Page 202 of 400 FirstFirst ... 102152192200201202203204212252302 ... LastLast
Results 2,011 to 2,020 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2011
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post

    தமிழில் சரியான முறையில் கொண்டாடப்படாத நடிகை புஷ்பலதா. வயதான பின்னும் அழகாயிருந்த வெகு சில நடிகையரில் ஒருவர்...
    திரிசூலம் டாக்டர் ஐ மறக்க முடியுமா

    நடிகர் முத்தையா (தங்கசுரங்கம் பாரதியின் தந்தை ) பற்றி கொஞ்சம் ரின் சோப்பு போட்டு அலசுங்க

    கர்ணன் சகுனி இவர் தானே
    gkrishna

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #2012
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் வாசு சார்

    குறுகிய நாட்களில் 2000 பதிவுகளை கடந்து மனதை மயக்கும் மதுர கானங்கள்

    திரி மிகவும் சிறப்பாக செல்வது மகிழ்ச்சி .

  5. #2013
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வா ராஜா வா (1969)

    ஏ.பி.நாகராஜன் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒய்வு கொடுத்துவிட்டு சிறிய பட்ஜெட் படங்களாக எடுக்கத்துவங்கிய முதல் படம் 'வா ராஜா வா', இது பின்னர் 'திருமலை தென்குமரி', 'கண்காட்சி' என்று தொடர்ந்தது. தில்லானா மோகனாம்பாள் மெகா வெற்றிக்குப்பின் சிம்பிளாக குருதட்சணையை கருப்பு வெள்ளையில் எடுத்தார். இசைக்குக் கூட மாமாவின் நிழலான புகழேந்தி. அதையடுத்து சின்னஞ்சிறார்களையும், துணை நடிகர்களையும் வைத்து அவர் எடுத்த படம் வா ராஜா வா. சிறுவன் பிரபாகரனையும் அவன் தங்கை சுமதியையும் மைய பாத்திரங்களாக வைத்து எடுத்தார். ஸ்டூடியோ செட் எல்லாம் கிடையாது. மொத்த கதைக்களமும் சென்னையை அடுத்த மாமல்லபுரம் என்ற மகாபலிபுரம்தான்.

    மாமல்லபுரத்தை அழகான வண்ணத்தில் முழுக்க முழுக்க கவர் பண்ணிய ஒரே தமிழ்ப்படம் இதுவே. இப்படத்தைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒருமுறையாவது மாமல்லபுரம் சென்றுவர வேண்டும் என்று ஆவலைத்தூண்டும் வகையில் அமைந்திருந்தது.

    இசைக்கு குன்னக்குடியை அறிமுகப்படுத்தினார். அவர் முழுசாக இசையமைத்த முதல் படம். இதற்கு முன் கந்தன் கருணையில் 'திருப்பரங்குற்றத்தில் நீ சிரித்தால்' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருந்தார்.

    இப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் பூவை செங்குட்டுவனும், நெல்லை அருள்மணியும் எழுதியிருந்தனர். சீர்காழி பாடியதோடு நடித்தும் இருந்தார். மற்ற பாடல்களை ராட்சசி, சின்ன ராட்சசி (எல்.ஆர்.அஞ்சலி) மற்றும் குழுவினர் பாடியிருந்தனர்.

    முதல் பாடல் பிரபாகரனுக்காக ராட்சசி. (வி.எஸ்.ராகவன், ருக்மணி தம்பதிக்கு மாமல்லபுரத்தை சுற்றிக்காட்டி பாடுவது)

    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா - அந்த
    கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா

    ஒட்டுக்கல்லை சேர்க்காமல் ஒரே கல்லை குடைஞ்செடுத்து
    கட்டிவச்சான் மண்டபத்தை பல்லவ ராஜா - அதை
    கச்சிதமாய் சொல்லவந்தேன் சின்ன ராஜா

    கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்
    எப்படித்தான் செஞ்சானோ பல்லவ ராஜா - அதை
    அப்படியே சொல்லவந்தேன் சின்ன ராஜா

    சிற்பியரை கூட்டிவந்து சிற்பங்களை செய்யவைத்து
    கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவ ராஜா - அந்த
    அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா

    இரண்டாவது பாடல் மாமல்லபுரத்துக்கு வரும் நகரத்து நாகரீக மங்கையரோடு சேர்ந்து பாடும் பாடல்....

    ஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க இங்கே
    ஆனை சிங்கம் அஞ்சு ரதங்கள் அழகைப்பாருங்க

    ஊரின் பேரோ மாமல்லை உல்லாசம்தான் இதன் எல்லை
    ஈடில்லை இணையில்லை இதுபோலின்பம் வேறில்லை

    உயர்ந்து நிற்கும் விஞ்ஞானத்தின் புதுமைக்காலமடி - ஆனால்
    ஒவ்வொரு இடமும் இங்கே பழமை பேசுதடி
    பழசுக்குள்ள மதிப்பு எல்லாம் புதுசுக்கேதுங்க
    பழகிப்போனா புதுசுகூட பழசா போகுங்க

    மூன்ற்வது பாடல் ராட்சசியின் தனிப்பாடல்...

    உண்மையெது பொய்யெதுன்னு ஒன்னும் புரியலே
    நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலே

    (பெரிய இலக்கிய வரிகள் எல்லாம் கிடையாது எல்லாமே சிம்பிளான பாடல்கள். பின்னே, படிப்பறிவு இல்லாத சின்னப்பையன் பாடுவதாக எல்லோரும் நம்பணுமில்லே)

    நான்காவது பாடல் சீர்காழியே பாடி நடித்தது...

    'இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்'

    கடைசிப்பாடலும் அவருக்கே...

    சிறுகுழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா
    சின்னச்சின்ன விழிகளிலே தீப ஒளி வீசுதம்மா

    வா ராஜா வா 1969 தீபாவளி ரிலீசுக்காக தயாரானது ஆனால் சிவந்த மண், நம் நாடு படங்களுக்கிடையே சிக்கி நசுங்கிவிடக்கூடாது என்று (புத்திசாலித்தனமாக) ஒரு மாதம் தாமதித்து டிசம்பரில் வெளியிட்டார். படம் மிகப்பெரிய வெற்றி. சென்னையில் நான்கு தியேட்டரில் வெளியிடப்பட்டு பாரத், மகாலட்சுமி, ராம் தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்தது (வெலிங்டனில் மட்டும் 'எங்க மாமா'வுக்காக 40 நாட்களில் கபாலி தியேட்டருக்கு மாற்றப்பட்டது)...

  6. Likes Russellmai liked this post
  7. #2014
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    தாழம்பூ படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் .

    ஏரிக்கரை ஓரத்திலேஎட்டு வேலி நிலமிருக்கு
    எட்டு வேலி நிலத்திலேயும்என்ன வைத்தால் தோப்பாகும்
    வாழை வைத்தால் தோப்பாகும்
    மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
    ஆழமாக உழுது வைத்தால்
    அத்தனையும் பொன்னாகும்

    தென்புறத்துச் சீமையிலேதென் குமரிக் கடல் இருக்கு
    குமரிக் கடல் மூழ்கி வந்தால்
    கோடையிலே என்ன வரும்
    சரம் சரமாய் முத்து வரும்
    தனிப்பவளம் சேர்ந்து வரும்
    குமரியுடன் கலந்து விட்டால்
    குடும்பத்திலும் ஆசை வரும்

    காலம் இன்று கனியும் என்றுகனவு கண்டு வந்து விட்டேன்
    கண்ட கனா பலிக்காதோ
    கதவு இன்று திறக்காதோ
    நினைத்து விட்டால் நடக்காதோ
    நெருங்கி விட்டால் பிறக்காதோ
    மனத்தினிலே முடித்து விட்டால்
    வழிக்கதவும் திறக்காதோ

    பாடகர் திலகமும் - இசை அரசியும் கலக்கியிருக்கும் பாடல் . மக்கள் திலகம் - கே.ஆர்.விஜயா இருவரின் நடிப்பும்
    முக பாவமும் பிரமாதம் . மனதை மயக்கும் மதுர கீதம் .

  8. Likes gkrishna liked this post
  9. #2015
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vali.

    எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

    எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

    நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

    1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

    2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

    3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

    4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

    5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

    வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

    ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

    M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

    இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

    வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .
    Last edited by Gopal.s; 18th July 2014 at 06:57 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2016
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்!

    நம்மைப் போன்ற ரசிகர்கள் நெஞ்சில் வா ராஜா வா வுக்கு எப்போதுமே இடம் உண்டு. அப்படியே என் நெஞ்சில் அந்தப் படத்தின் பாடல்களின் எண்ணங்கள் எப்படி ஓடுகின்றதோ அதை அப்படியே நீங்கள் பதித்து விட்டீர்கள். ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவர்ந்த படமல்லவா!

    கள்ளமில்லாப் பிள்ளையிடம்
    கடவுளைக் கண்டேன்
    அதன் காலடிகள் பட்ட இடம்
    கோயிலைக் கண்டேன்
    உள்ளமில்லாப் பொய்யர்களை
    ஊரினில் கண்டேன்
    இந்த ஓலைக் குடிசையிலே
    உண்மையைக் கண்டேன்.

    என்று தொடங்கி பின் சீர்காழியார் 'சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா' என்று பாடத் துவங்கும் போது நமக்குள் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படுவதை மறுக்க முடியாது.

    பிரபாகர் கையை அழகாகக் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் போஸ்டர்கள் இன்னும் மனதில் பசுமையாய் நிழலாடுகின்றன.

    ஏ.பி.என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம் நமது கலாச்சாரம், பண்பாடு போன்ற விஷயங்களை கொஞ்சமும் விட்டுத் தராமல், அம்சமான கருத்துக்களை போரடிக்காமல், அதே சமயம் இனிப்பாக தேன் குழைத்துத் தருவதுதான்.

    நமது கலாச்சார விஷயங்களை ஆடல், பாடல், போட்டிப் பாடல்கள் என்று பொழுது போக்கு அம்சங்களை புத்திசாலித்தனமாகக் கலப்பார். பாடல் காட்சிகளுக்கு மெனக்கெட்டு நிறைய செலவும் செய்வார். அப்போது நாகராஜன். அதன் பின்னர் ராஜேந்தர்.

    இந்தப் படத்திலும் கே.டி.சந்தானம் சிற்பியாக வருவார். இதே கேரக்டரை 'ராஜ ராஜ சோழன்' படத்தில் தலைமை சிற்பியாகச் செய்திருப்பார்.

    பின்னாளில் வந்த நாகராஜன் படங்களில் பெரும்பாலும் சிவக்குமார், 'குமாரி' பத்மினி, 'கள்ளபார்ட்' நடராஜன், சுருளிராஜன், மனோரமா, சைலஸ்ரீ, டி.என்.சிவதாணு, என்று நிலையான ஒரு பட்டியல் இருக்கும்.

    1974 இல் பிளாக் அண்ட் ஒயிட்டில் 'குமாஸ்தாவின் மகள்' என்ற படம் ஒன்றை தந்தார் நாகராஜன். சிவக்குமார் ஹீரோ. கமல் வில்லன். கன்னடத்து ஆர்த்தி நாயகி. உஷா என்ற புதுமுகம் அறிமுகம். இசை குன்னக்குடி.

    1975-இல் அழகான 'மேல் நாட்டு மருமகள்' என்ற படத்தை வண்ணத்தில் தந்தார் ஏ.பி.நாகராஜன். குமாரி லாரன்ஸ் என்ற மேல்நாட்டு நடிகையை சுத்தமான தமிழ்ப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் மேல் நாட்டு மருமகளாகக் காட்டி இருந்தார் நாகராஜன். கமல், வாணி கணபதி, சிவக்குமார், ஜெயசுதா என்று நட்சத்திரப் பட்டாளம். ஆஸ்தான குன்னக்குடியே இதிலும் ம்யூசிக்.

    நினைவலைகளை எங்கெங்கோ பறக்க வைத்து விட்டீர்கள். சரி! தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறேன். நீங்கள் அருமையாக வடித்துள்ள வா ராஜா வாவுக்கு ஒரு 'வார்ரே ராஜா வா' போட்டுவிட்டு 'இறைவன் படைத்த உலகை' அளிக்கிறேன்.

    இறைவன் படைத்த உலகையெல்லாம்

    Last edited by vasudevan31355; 18th July 2014 at 07:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks Russellmai thanked for this post
  12. #2017
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ESvee- It is indeed a good song by K.V.M.Thanks.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #2018
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாலிப கவிஞர் வாலிபத்தை உலுக்கும் ,எனது வசந்த வாலிபத்தின் .இசைந்த பாடல்.எனது பிரிய ஜோடியின் வாலிப விருந்தாக. ...

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Likes Russellmai liked this post
  15. #2019
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Vali.

    எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

    எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

    நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

    1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

    2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

    3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

    4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

    5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

    வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

    ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

    M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

    இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

    வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .
    அருமை கோபால் சார். உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் ... என் தமிழ் ஆசான் ஐயா வாலி பற்றிய கருத்துக்கள் 100% உண்மை

  16. #2020
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    திரிசூலம் டாக்டர் ஐ மறக்க முடியுமா

    நடிகர் முத்தையா (தங்கசுரங்கம் பாரதியின் தந்தை ) பற்றி கொஞ்சம் ரின் சோப்பு போட்டு அலசுங்க

    கர்ணன் சகுனி இவர் தானே
    அவரே தான் இவரு இவரே தான் அவரு. இவர் பல நல்ல கதாப்பாத்திரங்களை செய்தவர். வித்தியாசமான குரல் வளமுடையவர்

    மலையாளம் பூர்விகம் இவருக்கு. நிறைய மலையாள படங்களிலும் நல்ல கதாப்பாத்திரங்கள் செய்தவர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •