-
18th July 2014, 08:26 PM
#2021
Senior Member
Seasoned Hubber
புஷ்பலதா பற்றி கார்த்திக் சார் சொன்னவுடன் நான் எப்பொழுதுமே நினைப்பதும் அது தான். நிறைய புகழ் பெற்றிருக்கவேண்டிய நடிகை
குறிப்பாக கை கொடுத்த தெய்வம் என்று சொன்னால் நாமெல்லாம் நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் அதிகம் போனால் ரங்காராவையும் பாராட்டுவோம் ஆனால் அதில் மிகச்சிறப்பாக செய்தவர் புஷ்பலதா . அக்காவை கோபித்து கொள்வதாகட்டும் அதே சமயம் தாய் போல் பாசம் காட்டுவதாகட்டும், தந்தையை சமாளிப்பதாகட்டும் , அண்ணனின் செய்லகளை கண்டு குமுறுவதாகட்டும் நடிகர் திலகத்துடன் வாக்குவாதம் செய்வதாகட்டும் மிகவும் கடினமான ஒரு பாத்திர படைப்பு எவ்வளவு அழகாக செய்துள்ளார். இரண்டாம் தர நடிகையரில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை புஷ்பலதா .. சில படங்களில் சிவாஜிக்கு அம்மாவாக ( நினைத்து பார்க்க முடியவில்லை ஆனால் சினிமா உலகம் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று)
-
18th July 2014 08:26 PM
# ADS
Circuit advertisement
-
18th July 2014, 09:10 PM
#2022
Junior Member
Regular Hubber
அன்பு வாசு சார்,
தங்களால் துவங்கப்பட்டு,இத்திரியில் பதிவுகள் இடும்
அனைவரது ஒத்துழைப்புடன் இத்திரி விரைவில் 1000
பக்கங்களை எட்ட எனது வாழ்த்துக்கள்.
அன்பு கோபு
-
18th July 2014, 09:53 PM
#2023
Senior Member
Diamond Hubber
நன்றி வினோத் சார்.
'ஏரிக்கரை ஓரத்திலே' நிதானமாகப் போகும் ஒரு சாங். எனக்குப் பிடித்த பாடலும் கூட.
-
18th July 2014, 10:01 PM
#2024
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
புஷ்பலதா பற்றி கார்த்திக் சார் சொன்னவுடன் நான் எப்பொழுதுமே நினைப்பதும் அது தான். நிறைய புகழ் பெற்றிருக்கவேண்டிய நடிகை
குறிப்பாக கை கொடுத்த தெய்வம் என்று சொன்னால் நாமெல்லாம் நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் அதிகம் போனால் ரங்காராவையும் பாராட்டுவோம் ஆனால் அதில் மிகச்சிறப்பாக செய்தவர் புஷ்பலதா . அக்காவை கோபித்து கொள்வதாகட்டும் அதே சமயம் தாய் போல் பாசம் காட்டுவதாகட்டும், தந்தையை சமாளிப்பதாகட்டும் , அண்ணனின் செய்லகளை கண்டு குமுறுவதாகட்டும் நடிகர் திலகத்துடன் வாக்குவாதம் செய்வதாகட்டும் மிகவும் கடினமான ஒரு பாத்திர படைப்பு எவ்வளவு அழகாக செய்துள்ளார். இரண்டாம் தர நடிகையரில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை புஷ்பலதா .. சில படங்களில் சிவாஜிக்கு அம்மாவாக ( நினைத்து பார்க்க முடியவில்லை ஆனால் சினிமா உலகம் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று)
உணரப்படாத உண்மை!
அதே தர்மசங்கடத்துடன் 'பார் மகளே பார்' படத்தில் பிற்பகுதியில் புஷ்பலதா நடிகர் திலகத்திடமும், சௌகாரிடமும் அழகாக பேலன்ஸ் செய்வார் பாத்திரத்திலும் சரி! நடிப்பிலும் சரி!
மங்களகரமான முகம் கொண்டவர்.
உறுத்தாத, அலட்டாத, முகம் சுளிக்க முடியாத நடிப்பைத் தந்தவர்.
நம் நெஞ்சினிலே நினைவு முகம்.
பின்னாட்களில் ஒரு படத்தில் மட்டமான பாத்திரம் ஏற்று காமெடி என்ற போர்வையில் சித்திரவதையும் செய்தார்.
Last edited by vasudevan31355; 19th July 2014 at 05:57 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th July 2014, 10:02 PM
#2025
Senior Member
Diamond Hubber
கோபு சார்!
உங்கள் வாழ்த்திற்கு என் அன்பு நன்றிகள்.
-
18th July 2014, 11:14 PM
#2026
Junior Member
Newbie Hubber
பால் குடம் என்ற படம் ஏ.வீ.எம்.ராஜன்-புஷ்பலதா இவர்களின் அருமையான நடிப்பை வெளி கொணர்ந்த படங்களில் ஒன்று.
இதில் துணிந்து நில்,முழு நிலவின் திருமுகத்தில்,மல்லிகை பூ வாங்கி வந்தேன் போன்ற சுவையான பாடல்களும் உண்டு.
-
19th July 2014, 04:45 AM
#2027
Junior Member
Platinum Hubber
கவியரசர் கண்ணதாசனின் பாடல் ..பாடகர் திலகம் - எல்.ஆர். ஈஸ்வரி
படம் - பணத்தோட்டம் -1963
இசை - மெல்லிசை மன்னர்கள்
ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்
பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்(2)
உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்
இறைவன் போட்டததிந்த தோட்டம்
அதில் இனிமை ஒன்று தான் நாட்டம்
நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை
மேல் நாட்டு பாணியில் நடனத்துடன் மெல்லிசை மன்னர்களின் அருமையான இசையில் மக்கள் திலகத்தின் நடனம்
காண்போர் மனதை மயக்கும் ரம்மியமான பாடல் .
-
19th July 2014, 07:34 AM
#2028
Junior Member
Newbie Hubber
என்னை பாடகர்களை வரிசை படுத்த சொன்னால்,காரணங்களையும் சொல்ல சொன்னால் ,கீழ்கண்டவாறே இருக்கும்.(நகல்களை தவிர்த்து விட்டேன்)
1)டி.எம்.-சௌந்தரராஜன் -பிரத்யேக குரல்,தமிழின் உக்கிர அடையாளம்,கார்வை குரல்,ஆண்மை,பாவம்,உணர்வு,தன்னம்பிக்கை.
2)எஸ்.பீ.பாலசுப்ரமணியம்- விளிம்பு குரல் இனிமை,பன்மொழி உச்சரிப்பு திறன்,தொட்ட வேறுபட்ட பாடல் ரகங்கள் .
3)பீ.பீ.ஸ்ரீனிவாஸ்- வெல்வெட் ஒத்த இலவம் பஞ்சு குரல் ,மென்மையான ஆண்மை,வசீகரமான மென்சோகம்,மெலடி.
4)யேசுதாஸ்- bass குரல்,சுருதி சுத்தம்,பாடல்கள் எல்லா குரல்களுடனும் அற்புதமான இழைவு ,இசை தன்மை கெடாத பாடு முறை.
5)கார்த்திக்- எஸ்.பீ.பியின் இளைய வழி தோன்றல்,அடிநாதத்தை அறியும் தேர்ச்சி,பல் வேறு வகை பாடல்கள் பாடும் தேர்ச்சி.
6)ஹரிஹரன்- அப்பப்பா என்ன voice culture ,அப்படியே தண்டவாளத்தில் செல்லும் ரயில் போன்று சங்கதிகளை குரலில் அழைத்து செல்லும் நேர்த்தி.
7)சங்கர் மகாதேவன்- உற்சாகமான spirited performer .இளைய தலைமுறையின் ஆண்மை பாடகர்.
8)ஏ.எம்.ராஜா- எல்லா விதமான பாணிக்கும் பொருந்தும் இதமான குரல்.பாவங்களையும் காட்டும் மென்மை.
9)சீர்காழி கோவிந்த ராஜன்- தமிழிசைக்கே பிறந்து அதை வள படுத்திய நாத குரல்.அப்படியே ரசங்களை கொடுக்கும் இதயம் தொடும் நாதம்.
10)ஏ.எல்.ராகவன்- யார்ட்லிங் முதல் வெஸ்டெர்ன் ,நகைச்சுவை,மெலடி,supporting gimmicks என்று தொட்ட எல்லைகள் நிறைய.
Last edited by Gopal.s; 19th July 2014 at 08:07 AM.
-
19th July 2014, 07:44 AM
#2029
Senior Member
Seasoned Hubber
ராஜேஷ், மது, வாசு, கார்த்திக், கோபால்,வினோத், கிருஷ்ணா மற்றும் ஒவ்வொரு நண்பரின் பங்களிப்பும் பிரமி்க்க வைப்பது மட்டுமின்றி இவ்வளவு விரைவில் 200 பக்கங்களைத் தாண்டி வேகமாக செல்வது பாராட்ட வைக்கிறது. பாடல்கள் நம் மக்கள் மனதில் எந்த அளவிற்கு ஆழமாய் ஊடுருவியுள்ளன என்பதற்கான சான்றே இந்த வேகமும் உற்சாகமும் ஈடுபாடும்.
தொடருங்கள்.
200 பக்கங்கள் 2000 பக்கங்களாகட்டும் மென்மேலும் பெருகட்டும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th July 2014, 07:49 AM
#2030
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா
இத்தொடரில் அடுத்து நான் பகிர்ந்து கொள்ள இருப்பது...
இணையத்திலேயே முதன்முறையாக எனலாம்...

கே.ஜே. யேசுதாஸுடன்

வசீகரக் குரலுக்கு சொந்தக்காரர் ஸ்வர்ணா இணைந்து பாடி நடித்த
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
என்கின்ற பாடல்.
வாலி அவர்களின் நினைவாக என இதை வைத்துக் கொள்ளலாம்.
வாலி அவர்கள் கதை வசனம் பாடல்கள் எழுதிய அதிர்ஷ்டம் அழைக்கிறது திரைப்படத்தில் எல்லோரும் அறிந்த பாடல்கள், என்ன தவம் செய்தேன் மற்றும் அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது.
கல்யாண வரவேற்பில் பாடப்படும் பாடல் தான் ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர். மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் மறக்கவொண்ணா பாடல் இது.
பாடலுக்கான இணைப்பு
https://www.mediafire.com/?jt69ughn9g02f7n
தங்கள் கருத்தைக் கூறுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks