-
19th July 2014, 11:48 AM
#2041
Junior Member
Newbie Hubber
எஸ்வி,
வாலியை பற்றிய பதிவுக்கு உங்களுக்கும் ,நெட்டுக்கும் நன்றி.
இந்த பதிவில் கூறியுள்ளது போலவே ஒருவருக்கு எழுத பட்ட பிரத்யேக வரிகளை இன்னொரு நடிகருக்கு உபயோகிக்க முடியாது.
நடிகர்திலகத்திற்கு இது போன்ற வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார். நடிகர்திலகத்திற்கு மட்டுமே பொருந்தும் வரிகள் .
வியட்நாம் வீட்டில் , உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே. வருடம் போனால் என்ன ,வயசும் ஆனால் என்ன,உருவத்தை பாரடி மெல்ல ,முகம் இருபதை தாண்டியதல்ல.
நீதியில் எங்களது பூமி காக்க வந்த சாமி,எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி
முத்தமிழின் செல்வன் வாழ்க ,முக்குலத்தின் கண்மணி வாழ்க ,எக்குலமும் போற்றிட வாழ்க,எங்களது செல்வன் வாழ்க
எங்க மாமா படத்தில் பூப்போன்ற என்னுள்ளம் யார் கண்டது ,பொல்லாத மனமென்ற பேர் வந்தது
ஏன் வாலியே எழுதியுள்ளார்.
வாசு பதித்த ,அன்பு கரங்கள் படத்தில், உங்கள் "அழகென்ன,அறிவென்ன,குணமென்ன ,மனமென்ன" .
Last edited by Gopal.s; 19th July 2014 at 11:56 AM.
-
19th July 2014 11:48 AM
# ADS
Circuit advertisement
-
19th July 2014, 12:13 PM
#2042
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (32)

பாடலைப் பாடும் நாகேஷ் (ஏ .எல்.ராகவன்) தவிர ஒரு பாட்டையே அதில் நடித்த நடிகர்களின் சொந்தக் குரலைக் கொண்டு பாட வைத்த அல்லது பேச வைத்த பெருமை 'மெல்லிசை
மாமணி' குமார் அவர்களையே சாரும்.
வி.குமார் அவர்களின் மிக வித்தியாசமான பாடல் இது. நடிக நடிகையர்கள் வசன நடையில் பாடும் மிகப் புதியதொரு முயற்சி. பாலச்சந்தரின் துணையோடு. வாலியின் அருமையான வரிகள்.
இன்றுவரை நான் வியந்து ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
''நவக்கிரகம்' படத்தில் வரும்
'நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்'
பாடல்தான் அது.
ஒரு வேளை சோற்றுக்காக பொய் சொல்லி ஒரு குடும்பத்தில் சம்பந்தமில்லாது நுழையும் நாகேஷ், அந்தக் குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஐக்கியமாகி அங்கு நடக்கும் அலங்கோலங்களை ஒவ்வொன்றாக சரி செய்து கொண்டு வருவார்.
குடும்பத்துக்குப் பெரியவர் மேஜர். பிரம்மச்சாரி. திக்குவாய்.

அவருக்கு இரண்டு தம்பிகள். ஒன்று முத்துராமன். இன்னொன்று வி.கோபாலகிருஷ்ணன்.
மேஜருக்கு தங்கை இருவர் உண்டு மூத்தவள் ராகினி. ராகினியின் கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள் மகன் ஓய்.ஜி.மகேந்திரன்.(அறிமுகம்)
இளைய தங்கை லஷ்மி. கல்யாணத்தை எதிர் நோக்கி இருப்பவள். காதலன் சிவக்குமார்.

முத்துராமனுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ஜி.சகுந்தலா. இளை மனைவி ரமாபிரபா.
இந்தக் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம். இதில் அந்த வீட்டின் கடைக்குட்டியான லஷ்மியின் திருமணத்தைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.
நாகேஷ் லஷ்மியின் திருமணத்தைப் பற்றி பேசி முடிவெடுக்க அக்குடும்பத்தின் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து திருமணம் பற்றிக் கேட்கிறார்.

ஆனால் அதுபற்றி யாரும் பேசாமல் தங்களுக்குள்ளேயே சண்டையான சண்டை போட்டு ஆளுக்கொரு திசை பார்த்து ஓடி விடுகின்றனர்.
இந்தக் காட்சியமைப்பிற்கு ஏற்ற அருமையான பாடல். ஒவ்வொரு உறுப்பினராக நாகேஷ் லஷ்மி கல்யாணம் பற்றிக் கேட்க அவரவர்களும் சண்டை போட்டு சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொள்கின்றனர்.
இறுதியில் அந்த இடத்தில் நாகேஷும், லஷ்மியுமே மிஞ்சுகின்றனர்.
பாடலில் பங்கு பெரும் அத்தனை கதாபாத்திரங்களும் பேசிப் பாடும் பாடல் இது. மிக வித்தியாசமான பாணியில் அமைந்தது.
நாகேஷ் ஆரம்பிப்பார். அவரும் திக்குவாய்தான். அத்தனை பேரும் நவக்கிரகங்கள் போல ஒருவர் முகம் ஒருவர் பாராமல் ஆளுக்கொரு திசையில் கடமைக்கு நின்று கொண்டிருப்பார்கள் பொறுப்பே இல்லாமல்.
நாகேஷ் முத்துராமனிடம்.
'பேசுங்க சார் பே .... ஏ சுங்க' (திக்கியபடியே)
முத்துராமன்: 'ம்ம்ஹூம் ஹூம்'
சகுந்தாலாவிடம் நாகேஷ் போவார்.
சகுந்தாலா: 'நானா?'
ரமாபிரபா: 'ஏன்?'
ராகினி: 'எதுக்கு?'
ஓய்.ஜி.: 'மாட்டேன்'
முத்துராமன்: 'முடியா...து'.
வி.கோபாலகிருஷ்ணன்: 'தெரியாதுய்யா'
ஸ்ரீகாந்திடம் நாகேஷ் வந்து மண்டியிடுவார்.
ஸ்ரீகாந்த்: 'இங்க சுத்தற அங்க சுத்தற ஏண்டா சுத்தற? எதுக்குடா சுத்தற?'
நாகேஷ் பாடுவார்.
'நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்
ஒன்னு ஒன்னு பேசாது
ஒன்னுக்கொன்னு சேராது
ஒன்னையொன்னு பார்க்காது
ஒன்பது ரகம்.
நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்'
ராகினி: 'நில்லு நில்லு சுத்தாம நில்லு
சொல்லு சொல்லு சொல்றத சொல்லு'
லஷ்மியை இழுத்துக் கொண்டு நாகேஷ் அனைவரிடமும் போவார்.
'வத்சலா கல்யாணம் என்ன ஆச்சு
வரவர அவளுக்கும் வயசாச்சு
வரவர அவளுக்கும் வயசாச்சு'
சகுந்தாலா: அதப் பத்தி எனக்கென்ன கவலை
ரமாபிரபா: 'அவளாச்சு எனக்குண்டு எத்தனையோ வேலை'
நாகேஷ் பரிதாபமாக லஷ்மியைப் பார்த்து முத்துராமனிடம் போவார்,
'ஆளான பொண்ணு மேலே அக்கறை இல்லே
அவ அண்ணனான உங்களுக்கு வெக்கமும் இல்லே'
முத்துராமன் கடுப்பாக ரெண்டு பெண்டாட்டிகளுக்கு மத்தியில்
'ரெண்டு சனியன்
எனக்கு ரெண்டு சனியன்
ரெண்டு ரெண்டு பெண்டாட்டி
யாரு பேச்சக் கேட்டு
பக்க தாளம் போட்டு
சம்பந்தம் பண்ணுவேன் நான்
எம் முகத்தைக் காட்டி'
சகுந்தாலா: 'யார் சனியன்'?
ரமாபிரபா: 'அவளா? நானா'?
சகுந்தாலா: 'நானா?அவளா'?
ரமாபிரபா:அவளா? நானா?
சகுந்தாலா: 'நானா?அவளா'?
சகுந்தாலா: 'நீதான்'
ரமாபிரபா: 'இல்ல நீதான்'
(மேஜர் நக்கல் பார்வை)
ரமாபிரபா: 'வாய மூடு'
சகுந்தாலா: 'நீ வாய மூடு'
(இருவரும் 'நீ மூடு... நீ மூடு... மூடு.. மூடு'... மாறி மாறி கூச்சல்)
நாகேஷ் காதைப் பொத்தித் தாங்க மாட்டாமல்.
'அடடாடடடடா.....
நவக்கிரகம்
நீங்க நவக்கிரகம்
ஒன்னு ஒன்னு பேசாது
ஒன்னுக்கொன்னு சேராது
ஒன்னையொன்னு பார்க்காது
ஒன்பது ரகம்.
நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்'
நாகேஷ் ஸ்ரீகாந்திடம் வந்து
'வீட்டுக்கு மாப்பிள்ள நீங்க
இந்த விஷயத்தில் முடிவுக்கு வாங்க
உங்க மச்சினன் போல நீங்க
வாய் மூடிக் கிடப்பது ஏங்க'
ஸ்ரீகாந்த் கடுப்பாக முத்துராமன பக்கம் கைகாட்டி
'மச்சினனா அவன்? ராட்சஷன்'
முத்துராமன் பதிலுக்கு
'நீ! காதகன்'
ஸ்ரீகாந்த்: 'நீ! கிராதகன்'
முத்து: 'நீ! யமகாதகன்'
ஸ்ரீகாந்த்: 'திட்றான், திட்றான் மறுபடியும் திட்றான். எல்லாரும் சாட்சி'
(ஆவூன்னா முத்துராமனும், ஸ்ரீகாந்தும் ஒருவர் மேல் ஒருவர் கோர்ட்டில் வழக்கு போட்டுக் கொள்வார்கள்)
முத்து: 'போடா! சீச்சீ'!
ஸ்ரீகாந்த்: 'போறேன்பா! நான் போறேன்பா'
நாகேஷ் (கெஞ்சி) 'சார்'!
ஸ்ரீகாந்த்: 'எனக்கேன்பா... உனக்கேன்பா'...
முத்துராமன் : (நக்கல் நையாண்டி சிரிப்பெடுத்து) 'ஓடறான் ஓடறான் ஒதவாக்கரை ஓடறான்'
உடனே ராகினி (புருஷனுக்கு நேர்ந்த அவமரியாதை தாங்க மாட்டங்களாம்)
'கட்டிய கணவனுக்கு மட்டு மரியாதை
கெட்டுப் போச்சு விட்டுப் போச்சு
எனக்கென்ன வேலை'
பையன் அனுமந்துவின் கையைப் பிடித்து,
'அனுமந்து! வாடா போலாம்'
ஒய்.ஜி. (சிணுங்கிக் கொண்டே)
'வத்சலாவுக்கு மட்டுமா வயசாச்சு
இந்த அனுமந்து கல்யாணம் என்ன ஆச்சு?
இந்த அனுமந்து கல்யாணம் என்ன ஆச்சு'?
(எவ்வளவு விவரமா கேக்கறது?.அரை டவுசர் போட்ட குழந்தே)
ராகினி: 'சரிதான் வாடா'!
நாகேஷ்: (பின் தொடர்ந்த படி) 'அக்கா கூட இப்படிப் போனா'?
ராகினி: 'ஆரத்தி எடுக்க வருவா தானா'!
நாகேஷ்: அக்கா! அக்கா! அக்கா!
(நாகேஷைப் பார்த்து லஷ்மி வேதனை)
நாகேஷ் சோகமாக படிக்கட்டுகளில் இறங்கி,
மேஜரைப் பார்த்து,
'எல்லோருக்கும் மூத்தவர் நீங்க பிரம்மச்சாரி
இப்படி பட்டும் படாம நின்னுகிட்டிருந்தா ஐயாம் சாரி'
மேஜர் பதில் விறுவிறுவென்று,

"அப்பா பாலு! இது ஆட்டு மந்த! மாட்டுச் சந்த! ஆட்டத் தூக்கி மாட்டுல போடும்...; மாட்டத் தூக்கி ஆட்டுல போடும். நாக்குல ஒன்னு நெஞ்சுல ஒன்னு. முன்ன வச்சுப் பின்ன பேசும். பின்ன விட்டு முன்னப் பேசும்.
இதுக்கு நடுவுல நம்ம பேச்சா எடுபடும்?"
முத்துராமன் கோபமாக அண்ணன் மேஜரைப் பார்த்து,
'ஆடா மாடா யாரைச் சொன்னாரு'?
மேஜர்: 'அறிவு கெட்டவன் வேற யாரு'?
சகுந்தலா: 'ஐயோ! அத்தனையும் கேக்கணுமா! திங்கலையா சோறு'!
ரமாபிரபா: 'ஆஹா! மீச மட்டும் இருக்கே! ரோஷமில்ல பாரேன்'!
முத்துராமன்: 'என்னை எல்லோரும் திட்டவா இந்தக் கூட்டம் கூட்டுனே! இத்தன பேர் மத்தியில நிக்க வச்சு மாட்டுன'?
மேஜர்: 'தலை ரெண்டும் போயாச்சு ஆளுக்கொரு மூலை. இப்ப வா ஆ லு (திக்கல்) மட்டும் நிக்குதே! இதுக்கென்ன வேலை'?
முத்துராமன்: 'போறேன்பா! போறேன்பா! நானும் போறேன்பா'!
நாகேஷ்: 'அப்பா கல்யாணப் பேச்சு'?!
முத்துராமன்: 'அது காத்தோட போச்சு'
நாகேஷ் கோபியிடம்,
'அவுங்கதான் அப்படி! மாலு! நீ எப்படி'?
கோபி: 'இது கொலைகாரக் குடும்பம். நீ சொல்லியா திருந்தும்'?..
நாகேஷ்: (நொந்து போய்)
'நாலு பேர சேர்த்து வைக்க
நல்லதுக்கு பேச்செடுத்தேன்
நாய் வாலை நிமித்தி வைக்க
ஆன மட்டும் பா ஆ டு பட்டேன்
அட பந்தம் இல்லே பாசம் இல்லே
கொஞ்சம் கூட ரோஷமில்லே
ஆம்பிள்ளைக்கு அறிவில்லே
பொம்பளைக்கு பொறுப்பில்லே
நல்லதுக்கும் சேர்றதில்லே
கெட்டதுக்கும் கூட்றதில்லே
சத்திரமா சாவடியா?
சோத்துக்கறி சந்தடியா?
நாய் வாலை நிமித்தி வைக்க ஆன மட்டும் பா ஆ டுபட்டேன்"
Last edited by vasudevan31355; 19th July 2014 at 12:38 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
19th July 2014, 12:56 PM
#2043
-
19th July 2014, 01:09 PM
#2044
ராகினி ஒரு சிறு குறிப்பு (நன்றி - அன்றுகண்


ராகினி- (பிறப்பு-1937-இறப்பு-30.12.1976) பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபல நடிகை. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளில் மூவரில் இளையவர். பத்மினி அளவுக்கு இவர் சோபிக்க முடியவில்லை என்றாலும் பல படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் ஜே.பி.சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு போன்ற பல பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார். இவர் தனது 36-ஆவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 30.12.1976-ஆம் ஆண்டு இறந்தார்.இவரது கணவர் பெயர் மாதவன் தம்பி. லக்ஷ்மி, பிரியா என இரு மகள்கள்.
100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், தூக்குத் தூக்கி, மாங்கல்ய பாக்கியம், காவேரி, சிங்காரி, மந்திரி குமாரி, பரிசு, கோடீஸ்வரன், ஏழைப்பங்காளன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்கள் இவர் நடித்து வெளிவந்தவற்றில் சில.
உத்தமபுத்திரன் திரைபடத்தில் ராகினியின் காமெடி நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்
-
19th July 2014, 02:30 PM
#2045
-
19th July 2014, 02:47 PM
#2046
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணா சார்
எஸ்.வி.ஜெகதீசன் வேறு, எஸ்.ஜெகதீசன் வேறு.
மனோரமா பாடல் டிவிடியி்ல் இடம் பெறவில்லை.
ராமநாதன்...don't know
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th July 2014, 02:52 PM
#2047
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா
இத்தொகுப்பில் அடுத்து நாம் பகிர்ந்து கொள்ள இருப்பது...

ஆம் பிரியாவிடை படப்பாடல் தான்..
டைட்டில் பாடலைப் பாடியிருக்கும் கண்ணியப்பாடகியின் குரலில் உருகாதவர் மனித இனமாயிருக்க முடியாது எனத் தீர்மானிக்கும் அளவிற்கு மெய்மறந்து கேட்க வைக்கும் பாடல். ஜி.கே.வெங்கடேஷின் இசையில் இப்பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
கிருஷ்ணா இதோ தங்கள் கூறியது இதைத்தானே

இப்போது இந்தப் பாடலைத் தரவிறக்கம் செய்து கேட்டு உணருங்கள்
https://www.mediafire.com/?3c1uc1cd9d6x3j3
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th July 2014, 02:58 PM
#2048
Senior Member
Veteran Hubber
டியர் கோபால் சார்,
காவியக்கவிஞர் வாலி அவர்களைப்பற்றிய கட்டுரை அருமை. ஒருமுறை கவியரங்கத்தில் அவரை நேரில் பார்த்திருக்கிறேன். 2007-ம் ஆண்டில் சென்னை காமராஜர் அரங்கில் நாகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் பார்த்திருக்கிறேன். (இரண்டிலும் சற்று தூரத்தில்தான்). மற்றபடி அவரைப்பார்த்தது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும்தான்.
பொதிகைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய 'வாலிப வாலி' தொடர் நிகழ்ச்சி மூலமாக அவரைப்பற்றி அரிய பல விவரங்களை அவர் வாயிலாகவே அறிய முடிந்தது. ஒரே வருத்தம் அவ்வளவு நெடிய தொடரிலும்கூட நடிகர்திலகத்தை பற்றி கொஞ்சமே கொஞ்சமாக பேசினார். பெரும்பாலான நேரங்களை எம்.எஸ்.வி போலவே 'மூன்றெழுத்து இனிஷியல்காரரை' புகழவே செலவழித்தார். 'ஆலங்குடி சோமு சிவாஜி படங்களுக்கு பாட்டெழுதியதில்லை' என்ற தவறான தகவலைச்சொன்னார். (பேட்டியெடுத்த கவிஞர் நெல்லை ஜெயந்தா 'ஆலங்குடி சோமு சிவாஜி படத்துக்கு பொன்மகள் வந்தாள் போன்ற சில பாடல்களை எழுதியுள்ளார்' என்று எடுத்துக்கூறினார்).
நாகேஷுக்கான பாராட்டு விழாவில் வாலி சொன்னது "நல்லவன் வாழ்வான் படத்துக்கு பாட்டெழுத அரசு பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு இயக்குனர் ப.நீலகண்டனைப் பார்க்கச் சென்றபோது என்னுடன் நாகேஷும் வந்திருந்தார். நீலகண்டன் எங்களைப்பார்த்து இருவரில் யார் வாலி? என்று கேட்க, நான்தான் என்றேன். உடனே அவர் நாகேஷைப்பார்த்து நீங்கள் வெளியே போங்கள் என்று வெளியேற்றினார். கோபப்பட்டு நானும் வெளியேற எழுந்தபோது, நாகேஷ் என்னைப்பார்த்து உன் முன்கோபத்தினால் பாட்டெழுதும் வாய்ப்பைக் கெடுத்துக்கொள்ளாதே என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். அன்றைக்கு நாகேஷை வெளியேற்றிய நீலகண்டன் அதே நாகேஷின் கால்ஷீடுக்காக பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது" என்று கூறினார்...
-
19th July 2014, 03:14 PM
#2049
Senior Member
Veteran Hubber
டியர் கோபால் சார்,
தங்கள் பதிவுகளில் இடையிடையே மண்டை சைஸ் எழுத்துக்கள் எதற்க்காக?. இங்கு யாருக்கு வெள்ளெழுத்து?.
வேண்டாம் சார், மண்டை சைஸ் எழுத்துக்களை "வேறுதிரி நண்பர்களுக்கு" விட்டு விடுங்கள். நமக்கு வேண்டாம். கருத்துக்களில் வலுவிருந்தால் எவ்வளவு சின்ன எழுத்துக்களிலும் மக்களை சென்றடையும்...
-
19th July 2014, 03:23 PM
#2050

Originally Posted by
RAGHAVENDRA
கிருஷ்ணா சார்
எஸ்.வி.ஜெகதீசன் வேறு, எஸ்.ஜெகதீசன் வேறு.
மனோரமா பாடல் டிவிடியி்ல் இடம் பெறவில்லை.
ராமநாதன்...don't know
நன்றி வேந்தர் சார் .
பிரியாவிடை பட பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று
Bookmarks