Page 207 of 400 FirstFirst ... 107157197205206207208209217257307 ... LastLast
Results 2,061 to 2,070 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2061
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை நான் மறக்கவே முயலும் (21 ஜூலை) நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

    அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
    உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

    போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
    ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

    ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
    பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

    தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
    காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

    தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
    நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

    காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
    சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

    கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
    தஞ்சையின் தங்கமே நல்லோதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

    வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
    தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

    தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
    முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

    கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
    வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

    வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
    அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

    சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
    சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

    அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
    தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

    விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
    தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

    காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
    மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

    நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
    யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

    நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
    வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

    நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
    இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

    எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
    ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

    நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
    இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

    வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
    விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

    உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
    கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

    ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
    தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

    தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
    மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

    ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
    மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

    தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
    காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

    வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
    இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
    Last edited by Gopal.s; 20th July 2014 at 01:55 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2062
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆடி வெள்ளிக்கிழமை என்று நினைத்ததாலோ என்னவோ ஓமான் ஏர் விமானத்தில் மதிய உணவாக தேங்காய்ச் சாதம், சென்னா, பீன்ஸ் கறி என மங்களகரமாகக் கொடுக்க உண்டு உறங்கி வெள்ளி இரவு இங்கு வந்து நேற்று முழுவதும் லீவில் இருந்த அயர்ச்சியைப்போக்கி விட்டு இன்று வெற்றிகரமாக இங்கே... வந்துட்டேன் ஐயா..

    வந்தால் இங்கிட்டு நூறு பக்கம் ந.தியில் புதிய இழை தொடக்கம் என ஓடியிருக்கிறது.. நிதானமாக ப் படிக்க வேண்டும்..கொஞ்சம் ஒரு புரட் புரட்டியதில்ல்...ராகினி கண்ணில் தென்பட்டார்.. ம்ம் கூடவே லலிதா நினைவு..உன்னைக் கண் தேடுதே..விக் விக்.. அதே படத்தில் வெண்ணிற ரஸமலாயாக அவர் பாடும் இன்னொரு பாடல் நினைவுக்கு வரமாட்டேங்கறது..

    புஷ்பலதாவா..ம்ம் இளமைக் காலத்தில் நம் கண்களுக்கு கறுப்புவெள்ளையில் தோற்றமளித்துப் பின்காணாமல் போய் ஈஸ்ட் மென் கலரில் குண்டாக வந்து பயமுறுத்தியவர்.. கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப் பின்ன பாட்டு தான்சட்டென நினைவுக்கு வருகிறது..

    கோபால் ந.தி கவிதை அருமை..

    ம்ம் மீண்டும் வருவேன் உஷார்

  4. #2063
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (33)



    படம்: அன்று கண்ட முகம் (1968)

    நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், நாகேஷ், மனோரமா, மேஜர், வி.கே.ராமசாமி

    வசனம்: மா.ரா.

    காமெரா: கர்ணன்

    பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: 'திரை இசைத் திலகம்'

    கதை, தயாரிப்பு, டைரக்ஷன்: ஜி.ராமகிருஷ்ணன்


    ஆத்மநாபன் (அசோகன்) என்ற பாரிஸ்டரிடம் அவருடைய நண்பர் கல்லூரி பிரின்சிபால் லா பிராக்டிஸ் செய்ய ஒருவரை சிபாரிசு செய்து அனுப்புகிறார். ஆத்மநாபன் ஆண் ஒருவரைத்தான் பிரின்சிபால் வக்கீலாக பிராக்டிஸ் செய்ய அனுப்புவார் என்று பார்த்தால் வந்து நிற்பது ஒரு அழகு தேவதை. பெண்கள் என்றால் பத்தடி தூரம் விலகி நிற்கும் ஆத்மநாபன் அந்த சுந்தரியிடம் வேறு எங்காவது பிராக்டிஸ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த இளம் பெண் வக்கிலோ அவரிடம்தான் பிராக்டிஸ் செய்வேன் என்று பிடிவாதமாக கெஞ்ச இறுதியில் ஆதம்னாபன் சம்மதிக்கிறார்.

    அந்த இரவு தான் சந்தித்த அந்த தேவதையின் அழகை நினைத்து அவர் மனம் தடுமாறுகிறது. அப்படியே அந்த தேவதை அவர் கனவில் வந்து....


    என்ன அழகான அருமையான பாடல்! ஆனால் பாப்புலர் ஆகாத பாடல். கடுப்பு.

    கண்ணியப் பாடகியின் கல்கண்டு குரலில் கேட்க, கேட்க அப்படி ஒரு சுகம். அதுவும் 'கண்ணெதிரே.......ஏ' என்று அவர் இழுத்து பாடும் போது மயங்காதவர்களே இருக்க முடியாது.

    இப்பாடலின் ஆரம்ப இசை அமர்க்களம். பேங்கோஸ், ஆர்மோனியம், கிடார் என்று கலக்கல் உபகரணங்களை அம்சமாகக் கலந்து திரை இசைத் திலகம் அமர்க்களமான அமர்க்களப்படுத்தி விட்டார்.



    ஜெயா செம கியூட். இப்பாடலில் 'மணி' மேகலையாய்க் (இடையணி வேறு.) காட்சி அளிக்கிறார். கொள்ளை கொள்ளும் அழகு. அதே போல டான்ஸ் மூவ்ஸ் செக்ஸியான அற்புதம். ஆடைகளுக்கு மேல் டிரான்ஸ்பரென்ட் அங்கி போல வேறு அணிந்து படுகவர்ச்சியாக வேறு பரிமளிப்பார்.

    ஆண்குரல் இல்லையென்றாலும் அசோகனுக்கும், ஜெயாவுக்கும் டூயட் போலவே தெரியும் பாடல் இது. இதுவும் ஒரு வித்தியாசம்.

    'காட்டுக்கு ஓடிய முனிவர்களும், வீட்டுக்குத் திரும்பிய விஷயம் இது' என்று காதலை காமத்துடன் இணைத்துப் பெருமைப்படுத்தும் நம் கவிஞன். வரிகள் எளிமையான அமர்க்களம்.

    அதிகம் வெளியே தெரியாத அற்புத பாடல். அனுபவித்துக் கேளுங்கள். ஆழ்ந்த சுகத்தை உணர்வீர்கள். முடிவு உங்கள் கையில்


    இதயம் பொல்லாதது
    இதயம் பொல்லாதது
    கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
    இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

    இதயம் பொல்லாதது
    கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
    இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

    காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
    வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
    காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
    வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது

    காவலை மீறிய போதையிது
    காவலை மீறிய போதையிது
    கண்மூடி நடக்கின்ற பாதை இது

    ஆஹா ஓஹோ ம்ஹூம்


    (இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)

    இதயம் பொல்லாதது
    கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
    இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

    சட்டமும் இதனை மறுத்ததில்லை
    தருமமும் இதனை வெறுத்ததில்லை
    பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
    பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை

    சட்டமும் இதனை மறுத்ததில்லை
    தருமமும் இதனை வெறுத்ததில்லை
    பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
    பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை

    கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
    இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

    இதயம் பொல்லாதது
    கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
    இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

    ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
    சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
    ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
    சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
    நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
    நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
    இல்லையென்றால் எது பிறந்திருக்கும்

    இதயம் பொல்லாதது
    கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
    இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது


    Last edited by vasudevan31355; 20th July 2014 at 04:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2064
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    அன்று கண்ட முகம் படத்தின் அருமையான பாடலான 'இதயம் பொல்லாதது' பாடலை இன்றைய ஸ்பெஷலாக தந்து உண்மையிலேயே அசத்தி விட்டீர்கள். எங்கிருந்து தேடிக்கொண்டு வருகிறீர்கள் இத்தகைய அற்புதங்களை. நானே பார்த்து / கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சுசீலாவின் கண்டுகொள்ளப்படாத நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. எவ்வளவு அருமையாக பாடியிருப்பார். வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இம்மாதிரி பாடல்களை ரொம்பவே இருட்டடிப்பு செய்து விட்டனர். ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு வந்தன என்றால், அது இலங்கை வானொலியால்தான். நமது ஊடகங்கள் கடிவாளம் கட்டிய குதிரைகள்.

    'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் இந்தப்பாடலில் செம க்யூட்டாக இருப்பார். அவர் இப்பாடலில் அணிந்துவரும் 'ஸீ-த்ரூ' ஆடை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 'அன்று கண்ட முகம்' பட விளம்பரம் என்றாலே இந்த பாடலில் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் போஸ்தான் பிரதானமாக இடம்பெற்றது. ரசிகர்களை 'சுண்டி' இழுப்பதற்காம்.

    இதுபோன்ற கண்டுகொள்ளப்படாத பாடல்களைக் கொண்டு வருவதன்மூலம் வாசு சாரின் 'இன்றைய ஸ்பெஷல்' என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்..., வாழ்த்துக்கள்.....

  6. #2065
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    தங்களுக்குப் பிடிக்காவிடினும் 'நவக்கிரகம்' பாடல் பதிவை வாசித்து, உள்ளதை உள்ளபடிக் கூறி, அதே சமயம் சிரத்தை எடுத்துப் பதிவு போட்டதற்கும் நன்றி கூறிய தங்கள் மேலான பெருந்தன்மையான குணத்திற்கு என் தலை வணங்கிய நன்றி!

    'இதயம் பொல்லாதது' பாடலை ரசித்ததில் இருந்தே தங்களின் உயரிய வித்தியாச ரசனை இன்னும் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பாடலைப் பற்றிய தங்களது பாராட்டிற்கும் நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2066
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் வினோத் சார்!

    எனக்கு நிரம்பப் பிடித்த பாடலான கண்ணன் எந்தன் காதலன் பாடலை தங்களின் முதல் முயற்சியாக நன்கு பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2067
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சற்று நீள் இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் சின்னக் கண்ணனாரே!

    வருக.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2068
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வருக சின்னக்கண்ணன் அவர்களே
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கூடவே லலிதா நினைவு..உன்னைக் கண் தேடுதே..விக் விக்.. அதே படத்தில் வெண்ணிற ரஸமலாயாக அவர் பாடும் இன்னொரு பாடல் நினைவுக்கு வரமாட்டேங்கறது..
    எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
    கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தைதானோ

    (அது சரி, செட்டுக்குள் ஏன் அத்தனை பாம்பு சிலைகள்?)

    Quote Originally Posted by chinnakkannan View Post
    புஷ்பலதாவா..ம்ம் இளமைக் காலத்தில் நம் கண்களுக்கு கறுப்புவெள்ளையில் தோற்றமளித்துப் பின்காணாமல் போய் ஈஸ்ட் மென் கலரில் குண்டாக வந்து பயமுறுத்தியவர்..
    என்னது பயமுறுத்தினாரா? குண்டாக வந்து மயக்கினார். நாங்கள் கே.ஆர்.விஜயாவையெல்லாம் பார்த்தே பயப்படவில்லை. பாவம் இது குழந்தை...

  10. #2069
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    புஷ்பலதா

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2070
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    Last edited by vasudevan31355; 20th July 2014 at 09:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •