-
21st July 2014, 05:04 PM
#371
Junior Member
Junior Hubber
My Dear Beloved N.T. Fans
Our N.T. is the only actor who has lived in every one's heart and continued to live, every article written about our N.T. from all our beloved N.T. fans in this hub is the standing proof. Hence, I will always believe our Legend is still performing the death scene not scripted by God by requested by God to perform.
My humble salute to all the contributors in our N.T. thread and I'm confident the Legacy of our N.T. will go-on for generations....
JAIHIND
M. Gnanaguruswamy
-
21st July 2014 05:04 PM
# ADS
Circuit advertisement
-
21st July 2014, 05:51 PM
#372
Junior Member
Veteran Hubber
Sivaji Ganesan The Thespian Of South Cinema
Raaga.com, IndiaGlitz [Monday, July 21, 2014]
Dilip Kumar, Indian cinema’s greatest actor of all time is revered as Thespian. Do you know the other Indian actor who has the prestigious of being referred as Thespian?
Well he is none other but Sivaji Ganesan, the iconic actor of Tamil cinema also referred to as ‘The Marlon Brando of Indian Cinema. Winner of President's Award for more than 12 times and Indian government’s highest civilian award Padma Bhushan and film industry’s most revered Dada Saheb Palke Award, Sivaji Ganesan’s contribution to Indian cinema is colossal.
July 21 marks the death anniversary of the legendary actor. Raaga.Com pays him a humble homage and reveals how Shivaji Ganeshan, who became a star with his debut Tamil movie PARASAKTHI, was mid way through the film was about to be thrown out of the movie!
Villupuram Chinnaiya Ganeshamurthy better recognized as Sivaji Ganesan is perhaps Indian cinema’s only actor who with his debut movie PARASAKTHI became such a huge star that he never looked back. However readers would be stunned to know that after few days of shooting A.V. Meiyappan and the film's directors Krishnan and Panju were dissatisfied with Ganesan's performance and dialogue delivery. For some days they stopped shooting and began hunting for a replacement. In fact A.V. Meiyappan even suggested actor K. R. Ramasami in place of the Shivaji Ganeshan. However P. A. Perumal, the was confident about the ability of Ganeshan and he put his foot down declining any replacement. The result P. A. Perumal’s decision hit the bull’s eye as the movie was a grand success and Shivaji Ganeshan became a star overnight.
However call it the benevolence of Shivaji Ganesh, he never forgot P. A. Perumal and regarded him as his God on earth.
In an illustrious career he did an amazing verity that every few actors are fortune. From king, cult figures, historical characters, rebel, playboy, labour leader, mythological figures, religious personalities, selfish man, unselfish head of the family to anti hero... you name it and he has played that role to perfection!
Emperor of a charismatic screen presence and matchless baritone Sivaji Ganesan starred in some of the milestone movies like MUTHAL MARIYATHAI, GNANA OLI, GAURAVAM, THEVAR MAGAN; VEERAPANDIYA KATTABOMMAN; NAVARATHIRI etc.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st July 2014, 06:14 PM
#373
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
Dear Sir,
Is it open to all or for only specified personalities ?
Regards
RKS
Dear RKS
For Specified Personalities.
-
21st July 2014, 06:21 PM
#374
Senior Member
Devoted Hubber
From the facebook
எப்படி முடிந்தது உங்களால்?
அய்யா..!
தங்களுக்கான
அஞ்சலிக் கவியெழுதி
தாளின் வெண்பரப்பில்
தாள் பணியும்
என் பேனாவைப் போல்,
ஏராளமான பேனாக்களை
இன்று தாள் பணியச் செய்ய..
எப்படி முடிந்தது உங்களால்?
அத்தனை உதடுகளுக்கும்
பிரியமான மெட்டாக,
ஆரோக்கியமான
கலைக் குழந்தைக்கான
தாய்ப்பால் சொட்டாக
மாற..
எப்படி முடிந்தது உங்களால்?
பாடிக் கொண்டேயிருந்த
தமிழ் சினிமாவைப்
பேச வைக்கவும்,
பேச வைத்த
உங்கள் புகழையே
எல்லோரையும்
பாட வைக்கவும்..
எப்படி முடிந்தது உங்களால்?
அமாவாசைகளேயில்லாத
அழகுக் கலை வானின்
அதிசய நிலவாயிருக்க..
எப்படி முடிந்தது உங்களால்?
நடிப்புப் பெண்ணின்
மானம் காக்கும்
திறமை உடை நெய்யவும்,
சம்பாத்தியத்திற்கு
விலையாகி விடாத
ஓர் சத்தியக் கலை செய்யவும்..
எப்படி முடிந்தது உங்களால்?
தாகத்திற்கு
தண்ணீர் போல,
நடிப்புக்கு நீங்களென்று
உறுதி செய்ய..
எப்படி முடிந்தது உங்களால்?
நீங்கள்
வந்து போனாலே
பூரித்துப் போகிற
வெள்ளைத் திரைகளில்,
வாழ்ந்து போனீர்களே..
எப்படி முடிந்தது உங்களால்?
நடிப்பையே பசியாய்,
அதையே உணவாய்,
நடிப்பையே வியர்வையாய்,
அதையே கைக்குட்டையாய்க்
கொண்டீர்களே..
எப்படி முடிந்தது உங்களால்?
உங்களுக்குத் தகுதியான
இருக்கையேதும் தராத
அரசியல் அரங்கினுள் கூட,
அமர்வதைப் புறக்கணித்து
ஓடியாடிப் பணிபுரிய..
எப்படி முடிந்தது உங்களால்?
சின்னஞ்சிறு வடிவாய்ப்
பிறந்தது முதல்,
சிறப்பும்,பெருமையுமாய்
மறையும் வரைக்கும்
ஒரு குழந்தையாகவே
இருந்து விட..
எப்படி முடிந்தது உங்களால்?
அய்யா..!
அற்புதரே..!
உங்களைத் தனக்குள்ளே
இரண்டாம் உயிராக
நிரப்பிக் கொண்டானே..
அவனையும்-
உறக்கத்திலொரு கனவும்,
கனவிலொரு திரையும்,
திரையிலுங்கள்
திருமுகமுமாய்த் திரிவானே..
அவனையும்-
தனக்கு உசத்தியான
உங்களுக்கு,
உயரங்களில்
தோரணம் கட்டுவானே..
அவனையும்-
2001-க்குப் பிறகு,
ஜூலை 21 தேதியே இல்லாத
ஒரு நாட்காட்டியைத்
தன வீட்டில்
தொங்க விட்டானே..
அவனையும்-
கண்ணீர் துளிர்க்கக்
கவியெழுதும் என்னையும்-
கலங்கிய விழிகளால்
அதை வாசிக்கிற
நல்லோரையும்
உள்ளடக்கிய
ரசிகர் பெருங்கூட்டத்தையும்
பிரிந்து,
13 ஆண்டுகளாய்
சொர்க்க வாசம் புரிய..
எப்படி முடிகிறது உங்களால்?
எப்படி முடிகிறது
உங்களால்?
எப்படி முடிகிறது..
உங்களால்?
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st July 2014, 06:30 PM
#375
today's maalaimalar
இன்றைய மாலைமலர் வெளியிட்டுள்ள நடிகர் திலகத்தின் நினைவலைகள்
http://www.maalaimalar.com/2014/07/2...cni022114.html
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st July 2014, 07:10 PM
#376
Junior Member
Veteran Hubber
நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி நினைவுகள்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 21, 3:21 pm ist
நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி நினைவுகள்
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த 13–ம் ஆண்டு நினைவு தினம்.
வரலாற்றில் கி.மு.– கி.பி. என்று இருப்பதுபோல், தமிழ்த் திரையுலக வரலாற்றையும், சி.மு.– சி.பி. (சிவாஜிக்கு முன் – சிவாஜிக்குப் பின்) என குறிப்பிடலாம்.
பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே பெரு நடிகர்களாக ஜொலிக்க முடியும் என்றிருந்த நியதியை உடைத்தெரிந்து, வசன உச்சரிப்பினாலும், நடிப்புப் பரிணாமங்களாலும், மக்களைத் தன் வசம் இழுத்தார்.
சென்னை திரைப்படக் கல்லூரியின் பாடப் புத்தகங்களுள் ஒன்று, ‘‘ஸ்டேனிஸ லாவோஸ்கி தியரி’’. நடிப்புமுறை பற்றி விவரிக்கும் இப்புத்தகத்தின் முதல் பக்கத்தில், உலகிலே நவரச பாவனைகளை முகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்கள் என்று இரு நடிகர்களின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
ஒருவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மற்றொருவர் ஹாலிவுட்டின் மார்லன் பிராண்டோ, ஆனால் மார்லன் பிராண்டோ சிவாஜியின் நடிப்பைப் பார்த்து, ‘‘என்னைப் போல் சிவாஜியால் நடிக்க முடியும். ஆனால், நான் சிவாஜியைப் போல் நடிக்க முடியாது’ என்று வியந்து கூறியிருக்கிறார்.
திரையுலகில் புயலாய் அறிமுகமாகி, சூறாவளியாய் கலக்கி வரலாறாய் வாழ்ந்து மறைந்த மாபெரும் நடிப்புலக மேதையான சிவாஜி கணேசன் நடித்த படங்கள் 288.
வீரபாண்டிய கட்ட பொம்மனையும், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரையும், வாஞ்சி நாதனையும், பகத்சிங்கையும் கண் முன்னே நிறுத்தனார். தேசப்பற்றை திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு ஊட்டினார். குடும்பப் பாசமா, நேர்மையான போலீஸ் அதிகாரியா, கடமை தவறாத அரசு அதிகாரியா, ஏன் ராஜராஜசோழன் போன்ற சரித்திர புருஷர்களையும், கடவுளர்களையும் கூட மனக்கண் முன் நிறுத்தினார்.
சிவாஜி தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலம்.
பராசக்தி நாடகத்தை நேரில் பார்த்த படத்தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் அதனை திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தார். இத்தகவலை ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவன அதிபர் ஏ.வி.மெய்யப்பனிடம் தெரிவித்தார். அவரும் பெருமாள் முதலியாருடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்க சம்மதித்தார். நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜி கணேசனையே திரைப் படத்திலும் அறிமுகப்படுத்த முடிவு செய்தார். இதற்காக மேக்கப் டெஸ்ட் எடுக்க திருச்சியில் இருந்த சிவாஜி கணேசனை சென்னைக்கு விமானத்தில் வரவழைத்தார்.
அந்த காலத்தில் மேக்கப் டெஸ்ட்டிற்காக விமானத்தில் வந்தவர் சிவாஜி கணேசன்தான்.
பராசக்தியில் நடிகர் திலகம் பேசிய முதல் வசனமே ‘சக்சஸ்’ என்பதுதான். ஆனால் அந்த முதல் வசனம் போல அவரது திரையுலகத் தொடக்கம் அமையவில்லை. சிவாஜி நடித்த சில காட்சிகளைப் பார்த்த ஏ.வி. மெய்யப்பன் இவ்வளவு கடுமையான வசனங்களை இந்தப் பையன் பேசுவது சரியில்லை. எனவே ரிஸ்க் வேண்டாம். கணேசனுக்குப் பதிலாக, இப்போது பிரபலமாக இருக்கும் கே.ஆர். ராமசாமியை வைத்து படத்தை எடுக்கலாம் என்று கூறினார்.
ஆனால் பெருமாள் முதலியாரோ இந்தப் படம் எடுத்தால் கணேசன்தான் ஹீரோ, இல்லையென்றால் இந்தப் படத்தயாரிப்பையே கைவிட்டு விடலாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். பெருமாள் முதலியாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கலைஞர் கருணாநிதியின் ஆவேசமான வசனங்களை அருமையாகப் பேசி ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். படம் தமிழ் உலகையே உலுக்கி எடுத்தது.
ஒரு திரைப்படத்தில் நடித்து பேரும் புகழும் பெற்றவுடனேயே தன்னை அறிமுகப்படுத்தியவர்களை மறந்து விடும் இக்காலத்தில், தன்னை அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியாரிடம் வாழ்நாள் முழுவதும் நன்றியுணர்வுடன் நடந்து கொண்டார். ஒவ்வொரு பொங்கல் பண்டிகை நாளின்போதும், வேலூரில் இருக்கும் பெருமாள் முதலியாரின் இல்லத்திற்குச் சென்று, பொங்கல் சீர் வரிசைகள் தந்து ஆசி பெறுவதை தன் வாழ்நாள் முழுவதும் கடை பிடித்தார். அவருக்கு பிறகு மகன்கள் ராம்குமார், பிரபு அதனை தொடர்கின்றனர்.
நடிகர் திலகத்தின் நேரந்தவறாமை உலகப் புகழ் பெற்றது. படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருவது என்பதல்ல, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து விடுவார். அதேபோல தன்னுடைய குடும்ப நிகழ்ச்சி அல்லது உடல் நிலை சரியில்லை என்றால் கூட சமாளித்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்த தேதியில் வந்து நடித்துக் கொடுப்பார். தான் ஒருவரால் படப்பிடிப்புக் குழுவினர் காத்திருக்கக் கூடாது என்பதிலும், தன்னால் எந்தத் தயாரிப்பாளரும் நஷ்டமடையக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்.
24.08.1972–ல் நடிகர் திலகத்தின் தாயார் ராஜாமணி அம்மையார் காலமானார். தாயார் மறைந்த 4–ம் நாளில் வசந்தமாளிகை திரைப்படத்தில் நடிக்க தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி ஊட்டிக்குச் சென்றார். அன்று நடிக்க வேண்டிய காட்சியோ மயக்கமென்ன என்று தொடங்கும் வாணிஸ்ரீயுடனான காதல் பாடல் காட்சி.
தாயார் மறைந்த சோகத்துடன் வந்த நடிகர் திலகத்தைக் கண்ட இயக்குனர் வேறு ஏதாவது காட்சியை இன்று எடுத்துக் கொள்ளலாம். பின்னர் இந்த பாடல் காட்சியை எடுக்கலாம் என்றார். ஆனால் சிவாஜியோ, பரவாயில்லை, இந்தப் பாடலுக்காக நடனக்குழுவினர் மற்றும் செட் எல்லாம் ரெடியாக இருக்கும் நிலையில் இன்றே பாடலை எடுத்து விடலாம் என்று கூறி தன்னுடைய சோகத்தை மறைத்துக் கொண்டு பாடல் காட்சியில் நடித்தார்.
ஒருமுறை ‘பார்த்தால் பசி தீரும்’ நாடகம் பார்க்க சென்று இருந்தார். ரொம்ப பிடித்து போனது. அதை படமாக்க முடிவு செய்தனர். சிவாஜியே அதில் நடிக்க வேண்டும் என்று நாடக குழுவினர் கேட்டுக் கொண்டனர். அவரும் நான் நடிக்கிறேன் என்றார். அத்துடன் நாடகத்தில் மெட்ராஸ் பாஷை பேசி டிரைவராக நடித்த பையனும் என்னுடன் படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.
டிரைவராக நடித்தவரை அணுகி இதை சொன்ன போது மறுத்தார். சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நாடக நடிகராக இருப்பதே போதும் என்றார். பிறகு சிவாஜி நிர்ப்பந்தத்தால் வற்புறுத்தி நடிக்க வைத்தனர். அவர்தான் பல படங்களில் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம் வந்த சோ.
திரையுலகினரால் ஆச்சி என அழைக்கப்படும் மனோரமாவின் தாயார் இறந்த போது சிவாஜி துக்கம் கேட்க சென்று இருந்தார். தாயார் உடலில் சகோதரன் வெள்ளை புடவை போர்த்த வேண்டும் என்பது அவர்களின் சமூக சடங்கு. ஆனால் மனோரமாவுக்கு சகோதரன் இல்லை. இந்த குறையை சொல்லி மனோரமா அழுது கொண்டு இருந்தார். இதை பார்த்த சிவாஜி உடனடியாக ஒரு வெள்ளை பட்டு புடவையை வாங்கி வந்து மனோரமா தாயார் உடலில் போர்த்த இனி நான்தான் உனக்கு சகோதரன் என்றார். மனோரமா அந்த சகோதரனை கண்களில் நீர் வழிய நின்று நன்றி பெருக்கோடு பார்த்தார்.
சிவாஜியும், சாவித்திரியும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். ‘பாசமலர்’ படத்தில் மட்டும் அண்ணன், தங்கையாக வந்தார்கள். அந்த படம் அண்ணன் தங்கை பாசத்தின் உச்சமாக திகழ்ந்து பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. அதன் பிறகு இருவரும் நிஜமான அண்ணன், தங்கையாகவே பழகினர். படப்பிடிப்புகளில் சாவித்திரியை தங்கச்சி என்றே அழைத்தார். அவரது கணவர் ஜெமினி கணேசனை மாப்பிள்ளை என்று கூப்பிட்டார். சாவித்திரியும் சிவாஜியை அண்ணன் என்றே அழைத்தார்.
முதன் முதலாக நடிகர் திலகம் என பட்டப்பெயர் டைட்டிலில் வந்தது ‘அம்பிகாபதி’ படத்தில்தான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வி.சி.கணேசனாக நாடக உலகில் ஜொலித்தார். 1935–ல் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் மதுரை ஸ்ரீ பாலகான சபாவில் சேர்ந்த வி.சி.கணேசன் முதன் முதலாக நடித்த நாடகம் இராமாயணம். தன்னுடை முதல் நாடகத்திலேயே சீதை, சூர்ப்பனகை, பரதன், இந்திரஜித் என்று நான்கு வேடங்களில் நடித்தார்.
கிருஷ்ண லீலா நாடகத்தில், தேவகி, பூதனை, பாலருக்மணி என்று மூன்று வேடங்களிலும், பதிபக்தி நாடகத்தில் சரஸ்வதியாகவும், கதரின் வெற்றி, தேசபக்தி ஆகிய நாடகங்களில் சுதந்திரப் போராட்ட வீரனாகவும் நடித்தார்.
பின்னர் எம்.ஆர்.ராதாவின் சரஸ்வதி கானசபா குழுவிலும், என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவிலும், கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபாவிலும், சக்தி நாடகக் கம்பெனியிலும் இணைந்து நடித்தார்.
1945–ல் திராவிடர் கழகத்தின் ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து, கணேசன் சிவாஜி வேடமிட்டு நடித்த நாடகம் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்... ஆகும். மாநாட்டிற்கு தலைமையேற்றுப் பேசிய தந்தை பெரியார், இனி இவர் வி.சி.கணேசன் இல்லை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அதுமுதல் வி.சி.கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.
திரையுலகில் நுழைந்து கோலோச்சிய பிறகும் கூட நாடக உலகை மறக்காமல் பல நாடகங்களிலும் நடித்தார். சிவாஜி நாடக மன்றம் துவக்கி அதன்மூலம் வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு உள்பட 17 நாடகங்களை நடத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி நடித்த 28 நாடகங்கள் பின்னர் திரைபடங்களாக எடுக்கப்பட்டன.
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிக்கும், டி.எம்.சவுந்தராஜன் குரலுக்கும் தனது நவரச நடிப்பால் உயிரூட்டியவர் சிவாஜி.
‘மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்’ பாட்டில் அண்ணன் பாசத்தை கொண்டு வந்தார். ‘ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’ படத்தில் வாழ்வின்தத்துவங்களை உதிர்த்தார். ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ பாட்டில் கெட்டு போன மகனால் பட்ட வலிகளை கொட்டினார். ‘பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா’ பாட்டில் அன்பின் தேடலுக்கான ஏக்கங்களை காட்டினார்.
‘யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை பாடலில் காதல் தோல்வியின் வலிகளை வெளியிட்டார். ‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்’, ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’, ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’, ‘நிலவை பார்த்து வானம் சொன்னது’.
‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்’, ‘அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்’, ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்’, ‘கல்வியா, செல்வமா, வீரமா’, ‘நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே’, ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலித்து அந்த பாட்டுடனே இன்றும் நெஞ்சுக்குள் வாழ்கிறார்.
-
21st July 2014, 07:11 PM
#377
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st July 2014, 07:13 PM
#378
Junior Member
Newbie Hubber
-
21st July 2014, 07:21 PM
#379
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
They dont even know which year Nadigar Thilagam passed away....One India News illa...One India Nuisance !! Amateur guys !
-
21st July 2014, 07:31 PM
#380
Junior Member
Veteran Hubber
Bookmarks