Page 229 of 400 FirstFirst ... 129179219227228229230231239279329 ... LastLast
Results 2,281 to 2,290 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2281
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    அட்டப்பள்ளி ராமராவ் இசையமைத்து சுரபி என்ற ஜே.தங்கவேல் அவர்கள் எழுதி மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தில் இடம் பெற்ற மாப்பிள்ளை டோய்.... சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்... எல்லா காலத்தையும் கடந்து நிற்கும் பாடல்.. அந்தக் காலத்தில் கல்யாண கச்சேரிகளில், குறிப்பாக சென்னை மாப்பிள்ளைகள் வெளியூரில் கல்யாணம் செய்யும் போது தவறாமல் இப்பாட்டை நாதஸ்வர குழுவினர் வாசிப்பார்கள். மெல்லிசை கச்சேரி நடந்தால் மேடையிலும் பாடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படத்தின் பிரிண்ட் கிடைக்கவில்லை நெகடிவும் இல்லை என கூறப்படுகிறது. டிவிடியிலும் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

    இப்பாடலுடன் இரு சகோதரிகள் வீடியோவை இணைத்து உரிமைக்குரல் நிறுவனத்தார் ஒரு டிவிடி வெளியிட்டிருந்தார்கள். பல அற்புத கானங்கள் நிறைந்த அந்த டிவிடியில் செந்தாமரை படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய பாட மாட்டேன் பாடலும் இடம் பெற்றுள்ளது.

    இப்போது மாப்பிள்ளை டோய் பாடலைக் கேட்கலாம். பார்ப்பதற்கு இரு சகோதரிகள் வீடியோ..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2282
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ORU THALAI RAGAM - ROOPA

  4. #2283
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின்'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை.





    படம் வெளியான ஆண்டு: 16-12-1966.
    இசை: T.K.ராமமூர்த்தி.
    ஒளிப்பதிவு: G.விட்டல் ராவ்.
    சண்டைப் பயிற்சி: K.சேதுமாதவன்.
    நடன அமைப்பு: சின்னி-சம்பத்
    இயக்கம்: திருமலை-மகாலிங்கம்.
    தயாரிப்பு: ஆதிநாராயணன்.
    பேனர் : விவிதபாரதி


    ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.

    கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.

    இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.

    ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.

    படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.

    ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.

    பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..

    பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)

    இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.

    சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).

    கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)

    பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.

    திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.

    O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.

    இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.

    கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

    பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.

    "என்ன வேலை என்ன தேவையோ..
    சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
    பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
    கோயில் பார்க்கவோ...
    பாவம் தீர்க்கவோ...
    சொத்து சேர்க்கவோ...
    சுமையைத் தூக்கவோ"...


    என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.

    பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.

    ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)

    இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.

    'மதறாஸ் TO பாண்டிச்சேரி' சில நிழற்படங்கள்


















    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 24th July 2014 at 08:11 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2284
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மனதை மயக்கும் மதுர கானங்கள்

    first posting movie- marupiravi - heroine manjula death anniversary


  6. #2285
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    கோபால் சார் சொன்னாலும் சொன்னார் ,, எல்லோரையும் இலவசமாக பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.. தமிழிலிருந்து ஹிந்திக்குப் போனது .... முதலில் மதராஸ் பாம்பேயாகவும் பாண்டி கோவாவாகவும் மாறி விட்டது.

    வெறும் காதரை பகோடாவாக்கி விட்ட படம் ....

    ஏ.கருணாநிதியை ஓவர்நைட்டில் பாப்புலராக்கிய படம்...

    டி.கே.ஆரின் புகழ்க் கிரீடத்தில் மற்றோரு வைரம் ...

    இப்படி ஏராளமான சிறப்புக்களை உள்ளடக்கிய இப்படப்பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2286
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எஸ்வீ சார்
    ஒரு தலை ராகம் படக்குழுவினர் சமீபத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்தது மணல் நகரம் படத்துவக்க விழாவில். சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.. ஆம் ஒரு தலை ராகம் சங்கர் தான்..தும்பு ரூபா டிஆர் என அனைவரும் ஒன்றாக இணைந்த விழாவாக அமைந்தது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2287
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு வாசு சார்

    மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தை பற்றிய அலசல் அருமை . முழு படத்தை பார்த்த திருப்தி .
    அந்தநாள் கீதாஞ்சலி - விஜயலட்சுமி பாடல்கள் பதிவுகள் இனிமை .

    இனிய நண்பர் ராகவேந்திரன் சார்

    ஒரு தலை ராகம் -நடிகர்கள் கலந்து கொண்ட நிழற் படம் அருமை .

  9. #2288
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வினோத் சார்,

    என்னுடைய மனம் கவர்ந்த நெ.1 நாயகி மஞ்சுளாவின் அழகான படத்தை தரவேற்றி அருமையான அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். என் உள்ளம் நெகிழ்ந்த நன்றி!

    சாவி தந்த 'ரூபா'வும் அருமை.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2289
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    நன்றி!

    'பொங்கும் பூம்புனல்' தொடரின் ஒவ்வொரு துளியும் அட்டகாசம்.

    ஆமாம் ஒரு சந்தேகம்.( 'மாப்பிள்ளை டோய்' பாடல் யாரை குறிவைத்து. வெற்றி நமதே!)
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2290
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பி.பி.எஸ்சுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று சத்தியம் தவறாதே படத்தில் இடம்ப பெற்ற எதுடா வாழ்க்கை...
    உங்கள் பாணியில் "எது சார் வாழ்க்கை".
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •