-
21st July 2014, 01:15 PM
#361
rks சார்
படிக்க படிக்க கண்கள் குளமாகின்றன .
கபாலீஸ்வரர் கோயில் அன்னதான சிறப்பு நிகழ்ச்சி நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது . சந்திரசேகர் சார் ஒரு பதிவு எழுதுவார்
இன்று ஆடி கிருத்திகை தமிழ் கடவுளாம் முருகனுக்கு உகந்த நாள் .கோயிலில் சிறப்பு வழிபாடுகள் கிட்டத்தட்ட 1000 பேர் முருகன் திருபுகழ் பாடல்கள் பாடி கொண்டு இருந்தனர் . நல்லதொரு நிகழ்வு
-
21st July 2014 01:15 PM
# ADS
Circuit advertisement
-
21st July 2014, 01:38 PM
#362
Senior Member
Senior Hubber
Rks sir.. என்ன சொல்வதெனத் தெரியவில்லை.. அந்த நாளின் சோகத்தினைக் கண்களுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள்..மிக்க நன்றி..
-
21st July 2014, 01:47 PM
#363
Senior Member
Devoted Hubber
A tribute to nadigarthilagam by ushadeepan-
thankyou joe sir for providing the link
“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…!” ____________________________________________
மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது, அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது.. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்தி, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது அவர் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று இல்லை. அவரின் படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் வராது. .வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள். ஸ்டார் என்றால் அது அவர்தான். எட்ட முடியாத தூரத்திலிருந்தவர்.
அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது. அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்கி, கதையை உருவகித்து, காட்சிகளை அமைத்து, அவரை நடிக்க வைத்து பார்த்துப் பார்த்து ரசித்தார்கள். காமிராவை நிறுத்தத் தவறி, கட் சொல்ல மறந்து, மெய் விதிர்த்து நின்றார்கள். அவரும் இந்த எதிர்பார்ப்பு அறிந்து ஆசை ஆசையாய் நடித்தார். அச்சு அசலாய் வாழ்ந்தார்.
இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல பாவனை செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் பரிதாபக் காட்சிகள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது. பரிசை வாங்கும் நடிகருக்கே நான் என்ன செய்தேன்னு இதைக் கொடுக்கிறாங்க என்கிற வியப்பு. அதே நடிகர் நடிகர்திலகத்தை நினைத்துக் கொண்டாரானால், கை நீட்டி அவருக்கான பரிசை வாங்க முடியுமா? மனசு வெட்கப்பட வேண்டுமே? அதுதானே நியாயம்?
ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு பாராட்டிய, வரவேற்பளித்த, பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு
இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் அவர். ஆசை ஆசையாய் நடிப்பதில் அவ்வளவு ஆர்வம், துடிப்பு அவருக்கு.
மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.
விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான, உடனடி நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேயேவா கணத்தில் ஒரு நடிகரால் இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார்
நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் நடிகர்திலகம்..
நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது தந்தை பெரியார் என்று சொன்னார்.
வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.
மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.
யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். எத்தனை அடக்கம் பாருங்கள். ஒரு சிறந்த கலைஞன் என்பவன் மனதளவில் குழந்தையைப் போன்றவன் என்பது நடிகர்திலகத்தைப் பொருத்தவரை அத்தனை நியாயம். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது, நன்றாய் இல்லாமல் போனது அல்லது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. திருப்தியில்லாமல் பார்த்து வைத்தார்கள் ரசிகர்கள். ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை. இன்றுவரை அதுதான் நின்று நிலைக்கவும் செய்கிறது.
பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய கிழவர் வேடத்திலே இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும். அந்தப் பிரின்டெல்லாம் இன்று இருக்கிறதோ இல்லையோ? இந்த இடத்தில் நான் நினைவுபடுத்தித்தான் பலருக்கும் தெரியவரும் என்பதே என் எண்ணம்.
நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.
இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் ரசிகர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.
திரு எஸ்.வி.ரங்காராவ், நாகையா, எஸ்.வி.சுப்பையா, எம்.என் நம்பியார், பாலையா, சகஸ்ரநாமம், டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா சாரங்கபாணி, வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம்..
அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.
இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன.
அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற பெருமூச்சை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது.
சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம்.
சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் சிலதைப் பார்த்து வைக்கிறார்கள் பொழுது போவதற்கான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது.
சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரை தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.
திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.
போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.
மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
காலம் எத்தனை கடந்தாலும், ஒரு பாகப்பிரிவினை கன்னையாவையும், பச்சை விளக்கு சாரதியையும், பாவ மன்னிப்பு ரஉறீமையும், ஒரு பார்த்தால் பசி தீரும் பாலுவையும், ஒரு பாசமலர் அண்ணனையும், படித்தால் மட்டும் போதுமா முரட்டு கோபாலையும், பலே பாண்டியா பாண்டியனையும்,இருவர் உள்ளம் செல்வத்தையும், ஒரு கை கொடுத்த தெய்வத்தையும், தெய்வப்பிறவி மாதவனையும், பாலும் பழமும் டாக்டர் ரவியையும், நவராத்திரி ஒன்பது நாயகர்களையும், வேறு யாரையும் கனவிலும் நினைத்தும் பார்க்க முடியாத கம்பீரக் கர்ணனையும், கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி.யையும், வீரபாண்டியக் கட்டபொம்மனையும், மோட்டார் சுந்தரம் பிள்ளையையும்,…உத்தமபுத்திரன், தெய்வமகன் க்ளாசிக்கையும்,உயர்ந்த மனிதன் தொழிலதிபர் ராஜூவையும், கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்தையும், வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபய்யரையும், தில்லானா மோகனாம்பாள் சண்முக சுந்தரத்தையும்,.இன்னும் எத்தனையைத்தான் சொல்லிக் கொண்டே போவது….எதை விடுவது….? இதிலேயே நிறைய விடுபட்டிருக்குமே? யாரேனும் மறக்க முடியுமா இவைகளை? மறந்தால் அது ஆழ்ந்த ரசனைக்கு அர்த்தம்தான் ஆகுமா? இந்த வேடங்களில் தன்னை ஆழ நிறுவியிருக்கும் அவரை எந்த நடிகர்கள் நெருங்க முடியும்? நான் நெருங்கிவிட்டேன் என்று இன்றுவரை யாரும் சொன்னதில்லை. அவரது ரசிகர்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொண்டதில்லை. அதுதானே உண்மை?
தொழிலதிபர் ராஜூவாக வந்து என்ன பாடு படுத்தியிருப்பார்? நாகையா பணி ஓய்வு பெறும் அந்த ஒரு காட்சி போதாதா மனதை உருக்க?ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து கொண்டு, ஒரு நடைபிணமாய், எந்தச் சந்தோஷமும் வாய்விட்டு, மனம் விட்டு அனுபவிக்க முடியாத ஒரு கௌரவமான தொழிலதிபராக அந்த கண்ணியமான வேஷத்தில் வேறு யாரால் அப்படிப் பரிணமிக்க முடியும்? அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே….பாட்டுக் காட்சி ஒன்று போதாதா? சௌகாரோடு சண்டையிடும் அந்த உச்சக்கட்ட காட்சியில்தான் என்ன ஒரு ஸ்டைல், பாடிலாங்வேஜ், எத்தனை முகபாவங்கள்….நெக்லஸ் தொலைந்து போய்த் தேடும்போது கிடைத்து, சிவகுமாரை அடிக்கும் காட்சியில்,நாமும் ரெண்டு அடி வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்குமே அய்யா…! பிறவி நடிகனாய் இருந்தால்தானய்யா அப்படி அமையும்....வேறு எந்தக் கதாநாயக நடிகராவது இந்த அளவுக்குத் திருப்தி தந்திருக்கிறார்களா இன்றுவரை? அந்த இமயத்தை யார்தான் நெருங்க முடியும்?
யாரும் எதையும் மறக்க முடியுமா? மறந்தால் அது ரசனை ஆகுமா? அது அந்த மாபெரும் கலைஞனுக்குச் செய்யும் துரோகமல்லவா அது? நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் இடம் இன்றுவரை நிரப்பப்படவில்லை. அதுதான் சத்தியமான உண்மை. நிரப்பவும் முடியாது. அதற்கு ஒரு கச்சிதமான முகம் வேண்டும் முதலில். பரந்த நெற்றி. அளவான மூக்
கு. கச்சிதமான தாடை. பொருத்தமான உதடுகளைக் கொண்ட மொழி பேசும் வாயமைப்பு. கதுப்புக் கன்னங்கள். எந்த விக் வைத்தாலும் பொருத்தமாய் உட்கார்ந்து கொள்ளும் முக அமைப்பு. அந்த முகத்தில் வீற்றிருப்பதனாலேயே தனக்கு ஒரு பெருமை என்பதுபோன்றதான் தோற்றம் தரும் அழகு. யாருக்கு வந்தது இந்தக் கச்சிதம்?
என்னையெல்லாம் நினைப்பாங்களா? கண்களில் நீர் துளிர்க்கக் கேட்டாராம்… - யாரிடம் என்பது இங்கே தேவையில்லை. கேள்விதான் முக்கியம்.
பல்லாயிரக்கணக்கானவர் முக்கியமில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் தினமும் ஊன் உருக உருக நினைத்து நினைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோமே…அதை விட வேறு என்ன வேண்டும்? அது பல்லாயிரக்கணக்கானவர்க்குச் சமமாகாதா? என்னைப் போன்ற சிலரின் மனதில் அவர் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் சத்தியம்.
யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங்களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அவரது பண்பட்ட ரசிகர்களின் சார்பில் 2014 ஜூலை 21 ம் தேதியின் அவரது நினைவு நாளில் ஆத்மார்த்தமான அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றேன்.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st July 2014, 02:05 PM
#364
Junior Member
Newbie Hubber
Joe,
If it is only one or two days,we both should participate too. What is your suggestion?
Murali,
On behalf of our thread Vasu,ragavendhar,Ravikiran,Karthik and you must participate to make the program more meaningful.
-
21st July 2014, 02:34 PM
#365
Senior Member
Senior Hubber
"நான் நிரந்தரமானவன். அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை." கவியரசர் பாடல் நடிப்பரசருக்கு மிகப்பொருத்தம். மறக்கவே முடியாதவர் மரணிக்க முடியுமோ!!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2014, 02:41 PM
#366
Senior Member
Senior Hubber
ந.திக்கு எளியேனின் சிறு மடல்..
வேதமாய் நடிப்பைக் கற்று
..வித்தைகள் பலவும் செய்து
மேதமை அகத்தில் வைத்து
..மெச்சவே வாழ்ந்தி ருந்தீர்..
பேதமை எம்மைச் சூழ
..பிரிந்துநீர் சென்ற போதும்
போதனை யாக உங்கள்
..பழுதிலா நடிப்பு உண்டே..
உலகத்தை மறந்துவிட்டு உயிரதுவும் சென்றால்
..உளத்தினிலே உயிர்தந்த உறவுகளும் சிலநாள்
கலங்கிடுவர் தவித்திடுவர் கண்களிலே வேள்வி
..கருத்துடனே வளர்த்திடுவர் எல்லாமே சிலநாள்
பழக்கமென ஆகிடவே சிச்சிறிதாய் நினைவும்
..பக்குவமாய் மறைத்துவிடும் பாழ்மனதின் வேலை
வழக்கத்தை உடைத்துவிட்டீர் உம்நினைவு என்றும்..
..வாகாக எம்மனதில் அமர்ந்திருக்கும் பாரும்..
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st July 2014, 03:19 PM
#367
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
Joe,
If it is only one or two days,we both should participate too. What is your suggestion?
Murali,
On behalf of our thread Vasu,ragavendhar,Ravikiran,Karthik and you must participate to make the program more meaningful.
சற்றுமுன் நீயா நானா இயக்குநர் ஆண்டனி முகநூல் வழியாக என்னை தொடர்பு கொண்டு விசாரித்தார் .. ஜூலை 31-ம் தியதி இந்த நிகழ்வு இருக்கிறது .. நான் அலுவல் காரணமாக வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து .. முரளிசாரை அவரை தொடர்பு கொள்ள சொல்லலாமா என கேட்டிருக்கிறேன் .. Will update
-
21st July 2014, 04:37 PM
#368
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அனுசரிக்கப்பட்டது.
காலை 9.30 மணிக்கு, சென்னை, கடற்கரை, காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K .சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிலையின் முன்பாக, கால் ஊனமுற்ற பெண்ணுக்கு, செயற்கை கால் வழங்கப்பட்டது.
முற்பகல் 12 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் S .பிரபாகரன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், வழக்கறிஞர் செந்தில்குமார், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநில நிர்வாகிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மங்கயர்க்கரசி மாவட்டத் தலைவர்கள் சங்குராஜன், சீனிவாசன், மனோ மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்


-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st July 2014, 04:40 PM
#369
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, Today 21-07-2014, திங்கள் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சிக்காக சத்யம் தொலைக்காட்சியில் என்னை அழைத்துள்ளார்கள். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பார்த்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-
21st July 2014, 04:56 PM
#370
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, Today 21-07-2014, திங்கள் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சிக்காக சத்யம் தொலைக்காட்சியில் என்னை அழைத்துள்ளார்கள். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பார்த்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Dear Sir,
Is it open to all or for only specified personalities ?
Regards
RKS
Bookmarks