணை நடிகைகளின் அழகு அற்புதம். ஒருவர் நந்தினி. ('அழகு முகம் பழகு சுகம்' 'சொர்க்கம்' பட பாடல் புகழ்) அழகான ஒயிலான ஆட்டம். ஜம்புவின் அமர்க்களம், ,சண்டை போட்டுக் கொள்ளும் மூர்த்தி, நடன மாஸ்டர் இருவர் நடுவே முகம் காட்டி 'சண்டை கூடாது' என்று 'உஷ்' சப்தம் கொடுக்கும் ஜெய்குமாரியின் அழகு சமாதானம்,
நாட்டிய ஆசிரியரின் மெய்மறந்த உற்சாக நிலை ஆட்டத்தில் ரயில் பெட்டியின் கதவருகே வெளியே விழுந்து விடும் அளவிற்கு வந்து ஆடி, பின் சுதாரித்து 'காப்பத்துனே கடவுளே' என்று கும்பிட்டு ஓடிப் போகும் கூத்து,
'ஹேப்பி' ஸ்டைலில் கைதட்டி குதூகலிக்கும் ஜம்பு, மூர்த்தி, வெஸ் டெர்னோடு பரதம் சற்று கலந்து மாஸ்டருக்கு குரு வணக்கம் போடும் ஜெய்குமாரி,
சீட்டுக் கட்டில் ஷூட்டிங் கவலைகளை மறந்து நேரம் கழிக்கும் தேங்காய், மாலி, கோபாலகிருஷ்ணன், (சீட்டைப் போட்டுவிட்டு அடுத்த நொடி நாளைய ஷூட்டிங் பற்றிய யோசனையில் மூழ்கி விடுவார். அழகான கன்டின்யூடி)
ஜாலி பாடலிலேயே ஜெயகுமாரி குழுவினரின் அறிவுரை.
'நேரம் என்று ஒன்று வர வேண்டும் .அதிர்ஷ்டம் தானே வரும். திருப்பதி உண்டியல் போல் பணம் சேரும். இல்லாத உறவுகள் வந்து சேரும். புகழ்ச்சி சொல்லி பணத்துக்காக வட்டமடித்துக் கொண்டே இருக்கும்'

அட்டைக் கத்தியை பேன்ட்டில் செருகி, சிறகுக் கிரீடம் அணிந்து குமாரி காபி குடிக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி.
முதல் வகுப்புப் பெட்டியில் ஆங்கில இதழின் நடுப்பக்க நீச்சல் உடை அழகியை சுரத்தே இல்லாமல் பார்த்து சலித்து தூக்கிப் போடும் பரிதாப மேடம்,
தலையில் பெண் போல் முக்காடிட்டு அனைவருக்கும் காபி சப்ளை பண்ணும் நடன ஆசாமி. காபி ஜெயகுமாரி எடுக்க, கவனிக்காமல் சாசரை எடுத்து ஏமாறும் மூர்த்தி,
'அப்பாவிகள் வாழ்வு தப்பானது
அஞ்சாதவன் வாழ்வு தப்பாதது'
என்று அறிவுறுத்திப் பாடும் கோஷ்டி.
சிக்னல் கிடைக்காமல் ரயில் நிற்க, சந்தோஷக் கும்பலுடன் கலந்து குதூகலிக்க முடிவெடுக்கும் மேடம் கீழே இறங்கி செல்ல, எதிர்பாராவிதமாக ரயில் கிளம்பிவிட, இங்கேயும் ஏற முடியாமல் அங்கேயும் ஏற முடியாமல் மேடம் தவித்து நின்றுவிட, ரயில் போயே போய்விட....
இந்தப் பாட்டில் ஜெயா மேடத்தைக் காட்டும் போதும், ரயிலை வெளியே காட்டும் போதும் மக்கள் அங்கே அடிக்கும் கூத்தும், பாட்டும் ஒலி குறைந்து கேட்பது அட்டகாசம். ('நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்' போல)
செமை உற்சாகத் துள்ளல் பாட்டு. கவலைகளை இப்பாட்டில் நடிப்பவர்கள் மட்டும் மறக்கவில்லை அவர்களுடன் நாமும் ரயிலில் பயணித்து அவர்களுடனேயே ஆட்டம் போடுகிறோம். பாட்டும் பாடுகிறோம். மகிழ்வு கொள்கிறோம்.
அப்படி எடுக்கப்பட்ட அருமையான பாடல். ஏ.எல்.ராகவன், ஈஸ்வரி குரல்கள் கோஷ்டியினருடன் சேர்ந்து வாழ்நாள் மறக்க முடியாத உற்சாகப் பாடலாகி விட்டது.
எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்கப் பெட்டி உண்டு
அதுவரை என்ன கதையோ
திறமையிலே எதுவும் இல்லை
நேரம் அதுதானே வரவேண்டும்
திருப்பதியின் உண்டியல் போல்
செல்வம் அது வீட்டில் உன்னை தேடும்
உண்டான பின் கோடி சொந்தம் வரும்
இல்லாததைத் சொல்லி வட்டமிடும்
தாளங்கள் மேளங்கள்
ஜால்ராக்கள் கூஜாக்கள்
பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும்
மூச்சொன்று விட்டாலும் பேச்சென்று கைதட்டி
கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும்.
வாழ்வதற்கு இரண்டு வழி
நேர்மை அது தேவை சிலகாலம்
நேர்மையிலே பலனில்லையே
தேவை நிறைவேறும் வழி மாறும்
அப்பாவிகள் வாழ்வு தப்பானது
அஞ்சாதவன் வாழ்வு தப்பாதது
எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று
சந்தர்ப்பம் தான் என்றும் பொன்னானது
அப்போது தூங்காதே பின்னாலே ஏங்காதே
அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது
எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்கப் பெட்டி உண்டு
அதுவரை என்ன கதையோ
மெல்லிசை மன்னரைப் பற்றி எழுத வேண்டும் என்றால் பக்கம் பத்தாது.
Last edited by vasudevan31355; 16th July 2014 at 07:17 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
16th July 2014, 07:30 PM
#1888
[QUOTE=vasudevan31355;1148159]
இயக்குனர் வரிசை (சி.வி.ராஜேந்திரன்)
'எல்லோருக்கும் காலம் வரும்... சம்பாதிக்க நேரம் வரும்' பாடல். (விரிவான அலசல்)
வாசு சார்
சத்தம் போடும் மோட்டார் ஐ தான் பிரிச்சு மேவீங்கன்னு கேள்வி பட்டேன்
கட கட நம்ம சகுந்தலா அம்மா மாதிரி
சத்தமே போடாத ஒரு item டான்சர் ஜெயகுமாரி மேட்டர் பற்றி
jayakumari முகத்தில் ஒரு வெகுளி களை

மெல்லிசை மன்னரின் rerecording
மேடம் கேபின் காட்டும் போது பாட்டு சத்தம் குறைந்து ஒலிப்பது
நம்ம 'போதுமோ இந்த இடம்' பாட்டு மாதிரி
எல்லோர்ருக்கும் காலம் வரும்
இப்ப உங்க காலம்
ஜமாயுங்க
-
16th July 2014, 07:39 PM
#1889
பாகப் பிரிவினை' படம் 1959 இல் வெளியானது. பின் இந்தியில் 'கந்தன்' என்ற பெயரில் இந்தியில் 'நிறகுடம்' (1977)தயாரிக்கப்பட்டு மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டது. நடிகர் திலகம் ஏற்றிருந்த பாத்திரத்தை மலையாளத்தில் கமல் ஏற்றிருந்தார். சரோஜாதேவி பாத்திரத்திற்கு நம்ம ஸ்ரீதேவி. பீம்சிங்கே மூன்று மொழிகளிலும் இயக்கம். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலை இப்போது மலையாளத்தில் பாருங்கள். '
ஸ்வர்ணத்தினெந்தினு சாருகந்தம்
ராஜ ஹம்சங்கள்கெந்தினு பஞ்சவர்ணம்'

இந்த படத்திற்கு இசை ஜெய விஜயா sir
-
16th July 2014, 08:10 PM
#1890
Bookmarks