பொங்கும் பூம்புனல்

அட்டப்பள்ளி ராமராவ் இசையமைத்து சுரபி என்ற ஜே.தங்கவேல் அவர்கள் எழுதி மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தில் இடம் பெற்ற மாப்பிள்ளை டோய்.... சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்... எல்லா காலத்தையும் கடந்து நிற்கும் பாடல்.. அந்தக் காலத்தில் கல்யாண கச்சேரிகளில், குறிப்பாக சென்னை மாப்பிள்ளைகள் வெளியூரில் கல்யாணம் செய்யும் போது தவறாமல் இப்பாட்டை நாதஸ்வர குழுவினர் வாசிப்பார்கள். மெல்லிசை கச்சேரி நடந்தால் மேடையிலும் பாடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படத்தின் பிரிண்ட் கிடைக்கவில்லை நெகடிவும் இல்லை என கூறப்படுகிறது. டிவிடியிலும் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

இப்பாடலுடன் இரு சகோதரிகள் வீடியோவை இணைத்து உரிமைக்குரல் நிறுவனத்தார் ஒரு டிவிடி வெளியிட்டிருந்தார்கள். பல அற்புத கானங்கள் நிறைந்த அந்த டிவிடியில் செந்தாமரை படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய பாட மாட்டேன் பாடலும் இடம் பெற்றுள்ளது.

இப்போது மாப்பிள்ளை டோய் பாடலைக் கேட்கலாம். பார்ப்பதற்கு இரு சகோதரிகள் வீடியோ..